Labels

rp

Blogging Tips 2017

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது. இந்த தேர்வுக்கு, 11.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஆனால், 6.24 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில், 33 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள்,

முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதன்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பொது பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை தேர்வு முடிவை வெளியிட்டது; இதில், 15 ஆயிரத்து, 445 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், தங்களது விருப்ப பாடத்தின் படி, நவ., 12ல் நடக்கும், முதன்மை தேர்வை எழுத வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோர், நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும்; நேர்முக தேர்வுக்கு பின், இறுதி பட்டியல் வெளியாகும்

விடுமுறை அளித்த பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்'

அரசின் அனுமதி பெறாமல், பள்ளிகளுக்கு தன்னிச்சையாக விடுமுறை அளித்த, தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று நடந்த முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, சில தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். அதனால், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாகை போன்ற சில மாவட்டங்களில், தனியார் நர்சரி பள்ளிகள் செயல்படவில்லை. 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற முக்கிய மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நடந்ததால், மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின. இந்நிலையில், தன்னிச்சையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், சங்கத்தினருக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுக்கான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி - விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.

ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையிலான ‘சென்டா ஒலிம்பியாட்’ போட்டி நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் இணைந்து வழங்குகின்றன.
இதுகுறித்து சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடியேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரம்யா கூறியதாவது:5,000-க்கும் மேற்பட்டோர்..‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களுக்கான தேசிய அளவிலான போட்டி. ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தவும், மேம்படுத்த வும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் 300 நகரங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப் போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 2-வது ஆண்டாக நாடு முழுவதும் 22 நகரங்களில் வரும் டிசம்பர் 3-ம் தேதி 2016-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகளை ‘தி இந்து’ நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் போட்டி நடக்கும்.மொத்தம் 13 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆசிரியர்கள் போட்டிப் பாடப் பிரிவைதேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு துபாயில் 2017-ல் நடக்க உள்ள உலக கல்வி, திறன்மேம்பாட்டு மாநாட் டில் பங்கேற்க வார்கே அறக் கட்டளை சார்பில் வாய்ப்பு அளிக் கப்படும். ஒவ்வொரு மாநிலத்தி லும் முதலிடம் பெறுபவர்களின் விவரங்கள் ‘தி இந்து’ நாளிதழில் வெளியாகும். இதுதவிர, வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு சென்ட் ரல் ஸ்கொயர் அறக்கட்டளை சார்பில் வெளியாக உள்ள புத்தகத்தில் எழுதும் வாய்ப்பும், ஹெச்டி பாரேக் அறக்கட்டளை மூலம் 50 பேருக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு...
கணினி மூலம் போட்டி நடத்தப்படும். தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘ஆப்ஜெக்டிவ்’ வகை கேள்விகள் இடம்பெறும். போட்டி குறித்தகூடுதல் விவரங்கள், முன்பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் பருவ மாதிரி வினாத்தாள் 5-ஆம் வகுப்பு அனைத்து பாடங்கள்...

CLASS - 3 & 4 FIRST TERM QUESTION PAPER.

CLASS 1 & 2 FIRST TERM QUESTION PAPERS

ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும்

பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்

சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு அமைத்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள்; ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

செப். 23க்குள் அங்கீகாரம் பி.எட்., கல்லூரிகளுக்கு 'கெடு

தனியார் பி.எட்., கல்லுாரிகள், செப்., 23க்குள், மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் கல்வி தொடர்பான, பி.எட்., -- பி.பி.எட்., -- எம்.எட்., படிப்புகளுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நேற்றுடன் மாணவர் சேர்க்கை முடிந்தது. தனியார் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்த, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களை பிரித்து ஜமீன் கயத்தார் உட்பட 5 வருவாய் வட்டங்களை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

நினைவிற்காக

இன்று சனி (17-09-2016) பள்ளி வேலை நாள்.*

*முதல்பருவத் தேர்வுகள்*

*19 (திங்கள்) தமிழ்,*
*20 (செவ்வாய்)* *ஆங்கிலம்,*
*21 (புதன்) கணிதம்,*
*22 (வியாழன்) அறிவியல்,*
*23 (வெள்ளி) சமூக அறிவியல்.*

*24-09-2016 முதல் 02-10-2016 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை.*

*08-10-2016 (சனி) விடுமுறை,*
*09-10-2016 (ஞாயிறு) விடுமுறை,*
*10-10-2016 (திங்கள்) ஆயுத பூஜை விடுமுறை,*
*11-10-2016 (செவ்வாய்) விஜயதசமி விடுமுறை,*
*12-10-2016 (புதன்) மொகரம் விடுமுறை.*

*15-10-2016 (சனி) விடுமுறை,*
*22-10-2016 (சனி) விடுமுறை,*
*29-10-2016 (சனி) தீபாவளி விடுமுறை,*
*28-10-2016 வெள்ளி அன்று பட்டியலின் படி வேலை நாள். ஆனால் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை வைத்து விடுமுறையை எதிர்பார்க்கலாம்.*

*இந்த விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலில் உள்ளவை.*

பள்ளிக்கல்வி - அனைத்து மாணவர்களுக்கும் 20.09.2016 குள் "ஆதார்" பதிவுகளை முடிக்க - இயக்குனர் உத்தரவு


தி.மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.
35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது
நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

கணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி !

தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதுகின்றனர். பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, 

கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை : குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்

ஆன்லைன் வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில், கணினி ஆசிரியர்களை நியமிக்காமலும், கணினி அறிவியல் பட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமலும் பள்ளிக் கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
    தமிழக அரசு பள்ளிகளில், 1992 முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில்,
கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப் படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப் படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்பு முடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.

CPS:புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின. 

Departmental Examinations - MAY 2016 Results (Updated on 09 September 2016)

Results of Departmental Examinations - MAY 2016
(Updated on 09 September 2016)
Enter Your Register Number :                                                         
 

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

'தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு...


உலக தமிழ் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்வில் நமது பொதுசெயலர் செ .மு அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்