rp

Blogging Tips 2017

"கல்வித்துறை அதிகாரிகள் உடந்தையா? தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வேஸ்ட் பேப்பர் கடையில் விற்க முயற்சி - 8 பேர் கைது !!

திருவள்ளூர் - தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை வேஸ்ட் பேப்பர் கடையில் விற்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், சிலர் லாரி ஒன்றில் புத்தக பண்டல்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற வெங்கல் போலீசார், சந்தேகத்தின்பேரில்

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்
புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அடுத்தகட்டமாக, 'பீம்' என்ற பெயரில், புதிய மொபைல் ஆப், பிரதமர், நரேந்திர மோடியால் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று நடந்த, டிஜிட்டல் பரிவர்த்தனை விழாவில், இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க "நெக்ஸ்ட்' தகுதித் தேர்வு

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்களாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், தேசிய அளவிலான தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும் இணையம் ?

தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும்   

ஜனவரி 1ம் தேதி முதல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு 2500 ரூபாயிலிருந்து 4500 ரூபாயாக அதிகரித்து ரிசர்வ் வங்கி உத்தரவு!

ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் ரூ.4,500 எடுக்கலாம்
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் ஐயா செ.முத்துசாமி Ex.MLCதமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன்.அவர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் ஐயா செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள், நேர்முக உதவியாளர் திரு. செ.வடிவேலு, தலைமை நிலைய செயலாளர் கி.இராமானுசம் மற்றும் காஞ்சிபுரம் வட்டார செயலாளர் வ.கோவிந்தன் ஆகியோர் புதியதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன்அவர்களை 29.12.2016 காலை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.ஆசிரியர்களின்   பிரச்சினைகள் குறித்தும் , இன்றைய கல்வி நிலை குறித்தும் மாநில முதன்மை செயலாளரிடம் நமது இயக்கம் சார்பாக கருத்துகளை தெரிவித்ததுடன்,முதன்மை செயலாளரின் தந்தையார் நிதி செயலாளராக இருந்த போது MLC ஆக பணிபுரிந்த  தனது அனுபவங்களை பொது செயலாளர் அவர்கள் பகிர்ந்துகொண்டார்

RTI - மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது

கடலூர் மாவட்டத்திற்கு 11.1.2017 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

SLAS Test Valuation Starts - கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.
        தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

உங்களது ஊதியம் பற்றி முழு விவரம் அறிய வேண்டுமா?

நீங்கள் அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில்,எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.

வங்கியில் ஊதியம் செலுத்தப்படும் விவரம் அறிய - Click Here

  • நீங்கள் அரசு ஊழியரா...
  •  உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை உங்களது வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்.
  •  உங்களது Bill ன் தற்போதைய நிலை என்ன..? என்று அறிய வேண்டுமா...
  • ஒரே ஒரு Click மட்டும் போதும்.
  • உங்களது GPF / CPS No. தெரிந்து இருந்தால் மட்டும் போதும்.

JAN 2017 CRC : PRIMARY 21.01.2017 & UPP.PRIMARY 28.01.2017

நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!

இந்த 2016 பலருக்கும் ஒரு நீண்டஆண்டாக இருந்திருக்கும், கவலை வேண்டாம்! அது இன்னும் நீளப்போகிறது.இம்முறை புத்தாண்டுக்கு10,9,8... கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9... என இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போதும் 12 மணிக்கு கொண்டாடப்படும் புத்தாண்டு இவ்வாண்டு 12
மணி 1 வினாடிக்கு கொண்டாடப்படுமாம். ஏன் என்று தெரியுமா?
லீப்
இந்த டிசம்பர் 31-ம் தேதி அனைத்து நேரகாப்பாளர்களும் 'லீப் செகண்ட்' என அழைக்கப்படும் ஒரு வினாடியை தங்களது கடிகாரங்களில் கூட்டுவர்

G.O Ms.No. 122- நாள் : 28. 12. 2016- வரையறுக்கப்பட்ட விடுமுறைப்பட்டியலில் மகாளய அமாவாசை சேர்க்கப்பட்டதற்கான அரசாணை


TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி ?

 TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி TRB அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்..

7 வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் !!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இயக்கங்கள் நடத்திய கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்...7 வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவை
No automatic alt text available.

