rp

Blogging Tips 2017

தகவல் அறியும் உரிமை சட்டம் =கேள்விகட்கு தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பதில்களும்


கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி.

சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தை எளிதாககற்பிப்பது தொடர்பான 2 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.சென்னை மாநகராட்சியில் மொத்தம் 284 பள்ளிகளும் 30 கிண்டர்கார்டன் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு, எளிதாக மாணவர்களுக்கு புரியும் வகையில் கணித பாடத்தைக் கற்பிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தியாகராய நகரில் உள்ள தியாகராய அரங்கத்தில் நடைபெறும்இந்த 2 நாள் பயிற்சியை மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.முதல் நாள் பயிற்சியில் 10-ஆம் வகுப்பு கணித வகுப்பு எடுக்கும் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் 283 பேர் கலந்து கொண்டனர்.சனிக்கிழமை நடைபெறும் பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் 10-ஆம் வகுப்பு பயிலும் தலா 5 மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
கோவையை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமா ஜானு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

சமுதாய கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின், சமுதாயக் கல்லூரிகளில், முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம், 2002ல், முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் துவக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம், கல்வியைத் தொடர முடியாத இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு, கல்விக்கான மாற்று வாய்ப்பை அளிப்பதுடன், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவி செய்து, சமுதாய மேம்பாட்டிற்கும், மனிதவள மேம்பாட்டிற்கும், துணைபுரியக் கூடிய, சமுதாயக் கல்லூரிகளை நடத்தி வருகிறது.

SSA-2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலுக்கான அறிவுரைகள்

CLICK HERE-SSA-2013-2014 -SABL LATEST CIRCULAR

பணியிட நிரவல் (deployment) இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை அறிமுகம்


தமிழகத்தில் 4340 உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் மேகவழிக் கற்றல் (கிளவுட் கம்ப்யூட்டிங்) என்ற புதிய கற்றல் முறை கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக இரண்டு பள்ளிகளில் இந்த திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள 4340 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி வழிக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு உத்தரவிட்டது. பள்ளி கல்வி துறை இதை செயல் பாட்டுக்கு கொண்டுவந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக தனி பாடம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

           இதற்காக, பி.எட். படிப்பில் இருப்பதைப் போல இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தகுதித்தேர்வு பாடத்திட்டம் தொடர்பான புதிய தாள் சேர்க்கப்படும்.

              மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இடைநிலை ஆசிரியர் பணியிலோ, பட்டதாரி ஆசிரியர் பணியிலோ சேர முடியும்.

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்

குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், கூறியதாவது: குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சத்து, 85 ஆயிரத்து, 198 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை, வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு, டிச., 1ம் தேதி, 115 இடங்களி"ல் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66 பேர், இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்' பணிக்கு, 39 பேர் உட்பட, 1,064 பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது. குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 12 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில், இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.

முடிவு பெற போகும் இரட்டைப்பட்ட வழக்கு- இறுதி விசாரணை வருகிற 07.10.2013, திங்கட்கிழமை வருகிறது

07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை  28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த
போது ஒரு  வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது.
வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை  28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை  வாய்தா வாங்கியது போல இல்லாமல் இருந்தால் இந்த இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி கண்டிப்பாக முடிவு பெறும்

10,+2 கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி.வருகிறது தேர்வுத்துறை அதிரடி

கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த
இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.
சான்றிதழ் உண்மையானதுதானா?
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL. CEO / IMS / DEEOs ஆய்வுக்கூட்டம் 17.10.2013 & 18.10.2013 ஆகிய நாட்களில் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது

DSE - ALL CEO / ADDL. CEO / IMS / DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 17 & 18.10.2013 PRESIDED BY SECRETARY REG PROC CLICK HERE...

