rp

Blogging Tips 2017

ஒரு மணி நேரம் மின் தடையை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு

தமிழ்நாடு மின்வாரிய நஷ்டத்தை சமாளிக்க, விரைவில், வீடுகளுக்கு, ஒரு மணி நேரம் மின் தடையை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து, வீடு, தொழிற்சாலை, வணிக மின் இணைப்புகளுக்கு மின் தடை 
அமல்படுத்தப்பட்டது. வீடுகளுக்கு, மின்தடை செய்யப்படும் இடம்,
நேரம் ஆகியவை மின் வாரியம் சார்பில், முன் கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
2,500 மெகாவாட்:
வல்லுார், வடசென்னை, மேட்டூர் விரிவாக்கம் ஆகிய, புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, கூடுதலாக, 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைத்தும், மின் பற்றாக்குறை குறையவில்லை. லோக்சபா தேர்தல் வெற்றி காரணமாக, கடந்த, ஆறு ஆண்டுகளாக

பிளஸ் 2 உயிரியல் தேர்வு: கருணை மதிப்பெண் இல்லை

பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் விலங்கியல் பிரிவு மிகக் கடினமாக இருந்தது. பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றிருந்ததோடு, போட்டித் தேர்வு அளவுக்கு வினாக்கள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்: கணக்கீடு அட்டவணை

பிளஸ்-2 விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு

பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரைநடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழி விடைத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் 66 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன.தற்போது அந்த பணி முடிவடைந்து விட்டது. 
இன்று அல்லது நாளைக்குள் எந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து, அதற்குரிய கமிட்டி முடிவு செய்து அறிவித்து விடும்.

'ஆன் - லைனில்' விடைத்தாள் நகல்: கல்வி துறை அதிரடி திட்டம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, 'ஆன் - லைன்' மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; வரும் 10ம் தேதி முடிய உள்ளது.

பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.


பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் கணக்கெடுப்பு சென்னையில் தொடங்கியது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகள் (5 முதல் 14 வயது வரை) பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் ஜாதிச்சான்று வழங்க ஏற்பாடு

திண்டுக்கல்:பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி சான்றுகளை வழங்க வருவாய்த்துறை ஏற்பாடுசெய்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்டபின்பே ஜாதி, இருப்பிடம் போன்றசான்றுகளை கேட்டு மாணவர்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கின்றனர். ஒரே சமயத்தில் அதிகமான விண்ணப்பங்கள் வருவதால் சான்றுகள் வழங்க தாமதம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க தேர்வு முடிவுக்கு முன் தாலுகா அலுவலகங்கள், தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் 'ஆன்-லைனில்' சான்றுகளை வழங்கவருவாய்த்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இனி மாதத்தில் 2 சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை..இதர சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்படும் நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கி ஊழியர்களின் பல கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குப் பின் வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


கடந்த ஒரு வருடமாக வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, வாரத்தில் 5 வேலைநாட்கள் போன்ற காரணங்களுக்காக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 15 சதவீத ஊதிய உயர்வும், வாரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை அளிப்பதாக வங்கி அமைப்புகளுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டது..இதர சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்படும்.

தாய்மொழி வழி கல்வி கர்நாடகத்தில் சட்டமானது: மொழி தீவிரம் காட்டும் தமிழகத்தின் நிலை என்ன?

ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி கன்னடம் தான் பயிற்று மொழி; 10ம் வகுப்பு வரை, கன்னடம் கட்டாய மொழிப் பாடம் என்ற, சட்ட திருத்தத்தை, கர்நாடகா அரசு நிறைவேற்றியுள்ளது. தீவிரமான மொழிக் கொள்கையை கொண்டுள்ளதாக, மார் தட்டும் தமிழகத்தில், தாய்மொழி தமிழும் தெரியாத, ஆங்கிலமும் புரியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. இதற்கு என்ன காரணம், அடிப்படைக் கல்வியைக் கூட, தமிழில் கற்றுத் தர முடியாத அவலம் இங்கு நீடிப்பது ஏன் என்பது குறித்து, கல்வியாளர்கள், முன்னாள் அமைச்சர், தமிழ்மொழி உரிமை கோருபவர்களின் கருத்துக்கள்:

கணினி ஆசிரியர் நியமனத்தில் குழப்பம்: இன்று கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்?

கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவை மற்றும் கலப்பு திருமணம் செய்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இறுதித் தேர்வை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்று, கணினி ஆசிரியர் கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

போலி அகவிலைப் படி உயர்வு அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த 30-ஆம் தேதி நிதித் துறை அமைச்சகத்தில் இருந்து வெளியிடப்பட்டதாகக்கூறப்பட்ட அறிவிப்பு போலியானது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

19.04.2015 அன்று நடைபெற உள்ள ஜாக்டோ உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி வைக்கும்,மற்றும்முடித்து வைக்கும் மாநில ஜாக்டோ நிர்வாகிகள் பட்டியல்

CLICK HERE TO DOWN LOAD THE LIST

ஜாக்டோ 30.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் 19.04.2015 உண்ணாவிரதப்போராட்டத்தை சிறப்பாக நடத்த வழி காட்டு நெறிமுறைகள்

CLICK HERE TO DOWNLOAD THE PARTICULARS

பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார்

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘’ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம் 195 விரிவுரையாளர் பதவிகளில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று விளக்க குறிப்பேட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு சார்பான ஆணை போலி என மத்திய அரசு அறிவிப்பு

Payment of Dearness Allowance to Central Government Employees - Revised Rates effective from 01.01.2015 - Fake Order/ Instructions - Clarification 

வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு


பிளஸ் 2-க்கு 23ம் தேதி வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அதில் ஏ வகைகேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 10, 22வது கேள்விகள் பிழையாககேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக 10வது கேள்வியில் யுரேனியம் அணுத்துகள், ஈயத்துடன் வேதியியல் வினைபுரியும்போது வெளியாகும் ஆல்பா, பீட்டா கதிர்கள் எண்ணிக்கை தொடர்பாக கேட்கப்பட்டு இருந் தது. அதில் ஈயத்தின் மதிப்பு 206 என்பதற்கு பதிலாக 108 என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. அதனால் அந்த கேள்வியின் விடைக்கு சரியான கணக்கீடு கிடைக்காமல் மாணவர்கள் திணறினர்.

அண்ணா நூலகம் பராமரிப்பின்றி முடங்கியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா நூலகம் பராமரிப்பின்றி முடங்கியது குறித்த உண்மை நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய, நூலக அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், நூலகத்தில் நேரில் ஆய்வுசெய்ய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை, கோட்டூர்புரத்தில் சர்வதேச நூலக அந்தஸ்தில், அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010ல் கட்டப்பட்டது. இந்நூலகம், நான்கு ஆண்டுகளாக கவனிப்பாரற்று, முன்னேற்றமின்றி முடங்கும் அபாயத்தில் உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

இதுகுறித்து, தினமலர், செய்தி வெளியிட்டிருந்தது. இப்பிரச்னை நீதிமன்றத்துக்கு சென்றால் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். அதனால், அண்ணா நூலகத்தின் நிலை குறித்து விரிவான அறிக்கை தருமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பெற்றோரின் பொறுப்புதான் என்ன?-நன்றி தி ஹிந்து

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 2முதன்மை கல்வி அலுவலர் / 4மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்த நிலை அலுவலர்கள் 31.03.2015 அன்று பிற்பகல் ஓய்வு பெறுவர்களை அனுமதித்தல் மற்றும் பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு

DSE - RETIREMENT PERMISSION FOR 2 CEO & 4 DEOs & APPOINTED NEW IN-CHARGE FOR RETIRED OFFICIAL POSTS REG ORDER CLICK HERE...

அடுத்த வருடம் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு விடுமுறையில் வகுப்பு; அரசு பள்ளிகளிலும் தொடங்கியது

அடுத்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் அரசு பள்ளிகளில் வகுப்பு தொடங்கியது.
2 வருடம் பாடம் படிப்பு
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் எஸ்.எஸ்.எல்.சி. பாடங்களையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 11-வது வகுப்பு பாடங்களை படிக்காமல் நேரடியாக பிளஸ்-2 பாடங்களையும் படிக்க வைக்கப்படுகிறார்கள்.

இந்த சம்பவம் கடந்த பல வருடங்களாக நடக்கிறது. அதாவது ஒரு வருட பாடங்களை 2 வருடம் படிக்கும் இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடைப்பது மிக சிரமம். அதுபோல கல்வி கட்டணமும் அந்த பள்ளிகளில் அதிகம். 2 வருடம் ஒரே பாடங்களை படிப்பதால் பெரும்பாலும் இந்த பள்ளி மாணவர்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று வருகிறார்கள்.
உயர்கல்வியில்மிளிர முடியவில்லை
ஆனால் அந்த பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் புரிந்து படிக்காத காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. சேர்ந்தவர்கள்கூட கணிதத்தேர்வில் தோல்வி அடைகிறார்கள். காரணம் இவர்கள் 11-வது வகுப்பு கணிதத்தை படிக்காதது என்று கூறப்படுகிறது. அதாவது இந்த மாணவர்களால் உயர் கல்வியில் பிரகாசிக்க முடியவில்லை.