புதிய கல்விக் கொள்கை –‘ நீட் ‘ நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து


அன்புள்ள தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்க சகோதரர்களே! 
           வணக்கம். 25.12.2016 அன்று நடந்து முடிந்த நமது பொதுக்குழு கூட்டத்தில் ஆற்றிய முடிவின் படி, திராவிடர் கழகத்துடன் ஆசிரியர் அமைப்புகள் இணைந்து புதிய கல்விக் கொள்கை –‘ நீட் ‘ நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து 30.12.2016 அன்று நடத்துகின்ற தமிழ்நாடு ஆசிரியர் மாணவர் பெற்றோர் முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாமும் ஆசிரியர்களைத் திரட்டி கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் 10 மையங்களில் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டம் நடைபறும் மையங்களின் பெயர்கள், திராவிடர் கழகத்தின் தொடர்பாளர்கள் விவரப் பட்டியல் இத்துடன் attachment ஆக இணைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு 30.12.2016 அன்று நமது இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பட்டியலில் உள்ள தங்கள் பகுதி தொடர்பாளராகிய திராவிடர் கழகத் தோழர்களை அவர்களது அலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அனைத்து மாவட்டங்களும் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று கலந்து கொண்டு இப்போராட்டம் வெற்றி பெற ஆதரவளிக்க வேண்டுகிறேன்.     நன்றி

click here the attachment


K.SELVARAJU,Gen.Secretary,
TAMILNADU TEACHERS' FEDERATION.
cell : 94868 42798  99407 42798, 70107 41602

புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களை வரவேற்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிறுவனர் ஐயா செ.முத்துசாமி Ex.MLC., அவர்கள் வெளியிட்ட அறிக்கை!

Image may contain: text

ஆதார் உதவி மையங்கள் 2 மாதங்கள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு.

பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கும் வகையில், அதற்கான உதவி மையங்கள் பிப்ரவரி மாத இறுதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
  இந்த மையங்கள் மூலம் இதுவரை 8.5 லட்சம் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதார் பதிவுக்கென கட்டணம் ஏதுமில்லை.

அரசு உதவிபெறும் பள்ளியில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து உத்தரவு.


TET சிலபசில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !

ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது. 
  இந்த அறிவிப்புக்கு, தமிழக அரசு,2011 நவ., 11ம் தேதியில் தான், அரசாணை வெளியிட்டது.ஆனால், டெட் தேர்வுக்கான விதிமுறைகள், மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்புபடி, ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வாவது நடத்த வேண்டும்.அரசாணை வெளியான பின், ஆசிரியப்பணியில் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பணியில் தொடர முடியும்.

சர்ச்சையில் 4ஆயிரம் ஆசிரியர் டிரன்ஸ்பர் கலக்கத்தில் அதிகாரிகள்

No automatic alt text available.

CCE worksheet தேர்வுகள் தொடரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி..

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் கல்வி தரத்தைமேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைஉள்ள மாணவர்களுக்கு தினமும் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி,தினமும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வகுப்பு நேரத்தில்,பாடவாரியாக தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும், மாணவர்களின்கற்றல் திறன் அறிந்து பாடம் நடத்த வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டது.

பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்கள் தேர்தலில்
போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக் கொண்டுள்ளது.

பாரதியார் கன்னியாஸ்திரி சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது -ஐகோர்ட் தீர்ப்பு

அனைத்து பள்ளிகளிலும் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி: மனிதவள மேம்பாட்டுத்துரைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல்

Image may contain: 3 people, people smiling

SSA NEWS:-ஜனவரி 9, 10, 11 BRC Level upper primary Kit 3 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது - செயல்முறைகள்!!


அனுமதி கடிதம் எழுத தெரியாத அரசு ஊழியர்கள் : ஆய்வில் 'திடுக்'

அரசு ஊழியர்களில் பலருக்கு அனுமதி மற்றும் விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை' என, தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மத்திய அரசுப் பணிகளில் முக்கியத்துவம் -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.

