rp

Blogging Tips 2017

ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை

மதுரை:கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடர்பாக, ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை, மதுரையில் நேற்று முன் தினம் நடந்தது.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்.,) பொன்னையா தலைமை வகித்து, கணக்கெடுக்கும் பணி குறித்து விளக்கினார். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற அதிகாரி ஒருவர்

வாக்குச்சாவடிகளில் 'ஆன்லைனில்'வாக்காளர்களைச் சேர்க்க முடிவு:படிவங்களுக்கு 'குட்பை'

காகித பயன்பாட்டை குறைக்க, வாக்குச்சாவடிகளில் 'ஆன்லைன்' மூலம் வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் 'இ கவர்னன்ஸ்'

திட்டத்தில் அனைத்து துறைகளையும் 'ஆன்லைன்' மூலம் இணைத்து வருகின்றன. இதனால் காகித பயன்பாடு

ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என அரசாணை வெளியிட கோரி வழக்கு

அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவுக்கு, தலைமைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

 சிவகாசியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஏ.இ.செபாஸ்டின்ராஜ் தாக்கல் செய்த மனு: 

கல்வி உரிமைச் சட்டம்: முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ரூ. 8 கோடி; தமிழக அரசு வழங்கியது

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டவர்களுக்கான கட்டணத் தொகையில் முதல் கட்டமாக ரூ. 8 கோடி தனியார் பள்ளிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக,

 ரூ. 60 கோடி அடுத்த சில நாள்களில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

காதல் திருமணம்: ஆசிரியரை வெளியேற்றிய பள்ளிக்கு எச்சரிக்கை

காதல் திருமணம் செய்த தமிழ் ஆசிரியரை, பணி செய்ய விடாமல் தடுத்த தனியார் பள்ளி மீது, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது; ஆசிரியரை பள்ளியில் சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில், தனியாரால் நிர்வகிக்கப்படும், வள்ளல் எட்டியப்ப நாயக்கர் பள்ளி உள்ளது. இங்கு தமிழாசிரியராக பணிபுரிபவர் பூங்காவனம். இவரும், அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவரும், காதலித்து திருமணம் செய்தனர்.
இதை பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. அதனால், 'பள்ளிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டதும், சென்று விட வேண்டும்; மாணவர்களுக்கு பாடம் நடத்தக் கூடாது' என, ஆசிரியர் பூங்காவனத்திற்கு, பள்ளி நிர்வாகம் தடை விதித்தது; 100 நாட்களாக இந்த தடை நீடித்தது

ஹெச்.எம்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

 அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘மாணவ, மாணவிகளை பள்ளி வேலைகளில்  ஈடுபடுத்தக்கூடாது. அதற்கென பணியாற்றும் வேலையாட்களைதான் அதற்கு ஈடுபடுத்திட  வேண்டும். அதை மீறி மாணவர்களை வேலைகளை செய்யச்  சொல்லும் பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: வழுக்கும் உண்மைகள் ஆதி வள்ளியப்பன்-tamil hindu

எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கப்பட்ட பஜ்ஜியைப் பற்றி அந்தத் தாத்தா அழகாக விவரிப்பார். என்னடா, வயசான காலத்தில் பி.பி., ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வருமே. இவர் என்னடாவென்றால் பஜ்ஜி, போண்டா, வடை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே என்று நமக்குச் சந்தேகம் வரும். அந்தத் தாத்தா தோன்றுவதைப்போன்று, பெரும்பாலான எண்ணெய் விளம்பரங்களைப் பார்த்தால், நாமும் சுடச்சுட இரண்டு பஜ்ஜி சாப்பிடலாம் என்றுதான் தோன்றும்.இன்றைக்கு நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் மறைந்திருக்கும் பிரச்சினைகள் பற்றி, நமக்கு அதிகம் தெரியாமல் இருப்பதுதான் பிரச்சினை.
அடிப்படை பிரச்சினை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வினோதம், போலீஸ் அதிகாரிகள் முன்பு தோல்வி, நீதிபதி முன்பு தேர்ச்சி

