Labels

rp

Blogging Tips 2017

தொகுப்பூதிய பணிக்காலத்தை தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதற்கு கணக்கிடாமல் மறுப்பதற்கு உரிமை உள்ளதா?-ஓர் ஆய்வுக்கட்டுரை

மேலும் தகவல் அறிய இவ்வார ”ஆசிரியர் பேரணி ”இதழை வாங்கிப்படிக்கவும்

எல்லாக் குழந்தை களுக்கும் தொடக்கக் கல்வி நிறைவேறாத இலக்கும் இடைவிடாத பயணமும்!

‘உலகெங்கும், அனைத்து நாடுகளிலும் உள்ள எல்லாக் குழந்தை களுக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதை 2015-க்குள் உறுதிப் படுத்த வேண்டும்’ என்ற தன்னுடைய புத்தாயிரமாண்டு இலக்கு நிறைவேறாது என்று தெரிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்தை நிறைவேற்ற உலக நாடுகள் ஒத்துழைத்துச் செயல்படுவது தொடர்பாக முடிவுசெய்ய பிரஸ்ஸல்ஸ் நகரில் நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டில் இந்தத் தகவலை ஐ.நா. வெளியிட்டிருக்கிறது.

10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்ற இளநிலைப் பட்டம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளில் பங்கு கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் தகுதியானது என்று சென்னை உயர்நீதிமன்றம் - JUDGEMENT COPY

10ஆம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு மூலம் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்ற இளநிலைப் பட்டம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகளில் பங்கு கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறவும் தகுதியானது என்று சென்னை உயர்நீதிமன்றம்..

இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் வீரமணி


பெருந்துறையில் இன்று(12/07/2014) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்..

கல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறை.

தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இந்த ஆண்டில்இதுவரை 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளரகலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில்நடைபெற்று வருகிறது.

கருணை அடிப்படையில் பணி:திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து.

கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர்பாக திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்தஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அட்டை திட்டம் தொடரும் : மத்திய அரசு

ஆதார் அட்டை திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் கைவசம் இல்லை என்றும், ஆதார் அட்டை திட்டம் தொடரும் என்று லோக்சபாவில், திட்டக்குழு அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார். அதில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,

பாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க': கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று குறிப்பிடுவது மட்டும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி அல்ல," என, கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.

மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கூடுதல் சி.இ.ஓ., பார்வதி தலைமையில் நடந்தது.
இதில், அமுதவல்லி பேசியதாவது:

தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் 'வாசிப்பு' மற்றும் 'எழுதும் திறன்' குறிப்பிடும் வகையில் இல்லை. இதை கண்காணித்து மேம்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உண்டு. ஆய்வுக்கு செல்லும்போது 'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று மட்டும் பலர் பதிவேட்டில் எழுதிவிட்டு சென்று விடுகின்றனர். மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்)

புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன

புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன.தொகுப்பூதிய காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டி கோரிக்கை .மேலும்

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு

அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை தக்க வைத்துக் கொள்ளவும்,
அதன்மூலம் வேலை வாய்ப்பை பெறவும் உதவும் வகையில் முதல்வர் உத்தரவின் படி, 2014-15-ம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப் படுகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ப.மோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 18.7.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

இரட்டைப்பட்டம் வழக்கு எண்.529 சென்னை உயர்நீதிமன்றத்தில் 05.02.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் அவ்வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி உள்ளிட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் S.L.P எனப்படும் சிறப்பு விடுவிப்பு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கை உச்சநீதிமன்ற வழக்குரைஞர் திரு.ஹரீஸ் குமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் யு.ஜி.சியும் இதில் எதிர் உரை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியது

பகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம் - பள்ளிகளில் முடங்கிய கணினி வழி கற்றல் திட்டத்தை மீட்டெடுக்க நடவடிக்கை

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் திறனை வளர்க்க கணினி வழி கற்றல் முறைக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட லேப் டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை இயக்க போதிய பயிற்சி இல்லாததால் இத்திட்டம் முடங்கியுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு இல்லாததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இடங்களில் பின்னடைவை சந்திக்கின்றனர். இதை மேம்படுத்தும் நோக்கில் இலவச லேப்டாப் வினியோகம், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி, ஒருங்கிணைந்த இணையதள கல்வி, ஸ்மார்ட் கிளாஸ் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு


மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ள வரிச்சலுகையால் மாதச் சம்பளம் பெறும் பிரிவினருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014-15 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அரசிடம் பெற்ற கடன்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான வட்டி வ்கிதம் அறிவிப்பு

வீட்டுக்கடனுக்கு வரிச்சலுகைபல்வேறு இனங்களுக்கு பட்ஜெட்டில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கான வரிச்சலுகை 1.50 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தனி நபர் வருமானவரி விலக்கு 2.5லட்சமாகவும், சேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தியும் அறிவிப்பு


தனிநபர் வருமானவரி விலக்கு பெறும் தொகையில் 50 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபர் வருமானவரி விலக்கு தொகை 2.50 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கான வரி
விலக்கு தொகை 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சேமிப்பிற்கான வரிவிலக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 12ம் வகுப்பில் 59% மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகியதாக மனுதாரர் ரவி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்-பிழைப்புக்கு அரசு பள்ளி; படிப்புக்கு மெட்ரிக் பள்ளி?

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான புள்ளி விவரம்:
மாநிலம் முழுவதும் 34,180 துவக்க பள்ளிகள், 9,938 நடுநிலை பள்ளிகள், 4,574 உயர்நிலை பள்ளிகள், 5,030 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 53,722 பள்ளிகள் உள்ளன.

ஆண்டுக்காண்டு சரிகிறது மாணவர் சேர்க்கை அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளே இருக்காது?

அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. சில ஆண்டுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் மாணவ, மாணவியர் சேர்க்கை சொல்லி கொள்ளும்படி இல்லை. அடித்தட்டு மக்களுக்கும் தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்ற மோகம் அதிகரித்துள்ளது. 
 இவ்வாறு பலரும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை கடுமையாக குறைந்து வருகிறது. சில ஆண்டுகளில் அரசின் துவக்க பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்பதை விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் புள்ளி விவரம் உணர்த்துகிறது.

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு

அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதி பொருந்தாத நிலையில் 3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

பள்ளிகளின் பெயர்களை மாற்ற பரிசீலனை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் போன்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகளின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில், உடலுழைப்பு என்பது அனைவருக்கும் குறைந்துவிட்டது. நம் உணவு முறையும் மாறிவிட்டது. இயற்கை உணவு வகைகள், நம்மை விட்டு ரொம்பவே விலகிவிட்டன. செயற்கை உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதனால், இளமையிலேயே உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் என்று நோய்களின் வரிசை நீள்கிறது. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.

02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் - புதிய சிக்கலா???


02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குபுதிய சிக்கலா???
02.11.2007 க்கு முன்னர் முன் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்கும்படி இயக்குனர் உத்தரவு:

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள் -(அனைத்து பாடங்களுக்கும்)

SUBJECT :TAMIL
TOTAL VACANT 258+228=486.
1.OC =80+0 BACKLOG =80
2.BC =68+0 BACKLOG =68
3.BCM =9+46 BACKLOG =55
4.MBC =52+3 BACKLOG =55
5.SC =39+133 BACKLOG =172
6.SCA =7+27 BACKLOG =34
7.ST =3+19 BACKLOG =22
TOTAL =258+228 BACKLOG =486 
 
SUBJECT : ENGLISH
TOTAL VACANT 1633+195=1828.
1.OC =506+0 BACKLOG =506
2.BC =433+0 BACKLOG =433
3.BCM =57+22 BACKLOG =79
4.MBC =327+0 BACKLOG =327

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள்

TNTET PAPER 1
TOTAL VACANT 1638+798 =2436 # 798 IS BACKLOG VACANT

1.OC =508+0 BACKLOG. =508
2.BC =434+64 BACKLOG. =498
3.BCM =57+172 BACKLOG =229
4.MBC =328+49 BACKLOG =377

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 ALL SUBJECTS எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள்


TNTET PAPER 2
SUBJECT :ALL

2013 upto MAY ALLOTMENT CANDIDATE

[1]=SUBJECT
[2]=ALLOTMENT,
[3]=2012TNTET FILLEDCANDIDATE,
[4]=REMAINING
[1]. [2]. [3]. [4]
1.TAMIL. 2298 1812 486
2.ENGLISH. 4826. 2998. 1828

