Labels

rp

Blogging Tips 2017

பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மே 18ஆம் தேதி முதல் சுழற்சிமுறையில் பணிக்கு வர அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல் மேலும் வாரத்திற்கு ஆறு நாள் பணி அமலாகிறது இணை இயக்குனர் உத்தரவு


ரிசர்வ் வங்கி அறிவித்த தவணை மூன்று மாதங்களுக்கு தள்ளிவைப்பு சலுகை கூட்டுறவு சிக்கன கடன் வழங்கும் வங்கிக்கும் பொருந்தும் என்பதற்கான ஆணை நகல்


*வரும் திங்கள்கிழமை முதல் 50% ஊழியர்களுடன் தமிழக அரசு அலுவலகங்கள் செயல்படும்.* *தமிழக அரசு அறிவிப்பு*

வாரத்தில் ஆறு நாட்கள் சனிக்கிழமை வரை அரசு அலுவலகங்கள் செயல்படும்*

*ஊழியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.*


தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-7

முதல் முறையாக ஓய்வூதியம் பெற கருவூலம் வர அவசியம் இல்லை* *அரசாணை வெளியீடு*


முதல் முறையாக ஓய்வூதியம் பெற கருவூலம் வர அவசியம் இல்லை* *அரசாணை வெளியீடு*


ஓய்வூதியர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் மதிப்பிற்குரிய கருவூலக் கணக்குத் துறை ஆணையர் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதல் ஓய்வூதியம்/கம்யூட்டேசன் தவிர பிற காரணங்களான திருத்திய ஓய்வூதியம் பெறுதல், கூடுதல் ஓய்வூதியம் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு ஓய்வூதியர் நேரில் வர தேவையில்லை என்றும் AG ஒப்பளிப்பு மற்றும் இதர ஆவணங்களின் அடிப்படையில் நிலுவை தொகையை மாதாந்திர ஓய்வூதியத்துடன் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் என ஏற்கனவே கருவூலங்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்க பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அ.ஆ.எண். 41 நிதித்துறை நாள் 26.2.2020 ன் படி முதல் முறையாக ஓய்வூதியம் மற்றும் கம்யூடேசன் பெறுவதற்கு Jeevan Praman portal வாயிலாக e - mustering மூலம் ஆஐராகி கருவூலத்திற்கு நேரில் வராமலேயே ஓய்வூதியம் பெற்றுக் கொள்ள வழிவகை செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

பரிந்துரை செய்த மதிப்பிற்குரிய கருவூலத்துறை ஆணையர் அவர்களுக்கும், பரிந்துரையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசுக்கும் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெறும் வயது 59 நீட்டிக்கப்பட்டது குறித்த சில விளக்கங்கள் அரசு வெளியீடு

வரும் கல்வி ஆண்டில் கற்றல் , கற்பித்தலில் ஏற்படக்கூடிய இடர்பாடுகளை ஆராய குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி

வருமான வரி தாக்கல் கெடு 4 மாதங்கள் நீட்டிப்பு

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

வரலாற்றுத் திருப்புமுனை தந்த -1969 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் இரவு

