Labels

rp

Blogging Tips 2017

தாயின் மணிக்கொடி -கொடி பாடல்

ஆபத்தான அஜினோமோட்டோ:

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக்குள்ளும் புகுந்துவிட்டது


. * இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன

>>>ஜப்பானில்....

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்:-இந்தியாவில் உணவுகளின் சுவைக்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இத்தகைய பொருட்களை உப்பிற்கு பதிலாகவும் சேர்க்கலாம். பொதுவாக இந்த பொருட்கள் பிரியாணிகளின் அதிகம் சேர்க்கப்படும். பெரும்பாலானோர், இவற்றை வெறும் வாசனைப் பொருளாகவும், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருளாகவும் மட்டும் தான் பார்க்கின்றனர்.

ஆனால் இத்தகைய மசாலாப் பொருட்களை அளவாக உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதுவே நன்மை அதிகம் உள்ளது என்று அளவுக்கு அதிகம் சாப்பிட்டால், பின் செரிமானப் பிரச்சனை அல்லது சில சமயங்களில் அல்சர் போன்றவை கூட ஏற்படும்.

திறனாய்வு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த ஆசிரியர்கள்


கர்நாடக மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சேருவதற்குமுன் இரண்டு வருட கல்வித்திட்டம் (பியுசி) ஒன்றில் பயிலவேண்டும். இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டம் சமீபத்தில் அங்கு மேம்படுத்தப்பட்டது.

இவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் தரத்தை புதிய திட்டத்திற்கேற்ப மேம்படுத்திக் கொண்டுள்ளார்களா என்பதை அறிய அவர்களுக்கு ஒரு திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டது.பெங்களூருவில் செயல்பட்டுவரும் இந்திய அறிவியல் நிறுவனம் இந்தத் திறனாய்வுத் தேர்வை நடத்தியது.

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் கமிட்டியிடம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு 'கட் ஆப் மதிப்பெண்' கணக்கீடு- 'பிளஸ் 2' மதிப்பெண்ணால் பழைய மாணவர்களுக்கு பாதிப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான கட் ஆப் மதிப்பெண் கணக்கீட்டின்போது பிளஸ்-2 மார்க் பார்க்கப்படுவதால் பழைய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொண்டவர்கள் 12,596 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியையும், ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியையும் பெற்றனர்.தகுதித்தேர்வு, பிளஸ்-2 தேர்வு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் (வெயிட்டேஜ் மார்க் முறை) இடைநிலை ஆசிரியர்களும், தகுதித்தேர்வு, பிளஸ்-2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களும் பணி நியமனத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.2005-ம் ஆண்டுக்குப் பின்னர் பிளஸ்-2 தேர்வில் ஓரளவு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களே எளிதாக 1200-க்கு 950 மார்க், 1,000 மார்க்குக்கு மேல் எடுத்து வருகிறார்கள்.

லஞ்ச வழக்கில் வேலூர் கல்வி அதிகாரி கோர்ட்டில் சரண்


தொடக்கக் கல்வி குறித்த new indian express கட்டுரை


இணையதளத்தில் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம்

வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து தொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொழிலாளர்களின் வைப்பு நிதி குறித்த ஆண்டு கணக்கு விவரங்கள் இதுவரை நிறுவனங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வந்தன. அதை நிறுவனங்கள்

கல்வி அதிகாரிகள் விசாரணை சிறப்பு வகுப்புக்கு அழைத்து மாணவிக்கு ஆங்கில ஆசிரியர் முத்தமழை


நாகர்கோவில் அருகே சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவியை வகுப்பறையில் வைத்து ஆசிரியர் கட்டி பிடித்து முத்தமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கருங்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் கடந்த 17ம் தேதி 10ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு வைத்து இருந்தார். அன்றைய தினம் நாகராஜா கோயில் தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தேசிய வாக்காளர் தினம் ஐனநாயக கடமையை செம்மையாக நிறைவேற்றுவோம்!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்குவது தேர்தல் ஆணையம். 1950 ஜனவரி 25ம்தேதி துவங்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் வைர விழா கடந்த 2011ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம்தேதி, தேர்தல் ஆணையத்தை கவுரவிக்கும் வகையில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. கண்ணியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு என்று தேர்தல் ஆணையம், அரசு சாரா அமைப்புகளோடு இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

புதிதாக சேர்ந்துள்ள 27 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இன்று முதல் வழங்கப்படும்


