ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
இளைஞர் எழுச்சி தின அறிவியல் போட்டியில்பெரியகுளம் அரசு பள்ளி மாணவி வினிதா முதலிடம்

பி.எட். சேர்க்கை கலந்தாய்வு நிறைவு
இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமைக்கு மாற்றமா?
வரும் வெள்ளி அன்று அறிவிக்கப்பட்டுள்ள மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட உள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான அரசாணை திங்கள் அன்று வெளிவருகிறது.
திரு.சாந்தகுமார் தலைமை நிலையச்செயலர் TNTF
"7 வது ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டும்'
ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டுமென அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினார். கடலூரில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் ஊதியக்குழு தனது அறிக்கையை தயாராக வைத்துள்ள நிலையில், அதனை காலதாமதமாகப் பெறுவதற்கு டிசம்பர் வரையில் மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இது ஊதிய மாற்றத்தை தள்ளிப்போடும் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதைக் காட்டுகிறது.
மாநில அரசுகளைப் பொறுத்தவரை ஊதியக் குழு அறிவிக்கும் சலுகைகளை மத்திய அரசுக்கு இணையாக வழங்குவதில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.
இளநிலைபட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்: நாடு முழுவதும் சீரான நடைமுறை
இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற வகையில், நாடு முழுவதும் சீரான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான அதிகபட்ச காலஅவகாசம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் மாறுபட்டு இருப்பது கவனத்துக்கு வந்தது. இந்த அதிகபட்ச கால அவகாசத்தை நாடு முழுமைக்கும் சீராக்கும் வகையில், ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ளது.
தமிழ்நாடு ஆங்கில நாடாக மாறிவிட்டதா?
நாங்க பிழைக்கவே முடியாதா இங்கிலீஷ் தெரிஞ்சாதான் பிழைக்க முடியுமா என்ற அந்தக் கிராமத்து மாணவியின் கேள்வி என் மனசாட்சியை உலுக்கியது. தமிழ்வழி படித்து வந்த மாணவர்கள் இன்று ஆங்கில முலாம் பூசப்பட்ட சமூகத்தைப் பார்த்து மிரண்டு நிற்கும் நிலை.அன்று வெள்ளைக்காரன் போட்டு விட்ட கோட்டு இன்றும் கழற்ற முடியாமல் காலனியத்தின் எச்சமாய் அப்படியே நிலைத்து பரவியும் விட்டது. தமிழரின் வேட்டியும், துண்டும் விடை பெறத் தொடங்கிவிட்டது.
சமீபத்தில் கல்லூரிகளில் அறக்கல்வி கற்பித்தல் குறித்த ஆய்வை மதுரையில் உள்ள கல்லூரிகளில் மேற்கொண்ட போது ஆங்கிலம் தென் தமிழக மாணவர்களை எந்த அளவுக்கு மிரட்டி வைத்துள்ளது என்பது தெரிந்தது. கலை - அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்பவர்களில் 80 சதவீதத்தினர் தமிழ் வழி பயின்றவர்களே. மேலும், இவர்கள் அனைவருமே பொருளாதர ரீதியாகப் பின்தங்கியவர்கள். ஆங்கில மொழித்திறன் இல்லாமையால் பல மாணவர்களின் கல்வி வளர்ச்சி மட்டுமல்ல, வேலைவாய்ப்புகளும் தடைபடுகின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிந்தது.
6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்
விரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 3 பேர் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.
'அரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ளது, ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி. இங்கு பணியாற்றிய, ஆசிரியை சொருபராணி என்பவர், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல், தங்களுக்கும் சம்பளம் வழங்க உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகளின்படி, சம்பள விகிதத்தை நிர்ணயிக்கும்படி, பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.மனுவை
மதுரை மாவட்டம் ,மதுரை கிழக்கு ஒன்றியம் சின்னமாங்குலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.சித்ரா அவர்கள் தமிழக அரசின் இராகிருஷ்ணன் விருது பெற்ற நிகழ்வு
மதுரை மாவட்டம்
,மதுரை கிழக்கு ஒன்றியம் சின்னமாங்குலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
திருமதி.சித்ரா அவர்கள் தமிழக அரசின் இராகிருஷ்ணன் விருது பெற்ற நிகழ்வு-இவர் தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட மகளிரணிச்செயலர் ஆவார்.இவருக்கு தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஆதார் முழு முக்கியம் பெறுகிறது
ஆதார் அட்டை அவசியம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி மேலும் மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியமாகிறது.
பல கோடி செலவில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது .ஆதார் அட்டை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது . ஆதார் அட்டையை எந்தவொரு திட்டத்திற்கும் கட்டாயமாக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கலானது
எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி...மிச்சம் நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்
நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.
எல்.இ.டி., என்பது, 'லைட் எமிட்டிங் டையோடு' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதிக ஒளியை, நீண்ட காலத்திற்கு வழங்கும் திறன் கொண்ட இந்த புதுமையான மின் விளக்குகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவை.
ஆசிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி-மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்
‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?”
‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8- ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது ஊதிய ஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பள விகிதங்களில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பது.
தனியார் பள்ளிகளின் கட்டண விவரம் பொதுமக்களுக்கு அச்சிட்டு வழங்கல்: பொள்ளாச்சியில் நூதன விழிப்புணர்வு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கல்விக்கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணம் குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது
மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்
மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும். சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலமுறை அலைய நேரிடும். இதனால் கல்விப்பணி பாதிக்கப்படும்
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: அகவிலைப்படி 6% உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில்,
தமிழக அரசால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு 2015 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை : தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பதவி ஆன்லைன் கலந்தாய்வு இன்று (அக்.,16) சிவகங்கை சி.இ.ஓ.,
அலுவலகத்தில் நடக்கிறது.
தமிழ்-6, ஆங்கிலம்-4, கணிதம்-3, இயற்பியல்-1, வேதியியல்-8, தாவரவியல்-6, விலங்கியல்-1, வரலாறு-2 பொருளியல்-1, வணிகவியல்-1 என, 34 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்க வாய்ப் புள்ளது என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு வல்லக்கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இதில், அப்பகுதியில் உள்ள, 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், தலைமை ஆசிரியர் சத்யராஜ் மற்றும் மூன்று பெண் இடைநிலை ஆசிரியர் உள்பட, ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஹஜ்ரீமா என்ற இடைநிலை ஆசிரியை, ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். அப்புகாரில், கூறியிருப்பதாவது: பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யராஜ், நான் வகுப்பு எடுக்கும் போது,
அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி
மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னைகிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது.
பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன்மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு,மாணவர்களை
உயர்நீதிமன்றத்துக்கு அக்.17 முதல் 25 வரை விடுமுறை
சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு அக். 17 முதல் 25 வரை தசரா விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 20-ஆம் தேதி விடுமுறைக் கால நீதிமன்றம் இயங்குகிறது.இதுதொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் (பொது) பொன்.கலையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தசரா பண்டிகையை முன்னிட்டு, அக். 17 முதல் 25 வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன.
மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.ஊதிய முரண்பாடுகளை
இளைஞர் எழுச்சி நாள்: பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; முதல்வர் உத்தரவு
குடியரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒட்டி, மாணவ-மாணவிகளின் பேரணிகள்-கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகளை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவுப்படி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வியாழக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர் ஆதார் அட்டை; ஆசிரியர்களே பொறுப்பு!
விடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை பெறுவதில், ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கல்வித்துறையை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மாவட்டத்தில் இதுவரை அதார் அட்டைகள் பெறாதவர்களில்,
ராமநாதபுரத்தில் ரத்தாகின்றன 365 சத்துணவு அமைப்பாளர் இடங்கள்
ராமநாதபுரம்:அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், ராமநாதபுரம்மாவட்டத்தில் 365 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் ரத்தாகின்றன.தமிழகத்தில் 42,855 சத்துணவு மையங்களில் 30,925 காலிப் பணியிடங்கள் உள்ளன.
இவற்றில் காலியாக உள்ள அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சமையலர் பணியிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்
ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கட்டாய கல்வி உரிமை ச்சட்டத்தில் திருத்தம்!
அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.பணியிடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்
ஆசிரியர்களின் புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்தக் குழுக்கள் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில், பள்ளி அளவிலான குறைபாடுகளைக் களைய பள்ளிமேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது
தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:---கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015.
தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும் திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-
'ஊதிய முரண்பாடுகள் ஆராய (Examining the Pay anamolies) - ஊதியக்குழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதியக்கட்டு விவரங்கள்
வட்டார வளமையங்களுக்கு ஆள்தேடும் கல்வித்துறை: ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய காலிப்பணியிடங்களில் பணிபுரிய, பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை விருப்பம் கேட்டுள்ளது. இதற்கு ஆசிரிய பயிற்றுனர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். கோயம்புத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட வட்டார வளமையங்களில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கு, ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும்.விருப்பம் உண்டா?: ஆனால் ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய,
அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும்ஏழை,எளிய,கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்படமாக கொண்டுவர வேண்டும்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்
பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும் என சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் "அனைவருக்கும் உயர்கல்வி' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. கருத்தரங்கை உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தொடக்கி வைத்தார்.
கருத்தரங்கில், தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல் அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
உலக சிக்கன நாளை முன்னிட்டு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவு
உலக சிக்கன நாளை முன்னிட்டு, நிதி சிக்கனத்தை வலியுறுத்தும் போட்டிகளை மாணவர்களிடம் நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இதில், பணத்தை சிக்கனப்படுத்துவது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.சர்வதேச சிறுசேமிப்பு மற்றும் சிக்கன நாள் வரும், 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
வி.ஐ.பி., வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
வி.வி.ஐ.பி.,கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செல்லாது என, உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதற்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கல்யாணிக்கு 2014 ஜூலை 7 ல் பல்கலை வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூஜ்ஜிய கழிவு மேலாண்மை பயிற்சி







ஆன்–லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து கடைகள் 14–ந்தேதி அடைப்பு
ஆன்–லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆன்–லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி (புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது.தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன.
