Labels

rp

Blogging Tips 2017

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி


மாணவர்களை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் ஆசிரியர்கள் பணி சிறக்க வேண்டும்: முதல்வர் வாழ்த்து

மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கற்பித்து, அவர்களைத் தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் ஆசிரியர்கள் பணி சிறக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி

நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவுகூறும் வகையில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம்.
         இந்நிலையில், நாளை கொண்டாடவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும்

சிறையில் ஆசிரியர் பணியிடம் செப்., 18ல் நேர்காணல்

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியருக்கான நான்கு பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி வெளியிட்ட அறிக்கை: 
         கோவை மத்திய சிறையில், காலியாக உள்ள நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, ஆசிரியர் பட்டயப்படிப்புடன்,இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொதுப்போட்டி, இன சுழற்சிஅடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி

ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
         அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழ் 4582 பேர் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்களாக பணிபுரிகின்றனர்.தமிழக அரசு 2006 ல்,' ஆண்டுதோறும் 500 வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்,

மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
      பணிபுரியும் பெண்களுக்கு தாய்மைஅடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது.

ஆசிரியர்களுக்கு மீண்டும் இடமாறுதல் கலந்தாய்வு

ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு 377 ஆசிரியர்கள் தேர்வு

ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

மறைந்த முன்னாள் ஜானதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செம்படர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை

பள்ளிகளில் ( செப்.1 - 7 ) ஊட்ச்சத்து வாரம் கொண்டாட இயக்குநர் ஆணை .

மாவட்ட செயலர்கள்விருதுபெற்றோர் விவரம் அனுப்புக - tntf

 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணினைச்சார்ந்த ஆசிரியர்கள் பலர் டாக்டர் ராதக்கிருஷ்ணன் விருது,மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதனை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் பொதுசெயலர் மற்றும் மாநில நிர்வாகிகள் சேர்ந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விருதுபெற்ற ஆசிரியர்கள் புகைப்படம் மற்றும் முழு விவரங்கள்(பெயர்,பதவி,ம்பணியாற்றும் பள்ளி,ஒன்றியம் ,மாவட்டம், முகவரி) குறிப்பிட்டு மாநில அமைப்பிற்கு உடன் அனுப்பவும் ,மற்றும் இணையதளம் ,ஆசிரியர் பேரணி இதழில் வெளியிடும் வண்ணம்  tntfwesite@gmail.com, vsmuthusamy@yaahoo.com, taakootany@gmail.com, rakshith2307@ymail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மாவட்ட,வட்டாரப்பொறுப்பாளர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்
தகவல்-கே.பி.ரக்‌ஷித்.மாநில துணைத்தலைவர்

ஆசிரியர் தினத்தைமுன்னிட்டு இவ்வாண்டு ,மாநில அளவில்டாக்டர் ராதாக்கிருஷ்ணன் விருதும் தேசிய நல்லாசிரியர் விருதும் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் -பொதுசெயலர் செ.மு

இவ் வாண்டு ஆசிரியர்தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாக்கிருஷ்ணன் விருது மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது நல்வாழ்த்துக்களை பொதுசெயலர் செ.முத்துசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் திரு க செல்வராஜ்(பொறுப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்களின் சிறந்த பணியும் சேவையும் தொடர )பொதுசெயலர்,திரு கு,சி.மணி தலைவர்,மற்றும் தே.அலெக்சாண்டர் மாநில் பொருளாளர் ஆகியோர் வாழ்த்துவதாகவும் தமது கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
          தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணினைச்சார்ந்த ஆசிரியர்கள் பலர் இவ்விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதனை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விருதுபெற்ற ஆசிரியர்கள் புகைப்படம் மற்றும் முழு விவரங்கள்(பெயர்,பதவி,ம்பணியாற்றும் பள்ளி,ஒன்றியம் ,மாவட்டம், முகவரி) குறிப்பிட்டு மாநில அமைப்பிற்கு உடன் அனுப்பவும் ,மற்றும் இணையதளம் ,ஆசிரியர் பேரணி இதழில் வெளியிடும் வண்ணம்  tntfwesite@gmail.com,vsmuthusamy@yaahoo.com,taakootany@gmail.com,rakshith2307@ymail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மாவட்ட,வட்டாரப்பொறுப்பாளர்கள்  கேட்டுக்கொள்ளப்ப்படுகிரார்கள்
தகவல்-கே.பி.ரக்‌ஷித்.மாநில துணைத்தலைவர்

