
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
ஓய்வூதிய திட்ட நிபுணர் கமிட்டி: 19 நாள் ஆயுளுக்கு அரசாணை
ஓய்வூதிய திட்டம் தொடர்பான நிபுணர் கமிட்டிக்கு, 19 நாட்கள் மட்டுமே அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மத்திய அரசு பரிந்துரைப்படி, தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான, சி.பி.எஸ்., திட்டம், 2003ல் அறிமுகமானது. இதில், 2003க்கு பின், பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்தத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் கொண்டு வரக்கோரி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய, 2016 மார்ச்சில் நிபுணர் கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. பின், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கமிட்டியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அப்படி நீட்டிக்கப்பட்ட கமிட்டியின் பதவிக்காலம், 2016 டிசம்பர், 25ல் முடிந்தது. அதன்பின், இரண்டு மாதங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை. அத்துடன், கமிட்டியின் தலைவராக இருந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர், பிப்., 7ல் பதவி விலகினார். இந்நிலையில், கமிட்டி யின் பதவி காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, மார்ச், 6ல் தமிழக அரசு உத்தரவிட்டது. கமிட்டியின் பதவிக்காலம், மார்ச், 25ல் முடிவடைய உள்ள நிலையில், 19 நாள் ஆயுளுக்காக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடையில், 70 நாட்கள் வரை வீணாகி உள்ளது.
ஒவ்வொரு முறையும், நிபுணர் கமிட்டியின் பதவி காலம் தாமதமாக நீட்டிக்கப்படுகிறது. அதனால், எந்த முன்னேற்ற மும் ஏற்பட்டதில்லை. தொடர்ந்து வழங்கப்படும் கால நீட்டிப்பு, ஆசிரியர்களின் நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும்’ அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கெடு..
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 2010ம் ஆண்டு பின்பணியில் சேர்ந்த அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற ேவண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதில் அனைத்து வகை பள்ளிகளில் டெட் தேர்வில்தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே பணியமர்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2011ம் ஆண்டு டிஆர்பி (ஆசிரியர் தேர்வு வாரியம்) மூலம் மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்து, வயது மூப்பு அடிப்படை முன்னுரிமையில் இருந்த 6 ஆயிரம் ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட்டனர்.
TNTET 2012,2013,2014. தேர்ச்சி பெற்றோர் தம் விவரங்களை சரிபார்த்து update செய்து கொள்ளவும்.
வழிமுறைகள்கு றிப்பு: கணினியில் மட்டுமே update செய்ய முடியும்.
1. கீழ்கண்ட இணைய பக்கத்திற்கு சென்று தங்களின் Roll no தெரிந்தால் உள்ளிடவும்.
http://tetupdation.examsonline.co.in/
( அல்லது ) தங்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு அதன் கீழ் தெரியும் security key உள்ளிட்டு login செய்யவும்.
பெயர் உள்ளிட all caps உபயோகிக்கவும் , பெயரை உள்ளிட்டு initial ஐ பின்னால் space விட்டு இட வேண்டும். உதாரணம் . MOHAN K
2. Login ஆனதும் உங்கள் முந்தைய தேர்விற்கான அனைத்து விவரங்களும் தெரியும் , தங்கள் முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பில் நீங்கள் அளித்த விவரங்கள் , மதிப்பெண்கள் சரியாக உள்ளனவா? என ஆராயவும். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் கீழே update எனும் பொத்தானை அழுத்தவும். ( மாற்றம் இன்றி இருப்பினும் அதனை அழுத்தவும்)
TRB- TET- Direct Recruitment of Graduate Assistants - 2016 - Please click here for Online updation
CLICK HERE- Direct Recruitment of Graduate Assistants - 2016 - Please click here for Online updation
உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?(விழிப்புணர்வு பக்கம்)
உங்கள் ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
தொடக்கக் கல்வி - 09.03.2017 பதவி உயர்வு கலந்தாய்வில் 2014ஆம் ஆண்டு அரசாணை எண்.201ன் படி தரம் உயர்த்தப்பட்ட 42 நடுநிலைப்பள்ளி த.ஆ பணியிடங்களுக்கும், 2017ஆம் ஆண்டு அரசாணை எண்.14ன் படி தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 19 தொடக்கப்பள்ளி த.ஆ பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் அப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப கூடாது என உத்தரவு
6 ஆண்டுகளில் 8 அமைச்சர்கள்! ஜெயலலிதா நேச ஐ.ஏ.எஸ்-ஸின் சர்ச்சைக் கதை #VikatanExclusive
ஜெயலலிதாவை, 'ஆன்ட்டி' என்று அன்போடு அழைத்த பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதாவை இடம் மாற்றியதில் பல்வேறு உள்விவகாரங்கள் இருப்பதாக, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சபீதா, செயலாளராக இருந்த காலகட்டத்தில், 7 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். எட்டாவது அமைச்சரான செங்கோட்டையன் நியமிக்கப்பட்ட நேரத்தில், சபீதா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலும் மாற்றப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு !!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம்! பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்....
நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆசிரியர் தகுதித்தேர்வு மூன்று வருடத்திற்குப் பிறகு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
நேற்று முதல் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பித்து இருக்கிறது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம். தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். முதல் தாளுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ம் தேதியும், இரண்டாவது தாளுக்கான தேர்வு ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் !!
►பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக டி. உதய சந்திரன் நியமனம்
►உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா சிமெண்ட் கழக எம்.டி.யாக நியமனம்
►உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்
►சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்
►உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா சிமெண்ட் கழக எம்.டி.யாக நியமனம்
►உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்
►சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்
நாகை மாவட்டத்துக்கு மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டத்தில் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்துக்கு மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவுமுதல் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூபாய்3.78ம், டீசல் விலை ரூபாய் 1.76ம் உயர்த்தப்பட்டது. இந்தவிலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது.பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான வாட் வரி 21.43சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.130 கட்டணத்தில் 100 சேனல்கள் கேபிள் 'டிவி'யில் இனி பார்க்கலாம் !!
மாதம், 130 ரூபாய் கட்டணத்தில், 100 கேபிள், 'டிவி' சேனல்கள் வழங்க வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அதிரடி உத்தரவிட்டுள்ளது.சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் கேபிள் ஒளிபரப்பை, 'செட் - டாப் பாக்ஸ்' வாயிலாக, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும் என, 2011ல் டிராய் உத்தரவிட்டது. பின், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அமல்படுத்த உத்தரவிட்டது.
Subscribe to:
Posts (Atom)