Labels

rp

Blogging Tips 2017

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த விவரம்:

தேசிய கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை கல்வியியல்

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்த, நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை, 10 நாட்களுக்கு முன், ராஜினாமா செய்தார். எனினும், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியான நிலையில், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து, நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் நீக்கப்பட்டது. மேலும், தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான, பாலசுப்ரமணியன், தலைவர் பதவியை, கூடுதல் பொறுப்பாக வகிப்பார் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, தலைவர் பதவியை, பாலசுப்ரமணியன் கவனிப்பார்

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

5 ஆம் வகுப்பு முதல் பருவம் ஆங்கில பாடத்தில் இடம் பெற்றுள்ள புதிய மற்றும் கடின சொற்களை அசைப்படி (SYLLABLE) பிரித்து எவ்வாறு எளிதாக கற்பிக்கலாம்?

இங்கே கிளிக் செய்து புதிய சொற்கள் பட்டியலைக்காணலாம்

அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி

பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி 2 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறும். மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட அளவில்

தமிழால் நெகிழவைக்கும் குடும்பங்கள்!

'என் பெயர் நிகரன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். தமிழ் வழியில் கல்வி பயில்கிறேன்' - இப்படி ஒரு சிறுவன் என்னிடம் அறிமுகப்படுத்தியபோது என் காதுகளில் தேன் பாய்வதை உணர்ந்தேன்.
வீட்டிற்கு வரும் விருந்தினர், உறவினரிடம் 'பாப்பா அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லு', 'சே ஹலோ டூ ஆன்ட்டி' என்றெல்லாம் வித்தை காட்டுவது போல் குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை பறைசாற்றிக் பெருமைகொள்ளும் இந்த காலகட்டத்தில், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தை அழகாக தமிழ் பேச வேண்டும் என விரும்புகின்றனர், ஊக்குவிக்கின்றனர்?

சத்துணவு சாம்பாரில் விழுந்த குழந்தை எட்டு நாட்களுக்கு பின் பரிதாப பலி


சேத்தூர்: விருதுநகர் சேத்தூரில் கொதித்த சாம்பாரில் தவறி விழுந்து காயமடைந்த 3 வயது குழந்தை பிரியதர்ஷினி, எட்டு நாட்களுக்கு பின் நேற்று இறந்தது.

சேத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அன்னை சிவகாமி ஆங்கிலப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேஷ்ராம் மகள் பிரியதர்ஷினி பிரி-கே.ஜி படித்தாள். ஜூன் 20 மதியம், அவரது தாய் சிவகாமி சாப்பாடு கொடுத்து கொண்டிருந்த போது, காமராஜர் மேல்நிலைப்பள்ளி

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,திருவண்ணாமலை மாவட்டக்கிளை யின் செயற்குழுகூட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்டக்கிளையின் செயற்குழு கூட்டம் இன்று திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது

இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலர் மதிப்பிமிகு.செ.முத்துசாமி Ex.M.L.C,அவர்கள் கலந்து கொண்டு இயக்கப்பேருரை ஆற்ற உள்ளார்

மேலும் மேனாள் மாநில பொருளாளர் திரு.அ.அப்துல்காதர்,மேனாள் மாவட்டத்தலைவர்.கோ.சின்னராஜி,ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

மாவட்டத்தின் அனைத்து வட்டார /நகரக்கிளைப்பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டப்பொறுப்பாளர்கள்.மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,அனவரும் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மாவட்டசெயலர் மற்றும் மாநில துணைத்தலைவருமான திரு.கே.பி.ரக்‌ஷித்  தெரிவித்துள்ளார்.

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Provision of Health Care Assistance to the Pensioners (including spouse) / Family Pensioners through the United India Insurance Company Limited, Chennai – Implementation – Orders – Issued.

திருப்பூரில் மாணவி தற்கொலை: தலைமையாசிரியை சஸ்பென்ட், கணக்கு டீச்சர் டிஸ்மிஸ்!

