rp

Blogging Tips 2017

31_10_2015_ஜாக்டோ கூட்ட முடிவுகள்

ஜாக்டோ கூட்ட முடிவுகள்
1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள்அனவரும் கல்விச்செயலர்,நிதி,கல்வி அமைச்சர், ஆகியோரைசந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்
2-டிசம்பர் 5-6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல்   ஆயத்த மாநாடு
3,டிசம்பர்,12-13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு
4. டிசம்பர் 28,29,30 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் ஆகியன முடிவாற்றப்பட்டது.

அன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்!

Return to frontpageஆசிரியர் - வருமானத்துக்காக உழைப்பதில்லை; மாணவர்களின் வருங்காலத்துக்காக உழைக்கிறார்.

கல்வி, வழக்கமான முறையில் கற்பிக்கப்படாமல் வகுப்பறையைத் தாண்டியும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர் ஸ்ரீ.திலீப். தகவல் மற்றும் கணினி தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக ஐ.சி.டி. தேசிய நல்லாசிரியர் விருது, மைக்ரோசாப்ட்டின் புதுமையான, தலைமைத்துவ கல்வியாளர் விருது, எல்காட்டின் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள், பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். பள்ளிக் கல்விக்கென ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களை நிர்வகித்து வருகிறார்.

இவரின் பயணம் எங்கே ஆரம்பித்தது?

1936-ல் என்னுடைய தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். அடிப்படையில் அவர் விவசாயி என்றாலும் கல்விதான் எல்லோருக்கும் அடிப்படை என்பதில் உறுதியாக இருந்தவர்

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

டப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், 2005-06 கல்வியாண்டு வரை, தமிழ் மொழிப்பாடம் விருப்பப்பாடமாக இருந்து வந்தது. இதனால், அவரவர் தாய்மொழி அல்லது விருப்ப மொழிகளை பாடமாக எடுத்து படிக்கும் நிலை இருந்து வந்தது.

திறந்தநிலை பல்கலையில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி

தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், 2 ஆண்டு

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

நமது மாத சம்பளத்தில் ரூ 150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth.

மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் 'ஓகே!'

'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

குற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்

தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.

ஆனால், 2003க்கு பின், புதிய ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்ட பின், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டதால்

ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி

அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது. 

இதில், 400 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த பதவி உயர்வில் தமிழ், அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு, போதிய காலியிடம் இல்லை. நேற்றைய கலந்தாய்வில், 1989ல் பணியில் சேர்ந்த, அறிவியல் பட்டதாரிகளுக்கே பதவி உயர்வு பரிசீலிக்கப்பட்டது.

ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு

செய்யாறு  தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி  சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார். கூட்டம் மாலை வரை நடைபெற்றது. 

மேல் நிலைப் பொது தேர்வு - 2016 எழுதும் பள்ளி மாணவர் விபரம் offline.ல் பதிந்து அனுப்ப உத்திரவு - செயல்முறைகள்

அண்ணா நூலக பணிகளை முடிக்க தவறினால் பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆஜராக வேண்டி வரும் ஐகோர்ட்டு எச்சரிக்கை

நூலகத்தில் மேற்கொள்ளவேண்டிய அனைத்து பணிகளையும் 2 மாதங்களுக்குள் செய்து முடிக்கவில்லை என்றால், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

அண்ணா நூலகம்

சென்னை கோட்டூர்புரத்தில் 2010-ம் ஆண்டு ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்’ கட்டப்பட்டது. பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த நூலகம் சரியாக பராமரிக்காமல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணி, ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப் படுகிறது

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறைக்கு என அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. அதனால் பணம் எதுவும் செலவளிக்காமல் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், சைக்கிள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 16.94 லட்சம்; நீக்கம் செய்ய, 1.76 லட்சம்; திருத்தம் செய்ய, 2.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன.

