Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
PFRDA ஆணையம் cps திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம் செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக PFRDA தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளுடனும் புதிய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப் பணியாற்றியவர் கிரிஜா வைத்தியநாதன்
தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர் பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப்
பணியாற்றியவர் என்பதில் பெருமையும் மகிழ்சியும் கொள்வோம்

மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைத்த 'மாஸ் காப்பியிங்' முறைகேடு !
நூறு சதவீத தேர்வு, 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், மாநில அளவில் முன்னிலை, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் முன்னிலை என சில தனியார் பள்ளிகளே தொடர்ச்சியாக சாதனை படைக்க சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது. அடுத்து 'மாஸ் காப்பியிங்'.
Whatsapp Group -ல் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த க்ரூப்பின் நிர்வாகி பொறுப்பாக முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
இந்தியாவில் பல்வேறு இடங்களில், தவறான தகவலை வாட்ஸ்-அப் க்ரூப்பில் பகிர்ந்ததற்காக அந்த க்ரூப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம்,'வாட்ஸ்-அப் க்ரூப்பில் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த க்ரூப்பின் நிர்வாகி பொறுப்பாக முடியாது. ' என கூறியுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லியில் மட்டுமே செல்லும். வாட்ஸ்-அப் மட்டுமல்லாமல் மற்ற சமூக ஊடகங்களிலுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தகவல்களை வைத்துக்கொள்ளவும்.
மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள் புகைப்படம்)
BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் அதாவது
தமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு!
2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசு உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, ஜன., 31ம் தேதி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்,
10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு கட்டாயமாகிறது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பொதுத் தேர்வையோ அல்லது பள்ளி அளவிலான தேர்வையோ தேர்வு செய்துகொள்ளலாம் என்ற நிலை தற்போது நடைமுறையில் உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்
'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'தானே' புயல், கடலுாரை கசக்கி விட்டு சென்றது போல, வங்கக்கடலில் உருவான, 'வர்தா' புயல், சென்னையை சின்னா பின்னமாக்கி விட்டது.
தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.
சென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது, தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வருமான வரித்துறை, பெட்ரோலிய அமைச்சகத்துடன்
விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பெயர், பான் எண், பிறந்த தேதி,
பள்ளி மாணவர்களுக்கு டிக்ஷ்னரி தமிழக அரசு திடீர் நிறுத்தம்.
"தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி
மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இது 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி என்பதால், பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறிவதோடு, தமிழில் அதற்கான அர்த்தத்தையும் அறியலாம்.
நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரே ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலை வர் பி.கே.இளமாறன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
Inspire Award - Register link now opened
இன்ஸ்பயர் விருதிற்கு -2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர்களின் பதிவு செய்யாத பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் விவரங்களை பதிவிட இப்பொழுது இன்ஸ்பர்லிங்க் open செய்யப்பட்டுள்ளது, இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் லிங்க் கீழே http://www.inspireawards-dst.gov.in/UserP/index.aspx
வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!!!
நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.தில்லியியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
8' போடும் அமைப்பில் 'சென்சார்'டூ - வீலர் உரிமத்தில் புதிய முறை
இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக, '8' போடும் அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தப்பட உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள, '8' அமைப்பில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும்; தரையில் கால் ஊன்றாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகள் உண்டு.
3ம் பருவப் பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர்.
NMMS தேர்வுக்கு நமது மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது?
1) மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் உள்ள அச்சத்தை போக்கி மனதளவில் மாணவனை தயார்படுத்துதல் மிக அவசியம்.
2) நாள்தோறும் தேர்வு பாடப் பகுதிகளில் அதிக பயிற்சிஎடுத்து கொள்வது சிறப்பு.
3) Mental Ability, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் கால அட்டவணை ஒன்று தயார் செய்து அதன் படி சரியாக திட்டமிட்டு படிப்பது நிச்சயம் வெற்றியைத் தரும்.
'ஸ்வைப் மிஷின்' மூலம் காஸ் பில் : புத்தாண்டு முதல் அமல்படுத்த முடிவு
ஸ்வைப் மிஷின்' மூலம், காஸ் சிலிண்டர் பில் செலுத்தும் முறை, புத்தாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. 'ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம்
தமிழக கல்வித்துறையில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் உத்தரவு, அறிவிப்பு, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தகவல்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் செயலாளர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து 'ஆன்லைன்' மூலம் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவேண்டிய சுற்றறிக்கை, உத்தரவு, அறிவிப்புகள், தபால்கள் குறைந்து விட்டன.
இ.பி.எப் (EPF) என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற இபிஎப் வாரிய உறுப்பினர்களின்
கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 8.8 சதவீதமாக இருந்தது. அது தற்போது 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு வைத்துள்ள 15 கோடி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரையாண்டு தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, தேர்வு நடத்துவது யார்?
துவக்க பள்ளிகளில், நேற்று இரண்டாம் பருவத்தேர்வு துவங்கியநிலையில், ஆசிரியர்களுக்கு, தமிழ் வாசித்தலுக்கான இருநாள் பயிற்சிவழங்கப்பட்டது. இதனால், தேர்வு நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், தலைமைஆசிரியர்கள் தவித்தனர்.
ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை
அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒன்று முதல்,ஐந்து வரை, இரண்டாம் பருவத்தேர்வுகள் நேற்று துவங்கின.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை மேம்படுத்தல் குறித்து, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரு நாள் பயிற்சி வழங்க, கடந்த வாரம் திட்டமிடப்பட்டது. ஆனால், முதல்வர்ஜெயலலிதா மறைவு, பள்ளி விடுமுறையால், பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தமிழ் பயிற்சி வட்டார வளமையங்களில், ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி நேற்றுமுன்தினம் துவங்கியது. அதில், துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும், 50 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்கஉத்தரவிடப்பட்டது.
தேர்வு நடத்தும் நாளன்று, 50 சதவீத ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்ற நிலையில், பள்ளியை நடத்த தலைமைஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தேர்வுகளை நடத்த முடியாமல், பெயரளவில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
ரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட்: பான் எண் இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கம்..
வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால்,சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.வெவ்வேறு உத்திகளில் கருப்புப் பணத்தை மாற்ற முயலுபவர்களுக்கு புதிய கடிவாளமிடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)