rp

Blogging Tips 2017

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு - பள்ளிகல்விக்கு திரு.பெஞ்சமின் அறிவிப்பு

💢FLASH NEWS : தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு - பள்ளிகல்விக்கு திரு.பெஞ்சமின் அறிவிப்பு
💐💐💐💐💐
தமிழக அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் இலாகாக்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் - ஜெயலலிதா
நிதி அமைச்சர் - ஓ.பன்னீர்செல்வம்
வனத்துறை - திண்டுக்கல் சீனிவாசன்
எடப்பாடி பழனிச்சாமி - பொதுப்பணித்துறை
செல்லூர் ராஜூ - தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை
தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
வேலுமணி உள்ளாட்சி துறை, சிறப்பு திட்டடிங்கள் செயலாக்கம்
ஜெயக்குமார் மின்வளத்துறை,
சி.வி. சண்முகம் சட்டத்துறை
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை
வி.சரோஜா சமு;க நலத்துறை மற்றும் சத்தணவுத் துறை
கே.வி. கருப்பண்ணனுக்கு சுற்றுச்சூழல் துறை
ஆர்.காமராஜ் உணவு மற்றும் இந்த சமய அறநிலையத்துறை
எம்.சி.சம்பத் தொழில்துறை
ஓ.எஸ். மணியன் ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
எஸ்.பி.சண:மகநாதன் பால்வளத்துறை
கடம்பூர் ராஜூ தகவல் மற்றும் விளம்பரத்துறை துறை
ராஜேந்திர பாலாஜி ஊரகத் தொழில் துறை
வவெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை
பெஞ்சமின் பள்ளிக்கல்வித்துறை, விளைட்டுத்துறை துறை
உதயகுமாருக்கு வாய்வாய் துறை
மணிகண்டன் தகவல் தொழில்நட்பம்
ராஜலட்சுமி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
எஸ்.வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
துரைக்கண்ணு வேளாண்துறைமற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
கே.சி. வீரமணி, வணிக வரித்துறை
முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.

OBC சான்றிதழ் யார் யார் பெறலாம் சில பயனுள்ள தகவல்கள்


மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்,பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான் றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட் டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு.

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009ன் படி

இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியீடு: தொழில்நுட்ப கோளாறால் மாணவர்கள் தவிப்பு.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளின் கடந்த ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறால், இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க முடியாமல், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்குட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், இந்த கவுன்சிலிங் நடக்க உள்ளது.தற்போது, 'ஆன்லைன்' பதிவு மூலம், இன்ஜி., விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா பல்கலையின், https:/www.annauniv.edu/tnea2016 இணையதளத்தில், மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம். 

மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: ஆதாரமற்ற செய்தி-மத்திய அமைச்சர்

மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: ஆதாரமற்ற செய்தி திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என்கிறார் மத்திய அமைச்சர்
மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

கூவி... கூவி விக்கிறாங்க!எம்.பில்., பட்டம் ரூ. 2 லட்சம் எம்.ஏ., தேர்வுக்கு ரூ.1700

மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லுாரி மற்றும் தொலைநிலைக்கல்வி மையங்களில் எம்.பில்., மற்றும் எம்.ஏ., பட்டம் வழங்குவதில் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் 26 மையங்கள், வெளி மாநிலங்களில் 190 மையங்கள் உள்ளன.

மின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு.

நாளை, மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது. மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது.தேர்தல் நடத்தை விதிமுதல் கட்டமாக,

திட்டமிட்டபடிமருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு-மத்திய அரசு

ஜூன் 13-ம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் ஜூன் 13-ம் தேதி  தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை வெளியாகிறது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!


தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23-ல் பதவியேற்பு தமிழக அமைச்சரவை பட்டியல்(Tentative) ?????????????????????????

சென்னை, மே 20 நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.

வரும் 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 32  அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். 