ரயில்வே பட்ஜெட்-ஒரு பார்வை

ரயில்வே பட்ஜெட்டில், 5 வெகு ஜன ரயில்களும், 5 பிரீமியம் ரயில்களும், 6 ஏ.சி., ரயில்களும், 27 எக்ஸ்பிரஸ் ரயில்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தவிர, எட்டு பயணிகள் ரயில்களும், 7 புறநகர் ரயில்களும், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும், 11 ரயில்களும், மேலும் நீட்டிக்கப்படுமென, அறிவிக்கப்பட்டுஉள்ளது. புதிதாக, 18 வழித்தடங்களில், ரயில் போக்கு வரத்து ஏற்படுத்த, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இரட்டை, மூன்றாவது, நான்காவது ரயில் பாதைகள் அமைப்பது குறித்து, 10 வழித்தடங்களில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தட ஆய்வுகள்- மொத்தம், 18; இதில், தமிழகத்துக்கு எதுவும் கிடையாது.

அகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை

இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு

கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக்

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை 2015க்குள் அடைய முடியுமா?

வரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை கிடைக்க செய்துவிட வேண்டுமென்ற லட்சியம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று யுனெஸ்கோ அமைப்பினுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜூலை 10 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானியம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளன.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

*முதல் நாளான ஜூலை 10 ஆம் தேதி, 
 
 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

*11 ஆம் தேதி சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேலைவாய்ப்புத் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.

*14 ஆம் தேதி காவல் துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு அழைப்பு

திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு அழைப்பு


திருவண்ணாமலையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு வரும் 20.07.2014 ஞாயிறு அன்று காலை சரியாக 10 மணிக்கு தொடங்க உள்ளது..அன்று காலை9.00 மணிக்கு மாநில செயற்குழு நடைபெற உள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு
கூட்டணியின்அனைத்து
மாநில பொறுப்பாளர்கள்
மாவட்டப்பொறுப்பாளர்கள்,
வட்டார பொறுப்பாளர்கள்
மற்றும் ஆர்வமுள்ள உறுப்பினர்கள்
கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்
=================
திருவண்ணாமலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டக்கிளை சார்பாகவேண்டுகோள் விடுக்கிறோம்


அனைவரும் வருக வருக
=========================

அன்புடன்
கே.பி.ரக்‌ஷித்
மாவட்டச்செயலர்
மற்றும் மாநிலத்துணைத்தலைவர்

20.07.2014--ல் திருவண்ணாமலை- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு- அழைப்பு


முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக,
ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1,090 ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள், 306 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது வழக்கம்.

தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

ஆங்கிலம் அறிவோமே, வார்த்தை பிரயோகம், ஆங்கில அறிவு,பொருள் அறிந்து பேசுங்கள்

நீங்கள் உங்கள் உறவினருடன் தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். சற்றுத் தொலைவில் இருக்கும் ஒருவரைச் சுட்டிக்காட்டி ‘அவர் எ ன்னுடைய ஃபார்மர் ஃ ப்ரெண்ட்’ என்கிறார் உறவினர்.

விவசாய நண்பரா? அல்லது முன்பு நண்பராக இருந்து இப்போது சிநேகம் துண்டிக்கப்பட்டவரா?

எதுவாகவும் இருக்கலாம். அவரிடம் விளக்கம் கேட்கலாம். அல்லது அவர் கூறிய வாக்கியத்தை எழுதச் சொன்னால் தெரிந்துவிடும்.

முதல் பருவத்திற்கான பாடத்திட்டம் - l to V

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு மறுகூட்டல் கோரியவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் students.sslc14rt.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்படும்.இந்தப் பட்டியலில் இல்லாத மாணவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.மதிப்பெண்களில் மாற்றம் உள்ள ஜூலை 9 முதல் 11 வரை தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி

பகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2012 மார்ச்சில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என, வாரம் மூன்று நாட்கள் ஒன்பது மணி நேரம், மாதம் 32 மணி நேரம் இவர்கள் வேலை செய்ய வேண்டும் என நியமனத்தின்போது கூறப்பட்டது. இவர்களுக்கு மற்ற ஆசிரியர்கள் போல் மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு போன்ற எந்த விடுப்பும் கிடையாது.
இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மற்ற ஆசிரியர்களைப்போல பகுதி நேர ஆசிரியர்களும் வாரத்தில் ஆறு நாட்களும் வேலைக்கு வர வேண்டும், நாள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என தலைமையாசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்வதாக கூறுகின்றனர். மேலும் அவசர தேவைக்கு விடுமுறையும் வழங்க மறுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வழக்குகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விரைவில் ஆசிரியர் தேர்வுப்பட்டியல்


தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

NHIS CARD-ல் தவறான விபரங்களை திருத்துதல் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல் போன்றவற்றை ஆன்லைனில் மேற்கொள்வது எவ்வாறு?

