Labels

rp

Blogging Tips 2017

ஆசிரியர் பேரணி-மே-20 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)

ஆசிரியர் பேரணி-ஜூன்-5 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)

மத்திய அமைச்சர்களின் அலுவலகங்களில் மொபைல், பேனா கொண்டு செல்ல தடை

துடில்லி : 'மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது', இந்த வாசகம் பொறிக்கப்பட்ட போர்டுகளே பெரும்பாலான மத்திய அமைச்சர்களின் அலுவலக வாசலில் தற்போது காட்சி அளிக்கிறது. மொபைல் போன் மட்டுமின்றி பேனாக்கள் கொண்டு செல்லவும் சில அமைச்சர்கள் தடை விதித்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பலர் தங்கள் அலுவலகங்களுக்கு வருபவர்கள் மொபைல் போன், பேனா கொண்டு வர தடை விதித்துள்ளனர். அதனை பாதுகாப்பாக வெளியே வைத்து விட்டு வரவும் ஏற்பாடு செய்துள்ளனர். மத்திய வேளாண்துறை அமைச்சர் சஞ்சீவ் பால்யானின் அலுவலகத்திற்கு வருபவர்கள் பேனாக்களை கண்டிப்பாக கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ஒட்டுகேட்கும் வகையிலான அதிநவீன திறன் கொண்ட பேனாக்கள் தற்போது வெகு சாதாரணமாக கிடைக்கின்றன; இதனை கருத்தில் கொண்டு, அமைச்சக தகவல்கள் வெளியே கசியாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கையாக இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் கல்வியில் அதிரடி மாற்றம் விரைவில்-NCERTதலைவர் சந்தோஷ் பாண்டே


தமிழகம் முழுவதும் இன்று வி.ஏ.ஓ தேர்வு: 243 மையங்களில் 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வினை 10 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக, மாநிலம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சில தேர்வுக் கூடங்கள் வெப்கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

பணி நிரவல் குறித்தான தெளிவுறை இதுவரை வெளியிடப்படாத நிலையில் ஏற்கனவே பணிநிரவல் குறித்து அரசு -2012-வெளியிடப்பட்ட ஆணை

RTE 2009-ன்படி தொடக்கக் கல்வி இயக்கத்தில் கட்டுப் பாட்டில் உள்ள PU / MUNICIPAL / GOVT தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியடங்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியீடு.

பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு


பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறுமதிப்பீடு கோரி, தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணி, நேற்றிரவு வரை நீடித்தது.மருத்துவப் படிப்பிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுவதால், நேற்றிரவே, மறுமதிப்பீடு முடிவு, வேகமாக அனுப்பி வைக்கப்பட்டது.

Special Tamil Nadu Teacher Eligibility Test 2014 for Persons with Disability (PWD) Candidates - Paper II Examination Result.

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் சாவு

நாமக்கல்லில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் எஸ்.பி. புதூரில் அரசு நிதி உதவி பெறும் அர்த்தனாரி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன் (வயது 10), நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தான். இறை வழிபாடு முடிந்தவுடன் வகுப்புக்கு சென்று உட்கார்ந்த மோகன் பாடங்களை எழுதிக்கொண்டு இருந்தான்.

அப்போது திடீரென அவன் மயக்கம் அடைந்து விழுந்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் அவனை மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாமக்கல் அருகே எம்.ராசாம்பாளையத்தில் வசித்து வரும் அந்த மாணவனின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு!!

உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:ஏ.இ.ஓ.,வாக பணியாற்றிய நான், 2010 ஜனவரியில் ஓய்வு பெற்றேன். அலுவலகத்தில் மேற்பாற்வையாளர், என்னைவிட கூடுதல் சம்பளம் பெற்றார். அவருக்கு இணையாக சம்பளம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு அனுப்பினேன். 2011 ஜனவரியில் ஒருநபர் குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியம் மறுநிர்ணயம் செய்தபோது, எங்களுக்கு செய்யப்படவில்லை.