பிளஸ் 2 தேர்வு: 394 பேருக்கு 3 ஆண்டு தேர்வெழுத தடை?

பிளஸ் 2 தேர்வில், 394 பேர் முறைகேட்டில் சிக்கி, மூன்றாண்டுகள் வரை, தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட உள்ளது. கணிதத் தேர்வில் அதிகபட்சம், 52 பேர் சிக்கி, தேர்வெழுதும் வாய்ப்பை இழந்துள்ளனர். 

பிளஸ் 2 வேதியியல் பிழையான இரு வினாக்களுக்கு மதிப்பெண்

 பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் பிழையுடன் கேட்கப்பட்ட இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
         பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு முக்கியப் பாடமான வேதியியல் பாடத் தேர்வு மார்ச் 23-ஆம் தேதி நடைபெற்றது. வேதியியல் தேர்வுக்கான ஏ வகை வினாத்தாள் வரிசையில் ஒரு மதிப்பெண் பகுதியில் 10-ஆவது கேள்வி, 22-ஆவது கேள்வி ஆகியவை பிழையுடன் இருந்தன.

சோதனையில் முடிந்த பிளஸ் 2 உயிரியல்: 'சென்டம்' குறைய வாய்ப்பு

'பிளஸ் 2 பொதுத் தேர்வின் கடைசி தேர்வான உயிரியலில் கடினமாக வினாக்கள் இடம் பெற்றதால் 'சென்டம்' எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். 

இத்தேர்வில் மூன்று மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற இரண்டு வினாக்களில் 'புளுபிரின்ட்' படி விளக்கம் எழுதும் வகையில் ஒன்றும், படம் வரைந்து எழுதும் வகையில் ஒரு வினாவும் இடம் பெறவேண்டும். ஆனால் இரண்டும் விளக்கம் எழுதும் வகையில் இடம் பெற்றன. உயிரி தாவரவியல் பகுதியில் 24வது வினாவில் 'போர்டாக்ஸ்' என்ற வார்த்தைக்கு பதில் 'போர்டவுன்' என தவறாக

தமிழகத்தில் பெண் கல்வி 55.77 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பழனியப்பன் தகவல்

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது.பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 38 மகளிர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச், 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளி யியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.
விடை எழுத முடியாமல் தவிப்பு:
தோட்டக்கால் பயிர் குறித்து இடம் பெற்ற, 47வது கேள்விக்கு, மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். ஏனெனில், பாடப்புத்தகத்தில், நன்செய் பயிர் குறித்து தான் அவர்கள் படித்துள்ளனர். நன்செய் பயிர் தான் தோட்டக்கால் பயிர் என்பது பாடத் திட்டத்தில் இல்லை. இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,

சில்மிஷ ஆசிரியரை அடித்து துவைத்த பெற்றோர்கள்

சிறுமியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு, சரமாரியாக அடி உதை விழுந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்து போயம்பள்ளி தண்டா என்ற மலைக் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 38 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அதே ஊரைச் சேர்ந்த பசுபதி, 55, என்பவர் ஆசிரியராக உள்ளார். இவர், மாணவியரிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எதிர்த்த மாணவியரை மிரட்டியதாகவும் தெரிகிறது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

"பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே கடைசி வாரத்திலும் வெளியாகும்,” என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

அரக்கோணத்தில் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 155 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க, 208 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து பள்ளிகளிலும் இந்த வசதி செய்யப்படும். ஏப்ரல் முதல் வாரத்திலேயே,

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி, அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அவர்கள் பணிபுரியும் அலகிற்குள் மாறுதல் கோரும் நிலையில் நியமன அலுவலரான மாவட்ட கல்வி அலுவலர்/முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே நடவடிக்கை எடுக்க இணை இயக்குனர் உத்தரவு

DSE - JUNIOR ASSISTANT / TYPIST DISTRICT TRANSFER REG PROC CLICK HERE..

தண்டராம்பட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டாரக்கிளை சார்பில் சங்க அலுவலகம் திறப்பு

 





இவர்களும் ஆசிரியர்கள்தானா.. தமிழக கல்வித்துறையின் களங்கமாக மாறி நிற்கும் பூம்புகார் ஆசிரியர்கள்!

