Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் 31.12.2014க்குள் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப்பாடம் A FRIEND INDEED mp4 ஒலிஒளி வடிவில்.


கரூர்: சீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்

கரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.
கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் கடந்த ஜன.27-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் -03.02.2015 அன்று-பழனி -தை பூசத்தை முன்னிட்டுஉள்ளூர் விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம் -03.02.2015 அன்று-பழனி -தை பூசத்தை முன்னிட்டு அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை --ஈடு செய்ய 14.02.2015 அன்று வேலை நாளாகும்- மாவட்ட ஆட்சி தலைவர்

'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், 'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்

'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், 'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்' முறையில் வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணிக்கு வந்த ஊழியர்கள் எண்ணிக்கையும், அரசு பதிவேடுகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையும், அதிக அளவில் மாறுபடுவதால், சந்தேகம் அடைந்துள்ள மத்திய அரசு, மின்னணு முறையில், ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் முறையை, பயன்படுத்த உத்தரவிட்டு உள்ளது.பணிக்கு வரும் போதும், பணி முடிந்து வெளியேறும் போதும், பயோமெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரத்தில், ஊழியர்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.ஊழியர்களின் வருகைப் பதிவை கண்காணிக்குமாறு, அனைத்து துறை செயலர்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பள்ளிக் கல்விசெயலாளர் கோர்ட்டில் ஆஜர்

மதுரை மாவட்டம் செக்கானுாரணி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் கிரிதரன். இவர் 2009 ல் ஒரு சான்றிதழ் வழங்க 700 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கிரிதரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 2011 ல்பதிவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்த சபீதா (தற்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்) அனுமதியளித்தார். மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
சபீதா ஆஜராகி சாட்சியமளித்தார். நீதிபதி மதுரசேகர் விசாரணையை ஒத்திவைத்தார்.

மாற்றுத் திறனாளிகள் வழக்கில் மாநில ஒருங்கிணைப்பு குழுவை ஒரு மாதத்துக்குள் கூட்ட வேண்டும்

மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைப்பற்கான மாநில ஒருங்கிணைப்புக் குழுவை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் ஆர்.முகமது நஸ்ருல்லா என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாணவர்கள் போராட் டம் நடத்தினர்

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.

சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான்.

அண்மையில்நமது தபால் துறை, வங்கி துவங்குவதற்கான லைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது.

அரசு பணியை எதிர்பார்க்கும் அறிவொளி ஊழியர்கள்:19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள்

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள், அரசு பணியை எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் 1991 ல் அனைத்து மாவட்டங்களிலும் அறிவொளி இயக்கம் பெயரில், 9 முதல் 45 வயது வரை பள்ளி செல்லாதவர்களுக்கு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர் கல்வி, வளர்கல்வி, மகளிர் எழுத்தறிவு, அனைவருக்கும் கல்வி முன்மாதிரி, தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், சிறைக்கைதிகளுக்கான திட்டம் என பல வகைகளிலும் இத்திட்டம் செயல்பட்டது. இதில் பயனாளிகளுக்கு சமநிலைக்கல்வி, வருவாய் பெருக்கத் திட்டம் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டன.

ஆண்கள் பள்ளி - பெண்கள் பள்ளி என பாலின அடிப்படையில் பிரித்து கல்வி அளிக்கும் முறை சரியா?

சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிகள் இருபால் மாணவரும் படிக்கும் இடமாக இருந்தது .மாணவ ,மாணவியரிடம் இருவருக்கும் ஈர்ப்பு சாதாரணமாக பார்க்கப்பட்டது .தினம் தினம் பார்த்து பழகி போவதால் ஆண்கள் மீது மிகப்பெரிய அளவில் பெண் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதில்லை .இது போலவே தான் ஆண் பிள்ளைகளும் !

ஆனால் இப்போது ஆண்கள் பள்ளி ,பெண்கள் பள்ளி என்று தனித்தனியே இருப்பதால் ஆண்கள் பள்ளியில் ஒரு பெண் நுழைந்து விட்டால் போதும் ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பது போல இந்த பிள்ளைகள் பார்ப்பதும் ,அதுபோலவே பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளில் ஆண் பிள்ளைகள் வந்துவிட்டால் பெண் பிள்ளைகள் தங்களுக்குள் கிசுகிசுப்பதும் தவிர்க்கமுடியாத காட்சியாகி விட்டது

பிரதமர் மோடி சரளமாக ஆங்கிலம் பேசும் இரகசியம் வெளியீடு!!!

பொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை ‘டெலிபிராம்ப்டர்’ உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பொது மேடைகளில் இந்தி மொழியில் சரளமாக தனக்கே உரித்தான பாணியில் பேசுவதில் பிரதமர் மோடி மிகவும் பிரபலமாக உள்ளார் . இவர் கடந்த ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின், கைகளில் எந்தக் குறிப்புகளும் இன்றி, இந்தியில் அளித்த ஆவேசமான உரை பலரையும் பிரமிக்க வைத்தது.
ஏனெனில், அங்கு பெரும் பாலான பிரதமர்கள் முன்கூட்டியே எழுதி வைத்த உரைகளை பார்த்துப் படித்து விடுவது வழக்கம். இந்தி அளவுக்கு ஆங்கிலத் திலும் இடர்பாடுகள் இன்றி உரை யாற்றுவதற்காக, ‘டெலிபிராம்ப்டர்’ கருவியை பிரதமரானது முதலே பயன்படுத்தி வருகிறார் மோடி

ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்

எம்.ஏ.,-எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

கமுதி கே.என். பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார். பி.ஏ., -பி.எட்., தேர்ச்சி பெற்றதால், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பின் எம்.ஏ.,-எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல் பாலசவுந்தரி ஓய்வு பெற்றார். அவர்,'பி.எட்.,முடித்ததற்கு மேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்
பட்டது. எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம்

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்து, பொதுத்தேர்வில் மாநகராட்சி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
இந்தப் பரிசுகள் ரூ. 5,000, ரூ. 3,500, ரூ. 3,000 என்ற அளவில் இருந்தது. இந்த பரிசுத் தொகை இப்போது ரூ. 10 ஆயிரம், ரூ. 9 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் என உயர்த்தப்படுகிறது.

TNPSC - ANNUAL RECRUITMENT PLANNER 2015 - 2016

TNPSC - POSTS INCLUDED IN GROUP-I SERVICES (PRELIMINARY EXAMINATIONS) RESULTS

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு :சட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் செல்கிறது

தாழ்த்தப்பட்டோருக்கான, 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியருக்கு, 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இவ்வழக்கை, தமிழக அரசு நடத்த வேண்டும் என, அருந்ததியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், 3 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம், தமிழக அரசால், 2009ல் இயற்றப்பட்டது. நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான குழு, அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, ஆதி ஆந்திரா மற்றும் தோட்டி ஆகிய உட்பிரிவுகளை இணைத்து, அருந்ததியர் என, அறிவித்தது. மாநில அரசில் உருவாகும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில், 3 சதவீதம் அருந்ததியருக்கு ஒதுக்க, அரசாணையும் இயற்றப்பட்டது

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு:அரசு தேர்வு துறை அறிவிப்பு

'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம் தேதி வரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன் - லைனில் விண்ணப்பிக்க தவறிய, தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான, 'தத்கல்' கீழ், ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அரசு தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பிப்., 5 முதல், 7 வரை நேரில் சென்று, ஆன் - லைனில் விண்ணப்பிக் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும், அனைத்து தனித்தேர்வர்களுக்கும், சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

BEd & MEd படிப்புகளின் கால வரம்பு உயர்வு:ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'


பி.எட்., - எம்.எட்., படிப்புகளின் கால வரம்பை, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்குப் பதிலளிக்கும்படி, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.அங்கீகாரம்:தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லுாரிகள் சங்கத்தின் செயலர் விஜயகுமார், தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 670 கல்வி நிறுவனங்கள், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தி வருகின்றன. இந்த கல்லுாரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ளன.ஆசிரியர் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், நடைமுறைகள் தொடர்பான புதிய விதிகளை, தேசிய கவுன்சில் கொண்டு வந்துள்ளது. கடந்த மாதம், 1ம் தேதி, அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

BEd & MEd படிப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்த மாட்டோம்


பி.எட்., எம்.எட். படிப்புகளின் கல்வி நிறுவனங்களுக்காக, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையை அமல்படுத்தமாட்டோம் என்று தேசிய கவுன்சில் உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்க செயலாளர் விஜயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பி.எட்., எம்.எட்., படிப்புகளை கொண்ட கல்வியியல் கல்லூரிகள் 670 செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்திடம் அங்கீகாரம் பெற்றவை. ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கென, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது

'பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம்

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிப்பது குறித்து, திட்டமிட்டு வருவதாக, அரசுத்தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளது. இத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசுத்தேர்வுத்துறை கடந்த ஆண்டில் முறைகேடுகளை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.நடப்பு கல்வியாண்டிலும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த, இறுதிகட்ட ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வூதியம் -ஓய்வூதியர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியம் பிடித்தம் செய்தல் -சில அறிவுரைகள்

கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு.

கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தகுதித் தேர்வில் 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன்

தமிழ்வழிக் கல்வி காரணமா?
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன் என்பதற்கு, அங்கு ஆங்கில வழி வகுப்புகள் இல்லை என்னும் காரணம் முதன்மைப்படுத்தப்படுகிறது. உண்மை அதுதானா? அல்ல.
ஆசிரியரின் முதன்மைப் பணி என்பது கற்பித்தல். அதுதவிர, மற்றவற்றைச் செய்ய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பழக்கப்படுத்தப்படுகின்றார்கள். ஆசிரியர்கள்தாம் எழுத்தர்கள். ஆசிரியர்கள்தாம் கல்வி அலுவலகங்களுக்குச் சென்று வரும் தூதுவர்கள். ஆசிரியர்கள்தாம் ஊதியப் பட்டியலைச் சுமந்துகொண்டு கருவூலகங்களுக்குப் போய் வரும் கணக்காளர்கள். பொதுமக்களிடம் சென்று கணக்கெடுக்கச் சொல்லி அரசால் ஏவப்படும் புள்ளி விவரச் சேகரிப்பாளர்கள் இப்படி அஷ்டாவதானம்

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நாளை 30/01/2015 எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு


தண்டனைகள் அதிகரிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும்!

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்ளை ஆசிரியர்கள் கண்டிக்க இன்றைய பெற்றோர் அனுமதிப்பதில்லை. மாறாக, பள்ளி மாணவ-மாணவிகளைக் கண்டிப்புடன் நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் சிலர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உறவினராலேயே தாக்கப்படும் அவலங்களும் நடந்தேறி வருகின்றன. அப்படியிருக்கையில், வீட்டிலாவது பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்த்தால்தானே அவர்கள் ஒழுக்கமுடையவர்களாக உருவாவர். அப்படி கண்டிப்புடன் வளர்க்ப்பட்ட குழந்தைகள்தான் இன்று மேம்பட்ட பண்பாளர்களாக இருக்கிறார்கள்.

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ.

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

மேலும், அனுமதி பெறாமல், கல்வி நிறுவனங்கள் இயங்கக்கூடாது என, வலியுறுத்தி உள்ளது. புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல், கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., இடையே, பனிப்போர் நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு, இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு வர, மேற்கூறிய பொறுப்புகளை, ஏ.ஐ.சி.டி.இ., கண்காணிக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவு அடிப்படையில், இந்த ஆண்டில், புதிய கல்வி நிறுவனங்கள் துவக்கவும், ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களில், இடமாற்றம், கூடுதல் படிப்புகள் துவக்குவது போன்றவற்றில், கல்வி நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.

மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வரும் இளைய சமுதாயம்! பெற்றோர்கள் அச்சம்

கரூர் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் வந்த பள்ளி செல்லும் மாணவன் ஒருவன், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விழுந்தது பொதுமக்களிடையே பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஆட்டோ டிரைவரின் மகன் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன், அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளான்.

நாடு முழுவதும் 1 கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகிறது-தினகரன்

வசதி படைத்துவர்களுக்கு காஸ் மானியம் வழங்குவதை ரத்து செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் உள்ளவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகும் என்று தெரிகிறது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு-08.02.2015 அன்று நடைபெறும்-பொதுச்செயலர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு வரும் 08.02.2015 அன்று நாமக்கல் நகரில் சரியாக காலை 10 மணிக்கு  சுப்ரமணியன் மாளிகையில் தொடங்கி நடைபெறும்
அவ்வமயம்
1. டிட்டோஜாக் செயல்பாடு
( இடைநிலை ஆசிரியர் ஊதியப்பிரசினை)
2.டெல்லி பிரதிநிதிகள் மாநாடு ஆலோசனை
3. வட்டாரத்தேர்தல்  -ஆய்வு
4. மாவட்டத்தேர்தல்-களப்பணி நிலவரம்
5. மற்றும் பிற
ஆக்யன குறித்து விவாதித்து முக்கிய முடிவாற்றப்பட உள்ளது.
முறையான அழைப்பு உறுப்பினர்களுக்கு உடன் அனுப்பிவைக்கப்பட உள்ளது.
அனைவரும் தவறாது கலந்துகொள்ள பொதுச்செயலர் டெல்லியிலிருந்து வேண்டுகோள்.


