Labels

rp

Blogging Tips 2017

பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் கைது

பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு
பண்ருட்டி அருகே ஒறையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த குமரகுருநாதன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் தெரியும். அதை 'கிளிக்' செய்தால், 'செக் யுவர் இ.சி.எஸ்., ஸ்டேட்டஸ்' என்ற விபரம் வரும். அதில் ஓய்வூதியம்

1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் அலுவலர் நியமனம்

தமிழகத்தில் லோக்சபா தேர்தலன்று, ஒரு பூத்தில் ஓட்டுப்பதிவு அலுவலர், நிலை அலுவலர் 1, 2 உட்பட 5 பேர் பணியாற்றவுள்ளனர். ஒரு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, தலா ஒரு பூத் டெக்னிக்கல் உதவியாளர் பணியில் அமர்த்தப்படுவார். ஒரு பூத்தில் 1,200 ஓட்டுகளுக்கு மேல் இருந்தால்

கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்


நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டம் மீறப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

LIST OF POLLING STATIONS AND BROWSING CENTERS

CLICK HERE-DISTRICT WISE POLLING STATION CENTRE
SL.NODistrictsPolling Stations List - EnglishInternet Browsing Center
1
THIRUVALLUR
2
CHENNAI
3
KANCHEEPURAM
4
VELLORE
5
KRISHNAGIRI
6
DHARMAPURI
7
TIRUVANNAMALAI
8
VILLUPURAM
9
SALEM
10
NAMAKKAL
11
ERODE
12
THE NILGIRIS
13
COIMBATORE
14
DINDIGUL
15
KARUR
16
TIRUCHIRAPPALLI
17
PERAMBALUR
18
CUDDALORE
19
NAGAPATTINAM
20
THIRUVARUR
21
THANJAVUR
22
PUDUKKOTTAI
23
SIVAGANGA
24
MADURAI
25
THENI
26
VIRDHUNAGAR
27
RAMANATHAPURAM
28
THOOTHUKKUDI
29
TIRUNELVELI
30
KANNIYAKUMARI
31
ARIYALUR
32
TIRUPPUR

பி.இ. கலந்தாய்வு: படிவங்கள் இணையதளத்தில் வெளியீடு


பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுக்கான படிவங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் கடைசி நேர திண்டாட்டத்தைப் போக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.

தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூடுவதில் மும்முரம்

இதுவரை, 30 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட, விருப்பம் தெரிவித்து, அதன் நிர்வாகிகள், தமிழக அரசிடம், கடிதம் கொடுத்து உள்ளனர். மாணவர் சேர்க்கை துவங்குவதற்குள், மேலும் பல பள்ளிகள் மூடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தாவது: திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வழியில் சமயபுரம் அடுத்த சிறுதாவூரில்

அடிப்படை பணியாளர்கள் இல்லை - மாணவர்களே பணியாளர் ஆகும் அவலம்

மாநிலம் முழுவதும் செயல்படும்ஆரம்பப்பள்ளிகளில், 90 சதவீத அடிப்படைப் பணியாளர்கள் பணியிடம் காலியாகவுள்ளதால்,பல்வேறு இடங்களில், பள்ளி மாணவர்கள் பணியாளர்களாகும் அவலம் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் 35 ஆயிரத்து 182 ஆரம்பப் பள்ளிகள்செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 32.2லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில்1.4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 90சதவீத பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள்இல்லாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலைஏற்படுகிறது.

கல்வித்துறை அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம்: ஆசிரியர்கள் கோரிக்கை

கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர். ஆசிரியர்களின் குறைகளைப் போக்க ஒவ்வொரு கல்வி அலுவலகத்திலும் மாவட்டந்தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.   

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 13ம் தேதி 2ம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடிகளில்பணிபுரியும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வரும் 13ம் தேதி நடக்கிறது. இதில் 15 ஆயிரம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் – அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, பொறுப்பாளர்களின் செயல்பாடுகள்.

வாக்குச் சாவடிக்குள் வாக்காளர் செல்போன் கொண்டு செல்ல தடை


வாக்குச் சாவடிக்கு வோட்டு போடச் செல்லும்போது வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்லக் கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.
வாக்குப் பதிவு நிலவரங்களை அவ்வப்போது தெரிவிக்க வாக்குச்சாவடி அதிகாரிக்கு மட்டும் செல்போன் அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
வாக்காளர்களின் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் மையை உடனடியாக அழித்து விட முடியாது.

"பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று துவக்கம்

"வீடு தோறும் வாக்காளர்களுக்கு, "பூத் சிலிப்' வழங்கும் பணி, இன்று (11ம் தேதி) துவங்குகிறது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து தொகுதிகளிலும், துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில், துணை வாக்காளர் பட்டியல் அச்சிடும் பணி முடிந்துள்ளது.