மோடி பயத்தால் முக்கிய திட்டங்களை 24 மணிநேரத்தில் உறுதி செய்த அமைச்சகங்கள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்து அமைச்சக அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களாம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி அரசின் தலையாய திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து அந்த திட்டங்கள் குறித்த விளக்க உரைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தயாரிக்க துவங்கிவிட்டனவாம்.

அரசு பணியாளர் நடத்தை விதிகள் - அரசுப் பணி / நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர்கள் / ஆசிரியல்லாதோர் - கடவுச்சீட்டு பெற / புதுப்பிக்க தடையின்மைச் சான்று - நியமன அலுவலருக்கு அதிகாரம் அளித்து உத்தரவு

தொடக்கக் கல்வி - மழை நீர் சேகரிப்பு - ஓவியப் போட்டியில் கலந்துகொண்டவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


ஜூலை 2 வது வாரத்தில் மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு வரம்பு 3 இலட்சமாக அதிகரிக்க வாய்ப்பு!!!


வி.ஏ.ஓ. தேர்வு தேதி அறிவிப்பில் திடீர் குழப்பம்

பத்து லட்சம் தேர்வர்கள் பங்கேற்கும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வு, நாளை, 14ம் தேதி நடக்கும் என, ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்த நிலையில், தேர்வாணைய இணைய தளத்தில், 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வி.ஏ.ஓ., தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணிஇடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, மார்ச், 17ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. மார்ச், 17ம் தேதியில் இருந்து, ஏப்ரல், 15ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

படிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கும் 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு

எழுத, படிக்க, உச்சரிக்கத் தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு அதிகரித்து வருகிறது.பள்ளிகளில் மாணவர்கள் வார்த்தைகளை எழுத ஆரம்பிக்கும் போது, எழுத்துக்கள் தடுமாற்றம் ஏற்படும். ஆங்கில எழுத்துக்களில் 'பி, கியூ' எழுத்துக்களுக்கு, வித்தியாசம் தெரியாமல் மாற்றி எழுதுவர்.
'டி, பி' எழுத்துக்களை தலைகீழாக மாற்றி எழுதுவர். ஒன்றாம் வகுப்பில் மாணவர்களின் இக்குறைபாட்டை ஆசிரியர்கள் கண்டறிய முடியும். மாணவர்களின் நோட்டை திருத்தம் செய்யும் போது, எழுத்துக்களுக்கான வேறுபாட்டை மாணவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தினால், மாற்றிக் கொள்ள முடியும்.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ‌w‌w‌w.‌t‌n‌d‌g‌e.‌i‌n என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TEACHERS GENERAL COUNSELLING 2014-2015 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2014-2015

  1. பள்ளிக்கல்வி - தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படுதல் இயக்குனரின் செயல்முறைகள் 2014-2015.

  2. தொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் இயக்குனரின் செயல்முறைகள் 2014-2015


  3. NORMS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)

  4. DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2014-2015 (AVAILABLE)


  5. DEE FORM | தொடக்கக்கல்வி துறை | தொடக்கக்கல்வி AEEO பொது மாறுதல் விண்ணப்ப படிவம் 2014-2015.

  6. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

  7. DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
  8. AEEO to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்க 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு

    9   தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி மாணவர்கள் செல்லக் கூடாது: பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை


மாணவர்கள், நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி செல்லக் கூடாது என அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளார்.

அதன் விவரம்:

தமிழகத்தில் இப்போது மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழையினால் பள்ளி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாப்புடன் செயல்படுமாறு தலைமையாசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் நீர் தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால் அவற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் தேக்கத் தொட்டி, கழிவு நீர் தொட்டி ஆகியவை மூடப்பட்ட நிலையில் உள்ளதை அவ்வப்போது உறுதிசெய்ய வேண்டும்.

மழை நேரங்களில் இடி, மின்னல் வரும்போது மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். சாலைகளில் மழை நீர் கால்வாய் அருகே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி நேரம் முடிந்த பிறகு அனைத்து மாணவர்களும் பள்ளியை விட்டுச் சென்றுவிட்டனர் என்பதை உறுதி செய்த பிறகே வகுப்பறை மற்றும் பள்ளியைப் பூட்ட வேண்டும்.

