Labels

rp

Blogging Tips 2017

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: டாக்டர்கள் வலியுறுத்தல்

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என டாக்டர்கள் வலியுறுத்தினர்.
சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல், சர்க்கரை நோய், குழந்தையின்மை பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு "நேருக்கு நேர்" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், கே.எஸ்.ஜெயராணி காமராஜ், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.ஜி.சுந்தரராமன், மகளிர் சிறப்பு மருத்துவர் கே.ருக்மணி மற்றும் டாக்டர் பெரியாண்டவர் உள்ளிட்டோர் பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அளித்த விளக்கம்:
மது, புகைப்பழக்கம், டாக்டர் பரிந்துரையின்றி தானாக மாத்திரைகளை சாப்பிடுவது, அடிக்கடி வெந்நீரில் குளிப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது, மரபு வழி உள்ளிட்டவையும் விந்தணு உற்பத்தி குறைவுக்கு காரணமாக இருக்கலாம். குறிப்பாக பொன்னுக்கு வீங்கி ஏற்பட்டால் சிகிச்சை பெறுவது சுலபம். அவ்வாறு செய்யத் தவறினால் ஆண்களின் விந்துப்பை பாதிப்பு ஏற்பட்டு, விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது.
உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி, ஆண்களைப் பொருத்தவரை வெளிவரும் விந்துவின் அளவு 1.5 மி.லி ஆகவும், அதில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை 3.9 கோடியாகவும், இதில் உயிரணுக்கள் 58 சதவீதமாகவும், இதனுள் சேதமில்லாமல் இருக்கும் விந்தணுக்கள் 4 சதவீதமாகவும், ஊர்ந்து செல்லும் வகையில் 40 சதவீதமும் இருக்க வேண்டும். இவை குழந்தை பெறுவதற்கு போதுமானது. இந்த அளவில் இருந்து குறைந்தால்தான் கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படும். இந்த விஷயத்தில் போலி டாக்டர்கள் கூறுவதை நம்ப வேண்டாம்.
பெண்கள் 20 முதல் 25 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சிறந்தது. 30 வயதுக்கு மேல் குழந்தை இல்லை என்றால் டாக்டரை அணுக வேண்டும்.
பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால் குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதற்கு காரணம் உடற்பயிற்சி இல்லாத தற்கால வாழ்க்கை முறையே.
இருப்பினும் குழந்தைப் பேறினை அடைய பல மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் வந்துவிட்டன. ஆதலால் மக்கள் தயக்கமில்லாமல் மருத்துவர்களை அணுகி தக்க சிகிச்சை மேற்கொண்டு வளமோடு வாழலாம்.
பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி.
இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும். அறிவியல்பூர்வமான இத்தகைய தகவல்களை சரியான நேரத்தில் தராவிட்டால் தவறான தகவல்களை மாணவர்கள் இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தவறாக தெரிந்து கொண்டு துன்பத்துக்குள்ளாவா

No comments:

Post a comment