டெல்லியில் பொதுசெயலர் மற்றும் மாநிலத்தலைவர்..............

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் மாநாடு வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது.
                                                                   அம்மாநாட்டினை நடத்துவதற்கான அடிப்படை ஆயத்தப்பணிககளான இடம் தேர்வுசெய்தல், வரவேற்புகுழு தலைவர்,கமிட்டி அமைத்தல்,ஆசிரியர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தல், உணவு வசதி மேற்கொள்ளுதல்,மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்,அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்தல் ஆகிய முன்னேற்பாட்டு பணிக்காக கடந்த 27.01.2015 அன்று மாலை பொதுசெயலர் திரு செ.முத்துசாமி  மற்றும் மாநிலத்தலைவர் திரு கு.சி.மணி  ஆகிய இருவரும் டெல்லி சென்றுள்ளனர்.கடும் குளிரிலும் (டெல்லியில் தற்போது காலை10.00 மணிவரை கடும் குளிர் நிலவுகிறது மேலும் மாலை 5 மணிக்கே வெளியில் தலைகாட்ட முடியாத குளிர் ஆரம்பிக்கிறது) இப்பணிகளை பொதுசெயலர் மற்றும்தலைவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி செய்துவருகின்றனர்-

TNPSC Annual Planner 30ம் தேதி வெளியிடப்படும்


TNPSC Annual Planner: டி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியம்
கடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குரூப்–2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும். குரூப்–1 முதல் நிலை தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். மேலும் குரூப்–1 தேர்வு மூலம் 50 இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த ஆண்டு நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள்என,

2014-15 INCOME TAX CALCULATION SHEET WITH FORM-16 (2 பக்கத்தில்)

வருமான வரி கணக்கீட்டு படிவம் 2 பக்கங்களில்

2014-15 INCOME TAX CALCULATION SHEET WITH FORM-16 CLICK HERE..

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், 1992-இல் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு, தேவைக்கேற்ப அந்தக் கொள்கை பலமுறை திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை அறிவுசார் வல்லரசாக உருவாக்கவும், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மனிதவள தேவையை நிறைவு செய்யவும், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, பள்ளித் தாளாளர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது.
ஆலோசனைகளை அளிக்க விரும்பும் பொதுமக்கள், தங்களுக்குள் குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்கள் பங்கேற்கும் விவாதங்களில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தங்கள் ஆலோசனைகளை
www.mygov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதி மக்களின் ஆலோசனைகள், இந்த ஆண்டு முழுவதும் பெறப்படும்.

பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப்ரீம் கோர்ட் கண்டிப்பு

பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா பந்த் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: பள்ளிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பெயரளவிலான கழிப்பறைகள் இருப்பதை கண்கூட பார்க்க முடிகிறது.

வருமான வரி பிடித்தம் செய்வதற்கான மத்திய நிதித்துறையின் கையேடு

One day Innovative Practices workshop-chennai-SIEMAT

மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது

மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது -பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறுத்தல்

கல்வித்துறையை கலக்கும் பேப்பர் டிரான்ஸ்பர் .

நேரடி மானியத் திட்டம்: மீண்டும் வாய்ப்பு

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தும் வங்கிக் கணக்கு இணைக்கப்படாதவர்கள், எரிவாயு விநியோகஸ்தர்களிடமே வங்கிப் படிவங்களைப் பெற்று மீண்டும் விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரடி மானியத் திட்டத்துக்காக வங்கிகளில் முன்னரே விண்ணப்பித்தும், சில நுகர்வோரின் விண்ணப்பங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன.

ஆங்கிலத்தை சரியாகஉச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள்

பள்ளி கல்வித்துறை ஏற்பாட்டில் மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாகஉச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள் : அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகின்றன

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவை யான சி.டி.க்கள்,கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்க சி.டி.க்கள்

பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.


பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் பழைய தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் மீட்டர்களை மாற்றி புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மின் மீட்டர்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2.30 கோடி மின் இணைப்புகளில் ஒரு கோடி மின் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது.
இந்தப் புதிய டிஜிட்டல் மின் மீட்டர்களை எவ்விதக் கட்டணமுமின்றி பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆய்வாளர்கள், மின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆணையிடப்பட்டுள்ளது

43,200 கிலோ உப்பால் பிரம்மாண்ட தேசியக் கொடி: வாணியம்பாடி பள்ளி மாணவர்கள் உலக சாதனை


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, சிகரம் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் 43,200 கிலோ உப்பைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய தேசியக் கொடி வரையும் சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இதில் இப்பள்ளியின் 1,100 மாணவர்கள், 56 ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், 24 பள்ளி நிர்வாகிகள் என 1,180 பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். இவர்கள் வண்ணங்கள் கலந்த 43,200 கிலோ உப்பைப் பயன்படுத்தி உலகின் மிகப் பெரிய இந்திய தேசியக் கொடியை வரைந்தனர்.

இக்கொடியானது பள்ளி வளாகத்தில் 72 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும், 3,456 சதுர மீட்டர் பரப்பும் கொண்டதாக (37,200 சதுர அடி) அமைக்கப்பட்டது. இச்சாதனை நிகழ்ச்சி 5 மணி நேரத்தில் நிறைவடைந்தது.

இதனை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளைப் பாராட்டினர்.

81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


தமிழகத்தில், கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 81 சதவீதத்தினருக்கு அடிப்படை கணித திறன் இல்லை என்று ஆய்வுகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
'ஏசர்' அமைப்பின் சார்பில், தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் படி, தமிழ் பாடத்தை பொறுத்தவரையில், எழுத்து, வார்த்தை, வாக்கியம், பத்தி என வாசிப்பு திறன் கொண்ட

‘மாணவர்களே... மதிப்பெண்களை விட அறிவைத் தேடுங்கள்’

”மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,” என ’இஸ்ரோ’ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ’இஸ்ரோ’ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், கோவையில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ’இஸ்ரோ’ தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அரசியல் தலையீடுகள் இருந்ததாக கூறப்பட்டதே? நான் தலைவராக இருக்கும்வரை அந்தகைய செயல்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. அதற்குபிறகு, தலைவர் தேர்ந்தெடுப்பதில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஜி.பி.எஸ்., உதவியுடன், பூமியில் இருக்கக்கூடிய இடங்கள், பொருட்களை மிக அருகில் சென்று பார்ப்பது போல் பார்க்க முடிகிறது.

ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை சலுகையல்ல, அங்கீகாரம்...


மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம். மோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள மக்கள் தொகையின் கூடுதலைவிட அல்லது கனடா மக்கள் தொகையின் மூன்று மடங்கைவிட இது அதிகம். ஆனால், கல்வியாளர்களுக்கு, எனக்கு, அந்த எண்ணிக்கை தொடக்க மற்றும் அடிப்படைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையைத்தான் நினைவுபடுத்துகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி ஆண்டு அறிக்கையின் புள்ளி விவரங்கள் சில முக்கிய பிரச்னைகளை எழுப்புகின்றன.

மாணவர்களை வெளியேற்றினால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் !

10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.

விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பு, பிளஸ்2 அரசு பொது தேர்வுகளில் பல ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றது. இரு ஆண்டுகளாக முதலிட தேர்ச்சியை தக்க வைக்க முடியவில்லை. வரும் பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பாட வாரியாக நடத்துகின்றனர். தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்துகின்றனர்.

‘தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை’


தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவியருக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

600 ஆசிரியர் பயிற்றுநர்கள் அதிரடியாக இடமாற்றம்; ஆணையை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம்

கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு; கணினிசார் வளமாக மாற்ற திட்டம்

வாரத்தில் 1 நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் இயங்கும் அரசு பள்ளி

ராமநாதபுரத்தில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் அரசு பள்ளி இயங்குகிறது. ராமநாதபுரம், நொச்சிவயல் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஈராசிரியர் பணிபுரியும் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால், அங்குள்ள ரேஷன் கடையை வாரத்தில் 5 நாட்கள் பள்ளியாகவும், சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடையாகவும், டூ இன் ஒன் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதியின்றி, சாலை ஓரம் உள்ள ரேஷன் கடையில் செயல்படும் இப்பள்ளியில் 4 மாணவிகள், 8 மாணவர்கள் படிக்கின்றனர்.

வேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது!

அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எனப்படும் தினக்கூலிகள் தவிர்த்து, அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குத்தான் ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) எனப்படும் பி.எப். தொகை, அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்பட்டு, அதே தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவன பங்காகவும் அவர்களது பி.எப். கணக்கில் சேர்க்கப்படுகிறது

web stats

web stats