Labels

rp

Blogging Tips 2017

ஊதிய மாற்றம் தற்போதைக்கு நிறுத்தி வைத்தல் சார்பான நிதித்(ஊதியக்குழு)துறையின் அரசாணை எண் : 200 , நாள் :10 . 07. 2015


எளிய செயல் வழிக்கற்றல் (SABL) ஏணிப்படி சின்னங்களும், அதற்கான செயல்பாடு விளக்கங்களும்

SSA-PERIODIC ASSESSMENT TOOL-TAMIL,ENGLISH&MATHS (CLASS-1 TO 8)

இலவச பை விநியோகத்துக்கு மறுஒப்பந்தம் கோரப்பட்டது ஏன்? - தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் விளக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பைகள் தயாரிப்பதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தகுதி இல்லாததால் மறுஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 2015-16ம் கல்வி ஆண்டில் 90.78 லட்சம் இலவச பைகள் வழங்க ரூ.120.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பி.எட்., தேர்வு முடிவு இன்று வெளியீடு

பி.எட்., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நடந்த, பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள், பல்கலை இணையதளமான, www.tnteu.inல், இன்று வெளியாகும்.மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ் ஜூலை, 30ம் தேதிக்குப் பின், கல்லுாரிகள் வழியே வழங்

தமிழக பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மும்மொழிக் கொள்கையை கொண்டுவருவதற்காக பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக செயல்படுகிறது.

CRC (11.07.2015) - SABL MODULES

'சர்ச்சையான' பொருளியல் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை: தேர்வு அறிவிப்பால் அதிர்ச்சி

பிளஸ் 1 பொருளியல் புத்தக முகவுரை  நீக்கப்பட்ட புதிய புத்தகங்கள் மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்குள் முதல் இடைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த 2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகம் 2008ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டன

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் உண்டா?

வரும், 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு வராமல், அரசு பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான,

வங்கி கணக்குகளில் குளறுபடி மாணவர் உதவித்தொகையில் சிக்கல்

வங்கி கணக்கு முறையாக பராமரிக்கப் படாததால் பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன.மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மூலம் பொதுத்துறை வங்கிகளில் துவங்கப்பட்ட 'ஜீரோ பேலன்ஸ்'

கல்வி உதவித் தொகை நடைமுறைகளை எளிதாக்க மாணவர்களின் ஆதார் விவரம் சேகரிப்பு

மாநிலம் முழுவதிலும் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஆதார் அடையாள அட்டை உள்ளவர்கள் விவரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. வரும் காலங்களில் கல்வி உதவித் தொகை உள்ளிட்டவைகளை இதன் மூலம் அளிப்பதற்காக பட்டியல் திரட்டப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஜாக்டோ அழைப்பு-திமுக பொருளாளர் திரு .ஸ்டாலின் அவர்களை சந்தித்த போது

ஜாக்டோ அழைப்பு-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் பொறுப்பு பொதுசெயலர் திரு க செல்வராஜ் அவர்கள் கலந்துகொண்டார்

தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஜாக்டோ அழைப்பு

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு நிதி

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய நோக்கம்.இதன்படி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), நிர்மல் பாரத்
மற்றும் சி.எஸ்.ஆர்., (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி)

தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன

தமிழகத்தில், பிரபல பள்ளிகள் உட்பட, 2,000 தனியார் பள்ளிகள், அங்கீகாரம்
இல்லாமலேயே அட்டகாசமாகச் செயல்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில், 5,000 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன.

தமிழகத்தில் தான் ஆதிதிராவிடர்களுக்கு சிறந்தமுறையில் கல்வி புகட்டப்படுகிறது ஆதிதிராவிடர் ஆணையம் பாராட்டு

ஆதிதிராவிடர் சமூதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியளிப்பதில் 
தமிழகம் சிறந்து விளங்குவதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் 
தலைவர் புனியா பாராட்டு  தெரிவித்துள்ளார்.  தேசி்ய ஆதிதிராவிடர் 
ஆணையத்தின் தலைவர் புனியா தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளனர்.

கல்வித்துறை சிறப்பு அரசாணை ஆசிரியர் கலந்தாய்விற்கு முட்டுக்கட்டையா: ஆசிரியர்கள் அதிருப்தி.

கல்வித்துறை செயலரின் சிறப்பு அரசாணையால் ஆசிரியருக்கான பொது பணி மாறுதல் கலந்தாய்வில் தாமதம் ஏற்படுகிறது என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.

தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி: ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ' போர்க்கொடி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் சம்பள உயர்வு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த பிரச்னை இழுபறியாக உள்ள நிலையில், தமிழக அரசுக்கு அடுத்த தலைவலி உருவாகியுள்ளது. 

மத்திய அரசுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க 
வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்க இயக்கங்களின் கூட்டு நடடிக்கை குழுவான 'ஜாக்டோ' அமைப்பு, அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் தொடர் முழக்க போராட்டங்களையும், தொடர் போராட்டங்களையும் 
நடத்தப்போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு 2வது & 4வது சனிக்கிழமை வீடுமுறை.-ஜூலை-15 முதல் அமுலாகிறது

திருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிகைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.
இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால்,

ஆதார் எண்ணுக்காக மாத ஊதியம் நிறுத்தப்படாது.அதிகாரி விளக்கம்

ஆதார் எண்ணை சமர்ப்பிக்காவிட்டால் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற உத்தரவு எதையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று சென்னை தலைமைச் செயலக உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், படிப்படியாக ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது அடிப்படை சம்பள கணக்கு விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கருவூலம்-கணக்குத் துறை

அனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112

அனைத்து அவசர தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய நாடு தழுவிய அளவில் 112 என்ற ஒரே அவசர உதவி எண் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது நடைமுறையில் உள்ள அவசர அழைப்பு எண்களான 100, 101, 102, 108 போன்ற எண்களுக்கு பதிலாக அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணான '911' போன்று இந்தியாவிலும் புதிய ஒருங்கிணைந்த அவசர அழைப்பு எண்ணாக ‘112’-ஐ பயன்படுத்திக் கொள்ளும்படி

ஆசிரியப் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கு

ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில திட்ட அலுவலகம் (STATE PROJECT DIRECTOR)சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (MADURAI BENCH OF CHENNAI HIGH COURT) மேல்முறையீடு இந்த மேல் முறையீட்டு மனுவில் என்ன சொல்லியிருக்கிறார்கள்.

1. பள்ளிக்கல்வி துறையில் போதுமான காலி பணியிடங்கள் இல்லை
2. தற்போதுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் 3/4 தான் இருக்கிறார்கள்,மீதமுள்ள 1/4 தேவைபடுகின்றார்கள்

மேலூர் பள்ளி ஆசிரியருக்கு புதிய திட்டத்தில் ஓய்வூதிய நிதி

ஏழை மாணவர்களை சேர்க்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்

தனியார் பள்ளிகளில், 25 சதவீத ஒதுக்கீட்டில், ஏழை மாணவர்களைச் சேர்க்க மறுத்தால், அதுகுறித்த புகார்களை தெரிவிக்க, கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள்

சென்னையைச் சேர்ந்த, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், ஏழை, எளிய விளிம்பு நிலை மாணவர்களுக்கு, 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி கிடைக்கும்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வரும், 15ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, மே, 14ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது, ஆகஸ்ட் 6ம் தேதி வரை செல்லத்தக்கது.

ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆகஸ்டு1 போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு

ஆகஸ்டு 1 அன்று ஜாக்டோ சார்பில் நடைபெற உள்ள மாநில,மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கோரிக்கை தொடர்முழக்க ஆர்பாட்டத்தில்(காலை 10மணிமுதல் மாலை 4மணிவரை)கலந்துகொண்டு எடுக்க ஆதரவு அளிக்கக்கோரி அரசியல் இயக்கங்களின் முக்கிய தலைவர்களை இன்றுசந்தித்தனர்
1.காங்கிரஸ் கட்சித்தலைவர் திரு இ வி கெ.எஸ் இளங்கோவன் அவர்கள்
2. மதிமுக கட்சித்தலைவர் திரு வை.கோ அவர்கள்
3.கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் திரு ஜி.ராமக்கிருஷ்னன் அவர்கள்
மற்றும்
4.தமிழக பா.ஜ.க கட்சித்தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர் ராஜன் 
ஆகியொர்கலை சந்தித்தனர் நாளை மீதமுள்ள முக்கியதலைவர்களை சந்திக்க திட்டம்
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக பொருப்பு பொதுசெயலர் .திரு.க .செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டார்பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள்'அழுவதா, சிரிப்பதா என தெரியலையே' ஐ.ஏ.எஸ்.,சில் சாதித்த டிரைவர் மகள் கண்ணீர்!

பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள், 'அழுவதா; சிரிப்பதா என்ற சூழலில் உள்ளேன்' என, கண்ணீருடன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், திம்மையன்புதுாரை சேர்ந்தவர் சென்னியப்பன்; கார் டிரைவர். இவர் மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி, 29, ஐ.ஏ.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில், 152வது இடத்தை பெற்று, சாதனை படைத்தார். பிளஸ் 2

கடிதம் எழுதிய ஆசிரியர்: வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு

தன் மீதான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பள்ளி ஆசிரியர் கடிதம் எழுதியதால் அவரது வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வீரபாண்டியன் கிராமத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சந்திரசேகரன். பள்ளியைக் கைப்பற்றும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி அவர் மீது பள்ளிச்செயலர் அதிசயமேரி புகார் கூறினார்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்தி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளியில் படிக்கும் 7–ம் வகுப்பு மாணவிகளை வீட்டிற்கு அழைத்து செக்ஸ் சில்மிஷம்: தந்தை–மகன் கைது

புதுக்கோட்டை, காமராஜர் புரத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 7–ம் வகுப்பில் மல்லிகா, தனம், தேவிகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய 3 மாணவிகள் படித்து வருகின்றனர். தோழிகளான இவர்கள் 3 பேரும் பள்ளி இடைவேளை நேரத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு தின்பண்டம் வாங்க செல்வது வழக்கம்.
அப்படி கடைக்கு சென்ற போது அந்த பகுதியில் உள்ள துரை (வயது 50) என்பவர் மாணவிகள் 3 பேரிடமும் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். தனது வீடு அருகில் தான் உள்ளது. அங்கு வந்தால் நிறைய பண்டங்கள் தருவதாக கூறி மாணவிகளை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

ஊராட்சியில் கட்டப்படும் பள்ளிகள்:நகர் ஊரமைப்பு அனுமதி தேவையில்லை:உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் பள்ளிகளுக்கு நகர் ஊரமைப்புத்துறையிடம் கட்டட அனுமதி பெற நிர்பந்திக்கக் கூடாது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி கோயன்விளை பாரத் அட்வான்ஸ்டு மெட்ரிக் பள்ளி தாளாளர் பகவத் தாக்கல் செய்த மனு:
ராஜாக்கமங்கலம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 3.25 ஏக்கரில் பள்ளி கட்டடம் கட்டினோம்.

பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி

மாணவ, மாணவியர் சுத்தமாக இருக்கும் முறை குறித்து, 'யுனிசெப்' உடன் இணைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டது.மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற துாய்மை இந்தியா திட்டத்தில், துாய்மையான இந்தியா, துாய்மையான பள்ளி என்ற திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுத்தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு 10ம் தேதி பரிசு

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
கடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில்,

3 மாதத்தில் குரூப் --2 தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டம்

போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் உதவி கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில், 70 காலியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு, இன்னும், இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வை, மூன்று மாதங்களுக்குள் நடத்தாமல், படிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வணிகவரி உதவி கமிஷனர்:தமிழக அரசு துறைகளில், போலீஸ் டி.எஸ்.பி., உதவி கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பணியாளர்- நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:
அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற சில கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முன்வந்துள்ளது.கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணி,

தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
பதவி உயர்வு இல்லாமல் தவித்து வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை தர ஊதியமாக ரூ. 5,400 வழங்க

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சிவகங்கை ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, அந்தந்தக் கல்லூரிகளிலேயே மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்

பிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்தி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி உத்தரவு

பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா அக்கறை
தமிழ்நாட்டில் உளள அனைத்து பள்ளிகளும் சுத்தமாக இருக்கவேண்டும், மாணவ-மாணவிகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் கல்வி கற்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அக்கறை கொண்டுள்ளார்.

கிராம மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம்

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய போட்டித்தேர்வுகளில் பங்கேற்க செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.'உயர்கல்விக்கான தேசிய போட்டித் தேர்வுகளில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு இல்லை' என ஆய்வில் தெரிந்துள்ளது.
இதனால் கிராமங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்- 2 மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர். எம்.எஸ்.ஏ.,) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்விக்காக தேசிய அளவில் நடக்கும் தேர்வுகள், கல்வி உதவித் தொகை, தேர்வுக்கு தயாராகும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்கான மாணவர்கள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது.