திருப்பூர், வீரபாண்டி அரசு பள்ளி மாணவி சுவாதி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கணக்கு ஆசிரியை
பிரியா, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலன் நகர் 2வது வீதியை சேர்ந்த மனோகரன் - சுசீலா தம்பதியின் மகள் சுவாதி (18), வீரபாண்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

இடைநிலைஆசிரியர்,பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் அவருக்கு ஊதிய நிர்ணயம் எவ்வாறு செய்யலாம்-மதுரை மண்டல கணக்கு(தணிக்கை) அலுவலர் விளக்கக்கடிதம்

முதல் முதல்-சாதணைப்பெண்கள் பட்டியல்* உலக அழகியான முதல் இந்தியப் பெண் - ரீட்டா பெரி
* முதல் நோபல் பரிசு பெற்ற பெண் - அன்னை தெரசா
* முதல் பெண் சபாநாயகர் - ஷானோ தேவி
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (.பி)
* தில்லி அரியாசனத்தில் அமர்ந்து ஆண்ட முதல் பெண்மணி - ரஸியா சுல்தானா (1236-40)

அம்மா உணவகலம்போல் அம்மா ஸ்கூல் கிடைக்குமா? ஃபேஸ்புக் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ‘தி இந்து’ புகைப்படம்

நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களும் நம் மனதில் நிற்பதில்லை. புகைப்படத்தில் இருப்பவர்களைவிட, அந்தப் புகைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே அதனை மற்றவற்றில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.
‘தி இந்து’ நாளிதழின் ஃபேஸ்புக் பக்கத்தில் நம் புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் சிறந்த புகைப்படங்களை பகிர்வது உண்டு. அப்படி பகிரப்படும் புகைப்படங்கள் மக்கள் மனதை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை உடனுக்குடன் வரும் பின்னூட்டங்கள், விருப்பங்கள் (லைக்) மூலமாகவும் அது எத்தனை முறை பகிரப்பட்டுள்ளது என்பதிலும் தெரிந்துகொள்ளலாம்.
சமீபத்தில், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக கோவையில் நடந்த கண்டனப் போராட்டத்தில், நமது புகைப்படக்காரர் ஜெ.மனோகரன் எடுத்த ஒரு புகைப்படம், ‘தி இந்து’ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக
அமைந்தது.
விலைவாசி உயர்ந்த நேரத்தில் குறைந்த விலையில் தரமான உணவை

பெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக, விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்புக்காக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், "2012 ஆம் ஆண்டு புது டெல்லியில் ஒரு பெண் கொடூரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த போது, 13 அம்சத் திட்டத்தினை தீட்டி இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக விளங்கி வருகின்ற அரசு எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று தொடங்கவிருந்த பொறியியல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

521 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடவடைக்கைகளை இன்றிலிருந்து ஒரு வார கால அவகாசத்திற்குள் முடிக்குமாறு ஏஐசிடிஇ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினால் ஜூன் 30ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டிய முதற் சுற்று கலந்தாய்வுகள் தற்போது ஜூலை 15ஆம் தேதி நிறைவடையும்.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதியும், 3ஆம் சுற்று கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதியும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்: உத்தரவை ரத்து செய்ய மனு


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி., எம்.எட். படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.) 60 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மே 30 ல் உத்தரவிட்டது.

சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி.

சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 25 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும்.

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்

படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கல்விச் செயல்பாடுகள், படைப்பாற்றல் கல்வி, கல்வி இணைச் செயல்பாடுகள், எளிய செயல்வழிக் கற்றல், எளிய படைப்பாற்றல் கல்வி உள்ளிட்ட கல்வி கற்பிக்கும் முறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் ஆய்வு செய்கின்றனர்.

மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.


மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 2004 முதல் 2006 ம் ஆண்டு வரை கள்ளர் சீரமைப்புத் துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 150 பட்டதாரி மற்றும் 50 முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) பணி நியமிக்கப்பட்டனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் பெற பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக, 2.3.2011ல்,