புதிதாக சேர்ந்துள்ள 27 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இன்று முதல் வழங்கப்படும். இதை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று கூறினார். சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களி டம் நேற்று கூறியதாவது: இன்று நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களு டன் இணைந்து பேரணி, மினிமராத்தான் ஓட்டம், மனித சங்கிலி, வீதி நாடகங்கள், கோலப்போட்டி, பலூன்கள் மூலம் விளம்பரங்கள் செய்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

முதன்முறையாக, தமிழக தேர்தல் அலுவலகம் சார்பில் இணையதளம் மூலம் ‘பேஸ்புக் அக்கவுண்ட்’ இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக ‘யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்’ மற்றும் ‘போரம் பார் எலக்டோரல் இன்டக்ரிடி‘ என்ற 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 60,418 வாக்குப்பதிவு மையங்களில் உள்ள 27,946 வாக்குச்சாவடிகளில் இந்தாண்டு புதிதாக சேர்ந்துள்ள 27 லட்சம் வாக்காளர்களுக்கு இன்று முதல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். மையங்களுக்கு வந்து வாக்காளர் அடை யாள அட்டை பெறாதவர்களுக்கு, வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் வீடு, வீடாக சென்று அடையாள அட்டையை ஒரு மாதத்திற்குள் வழங்குவார்கள்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டு -தடையின்மை சான்று (என்.ஓ.சி.) வாங்க தமிழக அரசு புதிய நடைமுறை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் சரி, அதை புதுப்பித்துக்கொள்வதற்கும் சரி தங்கள் துறைத்தலைவரிடம் தடையின்மை சான்று (என்.ஓ.சி.) வாங்க வேண்டும் என்ற விதி இருந்தது. இதனால், என்.ஓ.சி. பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், காலதாமதத்தை தவிர்க்கவும் ஊழியர்களுக்கு விரைவாக என்.ஓ.சி. வழங்கிடவும் தமிழக அரசு புதிய நடைமுறையைக்

இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்...

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில்
விளம்பரங்கள்இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்கு கொடுக்கிறார்கள்.
கீழே உள்ள லின்க்கை பார்க்க Websites : GotFreeFax , FaxZero

சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்.

பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம், வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இலவச அழைப்புகள்:


பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போன்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச அழைப்புகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நிறுவன போன்களுக்கு செய்யும் அழைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.இந்த நடைமுறையில், கடந்த ஆண்டு திடீரென, மாற்றம் செய்யப்பட்டது. 'பி.எஸ்.என்.எல்., போன்களுக்கு போன் செய்தால் மட்டுமே, இலவச அழைப்பு சலுகை வழங்கப்படும். வேறு நிறுவனங்களின் போன்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மாற்றம் செய்தது. பி.எஸ்.என்.எல்., போனில் இருந்து, எந்த நிறுவன போனுக்கு பேசினாலும், 180 வினாடிகள், ஒரு அழைப்பாக கணக்கிடப்பட்டது. தற்போது, வேறு நிறுவன போன்களுக்கு செய்தால், '120 வினாடிகள் ஒரு அழைப்பு' என மாற்றி உள்ளனர்.

ஓரிரு நாளில் அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல்.

அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படஉள்ளனர்.
உதவி பேராசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கு சென்னையில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பணிஅனுபவம், பி.எச்டி. பட்டம், ஸ்லெட், நெட்தேர்ச்சி, எம்.பில். ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.மொத்த மதிப்பெண் 24ஆகும். நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளது.ஓரிரு நாளில் மதிப்பெண் பட்டியல்இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பில்கலந்துகொண்ட அனைத்து விண்ணப்பதாரர் களின் மதிப்பெண் அடங்கிய பட்டியலை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.

குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.மாவட்ட வழங்கல் அலுவலர் களுக்கான மாநில கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த வழங்கல் அலுவலர்கள் பங்கேற்றனர்.இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் காமராஜ் பேசியதாவது:தமிழக அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளின் மூலம் இதுவரை 2,775 டன் காய்கறிகள் விற்பனை செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 8.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளன.

வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்!

வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.மின் நுகர்வோர்கள் காலவிரயம், அலைச்சல் ஆகியவைகளை குறைத்து சுலபமான முறையில் மின் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கீழ்கண் முறைகளை அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம், எந்த நேரமும் பணம் பெறும் ஏடிஎம் மையம் மூலம்

குடியரசு தின சிறப்பு பதிவு:

குடியரசு தினம் மலர்ந்த வரலாறு!! இந்தியா (India) அல்லது அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு, தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை,

ஆய்வுகள் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 17 முறை நீண்ட விடுமுறை

இந்த ஆண்டின் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்து அரசு விடுமுறை தினங்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், மற்றொரு அரசு
விடுமுறை நான்காவது சனிக்கிழமையிலும் வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஒரு உபரி தகவலாக ஒரு நாள் அதிகப்படியான விடுமுறை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் ஒருவர் 17 வார விடுமுறைகளை நான்கு அல்லது ஐந்து தினங்கள் கொண்ட நீண்ட விடுமுறைக் காலமாக அனுபவிக்கமுடியும் என்பதுவும் கூறப்படுகின்றது. சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இதுபோன்ற நீண்ட விடுமுறை வாய்ப்புகள் ஏழு முறை அதிகமாகக் கிடைக்கின்றன. அதனால் விடுமுறை சுற்றுலாக்கள் குறித்த அதிக விசாரணைகளை தாங்கள் இப்போதே பெறத் தொடங்கியுள்ளதாக சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Http, Https இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


சாதாரணமாக நம்முடைய உலவியில் ஒரு வலைத்தளத்தைக் காண Uniform Resource Locator என்று சொல்லக்கூடிய URL கொடுத்து நாம் விரும்பும் வலைத்தளத்திற்குச் செல்வோம். இந்த URL -ல் உள்ள முதன்மைப் பகுதி http. அல்லது https எனத் தொடங்கும். இவ்விரண்டும் ஒன்றேதானா? அல்லது வெவ்வேறா? இரண்டிற்குமுள்ள வித்தியாசம்தான் என்ன? என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். https browse safe 610x285 Http, Https இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? முதலில் Http என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். http என்பது Hyper text transfer protocol என்பதன் சுருக்கமே http என்பது. இதனுடன் secure என்ற வார்த்தையும் சேர்க்கும்போது Hyper text transfer protocol secure என்றாகிவிடும். இதுவே https என்று குறிப்பிடப்படுகிறது. eservices https Http, Https இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? இணையப்பக்கங்களை பயன்படுத்தும்போது http எனத்தொடங்கும் பக்கங்கள் நாம் உள்ளிடும்

லோக்சபா தேர்தல் பணி: 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் தயார் : கம்ப்யூட்டரில் பதிவு பணி தீவிரம்

:வேலூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 13 ஆயிரம், அரசு ஊழியர்களை தேர்வு செய்து, அவர்களது, சுய விவரங்களை, கணினியில் பதிவு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
வரும், லோக்சபா தேர்தலுக்கான பணிகளில், தேர்தல் ஆணையம்
ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும், மார்ச் மாதம் நடக்க இருக்கின்றன. அதற்குள், தேர்தல் பணியில் ஈடுபடும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில், தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

2014ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு

இந்த 2014ம் ஆண்டில், தான் நடத்தும் பலவிதமான பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுகளுக்கான தேதி விபரங்களை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி.,யின் பல்வேறு தேர்வுகளுக்கான விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
IES / ISS தேர்வு 2014 - பிப்ரவரி 8ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க மார்ச் 10ம் நாள் கடைசித்தேதி. தேர்வுகள், மே 24 முதல் 26 வரை நடைபெறும்.
NDA & NA தேர்வுகள் (I) 2014 - கடந்த டிசம்பர் 21ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தல் ஜனவரி 20ம் தேதியே முடிந்துவிட்டது. ஏப்ரல் 20ம் தேதி தேர்வு நடைபெறும்.
ஜியாலஜிஸ்ட் தேர்வு 2014 - பிப்ரவரி 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 17. மே 24 முதல் 26 வரை தேர்வுகள் நடைபெறும்.
CISF AC (EXE) LDCE 2014 - மார்ச் 1ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 31. ஜுன் 1ம் தேதி தேர்வு நடைபெறும்.
இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு 2014 - மார்ச் 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 14. ஜுன் 20 முதல் 22 வரை தேர்வுகள் நடைபெறும்.
ஒருங்கிணைந்த மெடிக்கல் சர்வீசஸ் தேர்வு 2014 - மார்ச் 22ம் தேதி அறிவிப்பு வெளியாகும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஏப்ரல் 21. தேர்வானது ஜுன் 22ம் தேதி நடைபெறும்.
UPSCRT தேர்வுக்காக ஒதுக்கப்பட்டது - ஜுலை 6ம் தேதி தேர்வு நடைபெறும்.
மத்திய ஆயுதப்படை போலீஸ்(AC) தேர்வு 2014 - மே 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 5. ஜுலை 13ம் தேதி தேர்வு நடைபெறும்.
சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வு 2014 - மே 17ம் தேதி அறிவிப்பு வெளியாகும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜுன் 16. தேர்வு நடைபெறும் தேதி ஆகஸ்ட் 24. காலகட்டம்: 1 நாள்.
இந்திய வன சேவைகள் பிரிலிமினரி தேர்வு 2014 (through CS (P) Exam 2014) - மே 17ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜுன் 16. ஆகஸ்ட் 24ம் தேதி தேர்வு நடைபெறும்.
NDA & NA தேர்வு(II) 2014 - தேர்வுக்கான அறிவிப்பு ஜுன் 21ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஜுலை 21. தேர்வு நாள் செப்டம்பர் 28.

