Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு !

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்
இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்
இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்
பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க... 'மொபைல் ஆப்!':தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த முடிவு
இன்று உலக கை கழுவும் தினம்
தபால் நிலையங்களில் மானிய விலையில் பருப்பு விற்பனை: மத்திய அரசு முடிவு
மாணவர்களின் வருகைப் பதிவு, வீட்டுப் பாட விவரத்தை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி: 44 அரசு மாதிரி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்.
தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய கவர்னர்: மத்திய அரசு முடிவு
அரசுப்பள்ளி மாணவியருக்கு கராத்தே : இந்த மாதமே துவங்க உத்தரவு
உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலர்களிடம்... கைமாறுகிறது!மொத்த அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது!!!
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தேதி அடுத்தவாரம் அறிவிப்பு.
ரூ.130க்கு 100 சேனல்கள்: டிராய் பரிந்துரை
துறை அறிமுகம்: ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!
செல்போன் எண் இலக்கம் இனி 11 ஆக மாறும்!
தகவல் தொழில்நுட்பத்தில் புதிய கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் ஆர்வம்
பணியின்போது ஊனம்; மத்திய அரசு ஊழியர் விதிகளில் மாற்றம்
'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்
விரைவில் புது கல்வி கொள்கை : அமைச்சர் ஆலோசனை
சமுதாய சீர்கேடுகளுக்கு கல்விதான் தீர்வு : கவர்னர் சதாசிவம் பேச்சு
மதுரை: ''உயர் கல்வி நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமுதாய சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு,'' என கேரள கவர்னர் சதாசிவம் வலியுறுத்தினார்.
மதுரையில் அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கழக பொன்விழா நிறைவு விழா அமெரிக்கன் கல்லுாரியில் நேற்று நடந்தது. சென்னை கிறிஸ்தவ கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாஸ், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் வரவேற்றனர்.
இதில் கவர்னர் சதாசிவம் பேசியதாவது: கேரள கவர்னராக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள 14 பல்கலை துணைவேந்தர்களை அழைத்து தரமான கல்வி அளிப்பது தொடர்பாக ஆலோசித்தேன். இந்தாண்டு முதல் சிறந்த பல்கலைக்கான விருது அறிவிக்கப்பட்டு, மாநில அரசால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளது. சமுதாய சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு. தற்போது திறன் மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உயர் கல்வியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றார்.
ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் பேசியதாவது:அன்றைய காலத்தில் தரமான கல்வியை நோக்கமாக கொண்டு செயல்பட்டன. ஆனால் இன்று வணிக ரீதியாக மாறிவிட்டன. மருத்துவ இடங்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகளை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது, என்றார்.
வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
பஞ்சப்படி இழுத்தடிப்பு : ஆசிரியர்கள் புலம்பல்
அடிப்படை ஊதியத்தில் இருந்து வழங்கப்படும் அகவிலைப்படி தொகை, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், வழங்காமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகள் உள்ளன.
இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாதச் சம்பளம் அல்லாமல், போனஸ், பயணப்படி உள்ளிட்ட, சில சலுகைகள் வழங்கப்படும். இதில், அகவிலைப்படியாக, அடிப்படை ஊதியத்தில் இருந்து, குறிப்பிட்ட சதவீத தொகை, ஜூன் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், அகவிலைப்படி தொகை தராமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வைக்கும் கோரிக்கை:ஆசிரியர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்படுவதில்லை; ஆண்டுக்கு இருமுறை, 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இந்த தொகையைத் தந்தால், பண்டிகைக்கால செலவுகளுக்கு உதவியாக இருக்கும். இத்தொகையை விரைவில் தர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தீபாவளிக்கு முன்பணம் : ஊழியர்கள் எதிர்பார்ப்பு
தீபாவளிக்கு, குறைந்த நாட்களே உள்ளதால், முன்பணத்தை விரைவில் வழங்க வேண்டும் என, போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, தீபாவளி சமயத்தில், 20 நாட்களுக்கு முன்பாக, முன்பணம் வழங்கப்படும்; இது, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
தேவைப்படும் தொழிலாளர்களுக்கு, கோட்டம் மற்றும் கிளை அலுவலகம் மூலம், தொகை வழங்கப்படும். நடப்பாண்டு இதுவரை, அறிவிப்பு வெளியாகவில்லை. முன் பணத்தை, முன்கூட்டியே வழங்கினால் மட்டுமே, கடைசி நேர நெரிசல், விலைவாசி அதிகரிப்பு ஆகியவற்றில் இருந்து தப்ப முடியும் என்பது, தொழிலாளர்களின் கருத்தாக உள்ளது. கோவை கோட்ட, ஏ.ஐ.டி.யு.சி., சங்க பொதுச் செயலர் சண்முகம் கூறுகையில், ''முன்பணத்தை முன்கூட்டியே வழங்குவதால், நிறைய தொழிலாளர்கள், பண்டிகையை சிரமம் இன்றி கொண்டாட முடிகிறது. இத்தொகையை விரைவில் வழங்க வேண்டும்,'' என்றார்.
அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் : கல்வி இயக்குநர் உத்தரவு
தொடக்க கல்வி இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆதார் அட்டை பெற இதுவரை பதிவு செய்யாத மாணவர்களை அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் நடந்துவரும் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்று ஆதார் அட்டை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற்றுவிட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் பணியின் முன்னேற்ற அறிக்கையினை, தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்று, தொடக்க கல்வி அதிகாரிகள் தொகுத்து வைக்க வேண்டும். இந்தப் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்ததால், இதில் தனி கவனம் செலுத்தி, மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் அட்டை பெற்று 100 சதவீதம் இலக்கை அடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நெட்' தேர்வு 2017 | விண்ணப்பிக்க நவ.16 கடைசி நாள். விண்ணப்பத்தை அக்டோபர் 17 முதல் ஆன்-லைனில் சமர்ப்பிக்கலாம்.தேர்வு நாள் 22-01-2017.
Online Application Form Submission: 17:10:2016 to 16:11:2016 | Last date of submission of Fee through online generated Bank Challan: 17:11:2016 | Correction in Particulars of application form on the website: 22:11:2016 to 29:11:2016 | NET Jan 2017 Exam Date : 22-01-2017.

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் பட்டியல், தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை உத்தரவு
தமிழகத்தில் தசரா விடுமுறைக்கு பிறகு, வரும் 13ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத் துறை இறங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை தேர்வுத்துறை செய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் பெயர், பெற்றோர் பெயர்,
போக முடியாத தூரத்தில் 'வாங்க பழகலாம்' திட்டம்
எங்க ஊருக்கு வாங்க... பழகலாம்' திட்டத்தில், நீண்ட துார பள்ளிகளை இணைப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. செயல்வழி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், இரு பள்ளி மாணவர்களை பழகவிட்டு, படிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஒரு கிராமத்து பள்ளி மற்றும் நகர பள்ளியை இணைத்து, ஒருவர் பள்ளிக்கு ஒருவர் சென்று, இரு பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இத்திட்டத்தில் சேர, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளும் ஆர்வமாக முன்வந்தன. ஆனால், 30 கி.மீ.,க்கு மேல் துாரத்தில் உள்ள, இரு பள்ளிகளை இணைத்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டதால், பல பள்ளிகள், திட்டத்தில் இருந்து விலகி வருகின்றன.
இதுகுறித்து, ஆசிரியர் கள் சிலர் கூறியதாவது: 'வாங்க பழகலாம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பள்ளியும், முதலில் இரு நாட்களும், பின், ஒரு நாள் வீதம் ஆறு முறையும், மற்ற பள்ளிகளுக்கு சென்று, அங்கு உள்ள மாணவ, மாணவியருடன், அந்த பகுதியை சுற்றி பார்க்க வேண்டும். இதனால், கிராமப்புற மாணவர்கள், நகரங்களையும்; நகர்ப்புற மாணவர்கள், கிராமங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இதில், நீண்ட துாரத்தில் உள்ள பள்ளிகளை இணைப்பதால், போக்குவரத்து மற்றும் உணவுக்கு அதிக செலவாகும். நீண்ட துார பயணத்தால், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். குறைந்த துாரத்தில் உள்ள நகர பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்; அருகில் இல்லாவிட்டால் மட்டும், தொலைவில் உள்ளபள்ளிகளை இணைக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை
பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுடன், ஆயுத பூஜை, விஜயதசமி மொகரம், பண்டிகை முன்னிட்டு, அரசுஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரசு அலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, நாளையும், நாளைமறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன.
இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமருக்கு விடுமுறையே கிடையாது: மத்திய அரசு தகவல்
Flash news : முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு
முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த இலாக்காக்ககளை நிதியமைச்சர் ஓபிஎஸ் கவனிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், உள்துறை உள்ளிட்ட துறைகளை ஓ.பன்னீர் செல்வம் கனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ''முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.
இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார். முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும்'' என்று அறிவித்துள்ளார்.
'ஆல் பாஸ்' திட்டம் ரத்து? : அக்., 25ல் ஆலோசனை
பொம்மலாட்டம் நடத்தி பாடம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்!!
பிஎஸ்சி (அக்ரி) படிப்பு - அட்மிஷனுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
பி.எட். கல்லூரிகளுக்கான வழிகாட்டுதலில் மாற்றங்கள் செய்ய என்.சி.டி.இ. முடிவு
மொபைல் போனில் பாட்டு கேட்ட ஆசிரியர்கள் : கல்வி துறை 'நோட்டீஸ்.
பணிக்கு செல்லாமல் 'ஓபி' அடிக்கும் சங்க நிர்வாகிகள் : அதிரடி ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டம்.
சிறப்பு ஆசிரியர் தொழில்நுட்ப தேர்வு : 30 ஆண்டு கால 'சிலபஸ்' மாற்றம்.
உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகுமா?
OCTOBER & NOVEMBER TRAINING SCHEDULE
- 22-10-16 CRC for Primary & Upper Primary
- 24-10-16--BRC Level Tamil Training for Upper Primary Teachers only
- 05-11-16-- Primary CRC
- 07-11-16 & 08-11-16 2days BRC level Science Training for Primary Teachers only
- 12-11-16 -- CRC for Upper Primary
அரசின் கொள்கையை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை... பாயும்!: ஊழியர் சங்கங்களுக்கு மத்திய அமைச்சகம் கடும் எச்சரிக்கை
CPS MISSING CREDIT
- வலைதளத்தில்
- http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில்
- உங்களது CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.
- அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி
- ( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும்.
- தொகை தவறானதாக இருந்தால் டிஸ்அக்ரி
- (DIS AGREE) என்று கிளிக் செய்யவும்.
- உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.