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

சிறப்புச் செய்தி: விளையாட்டாகிப் போன விளையாட்டு

"காலை யெழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா"
என்று மகாகவி பாரதியார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாடினார். ஆனால் காலை, மாலை, இரவு என அனைத்து காலங்களும் படிப்பாக மட்டுமே ஆகிவிட்டது. இந்த நிலை உருவாக என்ன காரணம்?
தமிழகத்தைவிட  குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இத்தாலி, ஸ்வீடன், போலந்து, பெலாரஸ், பின்லாந்து போன்ற நாடுகள்  ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவிலான தங்கப் பதக்கங்களை பெற்று வருகின்றன. ஆனால் அதனை விட பன்மடங்கு அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தகுதிச் சுற்றுகளுக்கே தகுதி பெற முடியாமல் தடுமாறும் நிலையில்தான் இன்றளவும் இருக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் பெற்ற பதக்கங்களின் அடிப்படையிலான தரவரிசையில் 53வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் இடப்பரப்பளவில் 7 வது இடத்திலும், மக்கள் தொகையின் அடிப்படையில் 2வது இடத்திலும் இருக்கும் நமக்கு இது பெரும் அவமானம் இல்லையா.
மாணவர் வளம்
தமிழகம் முழுவதும் 56,573 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.  இந்த எண்ணிக்கை மாபெரும் சாதனைகளை படைக்கக்கூடிய அளவில்லா சக்தி கொண்டது. ஆனால் இந்த சக்தி வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளை தவிர்த்து, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மட்டும் 16,328 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை கூட இல்லாமல் 3,700 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
250 மாணவருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், கூடுதலாக 180 மாணவர் இருந்தால் இன்னொரு ஆசிரியர் இடமும் வழங்கலாம் என விதிமுறையில் உள்ளது.
ஆசிரியர்கள் இல்லை
23 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களே கிடையாது. அரசினர் நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்கள் 23,500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையினாலும், விளையாட்டு உபகரணங்கள், உதவிகள் போதுமான அளவில் வழங்கப்படாததும் அரசிற்கு பொருளாதார இழப்பின்மை போன்று தெரிந்தாலும். அனைத்துவிதமான திறமைகளை கொண்டிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வழிகாட்டுதல் இல்லாமல் விளையாட்டினை  மறந்தேவிடுகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்லுவது அரசுப் பள்ளிகளே"-கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம்

அரசு பள்ளிகள் தான், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது" என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் தெரிவித்தார்.
கரூரில் நடந்த ரோட்டரி கிளப் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் பேசியதாவது:
அரசு பள்ளிகள் தான், ஏழை மக்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. அரசு பள்ளிகள் தான் அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்கிறது. கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். எதற்காகவும் நம்முடைய தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. நம்முடைய பெயர், கையெழுத்தைக் கூட தமிழில் எழுத தயங்கி வருகிறோம்.

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) பதவி உயர்வு பெறுவதற்கு வையணன் தகுதியானார். இந் நிலையில் 2012-13-ஆம் ஆண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது.

நடப்பு கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்: தமிழக அரசு இலக்கு

நடப்பு கல்வியாண்டில் (2014-15) 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆசிரியர் பேரணி-JUNE-20 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)

தொடக்கக்கல்வி -மாவட்ட மாறுதல்- வழிகாட்டு நெறிமுறைகள் மற்று ம் முன்னேற்பாடுகள் குறித்து இயக்குனர் கடிதம் மற்றும் அனைத்து மா.தொ.க.அலுவலர் கூட்டம்

மூன்று விஷயங்கள்.....நினவில் கொள்ள வேண்டியவை

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......
நகை
மனைவி
சொத்து
3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....
புத்தி
கல்வி
நற்பண்புகள்
4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......
உண்மை
கடமை
இறப்பு
5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

TET CASE FOR AGAINST NEW GO

மதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,

மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது.

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு

பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

2013-14ம் நிதியாண்டு முதல் ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்


நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப் கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு (டி.டி.ஓ.) ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. ஜிபிஎப் சந்தாதாரர்கள், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்த அலுவலக டி.டி.ஓ.விடம் தங்களின் ஆண்டு கணக்கு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - பணி நிரவல் / பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு - கால அட்டவணை சார்பு

தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு

காஸ் விலை உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: மத்திய அரசு


சமையல் காஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் ரூ.5 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், காஸ் மற்றும் கெரசின் விலையை உயர்த்த மத்தியஅமைச்சரவை திட்டமிடவில்லை எனவும்,

கல்வி உதவி தொகை கையாடல்: நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், கீழ்மருவத்தூரை சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணியாற்றும் 77 தலைமை ஆசிரியர்கள், 2011-12 கல்வியாண்டுகளில் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையை வழங்காமல் கையாடல் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த 77 தலைமை ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி உத்தரவிட்டது

கல்வித்துறை அதிகாரிகளின் அணுகுமுறையில் அதிக அளவு மாற்றம் தேவை


திருச்சியை இரண்டாக பிரித்து ஸ்ரீரங்கம் மாவட்டம் உதயமாகிறது: 30ம் தேதி முதல்வர் அறிவிப்பு?