மத்திய அரசின் துறைகளில் தாற்காலிகமாகப் பணியாற்றுவதற்காக, மாநில அதிகாரிகளை அனுப்பும்போது பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தற்போது EMIS இணையதளம் Open ஆகியுள்ளது

 Click here to login


53 வயதுக்கு மேல் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு

No automatic alt text available.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் கல்வி தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வேறு பள்ளிக்கு TC கொடுத்து அனுப்பக்கூடாது. NOMINAL ROLL -ல் எவர் பெயரும் விடுபடக்கூடாது. பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

குடும்ப அட்டைக்கு மீண்டும் “உள்தாள்” மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது தமிழக அரசு..

CPS ரத்து,மற்றும் 8ஆவது ஊதியக்குழு அமுல்படுத்துதல் -தமிழக அரசை வலியுறுத்த ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக்கூட்டத்திற்கு தலைமைசெயலக ச் சங்கம் அழைப்பு.நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு

PFRDA ஆணையம் cps திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.

புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம் செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக PFRDA தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளுடனும் புதிய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

DEE PROCEEDINGS- பணிமாறுதல் மூலம் புதிதாக பணியேற்றுள்ள AEEO -களுக்கு 26,27 டிசம்பர் ஆகிய இரண்டு நாட்கள் மேலாண்மை பயிற்சி -இயக்குநர் செயல்முறைகள்


பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப் பணியாற்றியவர் கிரிஜா வைத்தியநாதன்

தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர் பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப்
பணியாற்றியவர் என்பதில் பெருமையும் மகிழ்சியும் கொள்வோம்
Image may contain: 1 person, eyeglasses and closeup

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் / பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் / பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல்.

பள்ளிக்கல்வி - சென்னை அறிவியல் விழா 2017 - அனைத்து மாவட்ட மாணவர்கள் பங்கேற்க அழைப்பு - இயக்குனர் செயல்முறைகள்

CLICK HERE-DSE-DIR.PRO-REG-SCIENCE EXHIBITION

பள்ளிக்கல்வி - சென்னை அறிவியல் விழா 2017 - விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் , விதிகள் மற்றும் விண்ணப்படிவம்

CLICK HERE-DSE-SCIENCE EXHIBITION RULES& FORMAT

இவ்வாண்டு முதல் "INSPIRE AWARD" "INSPIRE MANAK SCHEME" என மாற்றப்படுகிறது - மாணவர்களுக்கு புதிய திட்டங்கள் - இயக்குனர் செயல்முறைகள்


மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைத்த 'மாஸ் காப்பியிங்' முறைகேடு !

நூறு சதவீத தேர்வு, 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், மாநில அளவில் முன்னிலை, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் முன்னிலை என சில தனியார் பள்ளிகளே தொடர்ச்சியாக சாதனை படைக்க சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது. அடுத்து 'மாஸ் காப்பியிங்'.

B.Ed Part Time Programme 2016-2019 (PERIYAR UNIVERSITY) Application Notification

INSPIRE AWARD MANUAL

CLICK HERE-INSPIRE AWARD MANUAL DOWNLOAD - 2016

Whatsapp Group -ல் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த க்ரூப்பின் நிர்வாகி பொறுப்பாக முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியாவில் பல்வேறு இடங்களில், தவறான தகவலை வாட்ஸ்-அப் க்ரூப்பில் பகிர்ந்ததற்காக அந்த க்ரூப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம்,'வாட்ஸ்-அப் க்ரூப்பில் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த க்ரூப்பின் நிர்வாகி பொறுப்பாக முடியாது. ' என கூறியுள்ளது. 

  இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லியில் மட்டுமே செல்லும். வாட்ஸ்-அப் மட்டுமல்லாமல் மற்ற சமூக ஊடகங்களிலுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தகவல்களை வைத்துக்கொள்ளவும்.

மாணவனின் புகைப்படம்   (3 மாணவர்கள் புகைப்படம்)
BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக  மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் அதாவது 

TRB மூலம் நேரடியாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை ஆணை தேவையில்லை இயக்குனர் செயல்முறைகள்..

தமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு!