1969 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் இரவு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நடவடிக்கைக் குழுக்கூட்டம், சென்னை ஏ.வி.நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
         முதல்வர் கலைஞர் சங்கப் பிரதிநிதிகளை 03-12-1969 காலை 10 மணிக்கு முதல்வர் அறையில் சந்திக்குமாறு அழைப்பு அனுப்பியிருந்தார்.பொதுச்செயலர் முத்துசாமிக்கு எழுதிய அக்கடிதம் பரிசீலிக்கப்பட்டது.அப்போது பொதுச்செயலராகிய நான் முதல்வருடைய செய்தி அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, "முதல்வரை சந்தித்துப் பேச தயாராக ஆசிரியர் கூட்டணி உள்ளது" என கடிதம் எழுதியதாகவும், அதற்கு முதல்வரிடமிருந்து பதில் வந்துள்ளது என்றும் கூறினேன்.(செ.முத்துசாமி)
பலரும் மகிழ்ந்தனர். நடவடிக்கைகுழு என்பது மாவட்டத்தலைவர்- செயலர் அடங்கியது ஆகும்.
             மதுரை மாவட்ட செயலர் திரு.ஜே.எஸ்.இராசு முதல்வருக்கு, நடவடிக்கைக் குழுவைக் கேட்காமல் கடிதம் எழுதியது தவறு என்று கடுமையாகப் பேசினார்.பொறுமையாக இருந்த மணி அய்யர்( செங்கல்பட்டு மாவட்ட செயலர்) எழுந்து மீண்டும் கடிதத்தை படிக்குமாறு சொன்னார்.நான் (செ.முத்துசாமி) படித்தேன்.' பொதுச்செயலர் கடிதம் பற்றி முதல்வர் கடிதம் ஒன்றும் கூறவில்லை. அந்த குறிப்பு இல்லாத போது தான் எழுதிய கடிதத்தை சொல்லாமல் முத்துசாமி மறைத்திருக்கலாம்.ஆனால் அவர் உண்மையுடன் நடந்ததைக் கூறினார். ஆதலின் இராசு பேசுவது மிகத் தவறு" என்று கூறி இராசுவை கடுமையாக சாடி விட்டார்.காலை முதல்வரை சந்திக்க முடிவு செய்தோம். மறுநாள் 03-12-1969 காலை 10 மணிக்கு முதல்வர் அறைக்கு 18 பேர் சென்றிருந்தோம்.அத்தனை பேர்களுக்கும் முதல்வர் அறையில் நாற்காலிகள் போடப்பட்டு அமர்ந்தோம்.நாவலரும் இருந்தார்.முதல்வர் கலைஞர் கனிவுடன் பேசி பிரச்சனைகளைப் புரிந்துகொண்டார்.டிசம்பர் 29 ல் மாநாடும் சைக்கிள் அணியும் சென்னையில் நடத்துவது என்று முடிவு செய்திருந்த நேரம்.இதை முதல்வரிடம் கூறினோம்.மாநாடு நடத்துங்கள்.சைக்கிள் அணி வேண்டுமானால் உங்கள் இயக்க வளர்ச்சிக்கு நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
            மாநாடு- சைக்கிள் அணி பற்றி இறுதி முடிவு செய்ய 07-12-1969 ல் தஞ்சை கரந்தை ஐ.கே.நடுநிலைப்பள்ளியில் மாநில பொதுகுழு நடைபெற்றது. எழுச்சியுடன் மாநிலப் பொதுக்குழுவினர் கூடினர்.திரு.எ.எல்லண்ணா தலைமை வகித்தார்.கூட்டம் தொடங்கியதிலிருந்து மாநாடு நடத்தலாம் என்று எல்லாரும் ஏற்று வாதாடினர்.சைக்கிள் அணி நடத்தவேண்டும் என்று ஒரு பிரிவும், சைக்கிள் அணி கூடாது என்று ஒரு பிரிவும், வேகமாகமான வாதங்களில் இறங்கினர்.சைக்கிள்அணி நடத்தியே தீரவேண்டும் என்ற வாத அணிக்கு மதுரை மாவட்டச் செயலர் திரு.ஜே.எஸ்.இராசுவும், சைக்கிளணி கூடாது என்ற வாத அணிக்கு தஞ்சை மாவட்டச் செயலர் திரு.க.மீனாட்சிசுந்தரமும் தலைமை ஏற்று கடுமையான உணர்ச்சி வயப்பட்ட உக்கிரமான வாதத்தில் மாறி மாறி இறங்கிவிட்டனர்.தலைவர் திரு.எ.எல்லண்ணா தடுமாறிப் போனார்.
          மதியம் உணவை சிறப்பாக தஞ்சை மாவட்டக்கிளைக் செய்திருந்தது.உணவுக்குப்பின் பிற்பகல் பொதுக்குழு கூடியது.மீண்டும் கடுமையான எதிர்வாதங்கள் சூடேறியது.ஒரு கட்டத்தில் அமைதியாக கவனித்து வந்த நான்(செ.முத்துசாமி) இயக்கம் அன்றே உடைந்துவிடுமோ என்று அச்சப்பட்டேன்.இதற்கு மேலும் வாதம் சென்றால் உடைவது உறுதி என்று முடிவு செய்த நான்(செ.முத்துசாமி) எழுந்து பொதுக்குழுவைப் பார்த்துக் கேட்டேன்.என்ன இராணுவ தளபதி போல் ஏற்று நான் அறிவிக்கும் முடிவை ஏற்பதானால் முடிவு கூறத்தயாராக உள்ளேன் என்று அழுத்தமாக கூறினேன்.
                     கூட்டம் நிசப்தமானது.ஒவ்வொரு மாவட்டச் செயலாளராக முன்வந்து பொதுச்செயலர் அறிவிப்பை ஏற்க உறுதி அளிக்குமாறு கோரினேன்.சற்றும் தாமதமின்றி உடனே திரு.ஜே.எஸ்.இராசு முன்வந்து திராவிடநாடு கொள்கையை அண்ணா கைவிட்டது போல பொதுச்செயலர் சைக்கிள் அணி வேண்டாம் என்று முடிவு கூறினாலும் ஏற்கத் தயார் என்றார்.அடுத்து வேகமாக திரு.க.மீனாட்சிசுந்தரம் முன்வந்து" இதோ என் கால் ஒடிந்து கட்டுப் போட்டுள்ளேன்.பொதுச்செயலர் சைக்கிள் அணி நடத்தவேண்டும் என்று அறிவித்தால் இந்த ஒடிந்த காலுடன் சைக்கிள் அணிக்கு தலைமை ஏற்று வருவேன்" என்று உறுதியுடன் கூறினார்.
                 பின் ஒருவர் ஒருவராக செங்கை மாவட்டச் செயலர் பெரியவர் மணி அய்யர் வரை உறுதி கூறி அறிவித்தனர்.தென்ஆற்காடு மாவட்டச் செயலர் திரு.அப்துல் மஜித் மட்டும் அறிவிக்க மறுத்துவிட்டார்.எவ்வளவு பேர் சொல்லியும் கேட்கவில்லை.இதன் பின்னர் தென்னாற்காடு மாவட்டத்தலைவர் திரு.செல்லமுத்து முன்வந்து மாவட்ட சார்பில் உறுதி அளித்தார்.
                           இதன் பின்னர் கிட்டத்தட்ட ஒரு மணிக்கு மேல் விளக்கமளித்து இறுதியில் சைக்கிளணி நடத்தவேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி முதல்வர் கலைஞர் கூறியதையும் குறிப்பிட்டு சைக்கிளில் சென்னையை நோக்கி நடத்தவேண்டும் என்று இப்பொதுக்குழு முடிவு செய்கிறது என்று தீர்மானத்தை நான் மொழிந்தபோது கட்டடம் அதிர்ந்து போன கைதட்டல் இன்னும் என் நினைவில் நிற்கிறது.

