சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று
போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதை முறியடிக்கும் வகையில்
பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று தமிழக அரசு
எச்சரித்துள்ளது.தமிழகம் முழுவதும் 68,000 சத்துணவு மையம், 34,000
அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன;
2.5 லட்சம் ஊழியர்கள்
பணியாற்றி வருகின்றனர். ஊதியம், ஓய்வூதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு
சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம்
முழுவதும் இன்று அனைத்து மாவட்ட கலெக் டர் அலுவலகம் முன்பாக போராட்டம்
நடக்கிறது.இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசின் சமூக ஆணையர் சேவியர் கிறிசோ
நாயகம், கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்
கூறப்பட்டிருப்பதாவது: சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு
சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்காரணத்தை கொண்டும், எந்த ஒரு அமைப்பாளரும்,
சமையலரும், சமையல் உதவியாளருக்கும் விடுப்பு அனுமதி வழங்கலாகாது. தவிர்க்க
முடியாத காரணமாக யாராவது விடுப்பு எடுக்க நேரிட்டால், அமைப்பாளர்கள் மாவட்ட
கலெக்டரிடமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் மாவட்ட கலெக்டரின்
நேர்முக உதவியாளரின் முன் அனுமதி பெற வேண்டும்.இன்று நடைபெறும்
ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்கள் எவரும் கலந்து கொள்ள கூடாது. எவரேனும்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு
சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு இணை கன்வீனர்
வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுடைய 10 அம்ச கோரிக்கையை
முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த பெருந்திரள் முறையீடு
நடக்கிறது. இந்த கூட்டத்தை தடுக்கும் முயற்சி இது; அச்சுறுத்தலுக்கு
அஞ்சாமல் திட்டமிட்டபடி இன்றைய போராட்டத்தில் பங்கேற்போம்‘ என்றார்.
No comments:
Post a comment