 சப்இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 6 பேரின் உடல்தகுதி திறனை சோதிக்க உத்தரவிட்டனர். அதில் உயர்நீதிமன்றம் நீதிபதி முன்பு நடத்திய தேர்வில் 6 பேர் அதிக அளவு தேர்ச்சி பெற்றனர். இது எப்படி என்பது குறித்து பதில் அளிக்க ஐஜிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை தி.நகரை சேர்ந்தவர் பி.அருண், கணேசன், இளங்கோ உள்பட 6 பேர் சென்ைன  ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்லூரியில் படிக்கும்போது தேசிய அளவிலான

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உதவிதொடக்கக்கல்வி அலுவலர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் மாநில பொதுச ்செயலாளர் தேர்தலும் வரும் ஞாயிறு (13/9/2015) காலை 10 மணிக்கு கொல்லிமலையில் நடைபெறும் என அச்சங்கத்தின் தலைவர் திரு. அய்யாசாமி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 தகவல் திரு கணேசன் அவர்கள் மாநில தலைமை நிலயச்செயலாளர்

B.Ed. Admission Guidelines 2015-2016 & G.O 168-DT 7.7.2015

CLICK HERE-HIGHER EDUCATION-DEPARTMENT-G.O 168 -DT 07.07.2015

Union level training 50trs for zero waste management training on.5-10-15


ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கோரிக்கை மனுவிற்கு தொடக்கக்கல்வி இயக்குனரின் பதில்

Name P.SIVAKUMAR
Petition No 2015/843312/EP Petition Date 07/09/2015
Address ,,,Vallimathuram,Titagudi,Cuddalore-,Tamilnadu
Grievance வணக்கம்.அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு கட்டங்களாக இடமாறுதல் கலந்தாய்வு நடைப்பெற்றது.வட மாவட்டங்களில் பணியாற்றும்
தென்மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இடமாறுதலும் பெற்றனர்.அவர்களில்

Tamil Nadu Open University - Term End Examination June 2015 Results

  • CLICK HERE-TNOU-June 2015 Results

கடந்த 4 ஆண்டுகளில் 277 மெட்ரிக். பள்ளிகளுக்கு அனுமதி

கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 277 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சம் அதிகரித்துள்ளது.
கடந்த 2011-12 கல்வியாண்டில் தமிழகத்தில் 3,769 மெட்ரிக். பள்ளிகள் இருந்தன. இவற்றில் 25 லட்சத்து 55 ஆயிரத்து 625 மாணவர்கள் படித்து வந்தனர். இந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 2014-15 ஆண்டு நிலவரப்படி, 36 லட்சத்து 56 ஆயிரத்து 317 பேர் படிக்கின்றனர்.

நர்சரி பள்ளிகள் மீது கல்வித்துறை கண்

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்பாடு குறித்து, கல்வித்துறை அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 30 பிளே ஸ்கூல் உட்பட, 261 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்படுகின்றன; இதில், நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்றும், அங்கீகாரம் புதுப்பித்தும், 206 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன; மீதமுள்ள, 25ல், பாதுகாப்பு மற்றும் முக்கிய விதிமுறைகளை பின்பற்றாத, 19 நர்சரி பள்ளிகளை மூட, மே, 22ல், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற, சில பள்ளிகள், செயல்படுகின்றன.

அங்கீகாரம் புதுப்பிக்காத ஆறு பள்ளிகளுக்கு, நோட்டீஸ் வழங்கிய நிலையில், இரண்டு பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும்

2009 முதல் பிப்ரவரி 2014 வரை யான CPS ACCOUNT SLIP (WITH MISSING CREDIT) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

CLICK HERE CPS ACCOUNT SLIP 2009 - FEB 2014

பி.எப். புகார்களுக்குத் தீர்வுகாண புதிய திட்டம் தொடக்கம்

தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஒ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ‛வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில்

முதல்வர் பரிசு தொகை திட்டம்; மாணவர்களின் விண்ணப்பம் வரவேற்பு

முதல்வரின் பரிசு தொகை வழங்கும் திட்டத்திற்கு, மாணவ, மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு முதல்வரின் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களின்கீழ் 2015-16ம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

INSPIRE விருது திட்டம் - இவ்விருதுக்கான மாணவர்களை இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பான உத்தரவு!!