போராட்டத்தில் பங்கேற்ற Part Time Teachers பட்டியலை திரட்டும் அரசு

பணி நிரந்தரம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திரட்டி  வருவதால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசின்  கவனத்துக்கு எடுத்து செல்லும்  வகையில் கடந்த 31ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்,

வருகிறது பாடத்திட்டத்தில் மாற்றம்

புதுடில்லி: விலங்குகளிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

             இதற்கு பிள்ளையார் சுழி போட்டது குஜராத் மாநிலம் தான். அங்கு தான் இம்முறை முதலில் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை

ஓபன் யுனிவர்சிட்டியில் பிஎஸ்சி, அடுத்த ஆண்டு முதல் படிக்கலாம்

2016-17ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. தொலைநிலைக் கல்வி வாயிலாக விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BRTE Mutual Transfer : ஆசிரியப்பயிற்றுனர்கள் மனமொத்த மாறுதல் தேதி அறிவிப்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு


பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையாளர் ஜோப்பிரின்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

உதவித்தொகை சம்பந்தமான தகவல்களையும், விண்ணப்பத்தையும், http://tirunelveli.nic.in./pdf/cg/.scholar.pdf என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் 16 கோடி கனஅடியாக சரிவு : பூமிக்குள் கடல்நீர் ஊடுருவும் அபாயம்

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 16 கோடி கனஅடியாகக் குறைந்துள்ளதால், 2020- ல் கடல் நீர் பூமிக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 லட்சம் கிணறு கள், 39 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 91 ஆயிரம் கிணறு கள், 6 லட்சத்து 21 ஆயிரம் ஆழ் துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 60 சதவீத கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தற்போது வறண்டுபோய் உள்ளன.

ஆண் குழந்தைகளுக்காக ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்: அஞ்சல் துறை அறிவிப்பு

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக அஞ்சல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,

பள்ளிகளில் நன்னெறி கல்வி: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லுாரிகளில் நன்னெறி கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், 'இதுபற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுஉள்ளது.

மதுரை அண்ணா நகர் ராஜேந்திரன், தாக்கல் செய்த பொது நல மனு:பள்ளிகளில் முன்பு, நாட்டுப் பற்று, கலாசாரம், நீதி, நேர்மையை கற்பிப்பது வழக்கம். இப்போது,

TET : உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள் வரும் அக்டோபர் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

‛இ-பைலிங்’ மூலம் வருமான வரித் தாக்கல்: 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு


‛ஆன்-லைன்’ மூலம் ‛இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2014-15-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும். எனினும், வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

"காலாவதியான எல்.ஐ.சி. பாலிசிகளை புதுப்பிக்க 2 மாதம் வரை சிறப்பு முகாம்'

பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் அக்டோபர் இறுதி வரை நடைபெறும் என, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். சென்னையில் எல்.ஐ.சி.யின் 59-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அண்ணாசாலை எல்.ஐ.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காப்பீட்டு வார விழா நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன், வாடிக்கையாளர்கள் சிறப்புச் சேவை மையத்தைத் தொடங்கி வைத்தார்

SSA திட்டம் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகளில் துவங்கிய ,தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் விபரம்!


Achievements under SSA

New Schools opened under SSA since 2001-02

Year           Primary Schools           +Upper  Primary Schools

2001-02                   -454.            -197

2002-03                   -304.            -479


2003-04.                 -356.            -399

2004-05.                -0.                 -1031

தேசிய நல்லாசிரியர் விருது: 25 ஆசிரியர்கள் தேர்வு

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி 

  • சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ளமீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்தசொர்ணாபாய்

  • திருவள்ளூர் மாவட்டம்தலக்கஞ்சேரி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த தாஸ்

  • தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி பாலசுப்பிரமணியன்

செப்.8-இல் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட ஏர்வாடியில் உள்ள செய்யது அபுபக்கர் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழா வரும் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

சென்னையில் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் செப்டம்பர் 22முதல் 25 வரை இயக்கப்பணி.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் இருதய அறுவைசிகிச்சை முடித்து 6 மாத ஓய்வுக்குப்பின்னர் வரும் 22.09.2015 செவ்வாய் முதல் 25.09.2015 வெள்ளி வரையிலான 4 நாட்கள் தங்கியிருந்து இயக்கப்பணியினை கவனிக்க உள்ளார். மேலும் தொடக்கக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர்,S.S.A,இயக்குனர், மற்றும் கல்வித்துறை செயலர் ஆகியோர்களை