செமு அவர்களின் 56ஆண்டுகால இயக்கசேவை பாராட்டு விழா மலர்-படிக்க பாதுகாக்க

டவுன்லோடுசெய்ய படத்தின்மீது கிளிக்செய்யவும்

பொதுச்செயலர் அவர்களின் மருத்துவ செலவினை இயக்கம் ஏற்று அதற்கான காசோலை வழங்கியகாட்சி


பொதுசெயலர் பாராட்டுவிழா காட்சிகள்


பொதுசெயலர் செ மு அவர்களின் 56 ஆண்டுகால பாராட்டு விழாமலர் வெளியீடு

விழாமலர் வெளியீடுபவர்-ஊத்தங்கரை வித்தியாமந்திர் தாளாஅலர் திரு சந்திரசேகரன் அவர்கள்
விழாமலர் பெறுபவர்-விரல்நுனியில் விதிகள் நாயகந்பெரியவர் வையம்பட்டி திரு.ராமசாமிஅவர்கள்

பல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி 110 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்: மருத்துவ கல்வி இயக்குனர் பேட்டி

தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு

அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான(2015) தேர்வு நடைபெற இருந்த நிலையில், அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சில மாநிலங்களில் வெளியானதைத்தொடர்ந்து இந்த தேர்வை  தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது.

            மறு தேர்வை நடத்த போதுமான காலஅவகாசம் வேண்டும் என சி.பி.எஸ்.இ. தரப்பில் கோர்ட்டில் கோரப்பட்டு இருந்தது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு மறுதேர்வை நடத்த போர்டு கமிட்டிக்கு 4 வாரகால அவகாசமும் அளித்து இருந்தது. தள்ளிவைக்கப்பட்ட

11.07.2015 PRIMARY CRC-SABL-ENGLISH POWERPOINT...

எம்பிபிஎஸ் இடம் கிடைத்தும் சேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்!

சென்னை: வறுமையின் காரணமாக எம்பிபிஎஸ் இடம் கிடைத்தும் அதில் சேர முடியாமல் தவித்து வருகிறார் ஏழை மாணவர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகன் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், வறுமை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(49), கூலித் தொழிலாளியான இவரது

கல்வித்துறையில் தமிழகம்

அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்றுகொண்டிருப்பதாக பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள்.
 ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் செயல்படும் தொடக்கப்பள்ளிகளிலும், எட்டாம் வகுப்பு வரை செயல்படும்
நடுநிலைப்பள்ளிகளிலும் மற்றும் 10ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை கவலை அளிப்பதாகவும், இதுவே பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி உந்தி தள்ளுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

கவலையளிக்கும் கலந்தாய்வு: களமிறங்கும் 'ஜாக்டோ'

மதுரை: தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் அறிவிக்கப்படாததால் ஆக.,1ல் நடக்கும் ஜாக்டோ தொடர் முழக்கப் போராட்டத்தில் இப்பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.பள்ளிக் கல்வியில் கல்வியாண்டு துவங்கும் முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் இரண்டு

விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 2015--16ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது.
மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.பார்ம்., பி.எஸ்.சி., நர்சிங், ரேடியோலாஜி இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி, அரசு மருத்துவக் கல்லுாரிகள்

50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி

இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால், தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கை சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என, புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதி மன்றம், பள்ளிகளில் காலி இட விவரத்தை, இணையதளத்தில் அறிவிக்க, மெட்ரிக் இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டது. கடந்த மாதம், முதல் கட்ட காலியிடப் பட்டியல் வெளியானது. இரண்டாம் கட்ட பட்டியல்,http://tnmatricschools.com/ இணையதளத்தில், இரு தினங்களுக்கு முன் வெளியானது.

பள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் சார்பில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை, பிரதமர் மோடி, ஜூலை 1ல், டில்லியில் துவக்கி வைத்தார். நாடு முழுவதும், 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஏற்படுத்தவும், 18 லட்சம்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்

தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 'ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.இதனால் மாணவர்கள் கல்விக்கடன், உதவித்தொகை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மே 7ல் பிளஸ் 2, மே 21ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு அவர்களின் பெயர், புகைப்படம்

ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிரமம்

அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது.
அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கவும், ஆங்கில மொழி உச்சரிப்பு வீடியோவுடன் கூடிய, 'சிடி'க்கள் மூலம், பாடம் கற்பிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதற்காக,

பாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழப்பம்! : சிறப்பாசிரியர்கள் பாடு திண்டாட்டம்

சிறப்புப் பாடங்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படாததால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
நடப்பாண்டு கல்வித்திட்டத்தில் இசை, ஓவியம், தையல், கட்டடக் கலை, தோட்டக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாட போதிப்பு முறை தொடர்பாக, எஸ்.எஸ்.ஏ., சார்பில், சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'பகுதி நேர, முழு நேர சிறப்பாசிரியர்கள், பாடக்குறிப்பு (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்; அதனுடன்,

ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு; விண்ணப்பம் அனுப்புவதில் மாற்றம்? கல்வித்துறை புதிய உத்தரவு

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56 ஆண்டு கால இயக்கபணிக்கு பாராட்டு விழாஆசிரியர் இன போராளி எழுச்சி உரை


தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56 ஆண்டு கால இயக்கபணிக்கு பாராட்டு விழா மாநிலதுணைத்தலைவர் ரக்‌ஷித் பேச்சு


தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளரின் 56 ஆண்டு கால இயக்கபணிக்கு பாராட்டு விழா வில் வழங்கப்பட்ட நினைவுப்பரிசு


பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது

பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் இன்று(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
இடங்கள் விவரம்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிப்பில் சேர 250 இடங்கள் உள்ளன. பிஸியோதெரபி படிப்புக்கு 120 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. ரேடியாலஜி படிப்பில் சேர 60 இடங்களும், பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்புக்கு 20 இடங்களும், பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. பி.எஸ்சி.ஆப்டோ மெட்ரி படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன. மேற்கண்ட படிப்புகள் தவிர சில மருத்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.

அரசு வேலையை நம்பி இருந்த வேலையும் போச்சு! விரக்தியில் 1000 உதவி பேராசிரியர்கள்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1093 உதவி பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் :(டி.ஆர்.பி.,) சார்பில் 15.3.2012ல், 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பி.எச்டி., அல்லது 'நெட்', 'ஸ்லெட்' தகுதியாக வைத்து ஆசிரியர் பணி அனுபவம், உயர் கல்வி படிப்பு தகுதி மற்றும் கூடுதல் தகுதி, நேர்காணலுக்கு என தனித்தனி மதிப்பெண் வழங்கி, 'வெயிட்டேஜ்' முறையில் 25.11.2013ல் சான்றிதழ் சரிபார்ப்பும் அதை அடுத்து நேர்காணலும் நடத்தப்பட்டது.
இதன்பின் அனைத்து பாடப் பிரிவுக்குமான இறுதி தேர்வு பட்டியல் விவரம் இந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. ஆனால் பணி நியமன உத்தரவுகள் இன்னும் வழங்கவில்லை. அதற்கான அறிகுறி தெரியவில்லை. உயர்கல்வித் துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் கூறியதாவது:

பி.காம்., எம்.காம்., பி.எட்., உயர்க்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அலுவலர் உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 118 பேர் "பாஸ்"

கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை தரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், கருணை அடிப்படையில் அவருக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், திருமணமான மகளுக்கும் வேலை தரவேண்டும். எனவே, இதற்கான அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

             தருமபுரியைச் சேர்ந்த கோவிந்தமம்மாளின் தந்தை நொச்சிக்குட்டையில் உள்ள அரசு மலைவாழ் உறைவிடப்பள்ளியில் சத்துணவு தலைமை சமையல்காரராக பணியாற்றினார். பணிக்காலத்தில் அவர் 2013 ஜனவரி 18ல் மரணமடைந்தார். இதையடுத்து,

பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்த புதிய கட்டுப்பாடு

 பி.எட்., கல்லுாரிகளில், இரண்டு ஆண்டுக்கான நடைமுறை வந்தால், பேராசிரியர் எண்ணிக்கையை, 16 ஆக அதிகரிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

          தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், பி.எட்., - எம்.எட்., மற்றும் பி.பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பை, ஓர் ஆண்டிலிருந்து, இரண்டு ஆண்டாக மாற்ற வேண்டும்; புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது

நல்லாசிரியர் தேர்வு: அரசு புது முடிவு

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 15 ஆண்டுகளாக எந்த பிரச்னையுமின்றி பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கு, ஆக., 10ம் தேதிக்குள், பட்டியல் அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

வருமான வரி கட்டாத கல்வித்துறை: நோட்டீசால் ஆசிரியர்கள் அலறல்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டும், வருமான வரித் துறையில் இருந்து, 'நோட்டீஸ்' வந்ததால், ஆசிரியர்கள் பீதி அடைந்து உள்ளனர். கல்வித் துறையின் நிர்வாக பிரச்னையால், இந்தக் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

              அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், மாத ஊதியத்தில், வருமான வரித் தொகையான டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் இந்தத்

கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு?

தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல் இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியுள்ளது.கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும் வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேலை நேரம் 2 மணி நேரம் அதிகரிப்பு - முதுநிலை பட்டதாரி அசிரியர் கழகம் கண்டனம்.