Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
ஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. பதவி உயர்வில் சென்றுள்ள மூத்த ஆசிரியர்களுக்கும் தான் என்பதை விளக்கும் கட்டுரை
TO DOWNLOAD GOVT LTR.23373/S/2011-2 DATED.09.08.2011 CLICK HERE...
அரசாணை 234 நாள்:1.6.2009 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாதபோதே சமரசமின்றி தொடர்ந்து போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை போராடி பெற்றிருந்தால், அதன்பின்னர் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய முயன்றிருக்க வாய்ப்புண்டு. ஏதோ இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றுமட்டும் நினைத்துவிட்டார்களோ என்னவோ? குறை சொல்வதற்காக இப்படி குறிப்பிடவில்லை. மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு ஏற்படுவதால் இப்படி குறிப்பிடுகிறோம்சிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி
மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி” புத்தகம்
தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.
கடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான கதவுகள் திறக்கும் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
உயர்ந்த லட்சியத்துடன் கடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான
கதவுகள் திறக்கும் என்று போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு
கூறினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் நல இயக்ககம்
சார்பில், ‘குறிக்கோளோடு இரு’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி
நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படை கூடுதல்
டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:–
டி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: டி.ஆர்.பி., நம்பிக்கை.
மூன்றாவது முறையாக, இன்றும், நாளையும் நடக்கும் டி.இ.டி., தேர்வில்,
தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி
சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50
ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.
அடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில ஆசிரியர்களுக்கு முரண்பாடு - தினமலர் 17.08.2013
அடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேஒப்பிடுகையில்-தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மாதந்தோறும் ரூ-8550/-இழப்பு.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைமை நிலைய செயலாளர் திரு.சாந்தகுமார் கருத்து பதிவுடன் தினமலர் செய்தி வெளியீடு

சிபிஎஸ்இ மாணவர்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்கள் தன்னுடைய சுய விவரங்களை ஆன்லைனில் பதிவு
செய்யும் வசதியை சிபிஎஸ்இ வாரியம் கொண்டு வந்துள்ளது.அதன்படி,
இக்கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ., பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு
படிக்கும் மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை
பாரதிதாசன் பல்கலை: இளங்கலை தொலைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.
திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி
மையத்தில் நடத்தப்பட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.ஏ.,(தமிழ், ஆங்கிலம்,
வரலாறு, பொருளாதாரம்), பி.எஸ்சி.,(கணிதம்), பிசிஏ, பிபிஏ உள்ளிட்ட
படிப்புக்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள்
இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.
முதுநிலை நூலக மற்றும் தகவல் அறிவியல் படிப்பு பற்றி அறிவோமா?
லைப்ரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ் படிப்பானது, ஒரு இன்டர்டிசிப்ளினரி
படிப்பாகும். இப்பாடத்திட்டம் பல தியரி மற்றும் பிராக்டிகல் அம்சங்களை
தன்னகத்தேக் கொண்டதாகும்.
நோக்கங்கள், கோட்பாடுகள், உள்ளடக்கம், சிஸ்டங்கள் மற்றும் புத்தகங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் முறைகள் ஆகியவைப் பற்றி கற்றல் மற்றும் பயிற்சியெடுத்தல் தொடர்பான தொழில்நுட்ப பயன்பாடு குறித்ததானது இப்படிப்பு.
நோக்கங்கள், கோட்பாடுகள், உள்ளடக்கம், சிஸ்டங்கள் மற்றும் புத்தகங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் முறைகள் ஆகியவைப் பற்றி கற்றல் மற்றும் பயிற்சியெடுத்தல் தொடர்பான தொழில்நுட்ப பயன்பாடு குறித்ததானது இப்படிப்பு.