அசர வைக்கும் ஆசிரியர்: ஊரார் மெச்சும் ஊராட்சி பள்ளி

வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை: நாளை தொடக்கம்

வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை: நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும் (ஐபிஏ), வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை

கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு இணையதள வசதி - இயக்குனர் செயல்முறைகள்!!!

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்ககை: சிவகங்கைமாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிளுக்கு விடுமுறை அளி்த்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்தில் வேல் முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மானாமதுரை இளையான்குடி, திருப்புவனம் ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை இம்மானு வேல் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

"அனைவருக்கும் கல்வி' திட்டம்: மத்திய அரசு நிதி 50% ஆகக் குறைகிறது

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான (சர்வ சிக்ஷா அபியான்) தனது நிதிப் பங்களிப்பை 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தேவைப்படும் நிதியில், மத்திய அரசின் பங்களிப்பு 65 சதவீதமாகவும், வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக பிற மாநில அரசுகளின் பங்களிப்பு 35 சதவீதமாகவும் உள்ளது.

பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம்: மத்திய அரசு திட்டம்

நமது கலாசாரப் பெருமைகளை இளம் தலைமுறைக்கு கற்பிக்கும் நோக்கில், நம் பழம்பெரும் இதிசாகங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றையும், ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையையும் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
 இதுகுறித்து மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பணிப்பதிவேடு பராமரிக்கும் போது பதிவுகள் நிலையானதாக இருக்க வழிகாட்டு நெறிமுறைகள்

click here the government letter

கல்விச் சுற்றுலாவுக்கு 800 மாணவர்கள் தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், ராஷ்ட்ரிய அவிக்ஷான் அபியான் திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணினி தொழில்நுட்பத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்வுநிலை பெறுவதற்கு முன்னரே பதவி உயர்வு பெற்றவர், தேர்வுநிலை பெற்ற பின்னர் பதவி உயர்வு பெற்றவர், மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை

 தேர்வுநிலை பெறுவதற்கு முன்னரே பதவி உயர்வு பெற்றவர், தேர்வுநிலை பெற்ற பின்னர் பதவி உயர்வு பெற்றவர், மூத்தோர்- இளையோர் ஊதிய விகிதம் சமன் செய்யும் அரசு ஆணை


click here to download the g.o

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 42 ஆசிரியர்கள் மீது வழக்கு.

 போலி சான்றிதழ் கொடுத்து ஹரியானா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 42 ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த 3 நாட்களில் மட்டும் 42 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

         மேலும், குற்றம்சாட்டப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் கைரேகையும், ஹரியானா ஆசிரியர்தகுதித் தேர்வின் போது பதிவான அவர்களது கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ஆசிரியர் தினத்தை ஆறப்போடும் கல்வித்துறை

மாவட்ட அளவில் நடத்தப்படும் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும்,டிசம்பருக்கு பிறகே நடத்தப்படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.
               நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2-வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை காரைக்குடியில் ஒரு முறையும்,

தொடக்கக்கல்வி-நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு வளர் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்..

பள்ளி வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - தொடக்கக்கல்வி - இயக்குனர் செயல்முறைகள்!!!

பி.எட்., விண்ணப்பம் இன்று கடைசி நாள்

தமிழகத்திலுள்ள, 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், 2,200 பி.எட்., இடங்களை நிரப்ப, 3ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இன்று பிற்பகல், 3:00 மணி வரை மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

11,000 மாணவர்களுக்கு அறிவியல் விருது மத்திய அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.மாவட்ட விருதுக்கு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் குளறுபடி?