மாணவர்களுக்கு இலவச வாய்ப்பாடு வழங்கப்படும்-கல்வி அமைச்சர்

பள்ளி கழிவறை சுத்தம் செய்வது யார் ,அமைச்சர் விளக்கம்

பி.இ. முடித்தவர்கள் பி.எட். படிக்கலாமா? அமைச்சர் விளக்கம்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பொறியியல் முடித்தவர்கள் பி.எட். படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.
சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,இந்திய கம்யூனிஸ்ட் சட்டப் பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டி பேசுகையில் ,"பி.எட். படிப்பை பொறியியல் முடித்தவர்களும் படிக்கலாம் என இம்முறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியானால், பி.இ. முடிப்பவர்கள் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேரமுடியுமா என்ற சந்தேகமும், குழப்பமும் ஏற்படுகிறது'' என்று கூறினார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையிலோ, அமைச்சர் பதில் உரையிலோ, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 1.50 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி, குறைந்தது, நான்கு லட்சம் ஆசிரியர்கள் தேவை; ஆனால், இதில், 30 சதவீத இடங்களில் ஆசிரியர்கள் இல்லை.உள்ளன; இவற்றில் சேர, எட்டு லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையிலோ, அமைச்சர் பதில் உரையிலோ, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
காத்திருப்பு:

அதேநேரத்தில், ஆசிரியர் பணிக்காக, பி.எட்., மற்றும் எம்.எட்., படித்து விட்டு, எட்டு லட்சம் பேர், தமிழகம் முழுவதும் உள்ள

RTI என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 -ஓர் விளக்கம்

1. RTI என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 என்பதன் சுருக்கமாகும்.

2. RTI போடுதல் என்பது, அச்சட்டத்தின் படி மனு செய்வதாகும்.

3. ஒரு அரசு அலுவலகத்தின் உண்மையான நடைமுறைகள் என்ன என்பதையும், முன்பு நீங்கள் செய்த கோரிக்கை மனு தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை அறியவும், ஒரு அரசு அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் விவரங்களை நகல்களாகக் கோரவும் RTI போடலாம்

குறைபாடுகளை நேரடியாக பிரதமரிடம் தெரிவித்தால் நடவடிக்கை: மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

துறை ரீதியாக தங்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்து பிரதமரிடம் நேரடியாக முறையிடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம், துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள் உள்பட
அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

தனியார் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.

பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை

(1.9.15) சட்டமன்றத்தில் பள்ளி மானிய கோரிக்கையில் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்:

துறைத்தேர்வுகள் அறிவிப்பு

Vijay Indiya Tamilan's photo.

வெற்றியை நிர்ணயிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு வெளியிட்டுள்ளது. இம்முடிவுகளின்படி ஆளும் அ.தி.மு.கவுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.கவிற்கும் இடையேயான போட்டி கடுமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ஆளும் அ.தி.மு.க வே 2%, 3% வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளது

தமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர் பதவிகளை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பதவிகளை 2 மாதங்களுக்குள் நிரப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுனர் பதவிகள் காலியாக உள்ளன.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகளையும் முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 9 அறிவிப்புகளையும் முழுமையாக நிறைவேற்றி உயர் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.

உயர் கல்வித்துறை சாதனை

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு 110 விதியின் கீழ் கல்வித்துறைக்கு என்று 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அனைத்து அறிவிப்புகளை

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: கே.சி வீரமணி விளக்கம்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பள்ளிகல்வித்துறைக்கான மானியக் கோரிக்கைகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  •  01.09.2015  வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
  • இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரனைக்கு வந்தது
  • தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் சலுகை வழங்கிய Go 25  அரசானையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது திரு S. வின்சென்ட் உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு 25.09.2015  வழங்கப்பட்டது.

அதேஇ - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் - 2015 : விண்ணபிக்க வேண்டிய கால அவகாசம் நீட்டிப்பு - இயக்குனர் அறிவிப்பு


நடப்பு கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும பன்னிரென்டாம் வகுப்புக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ்

நடப்பு கல்வியாண்டு முதல் ;பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பின் அரசுத்தேர்வுகளுக்கு இரண்டும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

பிஎட் சிலபஸ் வெளியீடு

-பிஎட்முதலாமாண்டிறக்கான டிராப்ட் சிலபஸ் பல்கலை இணையத்தில் வெளியீடு
CLICK HERE

3 ஆண்டாக அறிவிப்பில்லாத ஆசிரியர் பணியிடங்கள்!-இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா?