இதுகுறித்த விவரம் பின்வருமாறு

1..ஆர்.கே. நகர் - ஜெ.ஜெயலலிதா- முதல்வர்., உள்துறை, சட்டம் ஒழுங்கு

2.போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை 

3.மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.

 4.  ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை

தஞ்சை, அரவக்குறிச்சியில் 23ம் தேதி வாக்குப்பதிவு இல்லை - 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம்

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் 23ம் தேதி தேர்தல் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியுள்ளார். தேர்தலை & 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது 

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு

தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தில்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு 25.05.2016- அழைப்பு-கடிதம்


ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நிகழ் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு வரும் 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு

தலைமை ஆசிரியை'சஸ்பெண்ட்'

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண்சான்றிதழ் DOWNLOAD LINK

  • Click Here - Provisional Mark Sheet HSC Result

  • பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, மதிப்பெண்ணுடன் முடிவு கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: துணைவேந்தர் அறிவிப்பு

தமிழகத்தில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கு வெள்ளிக்கிழமை (மே 20) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்..! முதல்வர் ஜெயலலிதா உறுதி

 தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.               "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் (நம்மைச்) சேரும்" என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கேற்ப, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான வெற்றியை அளித்து, என்னை மீண்டும் தொடர்ந்து முதலமைச்சராக தேர்ந்தெடுத்து, ஒரு சரித்திரச் சாதனையை ஏற்படுத்திய எனதருமை தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்தில் அதிமுக ஆட்சி: மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா; வலுவான எதிர்க்கட்சியாக திமுக!

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைகிறது. 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா.தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

+2 மாணவ-மாணவியர் சென்டம் ஒப்பீடு

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ விண்ணப்பம் வினியோகம்.

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்'

'பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை, அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி நடத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனரகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள உத்தரவு:

பிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, மதிப்பெண்ணுடன் முடிவு கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டன.

சட்டமன்ற தேர்தல் - 2016 அன்று கொடுக்கப்பட்ட ஊதிய விவரம்

நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.'மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்

பிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து கல்வித்துறை ஆய்வு! தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களால்

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் அதிக
எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு 92.87 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 95 சதவீதத்திற்கும்மேல் தேர்ச்சி பெற கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் 93.19 சதவீதம் தேர்ச்சியே பெற முடிந்தது. இதற்கு காரணம் மொழிப் பாடங்கள் மற்றும் கணிதத்தில் எதிர்பார்க்காத எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்தது தான்.

கணிதம், இயற்பியலில் சென்டம் குறைவு எதிரொலி: பொறியியல் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் குறையும்

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப் பெண் (சென்டம்) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதால் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கட் ஆப் மதிப்பெண் குறையும்.
பொறியியல் படிப்பில் சேர பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. கட் ஆப் மார்க் கணக்கீட்டுக்கு கணித மதிப்பெண் 100 சதவீதமும், இயற்பியல் 50 சதவீதமும், வேதியியல் 50 சதவீதமும் (மொத்தம் 200 சதவீதம்) பார்க்கப்படுகிறது. எனவே, பொறியியல் மாணவர் சேர்க்கையில் கணித மதிப்பெண் மிகவும் முக்கியமானது.

G.O.Ms.No.140 Dt: May 13, 2016 LOANS AND ADVANCES – Advances to Government Employees for the Celebration of Marriage – Administration of the Marriage Advance Scheme – Entrustment to the Director of Treasuries and Accounts – Orders – Issued.


மாவட்ட வாரியாக எந்த அணிக்கு எத்தனை இடங்கள் என்ற விவரம் வருமாறு:

கோவை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 9
நீலகிரி: மொத்த தொகுதிகள்- 3; அதிமுக- 1; திமுக., அணி- 2
கரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
திருச்சி: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
அரியலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 1; திமுக., அணி- 1
திருவாரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 1; திமுக., அணி- 3
தஞ்சாவூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4

TNPSC:துறைத் தேர்வு எப்போது?