உணவு ஜீரணம் ஆவது இப்படி தான்..!! குழந்தைகளிடம் எளிதாக விளக்க அருமையான காணொளி..


மக்களவை தேர்தல் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தல் காரணமாக 24.04.2014 அன்று தமிழக் அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு ஆனை வெளியீடு

தேர்தல் பணி: ஆசிரியைகள் அச்சம்


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள். இந்த முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருவதாலும்,
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் கமிஷனின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.

லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் 6 முனை போட்டி

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தேர்தல் பிரசாரம் : கல்லூரி ஆசிரியர் இடை நீக்கம்

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கல்லூரி பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மாநிலத்தில் உள்ள பட்டாமுண்டி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ஸ்ரீதர பெஹோரா. இவர் சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தள வேட்பாளரை

அனுமதி பெறாத பாட புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை

பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது. ஒப்புதல் இல்லாத புத்தகங்களை, எந்த பள்ளிகளும் பயன்படுத்தக் கூடாது,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், எச்சரித்து உள்ளார்.

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

நாடாளுமன்ற தேர்தலில் 18 வயது முடிந்து முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் வரும் 24ம் தேதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கு காரணம், தான் 18 வயதை கடந்துவிட்டோம் என்ற எண்ணம், ஓட்டுப்போடும் உரிமை கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, இந்திய அரசியலில் தனக்கு ஏற்பட்டுள்ள பங்கு போன்றவையே. இதையும் தாண்டி ஒரு எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதுதான் ஓட்டுப்போட போகும்போது விரலில் வைக்கப்படும் அழிக்கமுடியாத மை. தேர்தலில் முதல்முறையாக ஓட்டுப்போட்டதற்கு அடையாளமாக தன் விரலில் வைக்கப்பட்ட அடையாளத்தை மற்றவர்களிடம் பெருமையுடன் காட்டிக்கொள்வதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருப்பது உண்மை. அந்த அழியாத மையின் பின்னால் சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ் : மாணவர்களுக்கு பெற்று தர உத்தரவு

பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற்றுத்தர அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

சென்னை பல்கலை இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிக்க விண்ணப்பம் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழகம் சார்பில், ஏழை மாணவர்கள் இளநிலை கல்வி கற்கும் வகையில், கடந்த 2010-11ம் கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள

எல்.கே.ஜி. புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய படங்களை நீக்க உத்தரவு

எல்.கே.ஜி. புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது, சூரியன் உதயமாவது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை நீக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, இது தொடர்பான வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த ஜி.புரட்சி சுரேஷ் என்பவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:
எல்.கே.ஜி. இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தின் 11-ஆவது பக்கத்தில் எஸ் என்ற ஆங்கில எழுத்துக்கு சூரியன் கண் கண்ணாடி அணிந்திருப்பது போன்று படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட கட்சித் தலைவரைக் குறிக்கும் வகையில் உள்ளது.
இது, சட்டத்துக்குப் புறம்பாகவும், கல்வியின் இயற்கை நியதிக்கு எதிராகவும் உள்ளது.

ஒவ்வொரு தேர்விலும் 1.5 கோடி பக்க விடைத்தாள் வீண்! அடுத்த ஆண்டு மாற்றம் வருமா?

12 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்குபதிவன்று வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவர்கள் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பூத் சிலிப் உள்பட 12 ஆவணங்ளை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் வாக்கு பதிவிற்காக அனைத்து ஊழியர்களையும் தேர்தல் ஆணையம் தயார் படுத்தி வருகிறது. வாக்கு பதிவின் போது வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை, பூத் சீலிப் ஆகியவற்றை மட்டுமே காட்டி ஓட்டு போட முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

வரும் 15 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

கோடை காலத்திற்கு ஏற்ற பழங்கள்-ஓர் படத்தொகுப்பு


பான்கார்டு (PAN CARD) பெறுவது எப்படி?


10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் துவங்குகிறது. இதில் 750 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்

பழக்கப்படுத்தினால் விலங்குகள் கூட எதையும் செய்யும்-ஓர் வீடியோ காட்சி


பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது

மூலனூரை அடுத்த சின்னக்காம்பட்டி அரசு பள்ளிக்கூட குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்தனர்.
குடிநீர் தொட்டியில் விஷம்
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி சின்னக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி யாரோ விஷம் கலந்து விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மூலனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரனை நடத்தி வந்தனர்.