அரசு ஊழியர் / ஆசிரியர்களிடமிருந்து மாதந்தோறும் (அ) பிப்ரவரி - 2015 - ல் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரிக்கு TDS - (24Q) தாக்கல் செய்வதன் மூலம் அவரவர் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டு F.Y 2014 - 15 க்கு FORM - 16 கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

அரசு ஊழியர் / ஆசிரியர்கள் உங்கள் சமபளத்தில் உங்கள் DRAWING OFFICER மூலம் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி  உங்கள் PAN கார்டில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை எங்களிடம் வந்து இலவசமாக உறுதிபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NOVEMBER-2015 DIARY

Oct 31(sat) scl working day

*RL-Leave  days

Nov-2 Kallarai thirunal,

Nov-11 Deepawali nonbu,

Nov-25 Karthigai Deepam

Covt Leave list days

*Nov-10 Deepawali leave

Training days

Nov - 2 to 6 Induction training  for New (Tet) appointment sgt teacher at BRC

*Nov-7 Pri CRC

*14-Upper CRC.

தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'

பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது.

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது. 

தேர்தல் பணியில், யார் யார் ஈடுபட வேண்டும், யார் யாருக்கு விதிவிலக்கு என, தேர்தல்கமிஷன்அறிவித்துள்ளது.

'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர். 
இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது;ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது

முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வுநடந்துள்ளது.

கல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.

அண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா உட்பட ஐந்து வங்கிகள் இந்த தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. www.vidyalakshmi.co.in என்ற இந்த புதிய இணையதளம் மூலமாக அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கடன் விவரங்கள் அனைத்தையும் ஒற்றைச் சாளரத்தில் (portal) மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED

  • CLICK HERE TO DOWNLOAD GROUP - I HALL TICKET

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது.

ஆசிரியர்களாக பணிபுரிவோர் மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். மொத்தம், 1,000 பேர் சேர்க்கப்படுவர். இதற்கு, நவ., 30க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என,பல்கலை அறிவித்துள்ளது. 'கலந்தாய்வு டிசம்பரில் நடக்கும்; ஜனவரி முதல், வகுப்புகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை

தமிழ் நாட்டில் மட்டுமே 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசுப்பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் எவரும் இல்லையாம், பிடித்தம் செய்யப்பட்டத் தொகையும் ஏதும் இல்லை என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல். 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முகாமிட்டு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள்

கடந்த சில வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது

சென்னை ஆர்.கே.நகரில் அரசு கலைக்கல்லூரியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
சட்டசபையில் அறிவிப்பு

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 29.9.2015 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

BRTE to BT CONVERSION

இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் SGT to BT promotion கொடுப்பதற்கு முன் BRTE to BT CONVERSION நடத்த கோரி தடை உத்தரவு பெற தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்ககு வந்தது.இதில் அரசு தரப்பில் 4 வாரத்திற்குள் 500 BRTE to BT conversion நடத்த அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிளுக்கு விடைகொடுப்போம் ம.சுசித்ரா நன்றி :தி இந்து தமிழ்

சத்தான உணவு கிடைத்தாலே 70% நோய்களைத் தடுக்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

தெருக் கோடியில் நிறுத்தப்பட்ட தள்ளுவண்டியில் இஸ்திரி போடும் முத்துலட்சுமிக்குப் பெண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து எனக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

என் குழந்தையின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முத்துலட்சுமியின் நான்கு வயது பிரியா பாப்பாவும் ஆட்டம் பாட்டம் எனக் குதூகலமாக ஆடிப் பாடினாள். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொடிசுகள் எல்லாரையும்விட பிரியா பாப்பா தோற்றத்தில் மிகவும் சிறுத்து இருந்தாள். மற்ற பிள்ளைகளெல்லாம் அந்தந்த வயதுக்குரிய வளர்ச்சி அடைந்திருக்க பிரியா பாப்பாவின் உடல் வளர்ச்சி மிகவும் குன்றி இருந்தது. சொல்லப்போனால், பிரியா பாப்பா பிறக்கும்போதே

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்


  • இணைய தள முகவரிக்கு செல்லவும்.
  • CLICK HERE - ELECTORAL ASSISTANT SYSTEM
  • உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்,
  • தேடலை சொடுக்கவும்.
  • உங்கள் விவரங்கள் மற்றும் வாக்குச்சாவடி எண் இதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.
  • பிறகு வாக்காளர் அடையாள அட்டை தேடல் மூலம் பெறப்பட்ட வாக்குச் சாவடி எண்ணில், உங்கள் தெரு இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து , அந்த வாக்குச் சாவடி வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்து , உங்கள் தொடர் எண்ணை அறியலாம் .
  • தபால் வாக்கு செலுத்த பாகம் எண் மற்றும் தொடர் எண் அவசியம்.
  • தேர்தல் பணிக்கான படிவத்திலும் இந்த விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது.

துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - அரசாணை

G.O Ms : 169 - மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - அரசாணை வெளியீடு
  • TPF transfer to AG Office | GO No.169 Date:20.10.2015 - Click Here

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என உறுதி செய்யவேண்டும். 
        மழையில் இருந்து காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்ககூடாது எனவும், அதனால் இடி, மின்னல் மூலம் ஆபத்து ஏற்படும் என அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும்போதும், திரும்பிசெல்லும்போதும் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் பாதையை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்கக்கூடாது எனஅறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.

மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாடத்துடன் நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு இந்தியாவில் முதல் முதலாக புத்தகம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ளன. 
          அவை விரைவில் வினியோகிக்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குனரகம் முன்பு ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் என்று அழைக்கப்பட்டது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறியதாவது:-

தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.CLICK HERE TO DOWNLOAD...
          இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் மூலம், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரகசிய எண் மூலம், 'ஹால் டிக்கெட்'களை பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடக்ககல்வி - துவக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி (TPF) கணக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் - இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

TET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் - விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்னாமலை உதவித்தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து ஆசிரியர்கள்போராட்டம்-பத்திரிக்கை செய்திகள்

திருவண்ணாமலை உதவி தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஒன்றியத்தில் ஆசிரியர் விரோதப்போக்கை கடைபிடிக்கும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலரைக்கண்டித்து அவ்வாட்டார அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைகுழுவின் சார்பில் 26102015 திங்கள் மாலை 500 மணிக்கு உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகமாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியைச் சார்ந்த வட்டாரச்செயலர் ருக்மாங்கதன், பொருளர்,சக்கரை, தலைவர் துரைபச்சியப்பன், நகரக்கிளை சார்பில் செயலர் ராபர்ட் ராஜ்குமார், தலைவர் கோ வெங்கட்ராமன்,பொருளர்,சங்கரன் ஆகியோர் தலைலைமையில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.கோரிக்கை விளக்க உரை மாநில மகளிரணிசெயலர் செல்வி.ந.அமுதமொழிதேவி ஆற்றினார். மேலும்  மாநில துணைத்தலைவர்  ரக்‌ஷித் அவர்கள் சிறப்புரை யாற்றினார். மாவட்டத்துணைத் தலைவர் பழனிமுருகன்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ்ஆகியோர் பங்கேற்று பேசினர்.

வணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு..ஆசிரியரின் அன்பானவேண்டுகோள்

வணக்கத்திற்குரிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு..

வணக்கம். நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வேலை செய்ய வேண்டிய உங்கள் துறைக்குத் தமிழகத்தில் மறுபடியும் வேலை பார்க்க வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது.

ஆம்..

தமிழகச் சட்டசபைத் தேர்தல் நெருங்குகிறது..
அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல..தாங்களும் தங்கள் பணியைத் துவக்கிவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்..

தேர்தல் நெருங்க நெருங்க உங்கள் துறை வீறு கொண்டு எழுவதைப் பார்க்கும் பொழுது மிகவும்  ஆச்சரியமாக இருக்கும்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடு
நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்பு களில் படிக்கும் மாணவர்களின் கல்வியின் 
தரத்தை உயர்த்த வும், ஒழுக்கத்தை நிலைநாட்ட வும், நடைமுறை வாழ்வில்

காலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்?

'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

STATE LEVEL ACHIEVEMENT SURVEY REPORT 2014-2015 ALL DISTRICTS...

STATE LEVEL ACHIEVEMENT SURVEY REPORT 2014-2015 ALL DISTRICTS -1click here...
STATE LEVEL ACHIEVEMENT SURVEY REPORT 2014-2015 ALL DISTRICTS -2click here..