திருச்சி மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை   தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட அறிவிப்பை 30ம் தேதி  முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தகவல்கள்  வெளியாகியுள்ளன. தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை  பகுதி  கடந்த 1974ம் ஆண்டு திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி  மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திருச்சி, கரூர்,  பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகள் மட்டும் திருச்சி  மாவட்டமாக இருந்து வந்தது. அத்தகைய சூழ்நிலையில் தான் திருச்சி  மாவட்டத்தை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்  என்கிற கோரிக்கை எழுந்தது.இந்த நிலையில் நிர்வாகக்  காரணங்களுக்காக கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி திருச்சி  மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டு கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர்  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  பெரம்பலூர் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம்  உருவானது.

TNTET 12ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது:


கடந்த ஆண்டு அக்டோரர் மாதம் நடைபெற்ற TET தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும்.இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் ,மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படி 7% உயர்த்தி வழங்க பரிந்துரை?

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை 2014 மாதத்திற்கான அகவிலைப்படியை 7% உயர்த்தி 107% ஆக வழங்க நிதித்துறை பரிந்துரை செய்துள்ளதாக இரயில்வே துறையில் உள்ள ஊழியர்கள் அமைப்பு ஒன்று தகவல் கூறியுள்ளது.
எனினும் இறுதி விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஆங்கிலம் / கணித பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி - பட்டியிலுள்ள ஆசிரியர்கள் நாளை நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - வருங்கால வைப்புநிதி கணக்கு முடித்து தொகை வழங்குவது சார்பான கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2014 அறிவியல் செய்முறை தேர்விற்கான தேதி அறிவிப்பு

'போலி' பணி நியமன ஆணை: சம்பளத்தை திரும்பப் பெற நடவடிக்கை


வேலூரில், 'போலி' பணி நியமன ஆணை வழங்கிய, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' ஆனது அம்பலமாகியுள்ளது.

வேலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலராக மதி பணிபுரிந்து வந்தார். இவரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா, 20ம் தேதி உத்தரவிட்டார். இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2012ல், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில்,

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு: கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு!


கொடைக்கானலை சேர்ந்த பெண்ணிற்கு கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால், பெல்ஜியம் தூதரகம் விசா மறுத்தது. தற்போது அப்பெண் அரசிதழில் பெயர் மாற்றம் செய்துள்ளபடி, பிறப்புச் சான்றில் திருத்தம் செய்து வழங்குமாறு, நகராட்சிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அணையில் மூழ்கி மாணவர் பலி: ஆசிரியர்கள் 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 42 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் பத்மநாபன் (15) என்ற மாணவன் அணையின் மதகு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டான். போலீஸ் விசாரணையில் ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர் மாணவர் விகிதம்

சமசீர் பாடத்திட்டத்தால் மாணவர்களின் சுமை குறைந்துள்ளது; ஆய்வில் தகவல்

டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்

மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை என்.சுசீலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.


மனுவில், அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தில் எனது குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லையில் உள்ள ரோஸ்மேரி மருத்துவமனையில் 2012 ஜன.17 முதல் மார்ச் 7 வரை சிகிச்சை பெற்றாள். சிகிச்சை கட்டணமாக ரூ. 4லட்சத்து 16 ஆயிரத்து 958 செலுத்தினேன். அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டதின் கீழ் இந்த தொகையை திரும்ப வழங்கக்கோரி விண்ணப்பித்தேன். காப்பீடு திட்டத்தில் உள்ளநோய்கள் பட்டியலில் டெங்கு காய்ச்சல் இல்லை எனக் கூறி அரசு நிராகரித்தது என குறிப்பிடப்பட்டிருந்தது.


இம்மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர் காப்பீடு திட்டம் தொடர்பான புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு விசாரித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுதமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் தேர்வாகவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பகுதிநேர ஆசிரியர்கள் 8 பேர் டிஸ்மிஸ் DINAKARAN

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பகுதி நேர ஆசிரியர்கள் 8 பேர், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 8,612 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கலை ஆசிரியர்களாக மட்டும் 3,620 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை முழுநேர ஆசிரியர்களாக நியமித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 2 வருடங்களாக பல்வேறு சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் ஆதரவு என அறிவித்தது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி, தனது தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்தது.


