Labels

rp

Blogging Tips 2017

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்

சென்னை: பள்ளி மாணவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில், அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. அதே நேரத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பள்ளிக்கு செல்வதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து, திங்கட்கிழமை முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என, பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அட்டவணையில், காலை, 9:30 மணிக்கு பள்ளிகள் துவங்கும்; மாலை, 4:30 மணிக்கு முடியும். புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும், மாலை, 4:15க்கு முடியும். இதில், 12:10 - 12:25க்கு, யோகா, 12:25 - 12:40க்கு நீதி கதை, நீதி போதனை, உடல் நலம் மற்றும் சுகாதாரம், கல்வி, கலை கல்வி, முதல் உதவி, தற்காப்பு கலை, 1:10 - 1:25க்கு, வாய்ப்பாடு; 1 - 5ம் வகுப்பு வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இரண்டு சொற்களை எழுத சொல்ல வேண்டும்; 6 - 9 வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்க கற்று தர வேண்டும்; 9ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், இரண்டு நிமிடம் பொது அறிவு எழுதுதல், குழு விவாதம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

New School Calendar | 2013-14 - Single Page Abstract For Economy Printout

CCE & ABL MATERIAL ......DOWNLOAD IN PDF AND WORD EXCEL FORMAT.....AVL


ABL MATERIAL FOR PRIMARY TEACHERS
SERIAL NO
ABL MATERIAL /CCE MATERIAL
PDF
EXCEL/WORD FORMATS
1
STUDENT INDIVIDUAL ATTENDENCE
2
ABL ACHIEVEMENT CHART –I STD
3
ABL ACHIEVEMENT CHART – II STD
4
ABL ACHIEVEMENT CHART – III STD
5
ABL ACHIEVEMENT CHART – IV STD
CCE MATERIAL
6.
கல்வி இணைச்செயல்பாடுகள் – வாழ்க்கைத்திறன்கள்

7.
கல்வி இணைச்செயல்பாடுகள்

8.
கல்வி இணைச்செயல்பாடுகள்-ஒருங்கிணைந்த செயல்பாடுகள்

9.
கல்வி இணைச்செயல்பாடுகள் – பாட இணைச்செயல்பாடுகள்

10
கல்வி இணைச்செயல்பாடுகள்-
கல்விசார் பாடப்பகுதிகள்-உடற்கல்வி

11
கல்வி இணைச்செயல்பாடுகள்-
உடற்கல்வி


2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம் (தற்காலிக விவரம்)

மந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை!

மந்தைகளை உருவாக்கும் கல்வி தேவையில்லை!(ஆழம் ஜூன் 2013 இதழில் வெளியான பேட்டியின் முழுவடிவம்)

http://www.aazham.in/?p=3333


எது கல்வி என்பது தொடங்கி, இன்றைய கல்விமுறையில் உள்ள பிரச்னைகள், அனைவருக்கும் கல்வியறிவு கிடைப்பதற்கான வழிமுறைகள், ஆங்கில வழி போதனை பற்றிய மதிப்பீடு என்று நம் மாணவர்களையும் சமூகத்தையும் பாதிக்கும் விஷயங்கள் குறித்த தன் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் மாற்றுக் கல்விமுறை குறித்து தொடர்ந்து விவாதித்துவரும் கல்வியாளருமான வசந்தி தேவி. ஆழம் இதழுக்காக ஆ.கீ. மகாதேவனிடம் அவர் மேற்கொண்ட உரையாடலில் இருந்து சில முக்கியப் பகுதிகள்.
உங்களுடைய பிறப்பு பற்றிய சிறு அறிமுகம்…
திண்டுக்கல்லில் பிறந்தேன். என் குடும்பப் பின்னணி சராசரி இந்தியனின் வாழ்வுப் பின்னணியில் இருந்து வேறுபட்டது. சாதியோ மதமோ எங்கள் வாழ்க்கையின் ஆதார அம்சமாக இருந்திருக்கவில்லை. இரண்டு தலைமுறைகளாக சாதி வரம்புகளை மீறிய குடும்பம் எங்களுடையது. என் தாய் வழிப்பாட்டனார் தமிழ் மட்டும் பேசும் தெலுங்கு செட்டியார். தாய் வழிப்பாட்டி தெலுங்கு பிராமணர். பாட்டனார் சர்க்கரைச் செட்டியார் கல்லூரிப் பருவத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். பாட்டியின் குடும்பம் முழுவதும் அதே காலத்தில் கிறிஸ்தவத்துக்கு மாறியது. என் தாய் பிறந்து வளர்ந்தது கிறிஸ்தவராக. வழக்கறிஞரான என் தந்தை கலப்படமற்ற இந்து நாயுடு. தாயும் தந்தையும் திருமணம் செய்து கொண்ட பிறகும் தத்தமது மதத்தையே பின்பற்றி வந்தனர்.
உங்களுடைய மத சார்பு என்ன?
குறிப்பிட்ட மதமற்ற, ஆனால், ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையில்தான் நான் வளர்ந்தேன். 17-18 வயதான காலத்தில் தத்துவார்த்தப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து, என் கடவுள் நம்பிக்கை ஆட்டம் காணத் தொடங்கியது. அப்போதிருந்து நான் கடவுள் நம்பிக்கை அற்றவள்.
எங்கு கல்வி கற்றீர்கள்?
திண்டுக்கல்லில் தமிழ் வழிக் கல்வி பெற்றேன். மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தேன். பி.ஏ. வரலாறு படித்தேன். நல்ல மதிப்பெண் பெற்ற ஒருவர் வரலாறு பாடத்தில் சேர்வதா என்று அப்போது பலர் தடுத்தனர். ஆனால், சிறு வயதிலிருந்தே என் தந்தையிடமிருந்து பெற்ற, வரலாற்றின் மீதான ஆசையினால், அதையே படித்தேன். படிப்பு முடிந்ததும் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். 1992-ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் துணை வேந்தர் ஆனேன். இரண்டு பருவம் ஆறு ஆண்டுகள். 1998-ல் ஓய்வு பெற்றேன். 2001-ல் மாநில திட்டக் குழு உறுப்பினராக 9 மாதங்கள் இருந்தேன். 2002-2005 வரை தமிழ் நாடு மகளிர் ஆணையத்தலைவராக இருந்தேன்