பள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு


மதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.

மேலும், புத்திசாலியான மாணவர்களுக்கு (ஆண், பெண் இருபாலரும்), மாவட்ட அளவில் தனி மாதிரி பள்ளிகளை திறக்கவும் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமையை, பள்ளிகளில், விளையாட்டுத் தினமாக அறிவிக்கவும் ஆகும் செலவினங்கள் பற்றி மனிதவளத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பட்டர் மில்க், மருத்துவ ரீதியில், குழந்தைகளுக்கு நன்மை செய்வதால் அது பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, அதை குழந்தைகளுக்கு வழங்குவதற்கான செலவினம் கணக்கிடப்பட்டு வருகிறது.

மதிய உணவுத் திட்டம், 12.65 லட்சம் பள்ளிகளில் படிக்கும், 12 கோடி குழந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்குகின்றன. இதுதவிர, சில மாநிலங்கள், மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளையும் வழங்குகின்றன.

மாதிரிப் பள்ளிகள்

புத்திசாலி மாணவர்களுக்கு, மாதிரிப் பள்ளிகளை அமைப்பது குறித்த செலவினங்கள் பற்றி ஆராய, நவோதயா வித்யாலயா சங்கதன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த திட்டத்திற்கான யோசனை பழையது என்றாலும், கடந்த அரசுகளின் காலங்களில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

கடந்த ஆட்சியில், மொத்தம் 6,000 மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டன. அவற்றில் 3,500, அரசால் நடத்தப்படும் வகையிலும், 2,500, அரசு - தனியார் ஒத்துழைப்பின் மூலம் நடத்தப்படும் வகையிலும் திட்டமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை விளையாட்டு

டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்


தமிழக அரசின் பள்ளிக் கல்விப் பணியில் 11 மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 8-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வினை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎட் பட்டதாரிகள் எழுதினர்.

இந்நிலையில், டிஇஓ தேர்வுக் கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்பட்டது.
பல்கலைக்கழக அளவில் லஞ்ச ஒழிப்பை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு

லஞ்ச ஒழிப்பை கொள்கையாக அறிவித்து வெற்றிபெற்ற நரேந்திர மோடியின் அரசு, லஞ்ச ஒழிப்பை பல்கலைக்கழக அளவில் பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு இது தொடர்பாக அனைத்து துணைவேந்தர்களுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதிவிட்டது. இதனை சட்டம், பொது நிர்வாகம், மனித உரிமைகள் ஆகிய பாடங்களில் சேர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்


ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல், மத்தியஅரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள
விகிதத்தை நிர்ணயிக்க,ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது.
இதன் தலைவராக,நீதிபதி அசோக்குமார் மாத்துார்,உறுப்பினர்களாக, விவேக்ரே,ரத்தின்ராய், செயலராக,மீனாஅகர்வால் ஆகியோர்நியமிக்கப்பட்டனர். லோக்சபா தேர்தல்காரணமாக, இந்தக் குழுவின்செயல்பாடுகள்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தேர்தல்

ஐ.ஏ.எஸ்,ஐ.பிஎஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து109பேர் தேர்ச்சி

ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதியத்தொகை-மத்திய அரசு முடிவு

AEEO to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்க 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-

TRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்த பின்னர் பணி நியமனம்.

2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று (09.06.2014) நேரில்
வேண்டுகோள் விடுத்தனர்.

ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு 2012 TRB PG தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என கல்வித்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம், பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரிய பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சி.இ.ஓ.,க்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு

மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

குழந்தைகளின் பணி, கல்வி கற்பது மட்டும் தான். கட்டாயத்தின் காரணமாக சிலர் குழந்தையிலேயே தொழிலாளர் ஆகின்றனர். குழந்தைகளின் வருமானம் நாட்டின் அவமானம். வளர்ச்சியை விரும்பும் நாடுகள், முதலில் ஒழிக்க வேண்டியது, குழந்தை தொழிலாளர் முறையைத் தான்.