ஆங்கில ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் ஒரு மாதம் பயிற்சி

நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 முடிய ஒரு மாத காலம் ஆங்கிலப்பாடப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் உள்ள ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் "ஆங்கிலம் கற்பித்தலில் சான்றிதழ்" என்ற பணியிடைப் பயிற்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

 

அக்டோபர் மாதம்தொடக்கமற்றும் உயர்தொடக்கபள்ளி ஆசிரியர்கட்கு  இரு குறுவளமைய பயிற்சிகள் நடைபெறும்

PRIMARY===  05/10/13   & 19/10/13

UPPER PRIMARY=== 12/10/13  & 26/10/13

SPD - 2013-14 PRIMARY / UPPER PRIMARY CRC WILL BE HELD ON 05.10.2013 & 12.10.2013 REG PROC CLICK HERE... - CRC - I

SPD - 2013-14 - PRIMARY CRC WILL BE HELD ON 19.10.2013 & UPPER PRIMARY CRC WILL BE HELD ON 26.10.2013 REG PROC CLICK HERE... - CRC - II

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு குறித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான கேள்வித்தாள் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இருந்தது. இதையடுத்து, இந்தப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

SSA - PRIMARY / UPPER PRIMARY CRC MODULE FOR "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS&PROJECTS"

SSA - PRIMARY MODULE FOR SCIENCE EXPERIMENTS TRG CLICK HERE...

SSA - UPPER PRIMARY MODULE FOR SCIENCE EXPERIMENTS TRG CLICK HERE...

மூன்று நபர் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு என தவறான தகவல்கள் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி


திசை மாறும் மாணவ சமுதாயம்.... காரணம் யார்?

ஒரு பெண்ணுக்காக கல்லூரிக்குள் மாணவர்கள் துப்பாக்கி சகிதமாக மோதல்...22 பேர் கைது; சாதிய உணர்வில் மோதிக்கொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 63 பேர் மீது வழக்கு; ஏ.டி.எம்.,மெஷினில் திருட முயன்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது; செயின் பறிப்பில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள்; போலீசார் அதிர்ச்சி....


இவையெல்லாம், சமீபத்தில் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு; வெளியில் வராத செய்திகள் எத்தனையோ? மதுவுக்கும், கஞ்சாவுக்கும், போதை மருந்துகளுக்கும், ஆபாசப் படங்களுக்கும் அடிமையாகும் பல மாணவர்கள், சமுதாயத்தின் கண்களில் திரைகளைக் கட்டி விட்டு, போடும் ஆட்டம் கொஞ்சமில்லை. என்ன ஆனது இந்த கல்லூரி மாணவர்களுக்கு....?

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

SPD - 2013-14 - PRIMARY CRC WILL BE HELD ON 19.10.2013 & UPPER PRIMARY CRC WILL BE HELD ON 26.10.2013 REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.10.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் அவர்களின் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது.

DEE - CHENNAI REGION - 6 DISTRICTS DEEO/AEEO/AAEEOs HON'BLE MINISTER / SECRETARY REVIEW MEETING TO BE HELD AT CHENNAI REG PROC CLICK HERE...

ஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு, அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக வழங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு

Pension- Treatment of Dearness Allowance as Dearness Pay for the purpose of pension revision to those retired between 1.6.1988 and 31.12.1995- Orders issued in G.O.Ms.No.363, Finance (PGC) Department, dated 23.8.2013- Further Clarification – Issued.

தொடக்கக் கல்வி - புதியதாக துவங்கப்பட்ட 54 தொடக்கப்பள்ளிகள் செயல்படுவதற்கான விதிமுறைகளை வகுத்து இயக்குநர் உத்தரவு

DEE - 54 NEW PRIMARY SCHOOLS FUNCTIONING REG DIRECTOR'S INSTRUCTIONS CLICK HERE...

முறைகேடுகளை தவிர்க்க அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு

அரசுப்பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து பணிகளையும் தேர்வுத்துறையே நேரடியாக செய்ய முடிவு செய்துள்ளது. அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதனையடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை தேர்வுத்துறை எடுக்க முன் வந்துள்ளது.