எழுதியவர்: எஸ்.எம்.

பொன்விழா மலரிலிருந்து...
தகவல்: செ.வடிவேலு.

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்


ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் -தேர்வு கால அட்டவணை

தமிழகத்தில் ஜுன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு கால அட்டவணை

தேர்வு கால அட்டவணை


ஜுன் 1-ல் மொழிப்பாடமும்,
3-ம் தேதி ஆங்கிலமும்,
 5-ம் தேதி கணிதமும்,
 6-ம் தேதி விருப்ப மொழிப்பாடமும்,
 8-ம் தேதி அறிவியலும்,
 10-ம் தேதி சமூக அறிவியலும்,
12-ம் தேதி வொகேஷனல்

பாடத்திற்கான தேர்வுகள் நடக்கும்.

தமிழகத்தில் ஜுன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் முதல் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், 11-ம் வகுப்பில் சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இறுதி பாடத்தின் போதும் கொரோனா பரவல் காரணமாக, பலர் தேர்வு எழுதவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருந்தது. உயர் கல்வி, தொழிற்கல்வி என்று பல முக்கிய விவகாரங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையாக இருக்கும் காரணம் முன்வைக்கப்பட்டது.
பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்திய நிலையில், வரும் ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு கால அட்டவணை


ஜுன் 1-ல் மொழிப்பாடமும், 3-ம் தேதி ஆங்கிலமும், 5-ம் தேதி கணிதமும், 6-ம் தேதி விருப்ப மொழிப்பாடமும், 8-ம் தேதி அறிவியலும், 10-ம் தேதி சமூக அறிவியலும், 12-ம் தேதி வொகேஷனல் பாடத்திற்கான தேர்வுகள் நடக்கும்.


web stats

web stats