காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை
சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர்
பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.
அனைவருக்கும் கல்வி
இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி. வாக்காளர் பட்டியல்
பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர் காஞ்சிபுரத்துக்கு புதன்கிழமை
வந்தார். வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியை முடித்து விட்டு, காஞ்சிபுரம்
பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி, ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில்
செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்டம் குறித்து ஆய்வு
நடத்தினார்.