rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.மாநில செயற்குழு தீர்மானங்களை வெளியிட்டுள்ள நாளிதழ்

அரசு ஊழியர் ஆசிரியர் களால் தான் தோற்றோம் என இலை கட்சி காரர்கள் பேச்சு.தினமலர் டீக்கடை பென்ச் பகுதியில் செய்தி

HOW TO MAKE TIME TABLE IN EMIS WEBSITE - VIDEO


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான இலவச மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடுக்கான இலவச மாணவர் சேர்க்கை மே 29, 30-ம் தேதிகளில் இணையதளம் வழியாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர்.

இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.21 லட்சம் இடங்கள் உள்ளன.இதற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி மே 18-ல் முடிந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே இலவச மாணவர் சேர்க்கையில் பல தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள்எழுந்தன. மேலும், மாணவர்களை சேர்க்கைக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

Flash News : TNTET 2019 Exam - Hall Ticket And Exam Centre Details Published - DIRECT DOWNLOAD LINK

EMIS news...Teachers profile part II now initiated....EMIS Teacher profile part -II பூர்த்தி செய்ய நமக்கு தேவையான விவரங்களை குறித்துக் கொள்ள உதவும் படிவம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 25-05-2019 அன்றைய சென்னை மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

RTE சட்டப்படி 23/8/2010 க்குப் பிறகு NON-TEACHING லிருந்து TEACHING க்கு பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் TNTET அவசியம் - முதல்வர் தனிப்பிரிவு பதில்.

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு நிகழ்வுகள்
S.MUTHUSAMY EX MLC STATE PRESIDENT TNTF PRESS MEET AT CHENNAI
சென்னை செய்தியாளர் சந்திப்பு-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள் விவரம் முழு வீடியோ இணைப்பு


கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்: ஆசிரியர்களுக்கு இணை இயக்குநர் அறிவுறுத்தல்

மாணவர்களின் ஒழுக்க நெறி மற்றும் சமுதாய பொறுப்பு மேம்படுவதற்கு கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் வாசு அறிவுறுத்தினார்.
திண்டுக்கல், பழனி, வேடசந்தூர் மற்றும் வத்தலகுண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த சாரண சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப் படை, சாலை பாதுகாப்பு அமைப்புகளின் பொறுப்பு ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.சொ.சாந்தகுமார் தலைமை வகித்தார்.

SCERT-பள்ளிக் கல்வி - புதிய பாடத்திட்டம் - புதிய பாடநூல்கள் - மாநிலக்கருத்தாளர்களுக்கான பணிமனை - சார்ந்து.

TET 2019 க்கான பாடத்திட்டம் - TRB மூலம் வெளியீடு செய்யப்பட்ட 6,7,8 வகுப்புகளின் புத்தகங்கள் மட்டும் படித்தால் போதும். - CM CELL பதில்

பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம்? ஜூன் இரண்டாம் வாரம் தள்ளிப்போகும் வாய்ப்பு

தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு,  அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., ஜூன், 3 முதல், 'அட்மிஷன்'

தமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது.அரசு பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசாணைஅரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர், தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் செலுத்தி, குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது.

அங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல்

அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.முழு விவரம்

தொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களின் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க  தடை கோரிய மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. 


இதுதொடர்பாக  ஆசிரியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், அரசிடம் அதிகளவு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பொதுநலன் கருதி அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்துக்கு வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.


ஆசிரியர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பு அங்கன்வாடி மையம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.


தமிழக அரசு ஜூன் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும், இந்த வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு 6 மாதம் மழலையர் கல்வி பயிற்சியும் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCHOOLS IN TAMILNADU WILL NOT REOPEN ON JUNE3