"பாஸ்' வைத்திருந்தால் ஓட்டம் பிடிக்கும் பஸ் : சிறை பிடித்து மாணவியர் மறியல்
அன்னூர்:
பஸ் பாஸ் உள்ள மாணவ, மாணவியரை அரசு பஸ்சில் ஏற்ற மறுப்பதை கண்டித்து
அன்னூரில் மறியல் போராட்டம் நடந்தது.அன்னூர் சத்தி ரோட்டில் உள்ள
அ.மேட்டுப்பாளையம், பசூர், பாசக்குட்டை பிரிவு,
குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு
குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28,
29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது
தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை
தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை
உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17, 18 ம்
தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டு
பிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை
வைக்கப்பட்டிருந்தது.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து விரிவான அறிக்கை
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து
நேற்று இரவு ஒரு தரப்பு கூறிய கருத்தை வெளியிட்டிருந்தோம். இது குறித்து
இன்று பல்வேறு தரப்பின் மூலம் அறியப்பட்ட செய்தியில் வழக்கு
காலதாமதத்திற்கு உண்மையான காரணம் நீதியரசர்களின் மாறுதல், பதவி உயர்வு
ஆகும். நீதிமன்ற வழக்கு காலதாமதத்திற்கான சில காரணங்கள், நீதிமன்ற வழக்கு
என்றாலே இன்று பட்டியல் வரிசை எண்ணில் பதிவாகி இருக்கும், ஆனால் வழக்கு
அடையவதில்லை (Reach), மீண்டும் அந்த பட்டியலில் வழக்கு இடம்பெறுவது
குறைந்தது 2 வாரமாவது ஆகும்.
மண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்
"பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல
மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர்
விஸ்வநாதன் கூறியதாவது:
தாய்மொழியைப் புறக்கணித்து நிலை நின்றார் இலர்-By தமிழண்ணல்-தினமணி கட்டுரை
தமிழகம் தவிர்த்து, பிற இந்திய மாநிலம் எதுவும்
ஆங்கிலத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடவில்லை. அவை தத்தம் தாய்மொழிகளுக்கே
ஏற்றம் தந்தன. அங்கு மேல்தட்டில் மிகக் குறைவாக விரிசல் இருந்தாலும்,
பொதுமக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியையே நாடுகின்றனர்.
தொடக்கக் கல்வியில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்கவும் அவர்கள் விரும்பவில்லை. வட இந்தியப் பெருமொழிகளான இந்தி, வங்காளம், குசராத்தி, மராத்தி யாவும் முழுமையாய் தாய்மொழி வழிக் கல்வியையே ஏற்று, விரும்பிப் படிக்க வைக்கின்றனர். அம்மொழிகள் ஒவ்வொன்றிலும் அம்மொழி எண்களே பயன்படுத்தப்படுவதாலும் இதை அறியலாம்.
தொடக்கக் கல்வியில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்கவும் அவர்கள் விரும்பவில்லை. வட இந்தியப் பெருமொழிகளான இந்தி, வங்காளம், குசராத்தி, மராத்தி யாவும் முழுமையாய் தாய்மொழி வழிக் கல்வியையே ஏற்று, விரும்பிப் படிக்க வைக்கின்றனர். அம்மொழிகள் ஒவ்வொன்றிலும் அம்மொழி எண்களே பயன்படுத்தப்படுவதாலும் இதை அறியலாம்.
வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர் By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் -தினமணி கட்டுரை
ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் செழிப்பும்
சீர்மையும் அந்த நாட்டிலுள்ள இயற்கை வளங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில்
துறையில் முன்னேற்றம், கல்வியாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றினால் மட்டும்
அமைவதன்று. ஒவ்வொரு வீட்டினரின் பங்களிப்பும் அதில் அடங்கியிருக்கிறது. ஒரு
நாடு என்பது பல சமுதாயங்களின் கூட்டமைப்பு ஆகும்.
சத்தீஷ்கார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: முதல் மந்திரி அறிவிப்பு
சத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திரதின
விழாவில் முதல்–மந்திரி ராமன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளை
அறிவித்தார்
நாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள்
ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவங்குகிறது.
நாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம்
தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், "ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில்
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம் அமலுக்கு வந்தபின், "ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர், மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில்
சிபிஎஸ்சி புதிய உத்தரவு : சி.பி.எஸ்.சி பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை .
சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளைத் தொடங்க,
மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற அறிவிப்பால் அதிக
சி.பி.எஸ்.இ பள்ளிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாநில அரசின்
தடையில்லாச் சான்றிதழைப் பெற தேவையில்லை என்ற சுற்றறிக்கை கடந்த ஜூலை 8-ஆம்
தேதி சி.பி.எஸ்.இ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளி சி.பி.எஸ்.சி
பள்ளியாக மாறுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல்
தெரிவித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பள்ளியாக
மாற்றப்படுவதற்கு ஆட்சேபனை எழும் பட்சத்தில் மட்டும், மாநில அரசின்
தடையில்லாச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்ட தனியார் பள்ளிகளைத்
தொடங்க, மாநில அரசிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை பெற வேண்டியது
கட்டாயம் என்ற நிலை இந்த புதிய அறிவிப்பால் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் நடைபெற்ற 67வது சுதந்திர தின நிகழ்ச்சிகள்
நாம் தாய்த் திரு நாட்டின் 67 வது
சுதந்திர தினவிழா தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் தொடக்கக் கல்வி
இயக்குனர் முனைவர் திரு ஆர். இளங்கோவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக
நடைபெற்றது. பேண்ட் வாத்திய முழக்கங்களுடன் இயக்குனர் அவர்கள் நமது தேசியக்
கொடியை ஏற்றி வைத்தார். இணை இயக்குனர் திருமதி லதா அவர்களும் கலந்து
கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தார். பின்னர் பள்ளி மாணவர்களின்
கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இயக்குனர் அவர்கள் சுருக்கமாகவும் சிறப்பாகவும் சுதந்திர தின உரை
ஆற்றினார். 
டி.இ.டி., தேர்வுக்கு "சூப்பர் டிப்ஸ்"
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர
மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங்
நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.
* ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர்,
பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனி, புதிய
பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய
வேண்டும்.கோவை மாவட்டம்ஆனைமலை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கவன ஈர்ப்புபோராட்டம்
கோவை
மாவட்டம்,ஆனைமலை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக (13.08.2013) மாலை 5 மணிக்கு ஆனைமலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம்
முன்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டி
நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு வட்டாரத் தலைவர்.திரு.ஆர் உத்தர்ராஜ்
அவர்கள் தலைமை தாங்கினார். செயலர் திரு.குமார் அவர்கள் வரவேற்பு
நல்கினார். மாவட்ட் செயலாளர் திரு ஏ.நாச்சிமுத்து அவர்கள் கோரிக்கைகள்
பற்றி விளக்கினார். அலுவலகச் செயலர் திரு.ப.கனகராஜ் அவர்கள் ஊதிய இழப்புப்
பற்றி விளக்கினார். பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சார்ந்த திரு.திருமூர்த்தி,
ராஜசேகர் போராட்ட வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்டத் துணைச் செயலாளர்
திரு.ஏ.மோகன்ராஜ் வாழ்த்தினார். சுமார் 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டு
ஆர்ப்பரித்தனர். வட்டாரப் பொருளர் திரு.சாந்தகுமார் அவர்கள் நன்றி
கூறினார்-- திரு.டி.குமார். வட்டாரச் செயலாளர்



G.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் விளக்கம்.
OPTION பற்றிய விளக்கம்.
1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு
நிலை எய்தியவர்கள் ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம்
செய்துகொள்ளும் போது, முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை
பெற்ற காலம் வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு
நிலைக்கு பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
அதாவது 9300 - 34800 + G.P. 4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
சுதந்திர தினம் -சிறப்புக்கட்டுரை
‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்லலாம்.
தொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது
முடுக்கு - முடங்காதே!
இனிய தோழர்களே! தினமும் போராட்ட களத்திற்கு அறை
கூவல் விடுகிறேன் என்று என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால்
இந்த சமயத்தில் இயலவில்லையென்றால் நிச்சயம் எதிர்கால ஆசிரியர் சமுதாயம்
நம்மை மன்னிக்காது. போராட்ட களத்தை ஒவ்வொரு
நாளும் சூடேற்றுவது ஒவ்வொரு இயக்க உறுப்பினரின் கடமை. இப்பொழுதும்
போராடாமல் வீட்டுக்குள் முடங்கினாள் நிச்சயமாக உன் இனத்தையே முடக்கி
விடுவார்கள். உன் இனம் முடங்குவதற்கு நீ காரணமாக இருக்க போகிறாயா?. நீ
களத்திற்கு வரத் தயங்கிவிட்டு இயக்க பொறுப்பாளர்களை வழக்கம்போல் குற்றம்
சுமத்த போகிறாயா? யாரோ போரடி பெற்றுத் தருவார்கள் நமக்கென்ன? என்று நீ
இருந்தால் நிச்சயம் வரலாறு உன்னை மன்னிக்காது.