டி.என்.பி.எஸ்.சி.,நடத்திய 15 தேர்வு முடிவுகள் இழுபறி

பல அரசு துறைகளில், காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவை வெளியிடாமல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து, தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட, முடிவு செய்துள்ளனர்.
கடந்த, 2012, நவ., 4ல், உதவி பிரிவு அலுவலர், நகராட்சி கமிஷனர், சார் - பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 2,306 பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு நடந்தது. இதில் நேர்முக தேர்வு கொண்ட, மேற்படி பதவிகளுக்கு 1,064 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், நேர்முக தேர்வு அல்லாத உதவியாளர் பணிக்காக அதே தேர்வை எழுதியவர்களுக்கு இதுவரை தேர்வு முடிவை வெளியிடவில்லை. 1,242 பணியிடங்களுக்கு தேர்வாணையம் ஒப்புதல் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
உதவி பிரிவு அலுவலர் இந்து அறநிலையத் துறையில், உதவி பிரிவு அலுவலர் (மொழி பெயர்ப்பாளர்) பணிக்கான தேர்வு, 2013, பிப்., 3ல் நடந்தது. இதற்கு, தேர்வு முடிவை வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி நேர்முகத் தேர்வையும் நடத்தி விட்டனர். ஆனால், அதன் முடிவை மட்டும், இன்னும் வெளியிடவில்லை.
உதவி பொறியாளர்பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்டவற்றில், 222 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, 2012, டிசம்பர், 9ல், போட்டி தேர்வு நடந்தது. இதற்கு, நேர்முகத் தேர்வு முடிந்தும், இதுவரை, முடிவை வெளியிடவில்லை.

சம்பள குழு நியமனத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் பிப். 12, 13ல் வேலை நிறுத்தம்

சம்பளக் குழு நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் 48 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்காக 7வது ஊதியக்குழுவை அமைப்பதாக மத்திய நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படை யில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சம்பள வரையறை குறித்து ஊழியர்கள் தரப்பு, அரசுக்கு இறுதி செய்து அறிக்கை தந்தது.

பிஎப் சந்தாதாரர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: பிஎப் பென்ஷன்தாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பிஎப் பென்ஷன் பெறும் சுமார் 27 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர். இந்த பென்ஷன் தொகை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும். இந்த குறைந்த பட்ச பென்ஷனை வழங்குவதற்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.1,217 கோடி வழங்கும்.

பிப். 2ல் இடைநிலை ஆசிரியர்கள் tதர ஊதியத்தை மேப்படுத்த வேண்டி மாவட்டத்தலைநகரங்களிலாசிரியர்கள் பேரணி

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 1988ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது.

26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்டா தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

தொழில் வரி 30 சதவீதம் உயர்வு, மாத ஊதியம் ஈட்டுவோர் அதிருப்தி

58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்!மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு. இவர், 10.6.1956ல் பிறந்தார். பி.ஏ., (வரலாறு), பி.எட்., படித்து, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக

2014ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு


இந்த 2014ம் ஆண்டில், தான் நடத்தும் பலவிதமான பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுகளுக்கான தேதி விபரங்களை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி.,யின் பல்வேறு தேர்வுகளுக்கான விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

IES / ISS தேர்வு 2014 - பிப்ரவரி 8ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க மார்ச் 10ம் நாள் கடைசித்தேதி. தேர்வுகள், மே 24 முதல் 26 வரை நடைபெறும்.

NDA & NA தேர்வுகள் (I) 2014 - கடந்த டிசம்பர் 21ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தல் ஜனவரி 20ம் தேதியே முடிந்துவிட்டது. ஏப்ரல் 20ம் தேதி தேர்வு நடைபெறும்.