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ததில், குளறுபடிகள் நடந்துள்ளதாக, ஆசிரியர் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ண னின் பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

தேர்வுக்குழு:
இந்த நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை, தமிழக அரசு வழங்கும். சமீபத்தில், கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினத்தன்று, 379 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது

சத்துணவு மாணவர்கள் கணக்கெடுப்பு துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் குறித்த கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இதுதொடர்பாக சத்துணவு துறை அதி காரிகள் கூறியதாவது: ரூ.2 கோடிதமிழகத்தில், 43 ஆயிரம் பள்ளிகளில், சத்துணவு கூடங்கள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், 5.40 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிட்டனர். சத்துணவுக்காக மாதம்தோறும், 2 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
 தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் 1.10லட்சம் குழந்தை தொழிலாளர்கள்: என்.ஜி.ஓ., தகவல்

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒருலட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக என்.ஜி.ஓ. ஆய்வில் தெரிவி்க்கப் பட்டுள்ளது,

குஜராத் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் நாட்டின் 55 சதவீத தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்த விதை உற்பத்தி பிரிவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும் 14 வயதுக்குட்பட்டவர்களாவர்.

மாணவர் சேர்க்கை: திண்டாடும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்

பி.எட்., எம்.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது, மாணவர் சேர்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 30 முதல் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின் படி, பி.எட்., எம்.எட். ஆகிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளின் படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்றாண்டு சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (10-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி வரை நடை பெறுகிறது.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் 1,252 இடங்கள் உள்ளன.

நெல்லை அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அவமான படுத்திய மாணவர்கள் 2 பேர் டிஸ்மிஸ்

நெல்லை அருகே உள்ள கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1,087 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகிக்கு புகார் வந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளியின் சுற்று சுவரை சில மாணவர்கள் உடைத்துவிட்டனர். இதனால் இன்று காலை மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகி கயத்தாறு பள்ளிக்கு விசாரணைக்கு சென்றார்.

பள்ளியில் நடந்த இறை வணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட சவுந்தரநாயகி மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.

Flash News: 6% அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீத உயர்வுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா ???

தமிழக அரசு கடனில் சிக்கித் தவிப்பதாக தேமுதிக தலைவர் விஜய்காந்த் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
          அதிமுக அரசு 2011-இல் பதவி ஏற்றபோது, அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அது ரூ. 2.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

DEO Office PA Promotion Panel As on 15.3.15

தமிழ்நாடு பொதுப்பணி மாவட்டக் கல்வி/மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2015 அன்றுள்ளவாறு தகுதியுடைய கண்காணிப்பாளர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு  CLICK HERE.....

செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

பிளஸ்-2 மாணவர்கள் மடிக்கணினி பெற ஆதார் எண் தேவை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா மடிக்கணினி வழங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் ஆதார் எண் பெறப்படவேண்டும்.

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி

அரசு பள்ளிகளில் முதல்பருவத்தேர்வு துவங்கும் நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் உருவாகியுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கு, வரும், 12ம் தேதி முதல் காலாண்டு தேர்வு துவங்குகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, செப்.,19ம் தேதி முதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - தற்காலிக ஆசிரியர் /ஆசிரியரல்லதோர் பணியிடங்களை நிரந்தரம் செய்தல் - பணியிட விவரங்களை கோரி இயக்குனர் செயல்முறைகள்!!

கட்டாய ஹெல்மெட் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இன்று தீர்ப்பளித்தார்.

மோட்டார் வாகன விபத்தில் கூடுதல் இழப்பீடு கோரும் வழக்கில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும்

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் "MATHS KIT BOX TRAINING - MODULE

  • CLICK HERE - "MATHS KIT BOX TRAINING" - MODULE

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
 இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.

 தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.

