rp

Blogging Tips 2017

தேர்தலில் தபால் வாக்கு எப்படி அளிப்பது என தெரிந்துக்கொள்ள உங்களுக்கு உதவும்

👆14/4/2019 தேர்தல் பயிற்சி வகுப்பு 13.4.2019 க்கு மாற்றம்

*தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள ஏப்ரல் 18 ஆம் தேதி அரசு விடுமுறை..*

தேர்தல் பணிகளில் அரசு ஊழியர் வதைபடுவது தொடரக் கூடாது!*

🌀🌀நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவிருக்கின்றன*



*🌀🌀ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் தாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை விரும்பவில்லை. அரசு ஊழியர்களின் இந்தத் தயக்கத்துக்கான காரணங்களைப் பரிசீலிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டியது அவசியம்*



*🌀🌀வாக்குப் பதிவு அலுவலர்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்து உணவுப்பொருட்களைப் பெறுவது கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது*



*🌀🌀உணவைத் தங்களது சொந்தப் பொறுப்பில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது நடைமுறையில் வேடிக்கையானதும்கூட. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கிருந்து நகர முடியாத அளவுக்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யக்கூடத் தேர்தல் ஆணையத்தால் முடியாதா என்ன?*



*🌀🌀வாக்குப் பதிவு அலுவலர்கள் தேர்தலுக்கு முதல் நாளே வாக்குச்சாவடிகளில் தங்க வேண்டியிருக்கிறது*



 *🌀🌀வாக்குப் பதிவு முடிந்து அன்றைய இரவு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வரைக்கும் அவர்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருக்க வேண்டும். அநேகமாக நள்ளிரவு வேளைகளில்தான் அவர்கள் கிளம்ப முடியும்*



*🌀🌀போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கும்கூடத் தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடுகளையும் செய்வதில்லை*



*🌀🌀தொடர்ந்து ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு ஓய்வின்றி பணிபுரிய வேண்டியிருக்கும் அந்த அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. சில வாகனங்களை ஏற்பாடு செய்தால்கூடப் போதும், நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை வழங்கிவிட முடியும்*



*🌀🌀பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் என்பது அந்தந்தப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களாகவே இருக்கின்றன. அனைத்துப் பள்ளிகளிலுமே கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்*



*🌀🌀வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடந்தால் தொடர்புடைய அலுவலர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்*


 *🌀🌀அப்படிப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்ச வசதிகளைச் செய்துதருவதில்கூடத் தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது

14.04.2019 அன்று தேர்தல் வகுப்பு இல்லை...

DEE-பள்ளிகளில் காலை இறைவணக்கக்கூட்டத்தில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் -இயக்குனர் செயல்முறைகள்

"சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது " ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் - Instructions & Application - இயக்குனர் செயல்முறைகள்


SSA-SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மழலையர் கல்வி-5000 அங்கன்வாடி மையங்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.

தேர்தல் பணி காரணமாக ஆரம்பப் பள்ளிகள் 210 நாட்களாக இயங்குவதில் சிக்கல் தவிர்ப்பாணை வழங்க வலியுறுத்தல்

25.03.2019 விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு பின்பு 08.04.2019-க்கு ஒத்திவைப்பு.

ஜாக்டோ ஜியோ வழக்கு 25.03.2019 விசாரணைக்கு வந்தது. 

1.  அரசு தரப்பில் நமது கோரிக்கைகளுக்கு lமீண்டும் பதில் தர 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. 

2.  போராட்ட காலத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுநாள்வரை மீளப் பணியமர்த்தப்படாத மீன்வளத்துறை ஊழியர் திரு. சின்னச்சாமி அவர்களை மீளப் பணியமர்த்துவது குறித்த அறிக்கையினை வழக்கின் அடுத்த விசாரணையில் அரசு தரப்பு தாக்கல் செய்யும். 

3. 17பி குற்றச்சாட்டு பெற்று வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுவோரின் பட்டியலைப் பெற்று, அவர்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக தமிழக அரசு அடுத்த விசாரணையில் தனது பதிலை தாக்கல் செய்யும். 

4.  அடுத்தகட்ட விசாரணையின்போது இதுவரை பணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கும் மீன்வளத்துறை ஊழியரை மீளப் பணியமர்த்துவது, 17பி குற்றச்சாட்டுகளை இரத்து செய்வது, பணிமாறுதல்களை இரத்து செய்வது, வேலைநிறுத்த காலத்தில் மறுக்கப்பட்ட ஊதியம்  ஆகியவை தொடர்பாக,   வரும் 8.4.2019 அன்று அடுத்த கட்ட விசாரணையின் போது  பரிசீலிக்கப்படும்  என நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

இவண் 
ஜாக்டோ ஜியோ

வருமான வரி மாதா மாதம் பிடித்தம் செய்யவேண்டும்.

தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாறு-ஆசிரியர் செ.முத்துசாமி- தொடர்-3

click here to view

TNTET - PAPER - 1 & 2 - SYLLABUS


CLICK HERE TO DOWNLOAD - TET PAPER - 1 SYLLABUS

CLICK HERE TO DOWNLOAD - TET PAPER - 2 SYLLABUS

ELECTION 2019 - தேர்தல் பயிற்சி வகுப்புகள் விவரம் | OFFICIAL LETTER Proposed Schedule for Election Class Training

TET தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம்தொடங்கியது !
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும்ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு"ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி  

http://trb.tn.nic.in/ 

இதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வுவாரியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொதுபிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வுகட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து இணைய தளவழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டிநெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம்இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதிபின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில்குறிப்பிட்டுள்ளது.   

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பானசந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்) . அதே போல் உதவி மையம்  ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு   https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp

என்றஇணையதளத்தில் அறியலாம்.

BE - பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. . மேலும் பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 2019 -20120-ஆம் ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

1/4/2019முதல்IFHRMSதிட்டத்தின் கீழ் இனையதளம் மூலலமாக கருவூலப் பட்டியலகள் சமர்பிப்பது சார்ந்து தனியார் பள்ளிகளை பொருத்வரை சென்னை உயர் நீதி மன்றமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு(வழக்கு எண்:WP:NO.33092 OF2018 AND WMP NO:38376 OF 2018) அதன்படி தடையானை பெறப்பட்டுள்ளது எனவே உதவி பெறும் பள்ளிகள் இனையதளம் மூலமாக கருவூலப் பட்டியல்கள் சமர்பிப்பதிலிருந்து விலக்கு பெற்றுள்ளது எனவே தனியார் பள்ளிகளில் IFHRMS இதனை நடைமுறை படுத்த வழிவகையில்லை எனவே தனியார் பள்ளிகளை பொருத்தவரை தற்போதய நிலையே தொடர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் விவர்ம் அறிவிப்பு


web stats

web stats