இன்னும் விலகாத மர்மம்

இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.
இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் தனி விமானம் மூலம் சிங்கப்பூரை விட்டுப் பறக்கிறார் நேதாஜி. எரிபொருள் நிரப்புவதற்காக ஜப்பான் எல்லைக்குள் (இப்போது தாய்வான்) மஞ்சூரியா என்ற இடத்தில் அந்த விமானம் தரையிறக்கப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதுவரை புரியாத மர்மம்!

காஸ் சிலிண்டர்: விரும்பிய டீலர்களை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்

சமையல் எரிவாயு விநியோகஸ்தரை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி புதன்கிழமை டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இப்புதிய வசதியின் மூலம், ஓர் எண்ணெய் நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு அல்லது மற்றொரு விற்பனையாளருக்கு வாடிக்கையாளர் மாறிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் வசிக்கும் பிராந்தியத்திற்குள் உள்ள விநியோகஸ்தர்களில் எவரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இப்புதிய திட்டம் நாட்டிலுள்ள 480 மாவட்டங்களில் உடனடியாக அமலுக்கு வருகிறது.

கல்வியில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி என்றாலே பிள்ளைகளை படிக்க அனுப்ப மறுக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு கிராமமே ஆர்வம் காட்டி வருகிறது.

சுத்தமான சூழல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவர்களிடம் அமர்ந்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி தேனி மாவட்டம் சண்முகசுந்தரபுரம் ஊராட்சியில் உள்ளது.
கடந்த 1912 ஆம் ஆண்டு திண்ணைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளி தற்போது துவக்கப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. மாணவர்களுக்கு கணினி பயிற்சி , செயல்வழி கல்வி கற்பித்தல் என பல வழிகளில் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருவதால் மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருவதாக இந்த பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் முதல் தலைமுறை 1150 பட்டதாரி மாணவ / மாணவிகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கி முதல்வர் அறிவிப்பு

டிட்டோ ஜாக் சார்பாக சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு- பத்திரிக்கை செய்தி


டிட்டோ ஜாக் சார்பாக சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு-காட்சி-2


டிட்டோ ஜாக் சார்பாக சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

TET - CV - சென்ற ஒரு நண்பர் FACE BOOK மூலம் நமக்கு பகிர்ந்த தகவல் இதோ உங்களுக்காக ......

I completed my cv today . my major is English . it was so simple as they just entered our marks and calculate weightage
if you have any doubts in filling in the form or bringing the certificates , don't worry
just go with what you have . in your cv center there ll be enough space for clearing all your doubts including getting attested
filling in the form and calculating your weightage .

பதவி உயர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி., கடும் எதிர்ப்புஅரசு துறைகள், அதிகாரிகளுக்கு, தன்னிச்சையாக பதவி உயர்வு வழங்க, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசு அலுவலர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன், தகுதி வாய்ந்தவர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை
தயாரித்து, அதற்கு, டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒப்புதலை, ஒவ்வொரு அரசு துறையும் பெற வேண்டும்.
ஆனால், பல துறைகள், அப்படி ஒப்புதல் பெறாமல், தன்னிச்சையாக, பதவி உயர்வு வழங்குவதாக கூறப்படுகிறது. இரு பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பினால், ஒரு பணியிடத்தை, நேரடி போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை மீறி, பெரும்பாலான இடங்கள், பதவி உயர்வு மூலமே நிரப்பப்படுவதாக, போட்டி தேர்வு எழுதுவோர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தான், குரூப் - 1 பணியிடங்கள், மிக குறைவாக வருகின்றன என்றும் கூறுகின்றனர்.

உலகளாவிய கம்ப்யூட்டர் போட்டி: சென்னை மாணவர் சாதனை

கம்ப்யூட்டரில் ஏற்படும் பல வகையான சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடிக்கும், உலகளாவிய போட்டியில் பங்கேற்று, சென்னையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர், சாதனை படைத்துள்ளார். போட்டியில் முதலிடம் பிடித்த மாணவரை, அமெரிக்காவின் எம்.ஐ.டி., நிறுவனம் பாராட்டி, பரிசு வழங்கி உள்ளது.

சென்னை அடுத்த சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஸ்ரம் பள்ளியில், 10ம் வகுப்பு படிப்பவர், அர்ஜுன்.