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர் உள்ளனர், இதில் 10 கோடி பேர், பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என 'யுனிசெப்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் என, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) இலக்கு நிர்ணயித்துள்ளது. மையக்கருத்து:
இந்த ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் மையக்கருத்துகள்.
* சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரைத்த, சமூக பாதுகாப்பு விதி எண்.202யை செயல்படுத்துதல்.

மாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு

மழை காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.


பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு, இயக்குனர், நேற்று வெளியிட்ட உத்தரவு:


* மழை காலம் துவங்குவதால், பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியரின் பாதுகாப்பில், தலைமை ஆசிரியர், தீவிர கவனம் செலுத்த வேண்டும்.


* வளாகத்தில், கிணறு, கழிவுநீர் தொட்டி, நீர்தேக்க தொட்டி ஆகியவை திறந்திருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்து, திறந்திருந்தால், உடனடியாக மூட வேண்டும்.

IGNOU B.ED,M.ED ADMISSION NOTICE( IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் -அறிவித்துள்ளது)

IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்தவிண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.2014-ம்ஆண்டுக்கான பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆகஸ்ட்மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் படிப்புகளை வழங்கிவருகிறது. பிஎட் படிப்பில் சேர பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசிவகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள்ஆசிரியராக பணி யாற்றிய அனுபவம் இருப்பதுடன் தற்போது பணியில் இருக்க வேண்டியது அவசியம்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு செய்யவும், 11.06.2013 முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின் அறிவுரைகள் / நெறிமுறைகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் பணிநிரவல்/விருப்ப மாறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமி அவர்களுக்கு நன்றி!-ஆசிரியர் குரல்

ஆசிரியர் பணி நிரவல் முன்பெல்லாம் முன்னரே போட்டு ஆசிரியர்களுக்கு பல இன்னல்கள் ஏற்பட்டது.
பதவி உயர்வுக்கு பிறகு ஆசிரியர் பணி நிரவல் போட்டால் நல்லது என்ற ஆசிரியர்குரலின் கோரிக்கயை கடந்த மாதம்.தொடக்கக்கல்வி இயக்குனர்,பள்ளி கல்வி இயக்குனர்,கல்வித் துறை செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கினார்

தற்போது அரசும்,அவர் கோரிக்கையை ஏற்று ஆணை வெளியிட்டுள்ளது.
திரு.செ.முத்துசாமி அவர்களுக்கும் அரசுக்கும் ஆசிரியர்குரலின் நன்றிகள்!

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-சென்ற ஆண்டு மாறுதல் விண்ணப்பத்தினையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

AEEO TRANSFER APPLICATION & NORMS 2014-2015

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்


அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்:

மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு:

(அரசாணை 137/ப.க/நாள்:9.6.14)

விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14-13.6.14

16 காலை AEEOs மாறுதல்

16 மாலை MHM to AEEO

17 காலை MHM மாறுதல்

மாலை பதவிஉயர்வு

18 காலை BT பணிநிரவல்

மாலை மாறுதல், பதவி உயர்வு

19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்

21 BT மாவட்ட மாறுதல்

23 காலை PHM மாறுதல்

மாலை பதவி உயர்வு

24 இநிஆ பணிநிரவல்

25 இநிஆ மாறுதல்

26 SGT ஒன்றிய மாறுதல்

28 SGT மாவட்ட மாறுதல்

தமிழகத்தில் 189 தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடல்


தமிழகத்தில், தனியார் நடத்தி வந்த, 189 தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர, பிளஸ் 2 தகுதி மட்டுமே தேவை என்பதால், பலர் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு படித்து, சீனியாரிட்டி அடிப்படையில், அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் புற்றீசல் போல், ஆசிரியர் பயற்சி நிறுவனங்கள் முளைத்தன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்கள் கட்டாயமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு எழுதி, வெற்றி பெற்றால் மட்டுமே,

பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநிரவல் உண்டு

சற்றுமுன் வெளியிடப்பட்ட மாறுதல் கலந்தாய்வு அட்டவணையில்
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநிரவல் அட்டவணை நாள் ஒதுக்கப்பட்டுள்ளது .எனவே பணிநிரவல் கட்டாயம் நடைபெறும் எனத்தெரியவருகிறது


18 காலை BT பணிநிரவல்
மாலை மாறுதல், பதவி உயர்வு


24 இநிஆ பணிநிரவல்
25 இநிஆ மாறுதல்
26 SGT ஒன்றிய மாறுதல்

அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்:

மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு:

(அரசாணை 137/ப.க/நாள்:9.6.14)

விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14-13.6.14

16 காலை AEEOs மாறுதல்

16 மாலை MHM to AEEO

17 காலை MHM மாறுதல்

மாலை பதவிஉயர்வு

18 காலை BT பணிநிரவல்

மாலை மாறுதல், பதவி உயர்வு

19 BT ஒன்றியம் விட்டு மாறுதல்

21 BT மாவட்ட மாறுதல்

23 காலை PHM மாறுதல்

மாலை பதவி உயர்வு

24 இநிஆ பணிநிரவல்

25 இநிஆ மாறுதல்

26 SGT ஒன்றிய மாறுதல்

28 SGT மாவட்ட மாறுதல்

தொடக்கக்கல்வித்துறை-மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 16 முதல் தொடக்கம்-செ முத்துசாமி தகவல்

ஆசிரியர்களால் பெரிது எதிபார்க்கப்பட்ட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும்16 ந்தேதி முதல்தொடங்குவதாக  தொடக்கக்கல்வி இயக்குனர்அலுவலக  உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வந்திருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திருமிகு  செ.முத்துசாமி EXMLC தெரிவித்துள்ளார். இன்று மாலை முழு அறிவிப்பு வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.
16ந்தேதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாறுதல்
17ந்தேதி-உதவிதொடக்ககல்வி அலுவலர் பதவி உயர்வுடன் தொடங்கும் கலந்த்தாய்வு 28ந்தேதி மாவட்ட மாறுதலுடன் முடிகிறது.மேலும் தகவல்கள் விரைவில்

அ.தே.இ - பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜுன் / ஜுலை 2014 கால அட்டவணை வெளியீடு

அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.

மழை நீர் சேமிப்பு வாரம் பள்ளிகளில் இன்று துவக்கம்


மாநிலம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் இரண்டு மரக்கன்றுகள் நட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.

மழை நீர் சேமிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை, இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளில், சுற்றுச்சூழல் சங்க மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தவும். ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு வாரத்தின் இறுதி நாளில், பரிசுகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுகுறித்து சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு இரண்டு மரக்கன்றுகள் கட்டாயம் நடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் 500 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

பள்ளி நேரத்தில் செல்போன் பேசும் ஆசிரியர்கள் !


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill Training) """"அறிவோம் அகிலத்தை"" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு 9 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்

மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் எழுத வரவில்லை.

முதல்நிலை தேர்வு

பள்ளி கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பெறப்பட்டன. மொத்தம் 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். முதல்நிலை தேர்வு நேற்று சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வரவில்லை. 9 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

172க்கு பதில் 72; மதிப்பெண் சான்றில் குளறுபடி ராசிபுரம் மாணவி பரிதவிப்புபிளஸ் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி, கல்வித்துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட மதிப்பெண் குளறுபடியால், பொறியியல் படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூரை சேர்ந்த தொழிலாளி கணபதியின் மகள் புவனேஸ்வரி. அரசு உதவிபெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். இவர், தமிழ் 192, ஆங்கிலம் 146, இயற்பியல் 177, வேதியியல் 190, கம்ப்யூட்டர் சயின்ஸ் 183, கணிதம் 72 என மொத்தம் 1200க்கு 960 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ரிசல்ட் வெளியானது.

தமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிகள் வரவேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கங்கள்' வரவேற்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கம் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைகூட்டம் டாடாபாத்தில் நடந்தது. சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சாவித்திரி முன்னிலை வகித்தார்.