2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

: தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்களை நியமித்த தமிழக அரசு உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,க்கு, 11 புதிய உறுப்பினர்களை நியமித்து, ஜன., 31ம் தேதி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்,

10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு கட்டாயமாகிறது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பொதுத் தேர்வையோ அல்லது பள்ளி அளவிலான தேர்வையோ தேர்வு செய்துகொள்ளலாம் என்ற நிலை தற்போது நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் , மாநில பொது செயலாளர் மரியாதைக்குரிய எங்கள் அய்யா திரு. செ. முத்துசாமி அவர்கள் தன் அமெரிக்கா பயணத்தை வெற்றி கரமாக முடித்து நேற்று வந்தடைந்தார்.அவருக்கு .பெங்களூர் விமான நிலையத்தில் இயக்கம் சார்பில் அன்பான வரவேற்பளிக்கப்பட்டது

2 ஆம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு எப்போது? - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


பள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வித்துறை திட்டம்

'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'தானே' புயல், கடலுாரை கசக்கி விட்டு சென்றது போல, வங்கக்கடலில் உருவான, 'வர்தா' புயல், சென்னையை சின்னா பின்னமாக்கி விட்டது. 

தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.

சென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.     தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது,  தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வருமான வரித்துறை, பெட்ரோலிய அமைச்சகத்துடன்

விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் பெயர், பான் எண், பிறந்த தேதி,

பள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் நிறுத்தம்.

"தமிழக அரசு சார்பில், கடந்த 2011-12 கல்வியாண்டில் அரசு பள்ளி
மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்க, ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இது 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி என்பதால், பாடத்தில் வரும் பல்வேறு புதிய வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தையை அறிவதோடு, தமிழில் அதற்கான அர்த்தத்தையும் அறியலாம்.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரே ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆசிரியர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலை வர் பி.கே.இளமாறன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

Inspire Award - Register link now opened

இன்ஸ்பயர் விருதிற்கு -2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர்களின் பதிவு செய்யாத பள்ளிகள் தங்கள் பள்ளி  மாணவர்களின் விவரங்களை பதிவிட இப்பொழுது இன்ஸ்பர்லிங்க் open செய்யப்பட்டுள்ளது, இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்   லிங்க் கீழே http://www.inspireawards-dst.gov.in/UserP/index.aspx

வேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!!!

நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.தில்லியியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

INCOME TAX-2016 (Tax slap and savings Details)

CLICK HERE TO DOWNLOAD

TPF மாற்றம் தொடர்பான இயக்குனர் செயல்முறைகள்(DEE PROCEEDINGS- DATE:5/12/1016- PANCHAYAT UNION TPF ACCOUNT CHANGE TO AG OFFICE -CLARIFICATION PUBLISHED)

தேர்வு வாரியம் மூலம் பணை நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வரன்முறையில்லை

 Image may contain: text

WORKING SHEETS, SLAS, IInd TERM EXAM,SLAS,NMMS- பயிற்சி ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

8' போடும் அமைப்பில் 'சென்சார்'டூ - வீலர் உரிமத்தில் புதிய முறை

இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக, '8' போடும் அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தப்பட உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள, '8' அமைப்பில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும்; தரையில் கால் ஊன்றாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகள் உண்டு.

3ம் பருவப் பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர்.

NMMS தேர்வுக்கு நமது மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது?

1) மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் உள்ள அச்சத்தை போக்கி மனதளவில் மாணவனை தயார்படுத்துதல் மிக அவசியம்.

2) நாள்தோறும் தேர்வு பாடப் பகுதிகளில் அதிக பயிற்சிஎடுத்து கொள்வது சிறப்பு.

3) Mental Ability, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் கால அட்டவணை ஒன்று தயார் செய்து அதன் படி சரியாக திட்டமிட்டு படிப்பது நிச்சயம் வெற்றியைத் தரும்.

பள்ளிச்சான்றிதழ் தொலைந்துவிட்டால்

CLICK HERE

'ஸ்வைப் மிஷின்' மூலம் காஸ் பில் : புத்தாண்டு முதல் அமல்படுத்த முடிவு

ஸ்வைப் மிஷின்' மூலம், காஸ் சிலிண்டர் பில் செலுத்தும் முறை, புத்தாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. 'ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

கல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம்

தமிழக கல்வித்துறையில் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் உத்தரவு, அறிவிப்பு, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் தகவல்கள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் செயலாளர், இயக்குனர் அலுவலகங்களில் இருந்து 'ஆன்லைன்' மூலம் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வரவேண்டிய சுற்றறிக்கை, உத்தரவு, அறிவிப்புகள், தபால்கள் குறைந்து விட்டன. 