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு : இணை இயக்குனர் பேட்டி"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 6.6 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இதில், தாள்-1ல் 12,600 ; தாள்-2ல் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் சரிபார்க்கப்படும். மாவட்டந்தோறும் ஜன.,20 முதல் 27 வரை இப்பணி

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால் நிம்மதி

"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு, ஜன.,23 மதியம் முதல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.ஆர்.பி., யால் அனுப்பப்பட்ட உத்தரவில், "சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பட்டப் படிப்பின் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது. வழக்கமாக, அரசு பணி நியமனங்களுக்கு,

தேர்வு ஜுரம்; தேவை கரம்!பெற்றோர்களே, உஷாராக இருங்க: மாணவர்களுக்கு வேண்டாம் மன அழுத்தம்

"பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் மத்தியில், பொதுத்தேர்வு நேரத்தில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்' என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், மாணவர்களை தயார்படுத்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து மாதிரி தேர்வுகள், பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள், பின்தங்கிய மாணவர்களின் மீது சிறப்பு கவனம் என தேர்வுக்கு தயார் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கர்நாடக சட்டப்பேரவையில் கவர்னர் அறிவிப்பு பியுசி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

பியுசி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் நோட்பேட் வழங்கப்படும் என்று கர்நாடக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் பரத்வாஜ் சட்டப் பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.ஆளுநர் ஆற்றிய உரை:மாணவ, மாணவிகள் இணையதளத்தின் வாயிலாக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் பியுசி (முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு) படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் நோட்பேட் (ஐபேட் போன்றது) வழங்கப்படும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாது

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த  முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வழி கல்வி சான்று பற்றிய விளக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வு பி.ஏ. தமிழ், பி.லிட், எம்.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம் பெற்று பி.எட்., பட்டம் பெற்ற தேர்ச்சி அடைந்துள்ள தேர்வர்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத் தேவையில்லை.

வெயிட்டேஜ் முறை அறிமுகத்தால் மூத்த ஆசிரியர்கள் அவதி!


இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், சீனியாரிட்டியில் முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பணி அனுபவத்திற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க மூத்த ஆசிரியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு மூன்றாவது முறையாக, தமிழகத்தில் நடத்தப் பட்டது. இதில், சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இதில், முதல் தாளுக்கான தேர்வில் 12 ஆயிரத்து 433 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 3000 இடைநிலை ஆசிரியர்கள் நிரப்பப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்காக, பாடவாரியாக காலி பணியிடங்களை தொகுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. இடைநிலை

சிபிஎஸ்இ பள்ளியில் மாநில கல்வி திட்டத்திற்கு அனுமதி அரசின் மேல்முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி


 

சிபிஎஸ்இ பள்ளிக்கு, மேல்நிலை கல்வியை மாநில கல்வி திட்டத்தில் நடத்த அனுமதி வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கல்வித்துறை இயக்குனர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சிவகாசி ஸ்ருதி வித்யோதயா பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 10 வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பள்ளியில் மாநில அரசு பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு பள்ளி நிர்வாகி அரசுக்கு விண்ணப்பித்தார். அரசு அனுமதி மறுத் ததால் அவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அடிப்படை வசதிகள் இருந்தால் 11, 12ம் வகுப்பை மாநில அரசு பாடத்திட்டத்தில் நடத்த அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு: பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்திட்டத்திலும், 11, 12 வகுப்புகள் மற்றொரு பாடத்திட்டத்திலும் நடத்துகின்றனர்.

'வாக்காளர் தின' உறுதிமொழி: தேர்தல் கமிஷன் உத்தரவு


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஜன., 24 முதல் ஜன.,26 வரை, 'வாக்காளர் தின' உறுதிமொழி எடுக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விபரம்: தேசிய வாக்காளர் தினம் ஜன., 25. அன்று, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், ஜன.,24 ல், கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்கவேண்டும். ஜன., 25 ல், 'வாக்காளர் தின விழா' நடக்கும் இடங்களிலும்; ஜன., 26 ல், குடியரசு தின விழாக்களிலும், 'வாக்காளர் தின' உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும்

கோடைக்கு தகிக்க போகிறது தமிழகம்!

வடகிழக்கு பருவமழை குறைந்ததாலும், தற்போது பனி அதிகளவில் நிலவி வருவதாலும், கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், வரும் ஏப்., மாதத்திற்குள், மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மழை, தமிழகத்தை ஓரளவிற்கு நனைத்தால், குடிநீர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். இந்த ஆண்டு துவக்கம் முதல், நேற்று வரை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீட்டு பெறுதல் அல்லது புதுப்பித்தல் சார்பான தடையின்மைச் சான்று இனி பணி நியமன அலுவலர் வழங்க விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்.

தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்தும் தேதியை, அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், செய்முறை தேர்வுகளை நடத்தி, அதற்கான

உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்

உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., / பி.எச்.டி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்

த.அ.உ.சட்டம் 2005 - அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் இடமாறுதல் குறித்த அரசாணை ஏதுமில்லை, பாடம் போதிக்க நியமிக்கப்பட்டவர்கள் என தகவல்

பள்ளிகளில் கற்றல் அடைவு மதிப்பீட்டு தேர்வு :மாநிலம் முழுவதும் இன்று துவக்கம்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய, கற்றல் அடைவு நிலை மதிப்பீடுத் தேர்வு, இன்று (ஜன., 21) துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், அரசு, நகராட்சி, நலத்துறை உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக,மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 2012-13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட அடைவு சோதனைகளின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும்,

பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் 95% தேர்ச்சிக்கு இலக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
தென் இந்திய அளவிலான 27-ஆவது அறிவியல் கண்காட்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது. பள்ளிக் கல்விஅமைச்சர் கே.சி.வீரமணி இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் டி.சபிதா பேசியது:இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 11 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 9 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். கடந்த ஆண்டை விட 50

மாவட்டம் வாரியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றோர் விவரம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 927 பேர் தேர்ச்சி.
தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி.
சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1904 பேர் தேர்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 475 பேர் தேர்ச்சி.
திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 577 பேர் தேர்ச்சி.
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,123 பேர் தேர்ச்சி.
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 487 பேர் தேர்ச்சி.
தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 915 பேர் தேர்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,129 பேர் தேர்ச்சி.
வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550 பேர் தேர்ச்சி.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதிய கிளை தொடக்கவிழா படங்கள்


அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை சரிப்பார்க்க அனுப்பப்படும் விண்ணபங்களின் நடைமுறைகளை மாற்றி அமைத்து இயக்குனர் உத்தரவு

மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் காலிப்பணியிட எண்ணிக்கை 11QUALIFICATION

PG WITH B.ED

AGE

NOT YET DECIDED

REVISED SCHEMES OF EXAMINATION
PRELIMINARY EXAMINATION: (OBJECTIVE TYPE) (DEGREE STANDARD)
General Studies 200 items / 300 marks / 3 hours
General Studies ‐ 150 items
Aptitude & Mental Ability Test ‐ 50 items(S.S.L.C Std.)
Total Marks ‐ 300
Preliminary Examination Minimum Marks:
OC ‐ 120
Other than OC ‐ 90MAIN WRITTEN EXAMINATION (DEGREE STANDARD)
Paper ‐ I (Descriptive type) : General Studies ‐ 300 Marks /3 Hours
Paper ‐ II (Descriptive type) : General Studies ‐ 300 Marks / 3 Hours
Paper ‐ III (Objective type) : Education ‐ 200 Items/ 300 Marks/3 Hours (B.Ed. course syllabus)
Interview & Record – 120 Marks
Total Marks ‐ 1020 Marks
Main Examination Minimum Marks:
OC ‐ 408
Other than OC ‐ 306
Syllabus for Preliminary Examination
General Studies ‐ Degree standard
TOPICS FOR OBJECTIVE TYPE

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீட்டு பெறுதல் அல்லது புதுப்பித்தல் சார்பான தடையின்மைச் சான்று இனி பணி நியமன அலுவலர் வழங்க விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு

TNTET - 2013 CERTIFICATE VERIFICATION :TNTEU - TAMIL MEDIUM CERTIFICATE

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 30 மையங்களில் ஜனவரி 28-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 29 ஆயிரத்து 528 பேர் இதில் பங்கேற்கின்றனர்.

குரூப் 4 தேர்வுக்கு நாளை 6ம் கட்ட கவுன்சலிங் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார்  வெளியிட்ட அறிக்கை:  டிஎன்பிஎஸ்சியால் (2007- 2008, 2012- 2013ம் ஆண்டுக்கான) குரூப் 4ல்  அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 7.7.2012ல்  நடைபெற்றது. இப்பணியில் மீதமுள்ள  88 காலிப் பணியிடங்களுக்கான 6ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் முறையிலான துறை ஒதுக்கீடு நாளை காலை 8.30 மணி முதல்  பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர், பதிவெண் மற்றும்  கவுன்சலிங்குக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் www.tnpsc.gov.in, www.tnpsc exams.net என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது

PFRDA நமது CPS முதலிட்டிலிருந்து 25% வரை நாம் பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நமது கருத்துகளை 15/02/2014 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரியை வழங்கியுள்ளது. 
PFRDA-வலைதள த்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்

PFRDA  அறிக்கையை பதிவிறக்கம் செய்ய வும்

IF YOU LOSE YOUR MOBILE...