 தமிழகம் முழுவதும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படும், கூடுதல் புதிய பணியிடங்கள் அறிவிப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் மானியக்கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என கல்வித்துறை வட்டாரங்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ், கடந்த, 2001 முதல் 10 வரை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு வெறும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான, ஐந்து ஆசிரியர்கள் பணியிடங்கள்
மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஒன்பது ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டது.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாய்; பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் போது, மாதம், 2,000 ரூபாய் கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது.இதற்கான நுழைவுத் தேர்வு, முதலில் மாநில அளவில் நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, தேசிய அளவில் தேர்வு நடக்கும்.


மாநில தேர்வு, தமிழகத்தில், நவ., 8ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறையின் அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 'விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், வரும், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், வரும், 10ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்

தள்ளாடுது எஸ்.எஸ்.ஏ. சர்ச்சையில் ஆர்.எம்.எஸ்.ஏ., கல்வித் திட்டங்களுக்கு விரயமாகிறதா மத்திய அரசு நிதி

மதுரை:கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர் கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன

377 ஆசிரியர்கள்ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது.

           இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப் பள்ளி, 201; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, 134; மெட்ரிக், 30; ஆங்கிலோ இந்தியன் பள்ளி, இரண்டு; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

தேர்வு துறை இணையதளத்தில் தனியார் நிறுவனத்துக்கு 'லிங்க்'

  தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்தும், அரசு தேர்வுகள் துறை இணையதளம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், தேர்வு மற்றும் துறை ரீதியான ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது.

             முக்கிய தகவல்கள்:பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசு தேர்வுகள் துறை தனி அமைப்பாக செயல்படுகிறது. இந்த துறை சார்பில், தொழிற்கல்வி டிப்ளமோ தேர்வு, திறனறித் தேர்வு, மத்திய அரசின் திறனாய்வு தேர்வு உட்பட, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுத் துறைக்கு, www.tndge.in என்ற இணையதளம் உள்ளது.

அண்ணாமலை பல்கலை 'தொலைதூர படிப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம்'

அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் ஆறுமுகம், தாக்கல் செய்த மனு:யு.ஜி.சி., உத்தரவுப்படி, 1979 - 80ல், அண்ணாமலை பல்கலையில், தொலைதுார கல்வி துவங்கப்பட்டது. நாடு முழுவதும், 89 மையங்கள் மூலம், தொலைதுார கல்வி வழங்கி வருகிறோம். கடந்த மாதம், 14ம் தேதி, டில்லியில் உள்ள, யு.ஜி.சி.,யின் தொலைதுார கல்வி அமைப்பு, எங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

22 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர் தகவல்

 தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு; அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

 பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற செப்.,02 அன்று காலை 10.00 மணி முதல் செப்.,09 வரை தாங்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுமுதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. 

           சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல்

40 தலைமை ஆசிரியர்களுக்கு DEO பதவி உயர்வு செப்.7 முதல் 19 வரை பயிற்சி

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

நாளை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை- குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள் வரலாம் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக சட்டசபையில், உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், நாளை நடைபெற உள்ளது. அப்போது, உயர் கல்வித்துறை குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள் வரலாம் என, கல்வியாளர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
உயர் கல்வித்துறை, கடிவாளமில்லாத குதிரை போல இயங்கி வருவதாக, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில், தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. பணி நியமனங்கள், பாடத்திட்டம் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
* சமீபத்தில் நடந்த உதவிப் பேராசிரியர் நியமனத்தில், தேர்வு விதிகள் மீறப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு, உயர் கல்வித்துறை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஜாக்டோ மாநில உயர்மட்டகுழுக்கூட்ட முடிவுகள்

ஜாக்டோ மாநிலஉயர்மட்டக்குழு கூட்டம் 30.08.2015 காலை 10 மணியளவில் திருச்சியில் திருச்சி சேவா சங்க மகளிர்மேல்நிலைப்பள்ளியில் கூடியது.கூட்டத்திற்கு சுழற்சி முறையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் பாவலர் திருமிகு.மீனாட்சி சுந்தரம் அவர்களும்,தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுசெயலர்.திருமிகு எத்திராஜ் அவர்களும் கூட்டுத் தலைமை யேற்று நடத்தினர்.ஜாக்டோவில் உள்ள 24 சங்கங்களில் 19 சங்கம் சார்ந்த மாநில பொறுப்பாளர்கள் வருகை தந்து ஒருமித்த கருத்துகள் எடுத்தனர்.இக்கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலர்(பொறுப்பு)திரு.க.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
கூட்ட முடிவுகள்
  • ஜாக்டோவின்   15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 8 ம் தேதியன்று அனைத்துபள்ளிகளையும் மூடி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்ஈடுபடுவது என்றும் அதில் அனைத்து ஆசிரியர்களையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவாற்றியது

T E A C H E R.- ஆசிரியர் என்றால். ?