10ம் வகுப்பு பாடத்தில் காமராஜர் பிறந்த ஊர் மாற்றம்

கீழக்கரை: பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில், காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே, விருதுபட்டி என, தவறுதலாக குறிப்பிட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால், உருவாக்கப்பட்ட, 10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், 100ம் பக்கத்தில், "இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு" என்ற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளது. 105ம் பக்கத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்த தகவலில், காமராஜர், விருதுநகருக்கு அருகில் உள்ள, விருதுபட்டி கிராமத்தில் பிறந்ததாக வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: விருதுநகரில் தான் காமராஜர் பிறந்தார்; விருதுபட்டி தான் விருதுநகராக மாறியது. 10ம் வகுப்பு பாடத்தில், விருதுநகர் அருகே, விருதுபட்டி என, குறிப்பிடப்பட்டுள்ளது சரியல்ல. இது, மாணவர்களை குழப்புவதாக உள்ளது.
விருதுபட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் பிறந்தார் என்பது தான் சரி. ஊர் பெயர் தவறாக இடம் பெற்றதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

12 மாணவர் விடுதிகளில் "சோலார் வாட்டர் ஹீட்டர்" கருவி

சென்னை: தமிழகத்தில், 12 பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில், "சோலார் வாட்டர் ஹீட்டர்" கருவிகள் நிறுவுவதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கி உள்ளன.
மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களுக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்தாண்டு, சூரிய மின் சக்தி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளை நிறுவி வருகின்றன.
மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் விடுதிகளில், சூரிய மின் கட்டமைப்பு, "சோலார் வாட்டர் ஹீட்டர்&' ஆகியவற்றை அரசு நிறுவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில், "சோலார் வாட்டர் ஹீட்டர்" நிறுவும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்கம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழுக்கான, பொதுத் தேர்வில், சில தனித்தேர்வர்களின், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்கள் பெறப்படவில்லை.
எனவே, தேர்வர்கள், நிலுவையில் உள்ள செய்முறை தேர்வு மதிப்பெண்களை உரிய தலைமையாசிரியடம் பெற்று, இம்மாதம், 24ம் தேதிக்குள், அரசு இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட தேர்வர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வியில் 18 வயது இளைஞர்களிடையே பிரசாரம்

உத்தமபாளையம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு முதல் இடைநின்ற இளைஞர்களை பள்ளி,கல்லூரிகளில் சேர்க்கும் பிரசாரம் துவங்கியுள்ளது.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், 2009 முதல் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், செயல்பாட்டில் உள்ளது. இத் திட்டத்தில் பள்ளிசெல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டுவரை 14 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்த கல்வியாண்டு (2013-2014) முதல், 18 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 15 முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களுக்கான திட்டத்தை, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் (ராஷ்டீரிய மத்தியமா சிக்ஷா அபியான்) செயல்படுத்துகிறது.

காலை 9 மணிக்கு இறைவணக்கம், 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

2013-14 பள்ளி வாரியான மாணவர் சேர்க்கை ஒன்றிய/ மாவட்ட அளவில் விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தர வு

கேள்விக்குறி! பணி அனுபவ கணக்கீட்டுக்கு புதிய முறை அறிவிப்பு: "ஸ்லெட், "நெட்' முடிக்காதவர்களுக்கு வேலை கேள்விக்குறி

உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., அறிவித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு, அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்பட உள்ளன. போட்டித் தேர்வு மூலம், பணியிடத்தை நிரப்பாமல், கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், உதவி பேராசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி என்ன?
உதவி பேராசிரியர் தேர்வுக்கு, மொத்தம், 34 மதிப்பெண். இதில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்; நேர்முக தேர்வுக்கு, 10 மதிப்பெண்; முதுகலை பட்டத்துடன், "நெட், ஸ்லெட்' ஆகிய தகுதித் தேர்வில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால், மூன்று மதிப்பெண்; எம்.பில்., பட்டத்துடன், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், ஆறு மதிப்பெண்; பி.எச்டி., பட்டத்துக்கு, ஒன்பது மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கான முதலுதவி!