ஒசூர் வட்டாரம் பேட்ரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யின் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு


மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்? வருகை பதிவுக்கான, பயோமெட்ரிக் சாதனங்களை, விரைவில் பொருத்த நடவடிக்கை! மோடி அரசு கிடுக்கிப்பிடி!! DINAMALAR

வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், எண்ணற்ற ஊழல்கள் நிகழ்ந்தது மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் முடங்கிப் போனது. பொருளாதாரம் உட்பட பல பிரச்னைகளில், விரைவில் முடிவெடுக்க முடியாமல், மன்மோகன் சிங் தலைமையிலான, அந்த அரசு திணறியது.கிட்டத்தட்ட பக்கவாதத்தால் அவதிப்படும் நோயாளியைப் போல, அந்த அரசு பரிதவித்தது. இதனால், தொழில்கள் முடங்கின; வேலை வாய்ப்புகள் குறைந்தன.முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு துறையிலும் செயலர் அந்தஸ்தில் இருந்த, பல உயர் அதிகாரிகளை, பெரும்பாலான நேரங்களில், டில்லி கோல்ப் மைதானத்தில் தான் பார்க்கலாம்.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலம் வாசிக்க செய்தல் எப்படி? பவர் பாயிண்ட் சிலைடு ஷோ & வீடியோ

அங்கன்வாடி மையங்களை, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றி செயல்படுத்தினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசுப்பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கலாம் என்ற யோசனையை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் பயில வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர் இடையே அதிகரித்ததால், கடந்த 10 ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறையத் துவங்கியது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, கல்வி உதவித்தொகை  என சலுகை திட்டங்களை அரசு செயல்படுத்தியும், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.தனியார் பள்ளிகளில், மூன்று அல்லது நான்கு வயதிலேயே குழந்தையை, ப்ரீ கே.ஜி., அல்லது எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். அதன்பின், அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வமின்றி, தனியார் பள்ளியிலேயே குழந்தையின் படிப்பு தொடர்கிறது. 

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

பி.எட். படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015ம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் 9ந் தேதி (நாளை) மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.

பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு வசதி: செலவினத்தை கணக்கிட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பகுதி-1ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயமாகும். இதன்படி 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் பகுதி-1-ல் தமிழை மொழிப் பாடமாகக் கட்டாயம் கற்பிப்பது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கடந்த 10.2.2014 அன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று


எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வருக்கு, வரும், 12ம் தேதி மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று வழங்க உள்ள நிலையில், பிழையான மதிப்பெண் சான்று திருத்தும் பணி, வரும், 9ம் தேதியுடன் முடிவடைந்து, வினியோகிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த, கல்வி ஆண்டில், ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுக்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட தேர்வரிடம், அவரது பெயர், பிறந்த தேதி, பாலினம், ஜாதி, முகவரி, மதம், மாற்றுத்திறனாளியா, பெற்றோர் பெயர், மொபைல் எண், படிப்பு குரூப், பாடங்கள் ஆகியவை உறுதிமொழி சான்றிதழில் பெறப்பட்டது.
தேர்வு முடிவு வெளியான பின், ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றவருக்கு, ஃபோட்டோவுடன் மதிப்பெண் சான்று, இருப்பரிமாண பட்டக் குறியீடு, கூடுதல் ரகசிய குறியீடுடன் சான்று வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த, மே, 23ம் தேதி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவு வெளியாகி, வரும், 12ம் தேதி மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்று (டி.சி.,) வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது

பள்ளி ஆசிரியர்கள் பெயரின் தலைப்பெழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும்: கல்வித் துறை உத்தரவு

அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயரின் தலைப்பெழுத்தை (இனிஷியல்) தமிழில்தான் எழுத வேண்டும் என கல்வித் துறை உததரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு உதவிபெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதிகாரி எச்சரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்,'' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசின் சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த, துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, ஏழை, எளிய மாணவர்கள் பயனடையும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறது.

web stats

web stats