நாகப்பட்டனம்: தங்களது பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற தனியார் பள்ளிகள்தான் இல்லாத அட்டகாசம் செய்கிறார்கள் என்றால், ஏழை பாழைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் செய்த அட்டகாசம் அனைவரையும் அதிரவைத்துள்ளது. நாகப்பட்டனம் மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. அங்கு 10-ம் வகுப்பு படித்து வந்த 6 மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. காரணம், தங்களது பள்ளி பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற அல்ப காரணத்தால்

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

           மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
               தமிழகத்தில் 3,484 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக கடந்த 2010-இல் அரசு விளம்பரம் வெளியிட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில், சிலரின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன.

இதனிடையே, மீண்டும் 2012-13-இல் விளம்பரம் வெளியானது. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு, அவர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், பணியிடத்தில் நிரப்புவதற்கு தனது பெயரை இதுவரை அழைக்கவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை எனவும் ராமன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி. செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையில், அவரை பணி நியமனம் செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின் போது, மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுவிட்டதாகவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பணி நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் பின்பற்றத் தவறுகிறது. இது போன்று பல முறை நடைபெற்றுள்ளது. இவ்வாறு உத்தரவுகளை பின்பற்றாததால்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாகின்றன.

RTI Letter Regarding Computer Instructors Incentive

புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவு

TN Govt Letter No.63734/FS/T/PGC/2013, Dated : 24.03.2015 - Contributory Pension Scheme - Allotment of Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees – Further instructions Click Here...

த.அ.உ.ச 2005 - தொடக்கக் கல்வி - எம்.காம்., பி.எட்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை என இணை இயக்குனர் தகவல்

பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு

GO.68 Dt.25.03.2015-SSLC Passed Teachers are joined 1986-87(Last Batch) Teachers Training & Passed or failed, later who completed the course which is equal to +2 reg order click here...

இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை ரிப்போர்ட்

இப்போதெல்லாம் இந்தியாவில் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன. எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம்

அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை

அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது. ஆனால் விடுமுறை வழங்குவது சார்பாக சில ஒன்றியங்களில் முரண்பாடு எழுந்துள்ளதால், தமிழக அரசு அரசாணை வழங்கியும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொருளாளர் திரு.தே.அலெக்சாண்டர் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து மனு அளிக்க சென்றனர். ஆனால் இயக்குனர் தேர்வு பணியில் இருப்பதால், அவரின் தனி செயலாளரிடம் இதுகுறித்து வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக இயக்குனரிடம் கலந்து பேசி நெறிமுறைகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரம் பேர் பொதுத்தேர்வை எழுதினர். அதே போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவ்விரு தேர்வு முடிவுகளும் மே மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குநர் கன்னப்பன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு மே முதல் வாரத்திலும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே இறுதியிலும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்

ஜாக்டோ கூட்டம் சென்னையில் தொடங்கியது

சென்னையில் ஜாக்டோ   கூட்டம் தொடங்கியது.கூட்டத்தில் வரும் உண்ணாவிரதப்போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிரவாகிகள் பட்டியல் விவாதித்துவெளியிட வாய்ப்புள்ளது.மேலும் புதிய சங்கங்கள் இணைப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக மாநிலபொருளாளர் திரு.அலெக்சாண்டர் மற்றும் தலைமை நிலையசெயலர் திரு சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

நாளையுடன் முடிகிறது பிளஸ் 2 தேர்வு

மிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது. மொழிப்பாடங்கள் மற்றும் பெரும்பாலான முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. நாளை உயிரியல், தாவரவியல், கணிதப் பதிவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கான தேர்வுகளுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிகிறது.
கணினி அறிவியல் மாணவர்களுக்கு, கடந்த வெள்ளிக்கிழமையே தேர்வுகள் முடிந்து விட்டன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தப் பணிகள், தமிழகம் முழுவதும், 73 மையங்களில் நடக்கின்றன. மொழிப்பாடங்களுக்கு பல மையங்களில், திருத்தம் முடிந்து விட்டது.

வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி?: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு

வாட்ஸ் அப்'பில், பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆன விவகார விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள், குற்றம் சாட்டி உள்ளனர். அதிகாரிகளை விட்டு விட்டு, அப்பாவி ஊழியர்களை பழி வாங்குவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.
'சஸ்பெண்ட்'

கடந்த, மார்ச், 18ம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வில், ஓசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகியோர், 'வாட்ஸ் - அப்'பில், வினாத்தாளை லீக் செய்தனர்.

துவக்கப் பள்ளிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்காத மத்திய அரசு

அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதிஒதுக்கியுள்ளது. ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த, இக்கல்வியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்து, விழா நடக்கிறது. 

வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் மோசடியில் தொடர்புடைய பள்ளியில் தேர்வு மையங்கள் ரத்து?

வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய பள்ளிகளின் தேர்வு மையங்களை, வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்ய கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் பிளஸ் 2 தேர்வில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார்,

மழலையர், தொடக்கக் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

தமிழகம் முழுவதும் உயர் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி விட்டோம். பல பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், நிர்வாகப் பயிற்சிக் கல்லூரிகள் வந்து விட்டன. ஆனால், மழலையர் கல்வி,
தொடக்கக் கல்வியில் நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டோம். இப்போது 8 ஆம் வகுப்பு வரை தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இல்லை என்ற காரணத்தால், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சரியாகத் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்கள் தெரியவில்லை. இது மிகமிக வேதனைப்படக் கூடிய விஷயம்.

ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்

ஆசிரியர்களின், 15 ஆண்டு கால, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு நிர்வாகிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் ரத்து; தமிழை முதல் பாடமாக்க அரசாணை வெளியீடு; இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம்; ஆசிரியர்களுக்கு தனிப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்காக, கடந்த 12 ஆண்டு களுக்கு பின், 29 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மார்ச் 8ல், தமிழகம் முழுவதும் பேரணி நடத்தியது. தொடர்ந்து, ஏப்., 19ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது.

குரூப் - 2 பதவி நியமன 1:5 விகிதாசாரம் குழப்பம்: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

குரூப் - 2 பதவி நியமன 1:5 விகிதாசாரம் குழப்பம்: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்
குரூப் - 2 தேர்வில் நடந்து வரும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான குழப்பத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தெளிவுபடுத்தி உள்ளது. குரூப் - 2 தேர்வில், வழக்கத்திற்கு மாறாக, 1:5 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதால், எந்த அடிப்படையில் இறுதித் தேர்வு நடக்கும் என்று, 5,635 தேர்வாளர்களும் குழப்பம் அடைந்தனர்

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி. யாருக்காக? எதற்காக? என்பதுதான் முக்கிய விஷயம்.

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி துறை செயலாளர் சபிதா பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் விவரம் வருமாறு: அடைப்பு குறிக்குள் முன்பு வகித்த பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? 7வது சம்பள கமிஷன் விரைவில் பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 
நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு (2014 - 15) கல்வி ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, அரசு பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, கல்வித்துறை கெடுபிடி காட்டி வந்தது.இதற்கேற்ப, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மதிப்பெண் குறைந்த மாணவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும், அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.'தேர்ச்சி விகிதம் குறையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது

இடமின்றி திணறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை

பள்ளிக்கல்வி விதிகளின்படி, இடமின்றி திணறும் தனியார் பள்ளிகளின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்துள்ளது. இப்பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 4,000 பள்ளிகளில் உரிய இட வசதி இல்லாமல், மாணவர்கள் மூச்சுத் திணறும் வகையில், சிறிய வகுப்புகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர். கடந்த, 2004ல் கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்தில் 94 மாணவ, மாணவியர் உயிரிழந்தனர்.

அனைத்து பள்ளிகளும் தமிழ் மொழி பாடம் கற்றலை நடைமுறைப்படுத்த உத்தரவு

நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும்" என, அரசு உத்தரவிட்டுள்ளது.
"பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன" என, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 2015-16ம் கல்வியாண்டில் இருந்து, முதல் வகுப்பில் தொடங்கி, படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 2015-16ல், பல வாரியங்களை சேர்ந்த, அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக, தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும்

வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் பள்ளி நிர்வாகம் நெருக்கடியால் விடைகள் தயார் செய்தோம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிளஸ்&2 தேர்வில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியிட்ட சம்பவத்தில் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வாட்ஸ் அப்பில் அனுப்பிய கேள்வித்தாளுக்கு விடைகளை தயாரித்ததாக அதே பள்ளியின் பிளஸ்&2 கணக்கு ஆசிரியர்கள் சஞ்சீவ்குமார், விமல்ராஜ், மைக்கேல்ராஜ், கவிதா ஆகிய 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.

1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 1,025 பேருக்கு அவர்களது மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 721 ஆசிரியர்களுக்கு வேறு மாவட்டங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: புத்தகங்கள் விற்பனைக்குத் தயார்

வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஒன்று முதல் பத்து வரையிலான வகுப்புகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது

அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள் 2 நாள் இரவு வரை நீட்டிப்பு

மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை வருவதை ஒட்டி ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி:
நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன்பின் தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அடிப்படையில், மார்ச் 30, 31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

web stats

web stats