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் திங்கள் முதல் ஞாயிறு வரை விடுமுறை நாள்கள் உள்பட அனைத்துநாள்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளசுற்றறிக்கையிலு, 
ஒரு பள்ளியில் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி

இ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு 10 நாளில் நிலுவைத் தொகை: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் உறுதி

தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்த்த தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 10 நாளில் கல்விக் கட்டணத் தொகை வழங்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உறுதி அளித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 


           அந்த மாணவர்களுக் கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு வழங்கும்.அந்த வகையில், 2013-14, 2014-15 கல்வி ஆண்டுகளில் ஏழை மாணவர்களை சேர்த்துக்கொண்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.97 கோடி ஒதுக்கியது. மெட்ரிக் பள்ளிகளுக்கு உரிய கல்விக் கட்டணத் தொகை பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. மொத்த பள்ளிகளில் 75 சதவீத பள்ளிகள் நர்சரி, பிரைமரி பள்ளிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் விவரம் கோரும் படிவம்

அரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 இடங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB) மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணி: Assistant Surgeon
தகுதி:பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, தடயஅறிவியல் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவைச் சிகச்சை, உளவியல், நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ரத்தநாள அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதயவியல், இருதய அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளில் மருத்துவ பட்டம், முதுகலை டிப்ளமோ, டிஎன்பி முடித்திருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்

மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது. ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

உலகத் தரத்தில் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: யு.ஜி.சி. துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ்

உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்று, புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.
காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். பல்கலைக்கழக வேந்தர் எஸ்.ஜெயராம் ரெட்டி முன்னிலை வகித்தார். 

ஆர்.கே.நகர் புதிய ஐடிஐ-ல் சேர நவம்பர் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ஆர்.கே.நகரில் தொடங்கப் படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இந்தஆண்டு முதல் புதிய அரசு ஐடிஐ தொடங்கப்பட உள்ளது. புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இந்த ஐடிஐ செயல்படும்.2 ஆண்டு பயிற்சியான ஃபிட்டர்,

நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளனர். 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன.நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு நடத்தி பணியாளர்களைநியமிக்கின்றனர்.இதில்,

சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியத்துகுட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருப்புவனம், மானாமதுரை உள்பட 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை, காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (அக். 27) நடைபெறுகிறது.


இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, வேலை தேடுவோர்க்கு அவ்வப்போது வெளி வரும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகள், மத்திய, மாநில அரசு சார் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களும்

1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன

மாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க பள்ளிகளில் ‘வெயிலோடு விளையாடி’: அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா?

பள்ளிகளுக்கு விடுமுறை என்றால் கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என எல்லாவற்றிலும் தனிநபர் விளையாடும் கேம்ஸ்களில் மூழ்கி விடுகின்றனர் இன்றைய சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் தனியாளாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஓடியாடி கூடி விளை யாடும் பாரம்பரிய குழு விளை யாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறார்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளை யாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டு கள் கொஞ்சம் கொஞ்ச மாக வழக்கொழிந்து வருகின்றன.

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் 26/10/2015 முதல் 31/10/2015 வரை "விழிப்புணர்வு வாரம்" (VIGILANCE AWARENESS WEEK)கொண்டாட இயக்குநர் உத்தரவு

மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த தேர்வுத்துறை சுற்றறிக்கை

பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

       இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-

பருவ மழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளிக் கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

மாணவர் பாதுகாப்பு மற்றும் மழை கால நடவடிக்கை குறித்த இயக்குநர் செயல்முறைகள்

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:

சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரி பார்க்கலாம்.

   இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறியது: செவித்திறனற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்

பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு?

வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்புவெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டச் செயலர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார்.மாநிலத் தலைவர் முருகதாஸ், நிறுவனத் தலைவர் சுந்தர் கணேஷ் பெரியசாமி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., ஆசிரியர் மற்றும் அலுவலர் நல சங்கத் தலைவர் அழகப்பன், ஜான் பிரிட்டோ, வெங்கடேசன் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வரவில்லையென்றால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களும் முதல் கட்டமாக குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டமும், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.மாநில செயலர் பிரேம்குமார், மாவட்டத் தலைவர் நாகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளுக்குஇயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை

பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கும் கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டியை மூடிவைக்க வேண்டும்மழையின் போது மரங்களின் கீழ் ஒதுங்க வேண்டாம்; இடி, மின்னல்களால் ஆபத்து ஏற்படும். விழும் நிலையிலுள்ள மரங்களை, உடனே அப்புறப்படுத்த வேண்டும் பள்ளிக்கு வரும் வழியில், வெள்ளம் வரும் ஆறு, குளங்கள் இருந்தால்,

சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.

புதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு:புதியபள்ளி தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறைவரவேற்றுள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2016-17-ஆம் கல்வி ஆண்டில் புதிதாக மானியம் பெறாத தொடக்கநிலை ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆர்வமுள்ளவர்கள் www.schooleducation.kar.nic.in. என்ற இணையதளத்தில் நவ.2 முதல் 15-ஆம் தேதிவரைவிண்ணப்பங்களை பதிவுசெய்யலாம். மேலும் இணையதளத்தில் பதிவுசெய்யும் விண்ணப்பங்களின் நகலெடுத்து சம்பந்தப்பட்ட பகுதி கல்வி அதிகாரி அலுவலகத்தில் நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

'ஆன்லைனில்' ஆர்.டி.ஐ., மனு மத்திய தகவல் ஆணையர் தகவல்

''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விபரங்கள் கோரும் மனுவையும், அதற்கான பதிலையும், 'ஆன்லைனில்' அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மத்திய தகவல்ஆணையர் யசோவர்த்தன் ஆசாத் கூறினார்.நெய்வேலி நிலக்கரி கழகமான, என்.எல்.சி., சார்பில், 'தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. 


என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை வகித்தார்; தகவல் அதிகாரி ஸ்ரீதர் நன்றி கூறினார்.இதில், யசோவர்தன் ஆசாத் பேசியதாவது:தகவல்உரிமை சட்டத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. பிற நாடுகளும், இச்சட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலர் கவனத்திற்கு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் கவனத்திற்கு, அனைத்து மாவட்டச்செயலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலகத்தில் உயர்நிலைப்பள்ளி,மற்றும் மேல்நிலைப்பள்ளி சார்ந்த விவரங்களும் ,தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தொடக்க நடுநிலைப்பள்ளி சார்ந்த விவரங்கள் பெற்றி இணைப்பில் கண்ட விவரங்களை தொகுத்து திங்களன்றே (26/10/2015) பெற்று உடன் புதன் (28/10/2015) அன்று தகவல்கள்கிடைக்கப்பெறும்  வகையில் பொதுசெயலரின்  நாமக்கல் மற்றும் சென்னை அலுவலகமுகவரிக்கு அனுப்பிவைக்கவும் இது மிக அவசரம்.மேலும்.பொதுச்செயலரின் மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு நகலில் அனுப்பிவைக்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரம் அனுப்பவேண்டிய படிவம்

தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

இளமை காலத்தில் மாணவர்கள் அதிகப்படியான நேரத்தை பள்ளியில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்று விடுவதாலும், தனிக்குடும்பங்களாக வாழ்வதாலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கே அதிகம் உள்ளது.ஆனால், இன்றைய மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்;

'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம்

மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களை வெளியிட்டு, ஏழை மாணவர்களை குறிவைத்து, தமிழகத்தில், 1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன. நான்கு வாரத்திற்குள் இவற்றை இழுத்து மூட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு, ஆறு மாதமாக மவுனமாக இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லுாரிகள், பள்ளிகள் அரசின் அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவும் செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லுாரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம். 

ரகசியம் காக்க தவறியதால் பணம் பறிகொடுத்த ஆசிரியர்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை

கோவை பள்ளி ஆசிரியர்கள், ஆறு பேர் வங்கி கணக்கில் இருந்து, நுாதன முறையில் பணம் திருடப்பட்ட சம்பவம், சக ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப உதவியுடன், ஏ.டி.எம்., கார்டின் ரகசிய தகவல்களை பெற்று, பணம் திருடும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறும் மர்ம நபர்கள், நம்பகமாக பேசி, வாடிக்கையாளர்களிடம் இருந்து ரகசிய எண் விவரங்களை பெற்று, பணம் திருடுகின்றனர்.