இதையடுத்து சங்க நிர்வாகிகள், கடந்த ஏப்ரல் 18ம் தேதி, கோவையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் 8 ஆசிரியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக கலைஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை கோவையில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். இந்நிலையில் ஜூன் 2ம் தேதி கோத்தகிரி அரசு பள்ளியில் கலைஆசிரியராக பணியாற்றி வரும் சங்கத்தின் மாநிலத் தலைவரான என்னை பணிநீக்கம் செய்து கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு: ஆந்திர பேரவையில் மசோதா நிறைவேற்றம்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60ஆக உயர்த்தி ஆந்திர சட்டசபையில் மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தவிர அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசியதாவது: தற்போதுள்ள சட்டம் 1984ல் கொண்டு வரப்பட் டது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவன அறிக்கைபடி இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 65ஆக உள்ளது. தற்போது மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளதால், ஆந்திராவின் வளர்ச்சிக்கு அனுபவம் உள்ளவர்களின் சேவை தேவை. அதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படுகிறது.

பொது சேவைகள் - வேலை வாய்ப்பக அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்படும் பணிகளில் இடஒதுக்கீடு பின்பற்றுவது சார்பான அரசாணை


த.அ.உ.ச 2005 - தமிழகத்தில் கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு 31.12.2013 வரை 6172 பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்

ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை குழு அறிவித்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு 16- வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்? தி ஹிந்து


தயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்!
அரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை எளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும் படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன் படிக்கும் துணை யாரும் இல்லாத சூழலில் மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசி மாணவனையும் பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும் செங்கல் கூடாக மாறியிருக்கிறது. வேறு வழியில்லாமல், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய இரு ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்தை மூடியிருக்கின்றனர்.

பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளை புரிந்துகொள்வது எப்படி?:

‘அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.. இன்ஜினீயர், டாக்டர் ஆகவேண்டும்.. வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று தங்க ளுக்குள் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு அதை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் பெற்றோர்கள். இதனால் அவர்கள் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங் களாக வளர்கிறார்களேத் தவிர, மனிதத்தின் அறம் சார்ந்த பண்புகளை தெரிந்து கொள்ளா மலேயே
போய்விடுகிறார்கள்’.. இந்தக் காலத்து கல்வி முறையை நினைத்து அக்கறையோடு கவலைப்படுகிறார் ஆதிலட்சுமி குருமூர்த்தி.

கனவாகும் மெடிக்கல் படிப்பு!-- எஸ். முத்துகிருஷ்ணன்

மாட்டுப்பண்ணை,கோழிப்பண்ணை போன்று தமிழ்நாட்டில் தற்போது 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக 'பள்ளிப்பண்ணைகள்' வைத்து நடத்துபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். 

அதனால்தான் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் கணித பாடப்பிரிவில் 3,882 பேர்,இயற்பியலில் 2,710 பேர், வேதியியலில் 1,693 பேர், உயிரியியலில் 652 பேர் என்று 200 க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில்,மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்ணாக 132 பேர் 200க்கு 200, 102 பேர் 200 க்கு 199.75, 223 பேர் 200 க்கு 199.50 என பெற்றுள்ளனர். இத்தனைபேர் ஒரே கட் ஆப் மதிப்பெண் எடுத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

தனியார் பள்ளி என்பது ஒரு மாயை!

கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு கற்றுத் தருகிறார்களாம்.

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தபண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....


இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ..
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்  அரை வைத்தியன்...

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.......

அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை

அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடங்களை, அரசு கட்டித் தந்துள்ளது. மேலும், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படையான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள, கல்வி வளர்ச்சி குறியீட்டில், புதுச்சேரி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான தனியார் பள்ளிகள், அடிப்படை வசதிகள் இல்லாத கட்டடங்களில் இயங்குவதாக, பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளது. பல பள்ளிகளில், அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட அறைகளில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் தகவல் சென்றுள்ளது.இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வல்லவன், ஆய்வு நடத்தும் அதிகாரிகளுக்கு, சுற்றறிக்கை ஒன்றை, கடந்த 16ம் தேதியன்று அனுப்பி உள்ளார்.

MBBS/BDS முதல் கட்ட கலந்தாய்வு கட்-ஆஃப் என்ன?

