சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் 2020ம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய புத்தகங்கள் அச்சடித்து முடிக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க கல்விதுறை அமைச்சர், பள்ளி கல்வி துறை செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு இரண்டு அரசாணைகளை பிறப்பித்துள்ளது. இந்த குழுக்களை நீதிமன்றம் கண்காணிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவது, மேம்படுத்துவது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி கல்விதுறை செயலாளர் உதயசந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்