விபத்தின் போது, குழந்தைகளுக்கான முதலுதவி செய்யும் முறையை கூறும், மருத்துவர், தியாகராஜன்: நான், தஞ்சாவூரை சேர்ந்த, மனநல மருத்துவர். குழந்தைகள் கையில், எந்த சிறிய பொருளும் கிடைக்காதவாறு, கவனமாக இருந்தாலும், அதையும் மீறி, பட்டன், மாத்திரை, பல்பம் போன்ற சிறிய பொருட்களை, குழந்தைகள் விளையாட்டாக வாயில் போட்டு மெல்லுவர். அப்பொருட்கள் தவறுதலாக, மூச்சுக் குழல், உணவுக் குழல், தொண்டைக் குழி
போன்றவற்றில் சிக்குவதால், குழந்தைகள் விழி பிதுங்கி, மூச்சுவிட சிரமப்பட்டு, அழுதபடி, வினோத சத்தத்துடன் இருமி, தும்மி, அதை, வெளிக் கொணர முயற்சிப்பர். அப்போது, குழந்தையை மடியில்
குப்புற போட்டு, தலையை சற்று கீழாக வைத்து, முதுகில் ஓங்கி தட்டினால், தொண்டையில் சிக்கிய பொருள், மிக சுலபமாக வெளிவரும். ஆனால், பெற்றோர், "குய்யோ முறையோ' எனக் கத்தி, முதலுதவி செய்யாமல், மருத்துவரிடம் வருவதற்குள், மரணம் கூட ஏற்படலாம். எனவே, முதலுதவியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள்


பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.
"பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியரின் நலன் கருதி, இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவருக்கு, இலவச பஸ் பாஸ், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில், அட்டையாக வழங்கப்பட்ட பஸ் பாஸ், கடந்த ஆண்டு, ஸ்மார்ட் கார்டாக உருமாற்றம் செய்யப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும்,சென்னை, மாநகர போக்குவரத்து கழகம்- 3.50 லட்சம்; விழுப்புரம் போக்குவரத்து கழகம்- 4.79 லட்சம்; சேலம் போக்குவரத்து கழகம்- 2.79 லட்சம் பேர் என, அனைத்து

காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

நாமக்கல்: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநு£ல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக  குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

தமிழ்நாடு பாடநூல் கழகம் கல்வியியல் பணிகள் கழகமாக மாறுகிறது
 
"தமிழ்நாடு பாட நூல் கழகம்' நிறுவனத்தின் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.
பள்ளி பாடப் புத்தகங்கள், "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் அச்சிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிர்ணயித்த விலையிலும் வழங்கப்படுகின்றன. சைக்கிள், லேப் டாப், சீருடை, செருப்பு, புத்தகப்பை உள்ளிட்ட இலவசங்கள், சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான அனைத்து இலவசங்களும், இனி, "தமிழ்நாடு பாடநூல் கழகம்' மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்காக கழகத்தின் பெயர் மாற்றப்படுகிறது. "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என, பெயர் மாற்றப்பட உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு அலுவலகம் அமைத்து, இலவச திட்டங்கள் அனைத்தும், இத்துறையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.

பி.இ கலந்தாய்வு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். வசதி

பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்கும் வசதி இந்த ஆண்டுமுதல் அறிமுகம் செய்யப்படுள்ளது.
பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கலந்தாய்வில் 1.82 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படுவதோடு, சிறு குழப்பமும் அவர்களுக்கு ஏற்படாமல் இருக்க கூடுதலாக செல்போன் மூலமும் தகவல் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.

தமிழ் பல்கலையில் பி.எட் சேர்க்கை அறிவிப்பு

தமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி /நலத்திட்டம் வழங்கப்படுவதை உறுதி செய்திடுமாறு.. தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.


ஆசிரியர் வைப்பு நிதி கணக்குத் தணிக்கையை விரைவு படுத்துமாறு தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை ~


தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி பதவி உயர்வு கனவு தகர்ந்தது

2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவி உயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட
1623 பணியிடங்களை (GO.170) திரும்ப ஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின்  செயல்படும்.
 
காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா

2013-14ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறையின் நாட்காட்டி (புதியது)

கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

சென்னை: கோடை விடுமுறைக்கு பின், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சுக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த மே மாதம், கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியது. தற்போது, 65 நாட்களுக்கு பின், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், ஆர்வமுடன் மாணவ, மாணவியர் கல்லூரிகளுக்கு சென்றனர். இரண்டு மாதம் பிரிந்திருந்த மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் உற்சாகமாக சுந்தித்து பேசினர். ஆசிரியர்களுக்கு, பூங்கொத்து கொடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மருத்துவ மேற்படிப்புக்குச் செல்ல கிராம சேவை கட்டாயம்

கிராமங்களில் ஒரு வருடம் பணியாற்றினால் மட்டுமே மருத்துவ மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர முடியும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ள தகவல்: வரும் 2014-2015-ஆம் கல்வி ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது மேற்படிப்பைத் தொடர வேண்டுமானால் அவர்கள் கிராமங்களில் ஒரு வருடம் பணியாற்ற வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகளுடன் நீண்ட காலமாக ஆலோசித்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
கிராமப்புறங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கத்துக்காக அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் சேவையாற்ற மருத்துவ மாணவர்கள் விருப்பம் காட்டாததால் அங்குள்ளவர்கள் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.
கிராமத்தில் ஒரு வருடம் பணியாற்றும் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். இது குறித்து அனைத்து மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் முறையான அறிவிக்கையை அனுப்பும் பணியில் இந்திய மருத்துவ கவுன்சில் ஈடுபட்டு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்: ஆசிரியர் பயிற்சி படிப்பின் பரிதாப நிலை

இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.

பயிற்சி நிறுவனங்கள்:


தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடைசி நாள் வரை, 5,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 4,500 விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன. விண்ணப்பித்த அனைவருக்கும், "சீட்' உறுதி என்ற நிலை உள்ளது. எனினும், 4,500 பேரும், கலந்தாய்வுக்கு வருவார்களா என்பது தான், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு, சந்தேகமாக உள்ளது. 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை, "ஆப்சென்ட்' ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, 3,000 மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தாலே, பெரிய சாதனையாக இருக்கும் என, துறை வட்டாரங்கள் கருதுகின்றன. குறைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும், "ஆன்-லைன்' மூலம், கலந்தாய்வை நடத்த, இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ, மாணவியரை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, கலந்தாய்வை நடத்தி, சேர்க்கை உத்தரவை வழங்க, இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

வேகம் விவேகம் அல்ல-தின மணி தலையங்கம்

துக்கோட்டை அருகே, விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் மினி வேன் - தனியார் பேருந்து மோதிய விபத்தில் பலியானதற்குக் காரணம் - தனியார் பேருந்துகளின் அசுர வேகம்தான்.
இந்த வேகத்தின் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் முதன்மைக் காரணம் மக்கள்தான். தமிழ்நாட்டின் எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் தனியார் பேருந்துகள் "பறந்துபோய் சீக்கிரமே சேர்த்துவிடும்' என்பதால், பயணிகளின் தேர்வு எப்போதும் தனியார் பேருந்துகளாகவே இருக்கின்றன.
இது தவிர, தனியார் பேருந்துகளில் அதிகமான பயணிகள் ஏறவேண்டும் என்பதற்காகவே, முன்னதாக செல்லும் அரசுப் பேருந்துகள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்லவும், அல்லது தனியார் பேருந்துக்கு வழிவிட்டு பின்னால் காலியாக வரவும், அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு லஞ்சம் தரும் சூழ்நிலைகளும் சில வழித்தடங்களில் இருக்கின்றன.

நர்சரி பள்ளிகளுக்கும் அரசு அங்கீகாரம் கட்டாயம்


நர்சரி பள்ளிகளுக்கும் அரசு அங்கீகாரம் கட்டாயம்

சென்னை : காளான்கள் போல பரவுவதை கட்டுப்படுத்த நர்சரி பள்ளிகளும் கட்டாயம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஆச்சாரியா கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெ.அரவிந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
எங்கள் அறக்கட்டளை மூலம் கோவை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3 பிளே பள்ளிகள் என்ற மழலையர் பள்ளிகளை நடத்தி வருகிறோம். இதற்காக தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, தாசில்தார் சான்றிதழ், தர சான்றிதழ் பெற்றுள்ளோம். இது ஆரம்ப பள்ளி இல்லை. எனவே இதற்கு அங்கீகாரம் பெற தேவையில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரைதான் ஆரம்ப பள்ளிகள் என்று உள்ளது. இதற்குதான் அங்கீகாரம் பெற வேண்டும் என்று

தெளிவாக கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த 10ம் தேதி எங்கள் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லை, அதனால் சீல் வைக்கிறோம் என்று அரசு அதிகாரிகள் திடீரென்று ஒரு அறிவிப்பை பள்ளி சுவரில் ஒட்டிவிட்டனர். இது சட்டவிரோதமானது. பள்ளியை மூட அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திடீரென்று பள்ளிகளை மூடியதால் மாணவர்கள், பெற்றோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு எந்தவிதமான அவகாசமும் தரவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

பள்ளிகல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு திடீர் விசிட்

அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு .
தமிழ்நாடு பள்ளி பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேனிலை பள்ளிக்கு 14.06.2013 அன்று திடீர் விசிட் செய்து அரசாணை எண் 264 ன் விவரம் கோரி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்தார் .இத்தேர்வில் தலைமைஆசிரியர் உட்பட எந்த ஒரு ஆசி ரியரும் விவரங்களை சரிவர தெரிவிக்கவில்லை.எனவே இவ் அரசணை உட்பட அணை த்து விவரங்களையும் தலைமைஆசிரியர் மற்றும் ரு ஆசி ரியர்களும் தெரிந்து வைத்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் .
CLICK HERE

டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது - டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி

டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில் வழங்காதது ஏன் என்பது குறித்து, டி.ஆர்.பி., தலைவர், சுர்ஜித் கே. சவுத்ரி கூறியதாவது:அரசு பள்ளிகள் தான், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தனியார்பள்ளிகளிடம் வேலை வாங்க முடியாது. அரசுப் பள்ளிகள், நம்பகத் தன்மைக்கு உரியவை. அவர்களை நம்பி, வேலையை ஒப்படைக்கலாம். வேலையில் ஏதாவது பிரச்னை நடந்தால், சம்பந்தபட்டவர்கள் மீது, நடவடிக்கையும் எடுக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை, தனியார் பள்ளிகள் மீது எடுக்க முடியாது. அதனால் தான், அரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை வழங்குகிறோம். விண்ணப்பம் வழங்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது என, தெளிவாக கூறியுள்ளோம். "கிளார்க்'குளை மட்டுமே, இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், தெரிவித்துள்ளோம்.இவ்வாறு சுர்ஜித் கே. சவுத்ரி கூறினார்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஓராசிரியர் பள்ளிகள்

"ஓராசிரியர் பள்ளிகளில் கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மட்டுமின்றி, ஒழுக்க நெறிமுறைகளும் கற்று தரப்படுகிறது" என, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஒதிக்காடு கிராமத்தில், சுவாமி விவேகானந்தர் ஊரக அபிவிருத்தி சங்கம் சார்பில் ஓராசிரியர் பள்ளிகளுக்கு 100 சூரிய ஒளி விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் வீர ராகவ ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 100 ஓராசிரியர் பள்ளிகளுக்கு, சூரிய ஒளி விளக்குகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவரான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி நட்ராஜ் வரவேற்புரை ஆற்றுகையில் பேசியதாவது:

"ஓராசிரியர் பள்ளி என்ற இத்திட்டம், கடந்த, 2006ம் ஆண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் துவக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடும் இவ்வேளையில், ஓராசிரியர் பள்ளிகளுக்கு 100 சூரிய ஒளி விளக்குகள் வழங்கும் இத்திட்டம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

மாகஆபநி - தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர் -களுக்கு குறுவள மைய பயிற்சிக்கான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி 25, 26.06.2013 அன்றும், மாவட்ட கருத்தாளர் பயிற்சி 27, 28.06.2013 அன்றும் நடத்த உத்தரவு.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு இன்றுமுதல் நுழைவுச்சீட்டு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு, இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்தத் தேர்வுகளில் பங்கேற்க மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலமாக தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
தனித்தேர்வர்கள் அந்தந்த ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலேயே ஜூன் 20 முதல் 22 வரை ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

உயர் கல்வியால் அறிவுசார் பலம் அதிகரிக்கும்: ஆளுனர் ரோசையா

சேலம்: "நம் நாட்டுக்கு, ஆய்வறிஞர்கள், தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, அறிவுசார் பலத்தை அதிகரிக்க வேண்டிய கடமை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது" என ஆளுனர் ரோசையா பேசினார்.
சேலம், பூசாரிப்பட்டி நரசுஸ் சாரதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் முதல் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரோசையா, மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
நம் நாட்டின் அறிவு சார் பலத்தை அதிகரிப்பதில், பல்கலைகளும், உயர்கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. புதுமையான கண்டுபிடிப்பு, ஆய்வு, கிரியேடிவிடி உருவாக்கம் ஆகியவைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இன்று, ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாகி வருகின்றன.

எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு துவக்கம்: எம்.எம்.சி.,க்கு கிராக்கி

சென்னை: மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க, சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்.எம்.சி.,) தேர்வு செய்தனர்.

தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் நடந்த, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முறையே, 44, 3, 2 என, மொத்தம், 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வழங்கப்பட்டன. மீதியுள்ள, 1,774 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும், 85 பி.டி.எஸ்., இடங்களுக்கான, பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்தோர், எம்.பி.பி.எஸ்., படிக்க, எம்.எம்.சி., கல்லூரியை தேர்வு செய்தனர்

பிளஸ் 2 உடனடி தேர்வு: ஜூலை 20ம் தேதி ரிசல்ட்

மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது.

பொதுத் தேர்வில், 95,388 பேர், தோல்வி அடைந்தனர். இவர்கள், இந்த கல்வி ஆண்டிலேயே, உடனடித்தேர்வை எழுதி, உயர் கல்வியில் சேரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மையங்களில், நேற்று, தேர்வு துவங்கியது. நேற்று, மொழித்தாள் தேர்வு நடந்தது. ஜூலை, 1ம் தேதி வரை, தொடர்ந்து தேர்வுகள் நடக்கின்றன. இதன் முடிவுகள், ஜூலை, 20ம் தேதிக்குள் வெளியாகும்.

2012-13ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடங்கள் பெற்ற மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் பரிசுகளை வழங்கி கௌரவிப்பு

http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr190613i.jpg

2013ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை பட்டியிலில் இருந்து 30.09.2013 திங்கள் நீக்கி தமிழக அரசு உத்தரவு.