இ.பி.எப் (EPF) என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற இபிஎப் வாரிய உறுப்பினர்களின்
கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 8.8 சதவீதமாக இருந்தது. அது தற்போது 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு வைத்துள்ள 15 கோடி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

CCE-அரசாணை எண் 264 ன் விவரம் & திருத்தங்கள் செய்து வெளியிட்ட அரசு கடிதம்

click here to download G.O NO 264 DT 06.07.2012

அரையாண்டு தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி, தேர்வு நடத்துவது யார்?

துவக்க பள்ளிகளில், நேற்று இரண்டாம் பருவத்தேர்வு துவங்கியநிலையில், ஆசிரியர்களுக்கு, தமிழ் வாசித்தலுக்கான இருநாள் பயிற்சிவழங்கப்பட்டது. இதனால், தேர்வு நடத்த ஆசிரியர்கள் இல்லாமல், தலைமைஆசிரியர்கள் தவித்தனர்.

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை

அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒன்று முதல்,ஐந்து வரை, இரண்டாம் பருவத்தேர்வுகள் நேற்று துவங்கின.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை மேம்படுத்தல் குறித்து, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரு நாள் பயிற்சி வழங்க, கடந்த வாரம் திட்டமிடப்பட்டது. ஆனால், முதல்வர்ஜெயலலிதா மறைவு, பள்ளி விடுமுறையால், பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், தமிழ் பயிற்சி வட்டார வளமையங்களில், ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி நேற்றுமுன்தினம் துவங்கியது. அதில், துவக்கப்பள்ளிகளில் பணிபுரியும், 50 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்கஉத்தரவிடப்பட்டது.

தேர்வு நடத்தும் நாளன்று, 50 சதவீத ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்ற நிலையில், பள்ளியை நடத்த தலைமைஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தேர்வுகளை நடத்த முடியாமல், பெயரளவில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

சொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பின் போது ஊதியம் கணக்கிடும் முறை சார்பான அரசுக்கடிதம் நாள் : 13. 10. 2016

Image may contain: text

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 01. 07. 2016 முதல் அகவிலைப்படி உயர்வு சார்பான அரசாணை

No automatic alt text available.

அரசு தேர்வுகள் இயக்ககம் -தனி தேர்வுகளுக்கான செய்தி குறிப்பு

CLICKHERE-HSE March 2017 Private Candidate Notification Press Release

அரசு தேர்வுகள் இயக்ககம் -மேல் நிலை பொதுத் தேர்வு மார்ச் 2017-தனி தேர்வுகளுக்கான அறிவுரைகள்

CLICK HERE-2017 PRIVATE CANDIDATES INSTRUCTIONS

SR DIGITIZATION 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும் !

ஆசிரியர்களுக்கு உதவும் ஆன்ட்ராய்டு செயலி

2016-November-B.Ed Result For BHARATHIDHASAN UNIVERSITY

CLICK -BHARATHIDHASAN UNIVERSITY-B.Ed., (CDE) - November 2016 Results

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012-2013 தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் உண்மைத் தன்மை வழங்குதல் -குறித்து கடிதம்

CLICK HERE-TO DOWNLOAD TET GENUNINESS REG

ரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட்: பான் எண் இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கம்..

வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால்,சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.வெவ்வேறு உத்திகளில் கருப்புப் பணத்தை மாற்ற முயலுபவர்களுக்கு புதிய கடிவாளமிடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC - Departmental Examinations, December 2016 - Hall-TicketPublished

TNPSC - Departmental Examinations, December 2016 - Hall-TicketPublished

RTI Letter- தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்- உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும்,தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!!

அ.தே.இ - 2016-17 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை

DGE - 2016-17 - SSLC / HSE BOARD EXAMINATION TIME TABLE CLICK HERE..

தொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ஆசிரியர்கள்

இந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப்

நிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 - Tamil Version

நிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 - Tamil Version

+2 PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017


+2 PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017

10th PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017

10th PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017


web stats

web stats