செய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனைதமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது.
அரசியல் மற்றும் கல்வியாளர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தற்போது மீண்டும் பள்ளிகளில் திரையிட தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிக்கெட்டுகளை செய்தித் துறை அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஒரு நபருக்கு ரூ.10 என்ற விலையில் டிக்கெட் அச்சிடப்பட்டுள்ளது.

தியேட்டர் உள்ள நகரங்களில் மாணவர்கள் தியேட்டர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், தியேட்டர் இல்லாத ஊர்களில் பள்ளி வளாகத்திலேயே படம் திரையிடப்படும் என்றும் செய்தித் துறை அறிவித்துள்ளது. ஆனால், படம் திரையிடப்படும் தேதி விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

முக்கியமான செய்தி.. இன்றே, உங்கள் கைபேசியில் “ICE” பதிவுசெய்யுங்கள்

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.

5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு.

அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.
           தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கல்லூரி சேர்க்கை கடிதங்களை வழங்க உள்ளார்.
ஜூலை 10-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

பி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது

பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.
       தமிழகத்தில், பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலையில், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. முதலில், விளையாட்டுப் பிரிவினருக்கும், 25ம் தேதி, மாற்றுத்திறனாளி பிரிவிற்கும் கலந்தாய்வு நடந்தது. பொதுப் பிரிவினருக்கு, கடந்த 27ம் தேதி கலந்தாய்வு நடக்க இருந்தது.

பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!

பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல்

டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்


தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள் (டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து' பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்) உத்தரவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பணிமாறுதல் பெற்றும் ஆசிரியர்கள் விருப்ப பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரை பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது. இதில், நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணிமாறுதல் கவுன்சிலிங் ஜூன் 30 முதல் ஜூலை2வரை நடந்தது.இதில்,ஒவ்வொரு மாவட்டத்திலும் மனமொத்து பணிமாற தயாராக இருந்தவர்களுக்கு, அந்தந்த டி.இ.இ.ஓ.,க்களே உத்தரவுகளை வழங்கினர்.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.


தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல்பருவ பாடங்கள் வீடியோ வடிவில்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள், விருதுநகர் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்கள்(கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.

NHIS கார்டு தொலைந்தால் திரும்ப பெறுவது எப்படி?

உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

83 பேரின் குரூப்-1 தேர்வு ரத்து எதிர்த்து சீராய்வு தாக்கல் செய்ய அரசு திட்டம்?


தமிழகத்தை சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. காவல்துறை டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவர்கள், 2004-ல் பணியமர்த்தப்பட்டனர்.

தமிழக கல்வித் துறையில் 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலி

தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.


இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் பேனல் தயார் நிலையில் இருந்தும், நியமனம் செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சாதனங்களை இயக்க மாணவர்களுக்கு தடை

பள்ளிகளில் உள்ள மின் சாதனங்களை, மாணவர்கள் இயக்க தடை விதித்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை சுற்றறிக்கை;
பள்ளிகளில் நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும். மின் இணைப்பு, சுவிட்ச் பாக்ஸ் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். மாணவர்களை கொண்டு, பள்ளிகளில் மின்சாதனங்களை இயக்க கூடாது. சேதமான பள்ளி கட்டடம், சுவர்கள், ஆய்வு கூடங்கள், கம்ப்யூட்டர் அறைகளில் துண்டித்த நிலையில் உள்ள மின்வயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்

கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்? - ராசிபுரத்தில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை


ராசிபுரம் தனியார் பள்ளி மாணவர் பள்ளி விடுதியில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேம்மாம்பட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். முந்திரி விவசாயி. இவரது மனைவி ராஜவள்ளி. இந்தத் தம்பதியின் மகன் அருண்குமார் (17). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து, ராசிபுரம்தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 சேர்ந்தார். தற்போது பிளஸ் 2 படித்து வந்தார்.

web stats

web stats