பாதகம் செய்பவரை கண்டால்
நீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman Stories)
தெனாலி ராமன் கதைகள் - காளியிடம் வரம் பெற்ற கதை
சுமார்
நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு
சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன்.
இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும்
தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து
வந்தனர்
அரசு ஊழியர்களுக்கான இயல்பான பணியிடமாற்ற உத்தரவுகளில் கோர்ட்டு தலையிடாது ஐகோர்ட்டு உத்தரவு
சென்னையில்
உள்ள ராணுவ பொறியியல் சேவை நிறுவனத்தில் 1985-ம் ஆண்டு பி.ஆர்.ஆனந்தகுமார்
என்பவர் சர்வேயராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அவர்
விசாகப்பட்டினத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை
எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆனந்தகுமார் மனு தாக்கல்
செய்தார்.
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் பற்றிய சிறப்பு கட்டுரை: உங்கள் வேகம்... எங்கள் சோகம் - தேவராஜன் தஞ்சாவூர்
எனதருமை இயக்கத் தலைவர்களே...
தயவு செய்து மீண்டும் எம் மக்களுடன்
கைகோர்த்து அரை கிணறு தாண்டி
அலைக்கழிக்காதீர்கள்..
சங்கங்களால் சிதறிக்கிடக்கும் நாம்
தனித்துப்போராட்டக்
களத்தில்உரிமைகளை வென்றெடுப்பது
பகல் கனவு காண்பதற்கு நிகர். ஒவ்வொரு
சங்கமும் போட்டி போட்டுக்கொண்டு
டி.இ.டி., தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக,தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பணிகளை
புறக்கணிப்பதாக, முதுகலை ஆசிரியர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆக.,17ல், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தாள் 1 தேர்வு, 27 மையங்களிலும்,
ஆக.,18 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 தேர்வுகளும் நடக்கின்றன.
இத்தேர்வை, 6 லட்சத்து 85 ஆயிரத்து 416 பேர் எழுதுகின்றனர். கல்வித்துறை
இணை இயக்குனர்கள் பல மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்வுப் பணிகளை
கண்காணித்து வருகின்றனர்.
மதுரை உட்பட 5 மாவட்டங்களில், இணை இயக்குனர் உமா தலைமையில் தேர்வுப் பணிகள்
நடக்கின்றன. 44 மையங்களில், 26 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தேர்வு
மையங்களில், ஆசிரியர்களுக்கான பணிகள் ஒதுக்கீடு தற்போது முடிந்துள்ளது.
இதில், "முதுகலை ஆசிரியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை" என்ற
சர்ச்சை எழுந்ததால், தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக, தமிழ்நாடு மேல்நிலை
முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது
பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்குழு கூட்டம், நாளை நடத்த வேண்டும்
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்
மேலாண்மை வளர்ச்சிக்குழு சிறப்பு கூட்டம் நாளை (15ம் தேதி) நடத்தப்பட
வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தமிழரசு
உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 - திருத்தம் - தமிழ்நாடு மாநிலப் பணி / பிறவகை பணிகளின் கீழுள்ள ஒய்வு பெற்றவர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையின் மீது அரசு / சம்பந்தப்பட்ட துறை, அந்த ஒழுங்கு நடவடிக்கையின் மீது, நடவடிக்கை மேற்கொள்வது - அதிகாரம் வழங்குவது குறித்த திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை
எதிர்த்து மேலும் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில்
தொடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று கொண்ட தனி
நீதிபதி அவர்கள் வழக்கின் முக்கியவத்தை கருதி தனி நீதிபதி அவர்கள் இந்த
வழக்கு மற்ற வழக்குகளுடன் சேர்த்து, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி
உத்தரவிடப்பட்டுள்ளார்.இதையடுத்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஒருங்கிணைத்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில்
விசாரணைக்கு வருகிறது.
அச்சம் தவிர் !இன்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இரண்டு விசயங்களில்
அச்சம் தவிர்
இன்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இரண்டு விசயங்களில்
1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்.
2. தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை கைவிடுதல்.