CPS - PFRDA Bill | மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட வரைவு நகல்

click here-CPS-PFRDA BILL -LAW & JUSTICE

ஒவ்வொரு அலுவலரும் ஆண்டுக்கு 180 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்; 46 பள்ளிகளில் ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்.தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி
இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்-லைனின் அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள அறிக்கை: அரசின் புது திட்டம்-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம் பற்றிய ஒத்திகை நடக்கிறது. ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை

மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கனவாகும் மாணவர் "சிறப்பு கட்டணம்": இழுத்தடிக்கும் கல்வித்துறை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2008ம் ஆண்டுக்கு முன் மாணவர்களிடம் நேரடியாக சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த முறை ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான சிறப்பு கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித் துறையே வழங்கும் என்று உத்தரவிட்டப்பட்டது.

பண்டிகை முன்பணம் ரூபாய் 5000/-கோரும் விண்ணப்பம்-

Click here to download -Festival Advance Application Form

சர்வர் பிரச்னையால் ஆசிரியர்கள் விரக்தி: பள்ளி விவர சேகரிப்பு பணியில் தேக்கம்.

பள்ளி விவரம் சேகரித்து,ஆன்-லைனில் பதிவேற்றும் பணியில்,சர்வர் பிரச்னையால்,பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால்,பள்ளிதலைமை ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இந்தியா
முழுவதும் உள்ள பள்ளிகள்,அதில் படிக்கும் மாணவ,மாணவியர்,ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும்,தொகுக்கும் பணி ஆன்-லைனில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில்,புதிதாக சேர்பவர்களின் விவரங்களை,அப்பள்ளி தலைமை ஆசிரியர்

அக்டோபர் மாதம் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மையங்களில் நடத்தப்பட உள்ள """"சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு"" சார்ந்த மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது.

click here to download the Scert Proceeding of  OCTOBER Month CRC for Primary and Upper Primary

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்.

அனைத்து ஆசிரியர்களும், 2016க்குள்,தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால்,தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில்,பள்ளிகளில்10ம் வகுப்பு வரை,தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010ஆக., 23க்கு பிறகு,நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை,ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால்,அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்

10நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்-ஆசிரியர் தேர்வு வாரியம்-puthiyathalaimurai News

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாகவாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை, சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை தமிழ் தேர்வு ரத்து -டி.ஆர்.பி., அவசர ஆலோசனை

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து,உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள்,இன்று (அக் 2)

காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் 18,946 மாணவர்களுக்குச் சேர்க்கை, 40,512 இடங்கள் நிரம்பவில்லை.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 18,946 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் (பொறுப்பு) ஆர்.பிச்சை தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள ஒதுக்கீட்டு இடங்களில் இது ஏறத்தாழ 30 சதவீதம் ஆகும். ஏழைகளுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பில் மொத்தம் 59 ஆயிரத்து 292 இடங்கள் தமிழகத்தில் உள்ளன; இதில் 40,512 இடங்கள் நிரம்பவில்லை.

மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் தமிழர் கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : சொன்னதை செய்யும் ரோபாட்டைதான் (எந்திர மனிதன்) இதுவரை கண்டிருக்கிறோம். இனி, சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை காணப்போகிறோம். ஆம்,
ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட  மூளையை

மது இல்லாத கிராமம்,மாற்றத்துக்குக் காரணம் -உதவிக் கல்வி அலுவலர் தங்கவேல் !

குடியை எதிர்த்து கேள்வி கேட்கும்படி குழந்தைகளைக் கொம்பு சீவினார். மது குடித்துவிட்டு வீட்டில் மல்லாந்து கிடக்கும் அப்பனையும் சித்தப்பனையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டார்கள்
குழந்தைகள்.
அரசு அதிகாரிகளை மக்களின் சேவகர்கள் என்பார்கள். அப்படி எத்தனை பேர் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்கள்? இதற்கு சொக்கத் தங்கமான உதாரணம் தங்கவேல்.

தொழில் வரி இன்று முதல் 35 சதவீதமாக உயர்வு.


தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், இன்றுமுதல் (அக்.,1) தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்து

சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாஸ்: ஐகோர்ட் தடை.

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்ற நீதிபதிகள் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், இடைக்கால தடை விதித்தது.மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்,
திசை இந்திரன். இவர் ஏற்கனவே, மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்த பொதுநல மனு: பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் B.Ed படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் முடிவை வெளியிட்டுள்ளது

 Click here-TNOU ENTRANCE RESULT

அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாது என தனியார் பள்ளிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்ற நீதிபதிகள் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், இடைக்கால தடை விதித்தது.மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர்,
திசை இந்திரன். இவர் ஏற்கனவே, மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்த பொதுநல மனு: பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு, அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. அரசு சட்டக்

அக்.,25ல் மாணவர்களுக்கான மாநில தனித்திறன் போட்டி.

பள்ளி மாணவர்களுக்கான மாநில தனித்திறன் போட்டிகள், அக்.,25ல், நெல்லையில் நடக்கிறது.6ம்வகுப்பு முதல் 12ம்வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவியரின்தனித்திறனை வளர்க்கும் பொருட்டு,
கட்டுரை (தமிழ், ஆங்கிலம்) பேச்சு (தமிழ், ஆங்கிலம்) கவிதை, பரதம், இசை, வினாடி-வினா, கிராமிய நடனம், பாட்டு, ஓவியம் ஆகிய 11 பிரிவுகளில், கல்வி

கோர்ட் நடவடிக்கைகளில் தாமதம் கூடாது: கல்வித்துறை உத்தரவு.

கோர்ட் நடவடிக்கைகளில், தாமதம் கூடாது" என அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசுக்கு எதிராக, ஆசிரியர்கள் வழக்கு தொடரும்போது, அதற்கு முறையாக,
அந்தந்த மாவட்ட கல்வித்துறை, பதில் மனுதாக்கல் செய்வதில்லை என்ற

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு.

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு
தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும்,

புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு.

புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு,தலைமை ஆசிரியர்,ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள,"கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.குடியிருப்பு பகுதிகளில்,மக்கள் தொகை 300 பேருக்கு,ஒரு தொடக்க பள்ளி

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு.

கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக,தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுக்குறித்து,
இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

TRB PG TAMIL FLASH NEWS : தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா?


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன.

வகுப்பறை கட்டுமான பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பு, தலைமையாசிரியர்களுக்கு நிம்மதி

'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்!

Return to frontpageமாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக மாவட்டந்தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மாநிலம் முழுவதும் 128 பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை தொடக்க கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் -- விண்வெளி வீரர்கள் உற்சாகம்

செவ்வாயின் மண்ணில் வியப்பூட்டும் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது என்று கியூரியாஸிட்டி ரோபோ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஓரளவுக்கு நாசா விஞ்ஞானிகளுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாகும்.

சமீபத்தில் செவ்வாயில் மீத்தேன் வாயு பெரிய அளவில் இருப்பதாக நம்பியிருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலான செய்தியை கியூரியாஸிட்டி ரோபோ அனுப்பியது. செவ்வாயில் மீத்தேன் வாயு இல்லை என்று அது தெரிவித்தது.
அதையடுத்து, செவ்வாயில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர். இந்நிலையில், கியூரியாஸிட்டி ரோபோவின் இன்னொரு ஆய்வு விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. செவ்வாயின் ஒரு பிடி மண்ணை எடுத்து கியூரியாஸிட்டி ரோபோ உஷ்ணப்படுத்தியது. அப்போது அந்த மண்ணிலிருந்து நீராவி வெளியேறியதாக ரோபோவை ஆய்வு செய்துவரும் லவ்ரீ லெஷின் மற்றும் அவருடைய சகாக்கள் சயின்ஸ் என்ற அறிவியல் இதழுக்கு அளித்த பேட்டியில் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். செவ்வாயின் சிவப்பு நிறத்தில் 2 % எடை தண்ணீர் என்று அவர்கள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் செவ்வாய் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அதாவது, ஒரு சதுர அடி மண்ணை எடுத்து சில நூறு டிகிரி சூடுபடுத்தினால், இரண்டு காலன் தண்ணீர், அல்லது இரண்டு பாட்டில் தண்ணீர் பெற முடியும் என்கிறார்கள்.செவ்வாயின் எல்லாப் பகுதியிலும் இதுபோன்ற மண்தான் காணப்படுகிறது. அதாவது எந்தப் பகுதியில் இறங்கினாலும் மண்ணிலிருந்து தண்ணீரைப் பிரிக்கமுடியும்.செவ்வாய் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்கும்