அங்கன்வாடிகளுக்கு 'ஸ்மார்ட் போன்

 புதுடில்லி": சிறு குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடிகளின் தரத்தை மேம்படுத்த வும், அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

        இதன்படி, நாடு முழுவதும், மூன்று லட்சம் அங்கன்வாடிகளில் உள்ள பணியாளர்களுக்கு, 'ஸ்மார்ட் போன், டேப்லெட்' ஆகிய வற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

            இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதற்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் போதுமான தகுதி வாய்ந்த மருத்துவர்கள் அவசியம் ஆகும்.எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: மேல்முறையீடு செய்வதில் புதிய நடைமுறை:தகவல் ஆணையம் நடவடிக்கை

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டாவது முறை மேல்முறையீடு செய்வதற்கான புதிய நடைமுறையை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அரசுத் துறை சார்ந்த தகவல்கள், விவரங்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமையை வழங்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், இரண்டு முறை மேல் முறையீடு செய்யலாம்.

இந்த நிலையில், இரண்டாவது முறை மேல்முறையீடு தாக்கல் செய்வது குறித்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், புதிய வழிமுறைகளை தகவல் ஆணையம் வகுத்துள்ளது. அதன் விவரம்: 2-ஆவது முறை மேல்முறையீட்டுக்கு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பம் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்யப்பட்டதாகவோ அல்லது தெளிவாகக் எழுதப்பட்டதாகவோ இருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிட விவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறை

மூன்று ஆண்டுகளாக, லேப் - டாப் பெற்ற மாணவர்களின் ஜாதி, இருப்பிட விவரங்களை, ஒரேநாளில் வழங்க அறிவுறுத்தியதால் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறை பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் - டாப் வழங்குகிறது. மாநில பள்ளி கல்வித்துறை, அனைத்து முதன் மை கல்வி அலுவலகங்களுக்கும், லேப் - டாப் பெற்ற பிளஸ் 2 மாணவ -மாணவர்களின் ஜாதி, வயது, இருப்பிட விவரங்களை உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டது. பள்ளி கல்வித்துறையின் இந்த திடீர் உத்தரவால் விவரங்களை சேகரிக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர். அதேபோல் 2011 முதல் 2014 வரையிலான விவரங்களை உடனடியாக வழங்கும்படி அறிவுறுத்தியதால், தினசரி பணிகளோடு இதை முடிக்க முடியாமலும் காலதாமதம் ஏற்பட்டது. 

உதவித்தொகை திட்டம் ரத்து; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக்குழு அலுவலகத்தில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், கைது செய்யப்பட்டனர்.

தேசிய தகுதித்தேர்வு அல்லாத உதவித் தொகை, நாடு முழுவதும், மத்திய பல்லைக்கழகங்களில், ஆராய்ச்சிகளில் ஈடுபடும்

பள்ளிகள் மூலம் ஜாதிச்சான்றிதழ்; 20 மையங்களில் வழங்க ஏற்பாடு

பள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜாதிச்சான்று பெறுவது அவசியமாகும். முன்பு, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து, பெற்றனர். கடந்தாண்டு முதல், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், ஆவணங்கள் பெறப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் மொத்தமாக விண்ணப்பத்து, பள்ளி வழியாக ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அப்பள்ளிக்கு அருகே உள்ள பிற பள்ளிகள், குறிப்பிட்ட பள்ளியுடன் இணைக்கப்பட்டு, அப்பள்ளியில் ஆன்லைனில் பதிவு செய்து, தாலுகா அலுவலகம் மூலம் சான்றிதழ் பெற்று வழங்கினர்.

தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு குவியும் அரசு வேலைவாய்ப்புகள்

தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழி யில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தமிழ்வழி பொறியியல் கல்வி திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்வழியில் பொறியியல் படிக் கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தமிழில் நடத்தப்படும். செமஸ்டர் தேர்வையும் அவர்கள் தமிழிலேயே எழுதலாம்.

web stats

web stats