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட மேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி இன்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்.
கடந்த வெள்ளியன்று நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்த 5 வழக்குகளில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா,விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று 5 மனுதாரர்களுக்கும் 21

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலத்தில் 412 ஒன்றியங்களில்,3, 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதித்து அறியும், அடைவுத்திறன்தேர்வு நாளை துவங்க உள்ளது. இதற்காக, ஒன்றியத்திற்கு ஒவ்வொரு வகுப்பிற்கும், 10 பள்ளிகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது

RMSA மூலம் அரசுப் பள்ளிகளில் ரூ.161 கோடியில் வகுப்பறை,ஆய்வுக்கூடம்: கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பு.

தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ரூ.161 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம்
2010-11ம் கல்வி ஆண்டில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,851 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 698அறிவியல் ஆய்வகங்கள் கட்ட ரூ.146.78 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக, கூடுதல் நிதியாக ரூ.71.18 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.ஒரு வகுப்பறையின் மதிப்பீடு ரூ.8.53 லட்சம், ஆய்வக மதிப்பீடு ரூ.9.03 லட்சம். இத்திட்டத்தின்கீழ், 32 மாவட்டங்களில் 1,339

ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு ரூ.27 கோடியில் கட்டடங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 27 மாணவர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்களைக் கட்டுவதற்காக ரூ.27 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மொத்தம் 1,342 மாணவர் விடுதிகள் இயங்கி வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாகக் குறைந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்க முன் வருகின்றனர்.

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கணவரின் சம்பளத்தை அறிய மனைவிக்கு முழுஉரிமை உண்டு-கமிஷனர் தகவல்

டெல்லியை சேர்ந்த ஜோதி ஷெகராவத் என்பவர், டெல்லி மாநில அரசின் உள்துறையில் பணிபுரியும் தனது கணவரின் சம்பள விபரத்தை கேட்டு கணவரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால், தனது சம்பள விபரத்தை தெரிவிக்க கூடாது என பெண்ணின் கணவர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து பெண்ணின் கோரிக்கையை அலுவலகம் நிராகரித்தது. இதனால் அந்த பெண், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ கணவரின் சம்பள விவரத்தை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இது போன்று வரும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் நிராகரிக்க கூடாது. அது ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது.

வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் விவரம் சேகரிப்பு.

நடப்பாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம்,
ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26ம் தேதியும் துவங்குகிறது.கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட, புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், 20 நாளில் தேர்வு முடிவு என, பல அதிரடி நடவடிக்கை, நடப்பு கல்வியாண்டில் எடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய,"நாமினல்ரோல்' தயாரிக்கப்பட்டு, ஆன் - லைன் மூலம், நேரடியாக, பள்ளியில் இருந்து, தேர்வுத் துறைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் சிறந்த ஆசிரியராக இந்திய வம்சாவளி பேராசிரியை மீரா சந்திரசேகர் தேர்வு.

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை மீரா சந்திரசேகர், அமெரிக்காவில் 2014ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் துறைகளில் மீரா சந்திரசேகர் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ராபர்ட் போஸ்டர் செர்ரி விருது என்று அழைக்கப்படும் அந்த விருது பெறுபவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்(ரூ.1½ கோடி) கொடுக்கப்படும்.கல்வித் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக மீரா சந்திரசேகருக்கு இந்த விருதை அமெரிக்க பேய்லர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ராபர்ட் போஸ்டர் செர்ரி விருதுகிடைக்கப் பெற்றுள்ளது

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா?: டி.இ.டி. தேர்வர்கள் கவலை

சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர் (டி.இ.டி.,) கவலை அடைந்துள்ளனர்.

அழைப்பு கடிதம்
டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20ம் தேதி முதல் 27 வரை 32 மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.

புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள்: பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்

பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.

பொதுத் தேர்விலும், தேர்விற்குப் பின் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலிலும் எந்த குளறுபடியும் வரக்கூடாது என்பதற்காக பல புதிய திட்டங்களை தேர்வுத் துறை அமல்படுத்தி உள்ளது. இதில், விடைத்தாளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மிகவும் முக்கியமானது.

ஏழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் எழுச்சி பேரணி பிப்.2ல் நடைபெற உள்ளது

திருவண்ணாமலை மாவட்ட டிட்டோஜாக்பேரணி அழைப்பிதழ்


ஏழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் எழுச்சி பேரணி பிப்.2ல் நடைபெற உள்ளது


web stats

web stats