இந்த இரண்டு விசயங்கள் நிறைவேறினால் ஒரளவு ஆசிரியர்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறையும். இதை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல
என்பதை அனைவரும் புரிந்து வைத்துள்ளார்கள். இதை பெறுவற்கான வழிதான்
கூட்டுப்போராட்டம். இதை முன்னெடுக்கும் சங்கங்களை சிலர் இழித்தும்,
பழித்தும் பேசுவது என்பது கோரிக்கைகளை ஊனப்படுத்தும் செயல். இன்றைய சூழலில்
பெண் ஆசிரியர்களை அதிகம் கொண்டுள்ள இத்துறையில் அவர்களை போராட்ட
களத்திற்கு அழைத்து வருவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். இன்றைய
பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் பொரும்பாலோர் போராடினால் பாதிப்பு வருமா?
என்ற ஐயநிலையுடன் உள்ளனர்.
ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் நேற்று நடந்தது. வட்டார தலைவர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
சுமார் 60 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகளை இன்றைய ஆசிரிய சமுகம் தக்க வைத்துக் கொள்வதோடு அடுத்த இடத்தைப் பெற்றுத் தர நமது கடமை என்ன? thanks to. தஞ்சை ஜோதி தமிழன்
"உங்களுக்குக் கல்வி கற்பித்த
ஆசிரியரையும்,கடவுளையும் ஒரே சமயத்தில்
ஒரே இடத்தில் சந்தித்தால்,நீங்கள் யாருக்கு
முதலில் வணக்கம் செய்வீர்கள்"?
என சுவாமி குரு நானக்கிடம் அவரது சீடர் ஒருவர் கேட்டாராம்
அதற்கு சுவாமி குரு நானக் கூறியது" நான் முதலில் என் ஆசிரியருக்கு
வணக்கம் செய்து விட்டுத்தான் கடவுளை
வணங்குவேன் காரணம் கடவுள் ஒருவர் இருக்கிறார்
அவரை வணங்க வேண்டும் என்று எனக்க எடுத்துரைத்தவர்
சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி வட்டார கவன ஈர்ப்பு கோரிக்க முழக்க ஆர்பாட்டகாட்சி
இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் 4200 ஆக உயர்த்தக்கோரி அரசின் கவனமீர்க்க இன்று மாலைசென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி வட்டார கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்பாட்டகாட்சி
தலைமை திரு க.சாந்தகுமார்-தலைமைநிலையச்செயலர் மற்றும் வட்டாரத்தலைவர் திரு செல்லசாமி சுகுமாறன் ஆகியோருடன் ஆசிரியர்கள்
.
இன்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் கோரிக்கை முழக்க ஆர்பாட்ட புகைப்படங்கள்
இடைநிலை ஆசிரியர் தர ஊதியம்4200 ஆக உயர்த்தக்கோரி அரசின் கவனமீர்க்க நாமக்கல் வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின் கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் பொதுச்செயலர் (பொறுப்பு) திரு.க.செல்வராஜ் அவர்கள்தலைமையில் நடைபெற்றது.




டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 17 லட்சத்து 552 பேர் விண்ணப்பித்த நிலையில், 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.
வரும், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு
நடக்கிறது. இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட
ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல்,
கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்களுக்கு வலைதள செய்திக்குழுவின் அன்பான வேண்டுகோள்
இன்று (13/08/13) மாலை நடைபெறும் உதவித்தொடக்ககல்வி அலுவலகம் முன்பான கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்திமுடிக்க கேட்டுக்கொள்கிறோம்.
போராட்ட களத்தின் நிழற்படங்களை உடனுக்குடன் taakootani@gmail.com அல்லது raks2307@hotmail.com என்ற ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பேரணிச்செய்திக்கு தனியாக போட்டோக்களும் செய்தி அறிக்கைகளும் வட்டார செயலர்கள்
நிர்வாக ஆசிரியர் ,ஆசிரியர் பேரணி,
எனக்குறிப்பிட்டு நாமக்கல் அலுவலக
முகவரிக்கு அனுப்பகேட்டுக்கொள்ளப்படுகிறது
.
போராட்டம் வெற்றிபெற வலைதள செய்திக்குழு வாழ்த்துகிறது.
