பாரதி அன்பர்கள் மத்தியில் பரவலாக எழும் ஐயப்பாடுகளில் ஒன்று, “வெள்ளிப்
பனிமலையின் மீதுலாவுவோம்’ என்கிற பாடலில் வரும் “பள்ளித் தலமனைத்துங்
கோயில் செய்குவோம்’ என்கிற வரி பற்றியது.
தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’
என்று குறிப்பிடுபவர் பாரதி. கலைவாணியைத் துதித்துப் பாடும்
“வெள்ளைத்
தாமரைப் பூவிலிருப்பாள்’ பாடலில் கூட

“
”வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ள வூர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயி னுக்கிரையாக மடுத்தல்”
என்றும்,
“”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”-
என்றும் பாடிய மகாகவி பாரதி,
எப்படி, எதற்காகப் பள்ளித் தலமனைத்தும் கோயில்
செய்குவோம்’ என்று பாடினார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் விட்டு
விடுங்கள். தெரியாத பெருவாரியானவர்கள் மட்டும் மேலே படியுங்கள்.