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் -துண்டறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டாரம் பேட்ரபள்ளி  நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த துண்டறிக்கை
தகவல் திரு பொன் நாகேஷ்-தலைமை ஆசிரியர்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்ரல் 17 வரை விண்ணப்பிக்கலாம்

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தனித்தேர்வர்கள் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான விண்ணப்பங்களை www.tndge.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இருந்து

தினமும் தேன் பருகினால் இளமையாக இருக்கலாம்.

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது.
தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில்ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடபான சில முக்கிய அம்சங்கள்:

கல்வித்திட்டம், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும்

தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்

அனைவருக்கும் கல்வி திட்டம் - சர்வ சிக்ஷ அபியான்' திட்டத்தை ஆய்வு செய்யவும், அன்றாட தகவல்களை பதிவு செய்யவும் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு : சிறப்பு ஆசிரியர்களுக்கு குறி வைக்கும் அ.தி.மு.க., DINAMALAR NEWS

சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், கம்ப்யூட்டர், உடற்கல்வி பயிற்றுவிக்க, 16,548 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், மாதம், 5,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. வாரத்தில், மூன்று நாள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு முடிந்த நிலையில்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் 10ம் தேதி முதல் திருத்தம்

பத்தாம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து 10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். மொழித்தாள்கள், கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் 4ம் தேதியுடன் முடிந்தன. நேற்று அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு, நாளை சமூக அறிவியல் பாடத் தேர்வு நடக்கிறது. அந்த தேர்வுடன் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிகின்றன.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு


அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக கட்டணத்தை செலுத்த இயக்குனரகம் முடிவு

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.


மாநிலம் முழுவதும், 23 ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் மின் கட்டண செலவுக்கு, தமிழக அரசு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இந்த தொகை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பிரித்து தரப்படுகிறது. இதில், பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கட்டணத்தை செலுத்த, சில நாள் கால தாமதம் ஆனாலும், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து விடுவதாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறப்பு டி.இ.டி., தேர்வு:மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 22க்குள் 'ஹால் டிக்கெட்'

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு,

தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

வேலூர், ஆரணி சாலையை சேர்ந்த, வெங்கடேஷ் மனைவி லட்சுமி பிரபா, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:
இழப்பீடு:
அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேருவதற்காக, ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும், 6,500 ரூபாய்க்கான, டி.டி.,யை தபால் மூலம் அனுப்பினேன். ஆனால் அவை பல்கலைக்கழகத்தில் டெலிவரி

அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வு - தேர்வு முகாம் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி / தினப்படி வழங்க கூடாது என இயக்குனர் உத்தரவு

ஏப்.24-ல் ஐ.டி. நிறுவனங்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு: தமிழக அரசு

மக்களவைத் தேர்தலையொட்டி, இம்மாதம் 24-ம் தேதி மாநிலம் முழுவதும் ஐ.டி. நிறுவனங்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் 24.04.2014 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கல்விக்கு 6% நிதி ஒதுக்கீடு; ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் B.J.P யின் தேர்தல் அறிக்கை

வருமான வரியை சேமிப்பது எப்படி? தமிழ் இந்துவில் கட்டுரை

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.

பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு. 80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) 
 இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.

IGNOU-B.Ed-சான்றிதழ் உண்மைத்தன்மை அறிய விண்ணப்பிக்க வேண்டிய மாதிரி படிவம்

வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மதிப்பூதிய விவரம்-அதிகாரப்பூர்வ அறிவிப்பு


மக்களவைத் தேர்தல்: இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

பதினாறாவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும் திரிபுரா மாநிலத்தில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் அஸ்ஸாமில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதில், முதற்கட்டமாக தேஜ்பூர், கோலியாபார், ஜோர்ஹட், திப்ரூகர், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், அஸ்ஸாம் கண பரிஷத், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஆம் ஆத்மி, சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொத்தம் 51 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன.

10–ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்: தேர்வுத்துறை இயக்குனர் விசாரணை

பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையத்தில் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் இ.விஜய் என்பவர் தேர்வுக்கு வராத எஸ்.விஜய் என்ற மாணவர் பெயரில் தமிழ் முதல் மற்றும் 2–ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் 2–ம் தாள் ஆகிய 4 தேர்வுகளை எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆங்கில வழிக் கல்வி திட்டம்; களமிறங்கும் அரசு பள்ளிகள்

ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், இந்த மாதம் முதல், சேர்க்கையை நடத்த அரசு பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு முதல், அரசு பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பும், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ஆறாம் வகுப்பும் தொடங்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பயிற்சி வீடியோ!

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வீடியோ! காண தவறாதீர்!!


தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பயிற்சி வீடியோ!