வலைதள செய்திக்குழு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
போராட்ட களத்தின் நிழற்படங்களை உடனுக்குடன் taakootani@gmail.com அல்லது raks2307@hotmail.com என்ற ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பேரணிச்செய்திக்கு தனியாக போட்டோக்களும் செய்தி அறிக்கைகளும் வட்டார செயலர்கள்
நிர்வாக ஆசிரியர் ,ஆசிரியர் பேரணி,
எனக்குறிப்பிட்டு நாமக்கல் அலுவலக
முகவரிக்கு அனுப்பகேட்டுக்கொள்ளப்படுகிறது
.
போராட்டம் வெற்றிபெற வலைதள செய்திக்குழு வாழ்த்துகிறது.
வலைதள செய்திக்குழு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
இது தான் இன்றைய இடைநிலை ஆசிரியரின் கதை .
அன்று விதைத்தவன்
பலனின்றி சென்றான்
பின் வந்தவன்
பலனடைந்தான்
பலனடைந்தவன்
பாதுகாத்தான்
இன்று வந்தவன்
இறுமாப்பு கொண்டான்
பாதுகாப்புக்கு கூட
வரவில்லை
பலன் எப்படி கிடைக்கும்.
பி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்பங்கள் விநியோகம்
பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் 2,118 பி.எட்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறுகிறது
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் 2,118 பி.எட்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2013-14 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறுகிறது
குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
"பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.
சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, "டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, "கிடுக்கிப்பிடி' போடப்பட்டு உள்ளது. தனிவருகைப் பதிவேட்டில் பதிவு செய்யவும், வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பள்ளிகளில், ஆக., 15ம் தேதியன்று, சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும். அன்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, கொடி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில், பள்ளிக்கு எந்த ஆசிரியர்களும் வருவது கிடையாது
வரலாறு: 14 ஆம் நூற்றாண்டின் அரிய "செப்பு காசு" கண்டுபிடிப்பு
கடந்த 14 ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, அரிய செப்பு காசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"இஸ்லாமியர்கள் ஆட்சியை நீக்கி விட்டு, விஜய நகர அரசு, வாணாதிராயர்களிடம்,
ஆட்சியை ஒப்படைத்தது. மாவலி வாணதிராயர்களின் செப்பு காசுகள், அப்போது
பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
35 சத்துணவு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் 35 சத்துணவு
அமைப்பாளர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24-ந்
தேதி மாவட்டத்தில் உள்ள 2,373 அங்கன்வாடி, மற்றும் பள்ளிகளில் ஆய்வு
மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்ற இருந்த பள்ளி சத்துணவு
அமைப்பாளர்கள் மீதும், குறைந்த அளவு உணவு வழங்கிய அங்கன்வாடி ஊழியர்கள்
மீதும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு அமைப்பாளர்களை பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சம்பத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவர்களுக்கு பாஸ் வழங்குவதில் தாமதம்; பாதியில் இறக்கிவிடும் பரிதாபம்
ராமநாதபுரம் டவுன் பகுதியில் மட்டும் 1600பேருக்கு இலவச
பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் பயணம் செய்ய
முடியாமல் சிரமப்படுகின்றனர். கிராமப்புற மாணவர்கள் சீருடை
அணிந்திருந்தும், இலவச பஸ் பாஸ் இல்லாததால் நடு வழியில் இறக்கி விடும்
சம்பவம் அதிகரித்துள்ளதால், மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஊரகத் திறனாய்வு தேர்வு: பள்ளிகளில் விண்ணப்பம் சேகரிப்பு
செப்டம்பர் 22ம் தேதி நடக்கும் ஊரகத் திறானய்வு தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தின் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது
தமிழகத்தின் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது
இணை இயக்குநர்கள் மாற்றம் | பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு
இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.சபீதா
வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:– (அதிகாரிகளின் பழைய பதவி
அடைப்புக்குறிப்புக்குள் கொடுக்கப்பட்டு உள்ளது)
இடமாற்றம்
1. ஏ.கருப்பசாமி – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி (இணை இயக்குநர்–பணியாளர், தொடக்கக்கல்வி இயக்ககம்)
2. வி.பாலமுருகன் – இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்கம்
(இணை இயக்குநர் (பாடத்திட்டம்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம்)
Subscribe to:
Posts (Atom)