செப்.10 முதல் மூன்றாண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு

சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 

பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆயிரம் குறைவு: மென்பொருள் மூலம் கண்காணிப்பு

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் குறைந்துள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 அதன்படி, கடந்த 2010-11-ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் 56,113 பேர் கண்டறியப்பட்டனர். 2015-16-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 33,686-ஆகக் குறைந்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு: இன்று பரிசீலனை?

தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும்,

TNPSC - BULLETIN FOR MARCH 2015 EXAMINATION

Bulletin No. View/Download
Bulletin No. 7 dated 16th March 2015(contains results of Departmental Examinations, December 2014) View
Bulletin No. 6 dated 7th March 2015 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2014) View

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும ஒரே கழிவறை புதுச்சேரி அரசு அதிரடி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளையே இனி ஆசிரியர்களும், ஊழியர்களும் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  • புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர் குமார், புதுவையில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

12 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்

கல்வியும் இன்றைய தலைமுறையும்

கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட தலைமுறை இது!

சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ளடங்கிய ஒரு பள்ளி வழியாக எதற்கோ செல்ல வேண்டியிருந்தது. அந்த இடம் பரிச்சயமான சூழலாக மனத்தில் மின்னலடித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த எனக்கு இவ்வளாகம் எப்படிப் புழங்கிய பகுதியாக முடியும் என்ற எண்ணம் ஓடியது. என் மகள் எழுதிய ஒரு தேர்வுக்காக உடன் சென்ற நான், அங்கிருந்த மர நிழலில் முழு நாளும் காத்துக் கிடந்தது நினைவுக்கு வந்தது. நான் படித்த பள்ளிக்கூடத்துக்கே

Income Tax 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees with regard to payment of Income Tax for the financial year 2014-15 (Assessment Year 2016-17)

   Salaried Employees are a relieved lot now after fulfiling all the formalities for Income Tax 2014-15. But, by that time six months in the new financial year 2015-16 is already over. 
         So, preparation of statement for salary income, deductions and saving under various clauses of Income Tax Act in respect of Financial year 2015-16 is already due for submission to the employer. Tax Planning and submisstion of statement to that effect to the employer would be mainly useful to avoid additional deduction of Income Tax by the employer over and above income tax estimated by an individual on the basis of his / her savings or deductions. This article summarises Income Tax Structure for the year 2015-16 (Assessment Year 2016-17) and also the Tax exemptions available to salaried class employees in the form of Exempt Income, Deductions and Savings.

ஆதார் எண் இருந்தால் தான் இலவச 'லேப் - டாப்'

கடந்த ஆண்டுகளில், கணக்கு குளறுபடி ஏற்பட்டுள்ளதால், ஆதார் எண் இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியருக்கு, இலவச லேப் - டாப் வழங்கி வருகிறது.

ஆனால், பல பள்ளிகளில், லேப் - டாப் திருடு போவதாகவும், பல மாணவர்களுக்கு, லேப் - டாப் கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 24,050 அரசு தொடக்கப் பள்ளிகளில் 64,279 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்

மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 14 லட்சத்து 88 ஆயிரத்து 235 மாணவர்கள் 
படிக்கின்றனர். ஒரு பள்ளிக்கான சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 61.88 ஆகும்.

நாகை மாவட்டத்திற்கு (08/09/2015) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்!!!

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மிக விரைவில்?

தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், தொடக்க பள்ளியில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

BRTE's Basic Works, "SABL" வகுப்பறைகளில் இருக்கவேண்டிய "கற்றல் கற்பித்தல் சாரா பொருட்கள் யாவை?" - RTI பதில்கள்

SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும - RTI பதில்

'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': 42 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி

முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால (1973-2015) கோரிக்கையான 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நேற்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

இதன் 42 ஆண்டு கால பின்னணி:
*கடந்த 1973ல் 3வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அப்போதைய பிரதமர் இந்திரா, 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' முறையை ரத்து செய்தார். இதே ஆண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ராணுவத்தினர் கடைசியாக பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலான ஓய்வூதியம் 70ல் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது.