பிளஸ் டூ, மார்க் ஷீட்டை வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

பிளஸ் டூ, மார்க் ஷீட்டை
www.dge.tn.nic.in
என்ற வெப்சைட்டில் இருந்து
வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். 

அரசு பள்ளி மாணவர்களில்முதலிடம்

அரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி சரண்யா முதலிடம்
அரசு பள்ளி மாணவர்களில் 1178 மதிப்பெண்களுடன் கோவை மாணவி சத்யா 2-வது இடம்
அரசு பள்ளி மாணவர்களில் 1177 மதிப்பெண்களுடன் காஞ்சிபுரம் மாணவி அனு 3-வது இடம்

பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி : ஈரோடு மாவட்டம் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர் மாவட்டம்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக அதிக தேர்ச்சி பெற்றவர்களில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்...

1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்
5. சிவகங்கை : 95.07 சதவீதம்
6. விருதுநகர் : 95.73 சதவீதம்

பிளஸ் 2 தேர்வு: ஒரே பள்ளியை சேர்ந்த ஆர்த்தி, ஜஸ்வந்த் முதலிடம் பிடித்தனர்

கிருஷ்ணகிரி அம்மன் நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகள் ஆர்த்தி 1195 மதிப்பெண் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் இடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியின் மாணவி பவித்ரா பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 1194.

மூன்றாம் இடத்தை நாமக்கல் கண்டம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவி வேணுப்ரீதா பிடித்துள்ளார். அவர் 1200-க்கு 1193 மதிப்பெண் பெற்றுள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் 200க்கு 200 பெற்ற மாணவர்கள்!

 பிளஸ் டூ தேர்தில் பாடவாரியாக 200க்கு 200 பெற்றுள்ள மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வுகளை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் எழுதினர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1200 மதிப்பெண்களுக்கு 1,195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

பிளஸ்2 தேர்வில் 1195 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் முதல் இடம்!

பிளஸ்2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஜஷ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். 

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா 1194 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

PLUS TWO RESULT - 2016 LINK -

PLUS TWO RESULT - 2016 LINK - 1(soon)

PLUS TWO RESULT - 2016 LINK - 2(soon)

PLUS TWO RESULT - 2016 LINK - 3(soon)

PLUS TWO RESULT - 2016 LINK - 4 (soon)

இன்று பிளஸ் 2 'ரிசல்ட்'; காலை, 10:31 மணிக்கு வெளியீடு

நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 17.05.2016 அன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

PLUS TWO RESULT - 2016 LINK - 1

PLUS TWO RESULT - 2016 LINK - 2

PLUS TWO RESULT - 2016 LINK - 3

PLUS TWO RESULT - 2016 LINK - 4 

தமிழகத்தில் 74 சதவீத வாக்குப்பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு திங்கள்கிழமையன்று (மே 16) நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை: அருண் ஜெட்லி

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்
புதுடெல்லி:
டெல்லியில் நிதி மந்திரி அருண்ஜெட்லி பெண் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தான் குறிப்பிட்ட எந்த விஷயம் குறித்தும் பேசப்போவதில்லை என்றும், அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினையை மட்டுமே பேசுவேன் எனவும் குறிப்பிட்டார்.

+12 மாணவர்கள் விடைத்தாள் நகல்பெற, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்!!!


CTET தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான, சி.டெட்., தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.மத்திய அரசு பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டபள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, மத்திய அரசின், சி.டெட்., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, சி.டெட்., தேர்வு, பிப்ரவரியில் நாடு முழுவதும் நடந்தது.

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!

மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. நமது நாட்டில் சில மாநிலங்களில் பிளஸ்2தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் 21,755 பேர்.

கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 முதல், 14 வயதுடைய குழந்தைகள், 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம்

முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 1ல், பள்ளிகள் திறக்கப்படுகின்றன; அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையை, கடந்தாண்டை காட்டிலும், 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் தரப்பில், தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்குபின், இந்நடவடிக்கை தீவிரமடைய உள்ளது.

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test (CTET) Public Notice on CTET FEB/MAY 2016


web stats

web stats