ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை உள்ளது.
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
வாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; உடல்நலம் பாதித்த ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை- விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்கள் அவதி.
ஓய்வூதிய அலுவலகங்களில் வாழ்வு சான்று அளிக்க நேரில் வரஇயலாத ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை என்று அரசுஅறிவித்தும், அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், உடல் ஒத்துழைக்காத நிலையிலும் நேரில் வந்துஅவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஓய்வூதியர்கள் இறந்த பின்னும், அவருக்கு ஓய்வூதியம் சென்றுகொண்டிருப்பதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
மே 17 ல் பிளஸ்- 2 தேர்வு முடிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்து விட்டது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகாததால்
"ஓபி" அடித்த 33 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி மத்திய அரசு அதிரடி
: சரியாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி வந்த 33 அதிகாரிகளை மத்திய அரசு, முதன்முறையாக கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி உள்ளது. இது பல அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த மாதம் அனைத்து மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது செயல்படாமல் இருந்து வரும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து
தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை !
அரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைத்
தெளிவுபடுத்துமாறு இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ADMK MANIFESTO-2016 ---. பள்ளிக் கல்வி மேம்பாடு :உயர்கல்வி மேம்பாடு :
- 8. பள்ளிக் கல்வி மேம்பாடு :
- 11-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- இந்த மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்.
- பள்ளி மாணாக்கர்களுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ADMK MANIFESTO-2016 அரசு ஊழியர் நலன் :
46. அரசு ஊழியர் நலன் :
- மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து
- ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த பேறு கால விடுமுறையை
- 6 மாதங்களாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அது 9 மாதங்களாக உயர்த்தப்படும்.
- அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
அதிமுக - தேர்தல் அறிக்கை-2016 முழு விவரம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை
தமிழக மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக, மறைந்த பின்னாலும் மறக்க முடியாத மாமனிதராக, ஏழைகளின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எட்டாவது வள்ளல், மனித நேயத்தின் மறு உருவம், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி, ஊழல் சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் இயக்கத்தை நிறுவிய புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களை நன்றியுடன் வணங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தல் அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கிறது.
1. விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலன் :
கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
EMIS பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அவதி.
கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
உடம்பு எப்படி இருக்கிறது? - வாக்குச் சாவடி அலுவலர்களை சோதனை செய்ய புதியமுறை-
தமிழக சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு தமிழ்நாடு முழு வதும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது. அப் போது ஏராளமானோர் உடல் நிலையைக் காரணம் காட்டி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கக் கோரினர். அவ்வாறு பயிற்சிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அரசுப் பள்ளியில் அட்மிசனுக்கு தள்ளு முள்ளு.. (அடிதடி)
அருமைமதுரை மு.தென்னவன் தொ.ப. தலைமை ஆசிரியர் சிறப்பான செயல்பாட்டால் மதுரை மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப் பள்ளியான யா.ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைப் பற்றிய செய்தியை தி இந்துவின் "வெற்றிக் கொடிகட்டு" இணைப்பில் குள.சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பான கட்டுரையாக்கியுள்ளார்.
திரு. தென்னவன் அவர்களை பாராட்டி உற்சாகப் படுத்தலாமே...
அலைபேசி எண் : 9842195052...
மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா? tamil hindu
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நல்ல, சிறந்த ஆரம்பம். இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும்.
இந்த வருடம் உடனடியாகப் படித்து நுழைவுத் தேர்வு எழுத முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி, நியாயமானதும்கூட.
அதேநேரம், நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடனடியாக இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என்ன?
மாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் : உச்சநீதிமன்றம்
மாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு கல்வி வணிகமயமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது
அங்கீகாரம் புதுப்பிக்க பள்ளிகளுக்கு எச்சரிக்கை
பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கானவை தொடர் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தை உரிய முறையில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளில் காலி பணியிடம் நிரப்ப அனுமதி,
தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பம்
தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1ம் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2016 - 17ம் கல்வியாண்டிற்கான இட ஒதுக்கீடு விவரங்களை பள்ளிகள் தங்களது பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை மே 3 முதல் 9ம் தேதி வரை விநியோகம் செய்ய வேண்டும்.
பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பி... அலைக்கழிப்பு! தேர்வு பிரிவின் 'ஒருவருக்கு இரு உத்தரவால்' குழப்பம்
மதுரை: மதுரையில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பி 'பயிற்சி வகுப்பிற்கு ஏன் வரவில்லை' என நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனால் பயிற்சியில் பங்கேற்றவர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சட்டசபை தேர்தல் மே 16ல் நடக்கிறது. இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு கையாளுவது உட்பட தேர்தல் பணிகள் குறித்து மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்
தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில்தேர்வு நடைபெற்றது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எழுதினர்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
'தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளி களில், ஏப்., 1 முதல் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்பு கள் நடந்து வருகின்றன. பாடத்திட்ட புத்தகங்கள் மட்டுமின்றி கூடுதல் புத்தகங்களும் வாங்க, மாணவர்களை பல பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன. இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
'கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்த கூடாது'
'எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவ,- மாணவியர் பள்ளிக்கு வரும்போதும், இடைவேளை நேரம், மதிய உணவு நேரம் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிச் செல்லும் போதும், முறையாக கண்காணிக்க ஆசிரியர்களை, சுழற்சி முறையில்நியமிக்க வேண்டும்.
மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை: வருகிறது மேலும் 7 புதிய நடமாடும் மையம்
தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தில், மருத்துவக்கட்டணமாக தலா, ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
வேளாண் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2016 - 17ம் கல்வியாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது. பல்கலை துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலையால் நடத்தப்படும், 13 இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்.
மருத்துவ படிப்புக்கு இன்று நுழைவு தேர்வு:சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
மருத்துவப் படிப்புகளுக்கான, முதல்கட்ட பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான உத்தரவைமாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்துவிட்டது. இதனால், திட்டமிட்டபடி, இன்று தேர்வு நடக்கிறது.
இரண்டு கட்டமாக...
கலெக்டர்கள், எஸ்பிக்கள் இடமாற்றம்!! SSA -SPD -பூஜா குல்கர்னி-மாற்றம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)