பள்ளிக்கல்வி - முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்த உத்தரவு.

விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை

சென்னையில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் ஆட்டோக்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபோன்று விதிகளை மதிக்காத பள்ளி வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடரும் எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறந்த பிறகும், பள்ளி வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்ய குறிப்பட்ட கால அவகாசத்தை போக்குவரத்துத் துறை அளித்தது. கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மூன்று நாள்களில் 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
முதல் நாளான திங்கள்கிழமை 1.48 லட்சம் விண்ணப்பங்களும், செவ்வாய்க்கிழமை 89 ஆயிரம் விண்ணப்பங்களும், புதன்கிழமை 1.87 லட்சம் விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை 6 லட்சத்த்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதோடு, விண்ணப்பம் பெற நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.
இந்த ஆண்டு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால், எந்தவித காத்திருப்பும் இல்லாமல் உடனுக்குடன் விண்ணப்பத்தைப் பெற்றுச்செல்ல முடிவதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமை என்பதையும் பல ஆசிரியர்கள் மறுத்தனர்.
கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்துச் செலவு என ஏதும் இன்றி அவரவர் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இந்த ஆண்டு விண்ணப்பங்களை விற்பது நல்ல யோசனைதான் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

எம்.பி.பி.எஸ்.: விளையாட்டுப் பிரிவில் தேர்வான மாணவி தகுதியிழப்பு!

விளையாட்டுப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த மாணவி நித்யலட்சுமிக்கு, வேதியியல் பாடத்தில் தகுதி மதிப்பெண் இல்லாததால் எம்.பி.பி.எஸ். சேர்க்கை கடிதம் நிராகரிக்கப்பட்டது.
விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பு விளையாட்டுப் பிரிவுக்கு உரிய 3 இடங்களுக்கு, 5 மாணவர்கள் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு திங்கள்கிழமை (ஜூன் 17) அனுப்பியது.
சேலத்தைச் சேர்ந்த ஏஞ்சல் ரோஸ், மதுரையைச் சேர்ந்த நித்யலட்சுமி, திருநெல்வேலி மகாராஜா நகரைச் சேர்ந்த ஆதித்யா ஜூவாலா, மாணவர்கள் கவின் சாய் முத்துவேல், பிரவீண் குமார் ஆகியோரின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியது. நித்யலட்சுமி டென்னிகாய்ட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளதால் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றார்

I முதல் VIII வகுப்பு வரை முப்பருவ ( Trimester) மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு (CCE) முறைக்கான முதல் பருவ பாடத்திட்டம் ( 1st Semester Syllabus JUNE to September )

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பெற்றோர் விரும்பினால் ஜாதி, மதம் குறிப்பிடத் தேவை இல்லை என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

கணினி பயன்படுத்துவோர் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:


கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்:

~~~~~~~

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.

~~Browser~~

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.

1. Chrome - http://goo.gl/j11of
2. Firefox - http://goo.gl/7ICv2

~~Antivirus~~

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.

அரசு பள்ளிகளில், டி.இ.டி., விண்ணப்பங்களை விற்பனை செய்ய அனுமதித்த கல்வித் துறை, தனியார் பள்ளிகளில், விண்ணப்பங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

DINAMALAR NEWS
மாநிலம் முழுவதும், 2,500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், நேற்று முன்தினம் முதல், டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை துவங்கி உள்ளது. பள்ளி வேலை நாட்களில், விண்ணப்பங்களை விற்பனை செய்வதால், பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுவதாகவும், கல்விப்பணி பாதிப்பதாகவும், இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும், ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவேசம்:
காலையில், இரண்டு ஆசிரியர்களையும், மாலையில், இரண்டு ஆசிரியர்களையும், விண்ணப்பங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுத்துவதாகவும், இந்தப் பணியை, தலைமை ஆசிரியர்கள், கவனிக்க வேண்டியிருப்பதாகவும், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:ஏற்கனவே, இலவச சீருடை வழங்குவது, சைக்கிள் வழங்குவது, பென்சில், காலணி உள்ளிட்ட பல்வேறு இலவச பொருட்களை வழங்கும் வேலை இருக்கிறது. போதாததற்கு, பல்வேறு கணக்கெடுப்பு பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில், விண்ணப்பங்கள் விற்பனை செய்யும் வேலையையும், அரசு பள்ளிகளிடம் ஒப்படைப்பது எந்த வகையில் நியாயம்?டி.இ.டி., விண்ணப்பங்களை, தனியார் பள்ளிகளில், விற்பனை செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகளில், கல்விப்பணி பாதிக்கப்படக் கூடாது; தனியார் பள்ளி மாணவர்கள், நன்றாக படிக்க வேண்டும். அவர்களின், படிப்பிற்கு, எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது, அமைச்சரின் ஆவலோ... தெரியாது!ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் என்றால், கல்வித் துறைக்கு, இளக்காரமாகப் போய் விட்டது போலும்! அதுவும், கல்வித்துறையே, இப்படி, அரசுப் பள்ளிகளையும், அரசுப் பள்ளி மாணவர்களையும், மட்டம் தட்டுவது, வேதனையாக உள்ளது.சாதாரண பள்ளி மாணவர்களுக்கே, தொட்டதற்கு எல்லாம், "ஆன்-லைன்' திட்டங்களை, தேர்வுத் துறை செயல்படுத்துகிறது. மாணவ, மாணவியர், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள், இணையதள மையங்களை தேடிச் சென்று, பல நூறு ரூபாய் செலவழித்து, விண்ணப்பிக்கின்றனர்.மாணவர்களுக்கே, இணையதள வழி பதிவை வலியுறுத்தும் கல்வித் துறை, டி.இ.டி., தேர்வை எழுதும் பட்டதாரிகளுக்கு, இணையதள வழி பதிவு திட்டத்தை, அறிவிக்காதது ஏன்?இளங்கலை பட்டம், பி.எட்., படித்தவர்கள், இணைய தளத்தில், பதிவு செய்ய மாட்டார்களா? ஏன், இந்த காலத்திலும், லட்சக்கணக்கில், விண்ணப்பங்களை அச்சடித்து, காசை கரியாக்க வேண்டும்? குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஏன் தொந்தரவு செய்கின்றனர்?

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி அறிவிப்பு

தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்தார்.
தகுதித்தேர்வு விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 17–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பங்களை வாங்கிய வண்ணம் உள்ளனர்.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50 ஆகும். தேர்வுக் கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்கள், பழங்குடியின வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். தேர்வு கட்டணத்தை விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும் செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கி கிளையிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ அல்லது கனரா வங்கியிலோ செலுத்தலாம்.
எந்த அலுவலகத்திலும் கொடுக்கலாமா?
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்குச் செல்லும்போது விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலையும் வைத்துக்கொள்ள வேண்டும். கையெழுத்திடப்பட்டு கொடுக்கப்படும் அந்த ஜெராக்ஸ் பிரதி தான் ஒப்புகைச்சீட்டாக கருதப்படும்.
இதற்கிடையே, விண்ணப்பம் வாங்கிய பள்ளியின் அதிகார எல்லைக்குள் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் (டி.இ.ஓ. ஆபீஸ்) மட்டும்தான் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமா? அல்லது எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாமா? என்ற கேள்வி ஒருசில விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி பதில்
காரணம் சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை எங்கேயாவது ஒரு பள்ளியில் வாங்கி இருப்பார்கள். அவர்களின் வீடு வேறு மாவட்டத்தில் இருக்கக்கூடும். இதுபோன்ற நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கென்று விண்ணப்பம் வாங்கிய பள்ளிக்கு உள்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்திற்கு செல்வதால் அவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். தமிழகம் முழுவதும் 66 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களுமே கடைசியில் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு தான் வரும்.
இந்த பிரச்சினை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் அறிவொளியிடம் கேட்டபோது, ‘‘தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தை, விண்ணப்பம் வாங்கிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உட்பட்ட டி.இ.ஓ. அலுவலகத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. வசதிக்கு ஏற்ப எந்த டி.இ.ஓ. அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம். எங்கு வாங்கப்பட்ட விண்ணப்பங்கள் என்றெல்லாம் பார்க்காமல் அனைத்து டி.இ.ஓ. அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வார்கள்’’ என்று தெரிவித்தார்.

வேளாண் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், இளநிலை வேளாண் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண்மை பல்கலையில், பிஎஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 13 பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
அகாடமிக் -பயாலஜி, அகாடமிக் -கணிதம் என தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்குகிறது.
தரவரிசைப் பட்டியலை காண www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வும் எதிர்காலமும் (RE POST)

பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது விளையாட்டுத்தனம் மட்டுமே மனம் முழுதும் மேலோங்கி இருக்கும்.அதுவும் குறிப்பாக மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும்பொழுது ஒரு சிலருக்கு எதிர்காலம் குறித்த பெரும் கனவுகளும், பலருக்கு எதிர்காலம் பற்றிய சிறிதளவு சிந்தனையும் இல்லாமலும் பள்ளிக்காலம் கழியும். சரியான திட்டமிடுதலோ, வழிகாட்டுதலோ இன்றி வாழ்ந்துகொண்டிருக்கும் பருவத்தில் பத்தாம் வகுப்பு வந்தவுடன் சிறிது கலக்கம் வரும்.

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்…சீனா சாதனை : அமெரிக்காவை முந்திய சீனா

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரை இப்போது சீனா உருவாக்கியுள்ளது.
டியானி 2 (Tianhe 2) : இது சீன விஞ்ஞானிகள் அண்மையில் உருவாக்கியுள்ள புதிய சூப்பர் கம்ப்யூட்டர். தமிழில், பால்வழி என்ற தரும் பொருள் தரும் பெயரைக் கொண்டுள்ள இந்த கம்ப்யூட்டரை, மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள, தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வேகம், நொடிக்கு 33.86 பெடாஃப்லாப் (Petaflap). அதாவது, நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது என சொல்லலாம்