பலனளிக்காத கம்ப்யூட்டர் வசதிகள்:தனியார் இன்டர்நெட் மையங்களில் ஆசிரியர்கள் தவம்

அரசு வழங்கிய கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், பள்ளி மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்க்கும் பணிக்காக ஆசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கின்றனர்.

கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு 13 வகையான இலவச பொருட்களை அரசு வழங்குகிறது. இது தவிர அரசு திறனாய்வுத்தேர்வு, உதவித்தொகை, பிற்பட்டோர், சிறுபான்மையின நலம் உள்ளிட்ட

செப்டம்பர் மாத நாட்காட்டி- 2015 உயர் நிலை ,மேல்நிலை,தொடக்க ,நடுநிலை பள்ளிகளுக்கான வேலைநாட்கள் பட்டியல் !

பள்ளிக்கல்வி - பள்ளிகள் 2015/2016 கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ பாடபுத்தகங்களை "தமிழ்நாடு பாடநூல் கழகம்" இணையதளத்தில் "ONLINE" பதிந்து, புத்தகங்களை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது - இயக்குனர் செயல்முறைகள்

G.O Ms: 414 - காலை மாலை அனுமதி அரசானை - அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் முன் அனுமதியுடன் அல்லது அனுமதி இல்லாமல் காலதாமத வருகைக்கு அனுமதி உண்டு - விதிமுறைகள்


பள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம்

பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

             பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பாட்னாவில் 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை முதல்வர் நிதிஷ்குமார் நேற்று

கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு

'அரசு நலத்திட்ட பணிகளுடன், கூடுதலாக, 'ஆதார்' அட்டை வழங்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள், 'லேப்-டாப்' உட்பட, 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

        கற்பித்தல் பணியில் சுணக்கம் :இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று, வினியோகம் செய்ய வேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணியில் சுணக்கம்

மாணவியர் விடுதிகளில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் செயல்படும் மாணவியர் விடுதிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், பிளஸ் 2 வரை படித்த பெண்களே வார்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், தலா, 100 மாணவியர் தங்கியிருக்கும் விடுதியில், அதில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது.

             கோரிக்கை:ஆசிரியர் கல்வித்தகுதியில், காலமுறை ஊதியத்தில், வார்டன் நியமிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில்,

20 ஆண்டுகளாக உயர்த்தப்படாத உதவித்தொகை: ஊரக திறனாய்வு தேர்வில் மாணவர்களுக்கு ஆர்வமில்லை

ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு, 20 ஆண்டுகளாக, உதவித்தொகை உயர்த்தப்படாமலேயே உள்ளதால், அதற்கான போட்டித்தேர்வில் பங்கேற்க, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், கிராமப்புற அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பில், 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். ஆண்டு குடும்ப வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்

மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.

     புதுடெல்லி: மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசின் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ALL DISTRICT ELEMENTARY DEEO'S CONTACT PHONE NUMBERS

அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தின் கீழ் மாணவியர், சிறுபான்மை, பட்டியலின மாணவ, மாணவியர் மற்றும் நகர்ப்புற நலிவடைந்த குழந்தைகளின் அறிவியல் அறிவை வளப்படுத்த, இலவசமாக அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகளில்,

அறிவியல் 'இன்ஸ்பயர்' விருது:இறுதி போட்டிக்கு 460 பேர் தகுதி

தமிழக அரசின், 'புத்தாக்க அறிவியல் விருது' இறுதிப் போட்டிக்கு, 460 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சென்னை கல்வி மாவட்டத்திலிருந்து, 34 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'இன்ஸ்பயர்' என்ற புத்தாக்க அறிவியல் விருது வழங்கப்படுகிறது. 

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!

Annamalai University May-2015 Exam Result

12th Std Quarterly Exam Time table2015

22/08/2015, 29/08/2015 PRIMARY & UPPER PRIMARY "CRC MODULE"


web stats

web stats