கூட்டுப்போராட்டத்தினை வலியுறுத்தி ஒரு SMS போராட்டம் -திரு நிவாஸ் அவர்களின் வேண்டுகோள்

மூவர் குழு அரசாணைகள்: போராட்டங்களும் தேவையும்
            ஜூலை மாதம் 22 ம் நாள் மூவர்குழு முதன் முறையாக தனது அறிக்கையை வெளியிடாமல் நேரடியாக பரிந்துரைகளின் அடிப்படையிலான அரசாணைகளை வெளியிட்டது.
          தமிழ்நாட்டில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் வழங்கப்படுவது போல், மாநில அரசில் மற்ற துறைகளில் பட்டயப்படிப்பு பயின்று பணியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது போல் PB-2 ல் 9300 ஊதியத்துடன் 4200 தரஉதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து சங்கத்தினராலும் கோரப்பட்டாலும் வழங்கப்படவில்லை.
      ஏன் வழங்கப்படவில்லை எனற விளக்கமும் வழங்கப்படவில்லை. 22.07.2013 அன்று வெளியிடப்பட்ட அரசாணைகளில் இது குறித்து ஆணை வெளியிடப்படவில்லை.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.

பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் ஆரம்ப கல்வியில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கடந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கான எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை.

தமிழ்நாடு அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கானஅகவிலைப் படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

தமிழ்நாடு அரசு  மாநில அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப் படிக்கான அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடும் என்று நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்தனர்  

,மத்தியப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநில அரசுகள், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%சதவீதமாக உயர்த்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

பல்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் பணியமர்விற்கு மற்றும் பதவியுயர்விற்கு சமமாக கருத அரசாணைவெளியீடு.

Click here to download the G.O (Ms).No. 185 Dt: September 26, 2013Public Services – Equivalence of Degree – various educational qualifications

சென்னை பல்கலக்கழகத்தால் வழங்கப்பட்ட முதுகலை புள்ளியியல்(M.Sc Statics) பட்டப்படிப்பு - முதுகலை கணிதம் பட்டப்படிப்பிற்கு (M.Sc Maths) சமமான பட்டப்படிப்பாக அங்கீகரித்து கணித முதுகலை ஆசிரியராக நியமிக்க அரசாணை வெளியீடு.

Click here to download the G.O (Ms).No. 190 Dt: September 27, 2013 M.Sc. Statistics Recommendationof Equivalence to MSC Mathematics -Committee –Orders – Issued.

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது

"எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர பாடங்களை எடுத்து படிப்பவர்கள், அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வாய்ப்பை பெறுகின்றனர். இந்நிலையில், எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களும், அரசு பணி வாய்ப்பை அதிகளவில் பெறும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை, வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை பல்கலை வழங்கும் எம்.எஸ்சி., புள்ளியியல் படிப்பு, எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது என்றும், அரசு பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்களாக பணி வாய்ப்பு பெறுவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