அகஇ - SABL - 1 முதல் 4 வகுப்புகளுக்கான கற்றல் அட்டைகள் திருத்தம் செய்தவைகளை வகுப்பறையில் நடைமுறைப்படுத்த உத்தரவு.

பி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்

கடலூர்: கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது. இதையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2013-14ம் கல்வியாண்டில் புதிதாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
கடலூரில் உள்ள அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5,033 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. விண்ணப்பங்கள் வினியோகம் முடிந்துள்ள நிலையில், 3,773 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, கல்லூரியில் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் 4,650 விண்ணப்பங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. வரும் 24ம் தேதி முதல் துவங்கயுள்ள கலந்தாய்வுக்காக முதலாமாண்டு மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.
கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஆங்கில இலக்கியம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், பொருளியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், "கடந்தாண்டை விட இந்தாண்டு விண்ணப்பங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.காம்., பாடப் பிரிவில் சேர ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில், 5,726 பேர், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில், 3,291 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவால், மருத்துவ தரவரிசை பட்டியலில், 120 பேருக்கு மட்டும், அவர்களின் தரவரிசையில், மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் 494 இடங்கள் நிரம்பின

பி.இ. சேர்க்கையில் விளையாட்டுப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் 494 இடங்கள் நிரம்பியதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
 பி.இ. படிப்பில் விளையாட்டுப் பிரிவினருக்கு 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.   இந்தப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிறைவடைந்தது.
மொத்தம் 494 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 1 இடமும், அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டில் 5 இடங்களும் நிரம்பவில்லை.
இந்நிலையில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆசிரியர் பட்டயப் படிப்பு: 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!

தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 17 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. ஆனால், அந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் மட்டுமே பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பதாரர்களில் 4,000 பேர் மாணவிகள், 431 பேர் மாணவர்கள் ஆவர். பெண்களே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.  கடந்த ஆண்டு சுமார் 3,800 பேர் மட்டுமே இந்தப் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

சிறந்த பல்கலை. வரிசையில் அகில இந்திய அளவில் விஐடிக்கு 2வது இடம்

வேலூர்: நாட்டில் சிறந்த பொறியியல் உய ர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் குறித்து இந்தியா டுடே, நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சிறந்த பல்கலைக்கழகங்களில் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.நாட்டில் உள்ள பொறியியல், வணிக மேலாண்மை, மருத்துவம், சட்டம், அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழ கங்களில் சிறந்த கல்வி நிறுவனங்கள் சம்பந்தமாக இந்தியா டுடேவும், நீல்சன் நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் கருத்து கணிப்பு நடத்தி அதில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்களை வெளியிடுகின்றன. 2013ம் ஆண்டுக்கான இந்தியாவில் சிறந்த பொறியியல் உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய கருத்து கணிப்புகளை மேற்கண்ட 2 நிறுவனங்களும் இணைந்து நடத்தின

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வருடன் இன்று சந்திப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
 பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று ரேங்க் பெற்ற 13 மாணவ, மாணவியர் மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் ரேங்க் பெற்ற 9 மாணவியருக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுப் பத்திரத்தையும், ரொக்கப் பரிசையும் வழங்குவார் எனத் தெரிகிறது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கி வருகிறார்.

கல்லூரிகள் நாளை திறப்பு

சென்னை:கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.தமிழகத்தில், 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர். கடந்த மே மாதம், கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கியது. தற்போது, 65 நாட்களுக்கு பின், நாளை, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.மாணவர் சேர்க்கைஅரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை முடிந்த நிலையில், தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை, முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.

மாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ம் தேதி தமிழகம் - புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜீன் 2 ந்தேதி தொடங்க வேண்டிய பள்ளி 8 நாட்கள் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த தாமதமான நாட்களை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து சரிக்கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அது எந்தெந்த நாட்கள் என பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், தேர்வில் 100க்கு 100 சதவிதம் தேர்ச்சி பெற ஆசைப்படும் தனியார் பள்ளிகள் சனி, ஞாயிற்று கிழமைகளிலும் பள்ளியை வைத்துள்ளனர். பல பள்ளிகளும் இப்படி சனி, ஞாயிற்றுகிழமைகளில் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரென்டாம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.

தினமும் படிக்கும் மாணவர்கள் சற்று ஓய்வெடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பள்ளிக்கு வரவேண்டும் என்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப் படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. ஓய்வே இல்லாமல் தினமும் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது அவர்களது மனநிலையை பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சில பயனுள்ள வலைத்தளங்கள்! (படிக்கவும் பாதுகாக்கவும்)


சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை

பள்ளிக்கல்வித்துறை 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி (மாதவாரியான தொகுப்பு)

DSE - 2013-14 WORKING & LEAVE LIST IN SINGLE PAGE CLICK HERE...

குறிப்பு : ஜூன் 3 தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதற்கு அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வந்தபின் சேர்க்கப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தமிழ்–ஆங்கிலம்

பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
பி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்)

கணிதம்–இயற்பியல்

பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு)

web stats

web stats