Labels

rp

Blogging Tips 2017

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்-பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் கே.சி.வீரமணிஇதுவரை கவனித்துவந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை விடுவிக்கப்பட்டு,தொல்லியல் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை சேர்க்கப்பட்டுள்ளது.


தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் இலாகாவில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்குக் கூடுதல் பொறுப்பாக பொதுப் பணி, நீர்ப்பாசனத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுப் பணித் துறையை இதுவரை கவனித்துவந்த அமைச்சர் கே.வி.ராமலிங்கத்துக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையுடன், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் பொறுப்பு வகித்திருந்த அமைச்சர் கே.சி.வீரமணி, இனி பள்ளிக் கல்வியுடன் தொல்லியல் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாச்சாரத் துறையையும் அவர் கவனிப்பார்.

No comments:

Post a Comment