PAYROLL 9.1ல் அகவிலைப்படி(DA)வை 100%ஆக மாற்றுவது எப்படி? படக்காட்சிகளுடன் விளக்கம்

அரசு தொடக்க /நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை- குறித்து விழிப்புணர்வு பேரணி காட்சிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம்-ஒசூர் வட்டாரம் பேட்ரப்பள்ளி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலக்காட்சிகள்.

அப்பள்ளி தலைமை ஆசிரியர்-திரு பொன் நாகேஷ். அவர்களுக்கும்( கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலர்) அப்பள்ளி யின் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது வாழ்துக்களை தெரிவிக்கின்றது

http://2.bp.blogspot.com/-ZbXXiTSOvRE/U0F2zukK-2I/AAAAAAAAArw/RakYbhPpQ1A/s1600/DSC02127.JPG

பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பிழை: ஆசிரியர்களுக்கு 'குட்டு' அவசியம் - தினகரன்

பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் கூறப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாகத்தான் தெய்வத்தையே முன்னோர்கள் கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுவது, அவர்கள் தலைமுறையை மிகச்சிறந்த தூண்களாக உருவாக்குபவர்கள் என்பதால் தான்.
எல்லாம் காசு என்று ஆகிவிட்ட நிலையில், ஆசிரியர்களில் சிலர் தொழில்பக்தியில் இருந்து தவறுவது வேதனை தரும் விஷயமாக இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம், பொதுத் தேர்வு கேள்வித்தாள் பிழைகள்.

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு மூலம் கடந்த, 2001ல், ஆறு முதல், 14 வயதுடைய அனைத்து வயது குழந்தைகளும், ஜாதி, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்துடன், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (எஸ்.எஸ்.ஏ) என்ற திட்டம், மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது.
மாணவர் சேர்க்கை:
நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

பிளஸ் 2 உயிரியல் தேர்வில், தவறான கேள்விகளுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

கடந்த மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. கேள்வி எண், 4ல், 'கீழ் உள்ளவற்றில் எது, 'இன்ஹிபிஷன்' என்ற ஹார்மோனை சுரக்கிறது?' என, கேட்கப்பட்டது. 'இன்ஹிபிஷன்' என்பது, ஹார்மோன் சுரப்பியை தடுத்து நிறுத்தக் கூடிய தயக்க உணர்வு. இதையே, ஹார்மோன் என,

JIPMER-ல் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வுபுதுச்சேரியிலுள்ள Kawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER) -ல் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 31.12.2014 அன்று 17 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், பயோடெக்னாலஜி மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை; நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு ஆன்லைன் மூலம் ஆப்ஜெக்டிவ் மாதிரியில் நடைபெறும்.

மருத்துவ படிப்புக்கு மே 11ம் தேதிக்கு மேல் விண்ணப்ப விநியோகம்

மிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 2-ஆவது வாரத்தில் விண்ணப்பம் விநியோகிக்கப்படவுள்ளதாக மருத்துவக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி வெளியிடப்படும். அதை தொடர்ந்து மே 11-ஆம் தேதிக்கு மேல் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும்.

இவ் இணைய தளப்பார்வையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இவ்விணையதளம் ஆசிரியர்களுக்கு பயனுள்ள பல கருத்துகளை  கொண்டு செல்வதில் சங்கவேறுபாடு இன்றி  செயல் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆசிரியர்களில் பலர் பல திறமைகளோடு விளங்குவர்.

அவர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துகள் ,படைப்புக்கள்
கவிதை,
கட்டுரை
துணுக்குகள்,
பொது அறிவு பெட்டகக்கருத்துக்கள்
போன்றனவற்றையும்
மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான
எளிய நடைமுறைக்கருத்துக்களும்
இவ்விணையதளத்தில்
ஆசிரியர் படைப்புகள்
மற்றும்
TEACHING TIPS
என்ற தலைப்புகளில் பதிவிட்டு (*நிபந்தனைகளுக்குட்டு)   வெளியிட உள்ளோம்

அனுப்புநர் முழு முகவரியுடன் தனது மின்னஞ்சல் முகவரியுடனும்,செல்
      போன் எண்ணினைக்குறித்து 
     tntfwebsite@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
      அனுப்பிவைக்கவேண்டும்

சிறந்த படைப்புகள்  பதிவிட  வரவேற்கப்படுகின்றன

வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் பணி -வாக்கு பதிவு தொடங்குவதற்கு முன்

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும்
* வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்.
வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
வாக்குசாவடியை சென்றடைந்த உடன் அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் வாக்குபதிவு நடத்த தேவையான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

web stats

web stats