Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7வது ஊதியக்குழு பரிந்துரை அமலுக்கு வருமா? - நாளை மறுநாள் தெரியும்! தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள்.

⭐நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  
⭐ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
⭐இதையடுத்து வழக்கு தொடருவும் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். 

⭐இந்நிலையில், நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  

⭐இதில், பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 7 வது ஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

⭐மழைகால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஒரு வார காலமாகவே அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.   
  

No comments:

Post a Comment