Labels

rp

Blogging Tips 2017

அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது : முதல்வர் ரங்கசாமி

அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை வீதம் குறைந்து வருகிறது. அரசின் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சில வகுப்புகளில் மாணவர்களே இல்லை. சில வகுப்புகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு


இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்
பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.
சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர்.

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன.

தஞ்சை தமிழ் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் பிஎட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக, மதுரை மைய ஒருங்கிணைப்பாளர் பா.பாலன் வெளியிட்டுள்ள செய்தி:
நடப்பு ஆண்டுக்கான(2015) பிஎட் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன், அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு கிடையாது.

ரூ.4400 கோடியைப் பயன்படுத்தாத தமிழக கல்வித் துறை: ராமதாஸ் குற்றச்சாட்டு

பள்ளிக்கூடங்களைக் கட்டவும், பள்ளிகளை சீரமைக்கவும் ரூ. 4400 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. மத்திய அரசின் நிதிஉதவியுடன் கூடிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி கைபேசியில் பேசிய அரசு ஆசிரியர் சஸ்பெண்ட்:


தினமும் தான் சாப்பிட்ட பாத் திரத்தை பள்ளிக் குழந்தைகளை கழுவ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கதிர் நாயக்கன்பட்டியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 79 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி ஆசிரியர் சேதுபதிமுருகன் என்பவர், பள்ளிக் குழந்தைகளை அவர் சாப்பிட்ட எச்சில் பாத் திரங்களை கழுவ வைப்பதாகவும், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் அடிக்கடி கைபேசியில் பேசிக் கொண்டே இருப்பதாகவும்,

அரசு உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம்

முதியோர், விதவை உள்ளிட்டோர் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை வரும் 20ம் தேதிக்குள் கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சரின் உழவர்
பாதுகாப்புத்திட்ட உதவித் தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர் கன்னி ஆகியோருக்கு மாதம்தோறும் அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது.

தேர்வின் போதே விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 தேர்வுப்பணிகளில் குழப்பம்: ஆசிரியர் கழகம் கருத்து.

'பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்துகொண்டிருக்கும் போதே அம்மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்,' என, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ல் துவங்கின. மொழிப்பாடத்திற்கான தேர்வுகள் நேற்றுமுன்தினம் முடிந்தன.

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி,
பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியீடு

உற்பத்தி செலவு அதிகரித்ததால், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, கடந்த 1994-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதுபோல், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, 1995-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது . அதன்பிறகு, இந்த மதிப்பில் நாணயங்கள்தான் அச்சிடப்பட்டன.
இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

புதுவையில் ரூ.1 கட்டணத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள்

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளி-கல்லூரி செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸை பயன்படுத்தி தமிழக அரசின் பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம். ஆனால், மாணவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தான் பயணம் செய்ய முடியும். மாணவர்களுக்கு என தனியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகியே பயணம் செய்கின்றனர்

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்து ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

SLAS RESULTS -

பின்னுக்குத்தள்ளப்பட்ட நீலகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்

1. மாநில அளவில்
2. மாவட்ட அளவில்
3. ஒன்றிய அளவில்

முடிவுகளை இங்கே காணலாம்

http://atr.ssasoft.in/cmap/

http://atr.ssasoft.in/cgrade/

கட்டாய கல்வி உரிமை சட்ட விழிப்புணர்வு: பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி: சரத்குமார் யோசனை!

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஒரு காலத்தில் பள்ளிப்படிப்பு 5 வயது பூர்த்தியானதில் இருந்து தொடங்கியது. பின்னர் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கியதிலிருந்து 3 வயது பூர்த்தி ஆனதில் இருந்தே பள்ளிப்படிப்பு தொடங்கி விட்டது.

பன்றிக்காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பன்றிக்காய்ச்சல் அதிகமுள்ள வெளிமாநிலங்களுக்கு சென்று வருவோருக்கு இலவச தடுப்பூசி போடப்படும். பன்றிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

வருமான வரி கட்டவில்லை என நோட்ஸ் வருகிறதா ??? உடனடியாக TDS பைல் செய்ய வேண்டும்

14/9/14 நாளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் வருமான வரி பிடித்தம் தொடர்பாக தமிழக அரசின் அறிவுரை.... ☆வருமான வரி பிடித்தம் தொடர்பாக அரசு ஆணை எண் 988, நிதித்துறை, நநாள்13/12/13 ல் அனுப்பப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கை எண்8/2013 நாள் 25/10/13 ன்படி மாத ஊதியம் பெறும் அரசு பணியாளர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம்

சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்

பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை, வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம்.
அது போல, அந்த சான்றிதழ்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஒரு இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. http:/digitallocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று,

திருவண்ணாமலை மாவட்ட ஜாக்டோ பேரணி-தண்டராம்பட்டு ஒன்றிய ஆசிரியர்கள்


புதிய மருத்துவ காப்பீடு அட்டை எளிதில் டவுன்லோடுசெய்துகொள்ளலாம்

www.TNNHIS2012.com என்ற வலைத்தளம் சென்று employee login என்பத கிளிக் செய்து உங்கள் பழைய அட்டை எண்னை user name மற்றும் உங்கள் பிறந்த தேதியை password ஆக உள்ளீடு செய்தால் உங்கள் புதிய மருத்துவ காப்பீடு அட்டை விபரம் காணலாம்.
✅அதே பக்கத்தில் ecard என்பதை கிளிக் செய்தால் புதிய அட்டை கிடைக்கும். அதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு-07/03/2015 நடைபெற்ற காட்சி

ஜேக்டோ போராட்டம் -, சேலம், வேலூர், தி.மலை, கோவை, கரூர், திருப்பூர், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மாவட்ட பதிவுகள்

ஜேக்டோ போராட்டம் - நாமக்கல் மாவட்டத்தில் பொதுசெயலர் செ.முத்துசாமி அவர்கள் தலைமையில் பதிவுகள்

 தேர்வு நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால் தேவையற்ற குழப்பங்கள்!

பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வரும் நிலையில், நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக, தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 5ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், அரசுத் தேர்வுத்துறை, பல்வேறு நடைமுறைகளை புதிதாக புகுத்தியுள்ளது. புதிய நடைமுறைகள் குறித்து, தேர்வு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தேர்வுகள் துவங்குவதற்கு முன்பே, பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் பணிநீக்கத்துக்கு தடை

செல்போன் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு பாதிப்பில்லை:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி

செல்போன்,மனித வாழ்க்கையில் இன்றைக்கு முக்கியமானதொரு இடத்தை பிடித்து இருப்பது செல்போன்கள். ஆனால் செல்போனை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படுவதாக பரவலான கருத்துக்கள் இருந்து வந்தன.
செல்போன் பேசும் போதும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் மனித சமுதாயத்துக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஆனால் செல்போன் உபயோகிப்பதால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்து உள்ளது.

15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் போராட்டம்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

அரசு ஊழியர் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் சார்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள திருத்த ஆணை

'நேரடி காஸ் மானிய திட்டம் மார்ச் 31க்குள் மானிய திட்டத்தில் சேர, 'கெடு

நேரடி மானிய திட்டத்தில், வரும், 31ம் தேதி வரை இணையாதவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல் மானியம் இல்லாத காஸ் சிலிண்டர்கள் தான், வினியோகம் செய்யப்படும்' என, 'இண்டேன்' திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் காஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்துவருகின்றன. இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களிலும், கோடிக்கணக்கான சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன.சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை, பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள்

உச்சநீதிமன்ற டி.இ.டி.வழக்குகள் வரும் மார்ச் 30தேதிக்கு ஒத்திவைப்பு - புதிய தலைமுறை தொலைகாட்சி

*ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
** மேலும் ஆசிரியர் பணிநியமனம் குறித்த விளக்கத்தினை பள்ளிக்கல்வித்துறை செயலாளரிட்மும் தமிழக அரசிடமும் கேட்டுள்ளது .. ..
இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் ...

பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப். 1 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து கோயிலில் 48 நாட்களுக்கு மண்டகப்படிதாரர்கள், கிராம மக்கள்சார்பில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம்,

மாணவியர் ஆடைகளை தொட்டு சோதனை கூடாது ....தேர்வு பணி ஆசிரியர்களுக்கு கடும் கட்டுப்பாடு

ஜாக்டோ பேரணியில் திரளாக பங்கேற்க பொதுசெயலர் செ.மு அழைப்பு

இன்று நடைபெறும் ஜாக்டோ மாவட்ட பேரணியில்அனைத்து ஆசிரியர்களுக்கும் திரளாக பங்கேற்க வேண்டும் நமது பொதுசெயலர் செ முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் கவனம் பெறவும்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு நடுவணரசு இடைநிலை ஆசிரியர்கள் பெறும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கவும்

புதுடெல்லி மாநாடு 2015-செப்டம்பர் 28ந்தேதி நடைபெறும்-மாநில செயற்குழு முடிவு

மே மாதம் முதல் வாரத்தில் டெல்லியில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்ட்ணியின் சிறப்பு மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான முழு வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில்
கலந்துகொள்வோர் பட்டியல் சில மாவட்டங்களிலிருந்து உரிய நேரத்தில் வரப்பெறாமையால் ரயில் டிக்கெட் முன்பதிவுசெய்ய இயலாத காரணத்தினாலும்,தவிற்க இயலாத காரணத்தினாலும் மே இரண்டாம் வாரம் நடைபெற ஏதுவாக ஆலோசனைக்கூட்டம் நாமக்கல் மாநில செயற்குழு கூட்டி விவாதிக்கப்பட்டது
அதில் மே இரண்டாவது வாரம்  மாநாடு நடைபெற்றால்
1.+2  மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
2. கோடையில் டெல்லியில் அதிக வெப்பம்
3.பல்கலைக்கழக தேர்வுகள்
போன்ற தவிற்க இயலாத காரணங்களால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
அதனடிப்படையில்
டெல்லியில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு மாநாடு  முதல் பருவ விடுமுறையில் 2015 செப்டம்பர் 28 ந்தேதி நடத்துவது 

என ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது
அதற்கான ஏற்பாட்டினை திட்டமிட்டு செயலடுத்த 5 நபர் டெல்லி மாநாடு செயல் கமிட்டி அமைக்கப்பட்டது

அனைவருக்கும் TNTF-ன் மகளிர் தின வாழ்த்துக்கள்


அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா???

அரசாணை நிலை எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை
6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 40ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்(தத்கல்) விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்புத் தேர்வை சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை மார்ச் 7-ஆம் தேதி முதல்  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் தேவையா ??

அரசாணை நிலை எண்.96, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.23.09.2014ன்படி சான்றிதழ்களின் நகல்களில் அரசு அலுவலர்களின் சான்றொப்பம் தேவையில்லை. சுயகையொப்பமே போதுமானதாகும். இதை. மீறி Attested கேட்டால் அரசாணைக்கு எதிரான செயலாகும்.

web stats

web stats