அரசு பள்ளிகளில் கை கழுவும் பயிற்சி
வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக கை கழுவும் தினம்,
பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு
PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING - DOWNLOAD
PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING - DOWNLOAD
தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.
தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது. தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன; 9,000 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள்
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை. வெகுதுார மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்குள் பணிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த
பூஜ்ஜிய கழிவு மேலாண்மை - ஒரு பார்வை
கழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டுசெல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல், மற்றும் கழிவுப்பொருட்களை கண்காணித்தல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தச்சொல் பொதுவாக மனித செயல்பாடுகளால் விளையும் கழிவுப் பொருட்களைக் குறிக்கும். மேலும் கழிவுப்பொருட்களால் மனிதனின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அழகியல் தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு தடுக்கவோ குறைக்கவோ மேற்கொள்ளப்படுகிறது. வள ஆதாரங்களை கழிவுப்பொருட்களில் இருந்து மீட்பதற்கும் கழிவுப்பொருள் நிருவாகம் தேவை. கழிவுப்பொருள்
அரசு கலைக்கல்லூரிகளில் நீடிக்கும் ஆசிரியர் பற்றாக்குறை
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆமை வேகத்தில் நடக்கும், உதவி பேராசிரியர் பணி நியமனத்தால், 40 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. 'கெஸ்ட் லெக்சரர்' பணியிடங்களும் முழுமையாக நிரப்பாததால், கற்பித்தல் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 82 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், கடந்த நான்காண்டுகளாக, பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இப்பாடப்பிரிவுகளுக்காக மட்டும், 1,924 உதவி பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது?
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது.பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை. வெகுதுார மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்குள் பணி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கு யு.ஜி.சி.,யின் '12பி' அந்தஸ்து
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், எட்டாவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. இளம்கலை, முதுகலை பட்டப் படிப்புகள், முதுகலை பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களையும், முதலிடம் பெற்ற, 138 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், கவர்னர் ரோசய்யா வழங்கினார்.
துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் வரவேற்றார். உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா முன்னிலை வகித்தார். விழாவில், பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் பேசியதாவது:10 நாட்களுக்குள்...பல்கலை மானியக் குழுவின், '12பி' விதியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையை இணைக்க, விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியின் கீழ் இணைக்கப்படும் கல்வி நிலையத்துக்கு, மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும்.
அரசு ஊழியர்களின் பணி ஆண்டுதோறும் ஆய்வு
ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க, அரசு ஊழியர்களின் பணி ஆவணங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின், பல்வேறு துறைகளில், 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், பணியாற்றுகின்றனர். இவர்கள்,
அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாகசுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதி “இளைஞர் எழுச்சி நாள்” ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி அப்துல்கலாமின் பிறந்த தினத்தினை அனைத்து பள்ளிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.
தேர்வில் காப்பி அடிக்க உதவும் நூதன கருவி உடை விற்பனை: தனியார் உளவு நிறுவன இயக்குநர்கள் கைது
தேர்வுகளில் காப்பி அடிக்க உதவும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட உடைகளை தயாரித்து விற்றதாக, டெல்லியில் இருவர் சிக்கியுள்ளனர்.
இங்கு தனியார் உளவுத்துறை நிறுவனம் நடத்தி வந்தவர்களை ராஜஸ்தான் மாநில சிறப்பு போலீஸ் படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 2-ல் ராஜஸ்தான் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இளநிலை கணக்காளர் பதவி 2013 ஆன் ஆண்டுகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதற்கு ஒருநாள் முன்பாக நம்பர் பிளேட் பொருத்தப்படாத காரில் உதய்பூர் வந்தவர்களை போலீஸார் மடக்கி சோதனை இட்டனர். இவர்களிடம் எழுத்து தேர்வில் காப்பி
பாலியல் குற்றங்கள் தடுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி
பள்ளி மாணவர்களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க தமிழகம்,புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் பாலியல் தொல்லைகளில் சிக்கி வருவது அதிகரித்து வருகிறது.
மருதாணி போட்ட மாணவனுக்கு ரூ.500 அபராதம்: வகுப்பில் இருந்து வெளியேற்றியது தனியார் பள்ளி
சென்னை தனியார் பள்ளியில், மாணவர்கள் மருதாணி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதாணி போட்ட, இரண்டாம் வகுப்பு மாணவரை பள்ளியை விட்டு வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் வசூலித்ததற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, வேப்பேரியில் உள்ளது, டவ்டன் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளி, தமிழக பள்ளி கல்வித்துறை அங்கீகாரத்துடன், இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வியான, ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் படி செயல்படுகிறது.இங்கு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், கையில் மருதாணி போட்டுக் கொண்டதால், வகுப்பறையில் இருந்து வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)