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் சேர்ந்த மாணவர்கள் என முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த
பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் (வகுப்பு வாரியாக) கீழே அளிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு/ அரசு/ சுயநிதி அரசு/ அரசு பி.டி.எஸ்/.எம்.பி.பி.எஸ். எம்.பி.பி.எஸ்.
ஓ.சி.                            199.25               198.25             198.25
பி.சி.                             198.50               198.00             198.00
பி.சி.(எம்)                    197.50              197.00              197.00
எம்.பி.சி.                     197.75               197.00              197.25
எஸ்.சி.                        195.25              193.50              194.25
எஸ்.சி.(ஏ)                   192.50              190.75             192.00
எஸ்.டி.                         188.00              185.75               187.50

எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின: காத்திருப்போர் பட்டியலில் 2,200 மாணவர்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கு உரிய அனைத்து இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டன.
சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்தும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டன.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. சிறப்புப் பிரிவினர், பொதுப் பிரிவினர் என அனைவருக்கும் கடந்த ஆறு நாள்களாக கலந்தாய்வு நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம்


.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் 22.06.2014 அன்று பொள்ளாச்சி VRI நடுநிலைப் பள்ளியில் திரு ஆர்.உத்தர்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநிலத் தலைவர் திரு.K.S.மணி, மாவட்டச் செயலாளர் திரு.A.நாச்சிமுத்து, மாநிலச் துணைச்செயலாளர் திரு.S.காளியப்பன்

ஜூன்.30 க்குள் மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்தாத கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு – ஆட்சியர் உத்தரவு.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஜூன் 30-க்குள் அமைக்காத தனியார் கட்டடங்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க ஊராட்சித் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் ஊழல்... மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சிறை

விடுப்புக்கால பயணச் சலுகை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய நிதித்துறை அமைச்சக ஊழியர்கள் இருவருக்கு டெல்லி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. போலியாக பில்கள் தயாரித்து ரூ.4.20 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டது.
நிதித்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் பாலே சிங் சகானா, பகவான் சிங் என்ற இருவரும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

பணி நிரவலால் பாதிக்கப்படும் புதிய இடைநிலை ஆசிரியர்கள்


சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு படையெடுக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள்!

வலை போட்டு ”நல்ல பள்ளி”களைத் தேடி அலையும் அவலம்
நாம் படித்த காலத்தில், பெற்றோர்கள் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் குழந்தைகளை எங்கு படிக்க வைப்பது என்பதில் பெரிய பிரச்சனை இருந்ததில்லை. பெரும்பாலும் அருகிலிருக்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளுக்கே அனுப்புவார்கள்... அதிகம் அந்த பள்ளிகளைத்தான் காண முடியும். மிகக்குறைவாக தனியார் ஆங்கிலவழிக்கல்வி "மெட்ரிகுலேசனாக" இருந்தது...
இன்றைக்கு வேலை எங்கே என்பதைவிட, அங்கே "நல்ல பள்ளி" இருக்கிறதா என்பதைத்தான் முதலில் பெற்றோர்கள் தேடுகிறார்கள். தூரமாக இருந்தாலும் குழந்தையின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ‘நல்லப் பள்ளி’க்கு அனுப்புகிறார்கள். அப்படி என்ன அந்த "நல்ல பள்ளி"? என்று பார்த்தோமேயானால் அது சிபிஎஸ்இ (மத்திய அரசு பொது பாடத்திட்டம்) பள்ளி... அப்படி அதில் என்ன உள்ளது? அதிகமான கட்டணம், "சாதாரண மக்கள் இன்னமும் பேசிவரும் அடித்தட்டு மக்கள் மொழி"யான‌ தமிழை ஒருபாடமாகக் கூட படிக்கத் தேவையில்லை...

அரசுப் பள்ளிகளில் சுற்றுச் சுவர்,கட்டடங்களைப் புதுப்பிக்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பழுதான கட்டடங்களைப் புதுப்பிக்கவும், சுற்றுச் சுவர் கட்டவும் தொடக்கக் கல்வித் துறை விவரம் கேட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு

தமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவுரைகளும் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு தொடர்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில்

போலி பணி நியமன ஆணை: வேலூர் கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

வேலூர் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் விவகாரத்தில், அவர் போலி கையெழுத்து போட்டு பணி நியமன ஆணை வழங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் கல்வி துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மதி என்ற பெண் அதிகாரி இருந்து வந்தார். இவரை சஸ்பெண்ட் செய்து தமிழக பள்ளி கல்வி துறை செயலர் ஷபிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளியிடவில்லை. இந்த நிலையில், எஸ்எஸ்ஏ திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது அம்பலமாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்தது.

web stats

web stats