10ஆம் வகுப்பு-தனித்தேர்வர்களுக்கு செய்முறை வகுப்பு பதிவு வாய்ப்பு

பள்ளிகளில் மனநல ஆலோசனைக்குழு

இயல்பே அழகு (the tamil hindu) கட்டுரை


எப்படிச்சாப்பிடுவது, எப்படிப் பேசுவது, எப்படி உடை உடுத்துவது, எப்படிக் கைகுலுக்குவது, எப்படி அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நடந்துகொள்வது, எப்படிப் பணியாளர்களை நடத்துவது, எப்படி நெருக்கடிகளைச் சமாளிப்பது, எப்படிப் பெண்களைக் கவர்வது, எப்படிக் குழந்தை வளர்ப்பது என்றெல்லாம் ஏராளமான அறிவுரைகளும் பயிற்சி வகுப்புகளும் கிடைக்கும் காலம் இது. கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இதுபோன்ற ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள் நம்மைக் குழந்தைகளைப் போலவும், முட்டாள்களைப் போலவும் நடத்துவதை நாம் எல்லாரும் ஏதாவது ஒரு தருணத்தில் அனுபவித்தே இருப்போம். நாம் குறையுடவர்கள், மேம்பட வேண்டியவர்கள் என்று நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்தும் குற்றவுணர்வுமே இந்தப் பயிற்சியாளர்களை நாம் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதற்குக் காரணம்.

அனைத்து பள்ளிகளூக்கும் கழிவறை,குடிநீர் அவசியம்-கல்வித்துறை செயலர் சபிதா


மாணவர்களிடம் உதவும் மனப்பான்மையை உருவாக்க பள்ளிகளில் ‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ (அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதிவரை ஒருவாரம்) கொண்டாட உத்தரவு

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான் மையை மாணவர்களிடம் ஏற்படுத்த, தமி ழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளி லும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒருவாரம் ‘ஜாய் ஆப் கிவ்விங் வீக்’ கொண்டாட பள்ளிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளி யிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்கு நரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாணவர்களிடையே
ஈகை மனப்பான் மையை உருவாக்குவதற்கும் மாணவர்கள் அன்புடனும், ஆதரவுடனும் கொடுத்து உதவும் மனப்பாங்குடன் சமூக ஏற்ற தாழ்வுகளை மறந்து ஒருவருக்கொருவர் பரிசுகளையும், கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதற்கும், ஏழை - எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒருவாரம் வரை அனைத்துப் பள்ளிகளிலும் ‘கொடுப் பதில் மகிழும் வாரவிழா’ கொண்டாட பள்ளித் தலைமையாசிரியர்கள் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இந்த “கொடுப்பதில் மகிழும் வார விழா”வை மாணவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் வாழும் இயலாதோருக்கு இயன்ற பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம்.எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்றிட உதவலாம். மாணவர்கள் தங்களது சுயமுயற்சியில் ஏதாவது ஒரு கைவினைப் பொருட்களை உருவாக்கி மற்றவர்களுக்கு உதவிடச் செய்யலாம்.

பயணத்தின்போது, சிறியவர், பெரியவர் மற்றும் உடல்நலம் குன்றியோருக்கு தாம் அமர்ந்து இருக்கும் இருக்கையினை கொடுத்து உதவலாம்.பெரியோர்களிடம் தங்களது எதிர் காலத்திற்கு நன்மை பயக்கும் விசயங் களைக் கலந்துரையாடலாம். போக்கு வரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சாலையினைக் கடப்பதற்கு பிறருக்கு உதவிசெய்யலாம்.

பாலித்தீன் பைகளின் பயன்பாட்டினைக் குறைப்பதற்கு பழைய காகிதங்களைக் கொண்டு உறைகள் தைக்க லாம். சிறந்த பத்து பொன்மொழிகளை எழுதி பொதுஇடங்களில் பார்வைக்கு வைக்கலாம். முதியவர்களுக்கு தினசரி நாளிதழ்களை வாசித்துக் காட்டலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டக் கடிதம்

CLICK HERE TO DOWNLOAD RTI LETTER OF COMPUTER TEACHERS PROMOTION REG

54 New Primary Schools Name List for 2013-14 | மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு

click here to download the GO 188 - 54 New Primary Schools Name List for 2013-14 and Staff appointment Reg

பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்தல் மற்றும் பராமரித்தல் சார்ந்து அறிவுரை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

click here to download the dee proceeding of Toilet Usage/ maintain Reg Guidelines

web stats

web stats