* 1986ல் நான்காவது சம்பள கமிஷன் ரணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்தது
* 1991ல் சரத் பவார் கமிட்டியும் மறுத்தது. ஒரு முறை மட்டும் ஓய்வூதியத்தை உயர்த்த அனுமதி அளித்தது.
* 1996ல் ஐந்தாவது சம்பள கமிஷனும் முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.
* 2002ல் காங்., தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய கோரிக்கையை சேர்க்குமாறு சோனியா கேட்டுக் கொண்டார்.
* 2006ல் ஆறாவது சம்பள கமிஷனும் கோரிக்கையை நிராகரிக்க, முன்னாள் ராணுவத்தினர் வெளிப்படையாக போராட துவங்கினர்.
* 2008ல் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் முன்னாள் வீரர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். தங்களது பதக்கங்கள், விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்க முடிவு செய்தனர். இதனை அரசு கண்டு கொள்ளவில்லை.
* 2009ல் முன்னாள் வீரர்களை சந்திக்க அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மறுத்தார். இதையடுத்து பதக்கம், விருதுகளை ஜனாதிபதி மாளிகை ஊழியரிடம் ஒப்படைத்தனர்.
* 2011ல் ராணுவத்தினரின் ஓய்வூதிய கோரிக்கை ராஜ்ய சபா கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
* ஆண்டுக்கு 8,000 கோடி முதல் 9,000 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இதற்கான நிதி ஆதாரம் இல்லை என்று கூறி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.

TNPSC Group 2 A - 1700 Post ,VAO-800 Post, Group 4- 2800 பணியிடம் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது

டி.என்.பி.எஸ்சி  நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 பணியிடம் 1700 பணியிடங்களும் வீஏஓ 800 பணியிடங்களும் குரூப் 4 2800 பணியிடங்களுக்கும் இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகிறது. இதில்

Group 2 A (non Interview) பணியிடத்திற்கு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும் 18 வயது பூர்த்தி அடைந்திருகக வேண்டும்

தமிழ்ப் பாடப்புத்தகத்துடன் ஆசிரியர்களுக்கும் "கையேடு'.

தமிழ்ப் பாடப்புத்தகங்களுடன் ஆசிரியர்களுக்கான "கையேடும்' தயாரிக்கவேண்டுமென, அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு கல்வியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழ்மொழி, கணித்தமிழை மேம்படுத்த தமிழ் இணையக் கல்விக்கழகம் பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சமீபத்தில் பல்கலை பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் "சாப்ட்வேர்'

பி.எட்., படிப்பிற்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. யோகா, 'ப்ளே ஸ்கூல்' மற்றும் பால்வாடி கல்விக்கு தனி பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பி.எட்., - எம்.எட்., போன்ற கல்வியியல் பயிற்சி படிப்புகள், இதுவரை, ஓராண்டு பட்டப்படிப்பாக இருந்தன. இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்புகளாக மாற்றி, மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும்; ஐகோர்ட்டு உத்தரவு

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு வழங்காமல் ஆசிரியர்களை தேர்வு செய்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தடைவேண்டும்

சென்னை ஐகோர்ட்டில், முரளிதரன் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளார். இவரை அப்பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு: தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு

கல்விச் சுற்றுலா, தொழிற்சாலை பார்வையிடல், மற்றும் களப் பயிற்சிக்கு செல்லும் மாணவர் களுக்கு கட்டாயம் விபத்து காப்பீடு எடுக்க வேண்டும் என்று அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் ஏஐசிடிஇ புதிய கட்டுப்பாடு விதித் துள்ளது.

பொறியியல் மற்றும் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடம் சம்பந்தமாக நேரடி அனுபவம் மற்றும் களப்பயிற்சி பெறுவதற்காக கல்விச்சுற்றுலா, தொழிற்சாலை

குளம், கடலில் குளிக்க மாணவர்களுக்கு தடை!

மாணவர்களை, நீர்நிலைகள் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது; கடலில் குளிக்க விடக்கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

web stats

web stats