rp

Blogging Tips 2017

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி. வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர் காஞ்சிபுரத்துக்கு புதன்கிழமை வந்தார். வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியை முடித்து விட்டு, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.

+ 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்
டிசம்பர் 17 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல்,
நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்,

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், செய்முறை தேர்வுக்காக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க, அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தனித்தேர்வர்களாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. தவிர, முந்தைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியை தழுவியவர்களும், இத்தேர்வில் பங்கேற்கலாம்.
 
 நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, வரும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கு, மாவட்டந்தோறும் உள்ள நோடல் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். கோவை மாவட்டத்திற்கு, ராஜவீதி, சூலுார் மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் நோடல் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு விண்ணப்பிக்க செல்லும் மாணவர்களுக்கு, உரிய தகவல்களை முறையாக அளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சனிக்கிழமை சத்துணவு: கலெக்டர் உத்தரவு

மதுரையில் மாற்று வேலை நாளாக சனிக்கிழமையன்று பள்ளி செயல்பட்டால் அன்று கட்டாயம் சத்துணவு வழங்க வேண்டும் என கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.அக்.,22 தீபாவளியை முன்னிட்டு அக்.,21ல் தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் அக்.,25 சனியன்று மதுரையில் பள்ளிகள் செயல்பட்டன. அன்று மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை.

தரமற்ற கல்வி நிறுவனங்களைத் தடுப்பது அவசியம்: யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ்

உயர் கல்வி விரிவாக்கம் திட்டத்தை நிறைவேற்றும்போது தரமற்ற கல்வி நிறுவனங்கள் உருவாவதைத் தீவிரமாகக் கண்காணித்து தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கேட்டுக்கொண்டார்.
 
சென்னைப் பல்கலைக்கழக 157-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொலைநிலைப் படிப்பு: அங்கீகாரத்தை உறுதி செய்ய மாணவர்களுக்கு யுஜிசி அறிவுரை

தொலைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் உறுதி செய்துகொள்வது அவசியம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் படிப்புகளில் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி முறையிலும் சேர்ந்து படிக்கலாம், அதற்கு யுஜிசி அனுமதி பெறப்பட்டிருப்பதாகத் தவறான விளம்பரங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டிருப்பது யுஜிசி-க்குத் தெரியவந்துள்ளது.

இந்திய அளவில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்நாடு!

இந்தியாவில், அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி சேர்க்கைப் பெறுவதில், தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது. மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி குறித்தான தற்காலிக சர்வேயில்(2012-13) இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், தமிழகத்தைவிட, யூனியன் பிரதேசங்களான சண்டிகரும்(51.3 GER), புதுச்சேரியும்(42.1 GER), முறையே, முதல் 2 இடங்களை வகிக்கின்றன. தமிழகத்தின் பங்கு 41.0. Gross Enrolment Ratioஎனப்படும் GER, 18-23 வயது வரையிலான மொத்த மக்கள்தொகையில், கல்லூரி மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று பாகுபடுத்தி கணக்கிடப்படுவதாகும்.

கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தினால் கட்டணம் - இன்றுமுதல் அமல்

ஏ.டி.எம்., ஐ மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்.
வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் 3 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடக்கக் கல்வி - காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி ஆணை வழங்க உத்தரவு


சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய குழு திட்டவட்டம்


'சி.பி.எஸ்.இ., பள்ளி கள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது' என, கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று உறுதியாக தெரிவித்தது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு நாளை கலந்தாய்வு

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் இணையதளம் மூலம் நவம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.

ஏற்கெனவே (2014-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி) நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆணை பெற வேண்டியவர்கள், அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து லட்சம் பார்வைகளை நம் இணையதளம் அடைய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!...

ஐந்துலட்சம் பார்வைகளை நம் இணையதளம்   அடைய நேரடியாகவும் முகம் தெரியாத பலர் தொலைவிலிருந்தும் உதவி ,ஆதரவளித்த ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலகங்களுக்கும், கல்வித்துறை இயக்கங்களுக்கும், கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஆசிரிய சங்கங்களுக்கும், சகோதர  கல்விசார் வலைதளங்களுக்கும்,பத்திரிக்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை நம் tntf.in இங்கு, இன்று பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறது. 

மாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - மாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவரின் கன்னத்தைக் கிள்ளி துன்புறுத்திய ஆசிரியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.ராம்கௌரி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் தனது மகனின் கன்னத்தைக் கிள்ளி பள்ளி ஆசிரியர் மெஹருன்னிசா துன்புறுத்தியதாகவும்,

ஆசிரியர் வருங்கால் வைப்பு நிதிக்கணக்கு- தணிக்கை முடித்து 31.03.2014 இறுதி இருப்பினை மென்பொருளில்(Soft\ware)ஏற்றம் செய்து குறுந்தகடில் அளிக்க இயக்குனர் உத்திரவு

DEE PROCEEDING NO -20046/C2/2012,DATED-29.10.2014

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வியாண்டு இடையே ஓய்வு பெற்றால் அவரது இறுதி மாத ஊதியத்தினையே மறுநியமன கால ஊதியமாக வழங்கி கல்வியாண்டு முடிய மறு நியமனம் வழங்கலாம்

அரசு ஆணை எண்-170,பள்ளிக்கல்வித்துறை நாள்-23.10.2014

அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு, பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


2014-15ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்பொழுது அத்தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதால்

‘ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தலாம்’; உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக் கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. ஆனால், தேர்வை இறுதி செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.

வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்த, கோபி என்பவர், தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது, நேரடி தேர்வு மூலம் 4,393 காலியிடங்களை நிரப்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 3ம் தேதி அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவது என, பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிக்கை வெளியானது

10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை

காலாண்டுத் தேர்வு முடிவு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள் வழங்குதல், பாட ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது.

ஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் : தேர்வு மதிப்பீடு முறையில் வருகிறது மாற்றம்

ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு, புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல்
வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
600 பள்ளிகள் : தமிழகத்தில், 600 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிப்பவர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரியும் தகுதியை பெறுகின்றனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு


W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE... 
 
 
மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது.

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!

                                                  http://easycalculation.com/
 
 
கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra),
மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.

ரிலாக்ஸ் ப்ளீஸ்-கொஞ்சம் சிரிக்க, சிந்திக்க மனதை லேசாக்க சில கடிகள்

  • செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
  • இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
    சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...
    ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
  • என்னதான் மனுசனுக்கு வீடு ,வாசல் , காடு , கரைன்னு எல்லாம்
    இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .
    இதுதான் வாழ்க்கை .
  • பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வளருமா ?
  • என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

அரசு உத்தரவு வராததால் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி தேக்கம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இலவச காலணிகள் வழங்க தயாராக இருந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால்,

பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 Mbps( மெஹா பைட் பெர் செகண்ட்)

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில், இந்திய பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்பிபிஎஸ் (Mbps) எனத் தெரியவந்துள்ளது.
ஆன்லைன்ஆர்டிஐ.காம் (onlinerti.com) என்ற இணையதளத்தின் துணை நிறுவனரான வினோத் ரங்கநாதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவலைப் பெற்றுள்ளார்.

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள்; அங்கீகார சான்று சமர்ப்பிக்க உத்தரவு


பள்ளி அங்கீகார சான்று, தமிழ் மொழி கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளுக்காக, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற, தேசிய அளவிலான பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், தங்களது அங்கீகார சான்று விபரங்களை, வரும் 10ம் தேதி, டவுன்ஹால், புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
''ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த நடைமுறை எளிதாக்கப்பட உள்ளது. 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் அந்தந்த அலுவலகங்களில் இருந்து நேரடியாக வங்கிக்கே பட்டியல் அனுப்பப்படும்.

IGNOU B.Ed 2014 Entrance Results Published

  • Click here-B.Ed. Entrance Exam 2014 - Result
  • Click Here For B.Ed. Entrance Exam - Tentative Key Answer

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு வரும் 16.11.2014 ஞாயிறு காலை சரியாக 10 மணிக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரம்,பழைய பஸ் நிலையம் அருகில் ,சென்னிமலை சாலையில் அமைந்துள்ள்.ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப்பள்ளியில் நடைபெறும்.

மாவட்ட செயலர் கவனத்திற்கு,
1. வட்டார தேர்தல்கள் முடித்து ,ஆண்டு சந்தா, உறுப்பினர் சந்தா,ஆசிரியர் பேரணி இதழ்சந்தா ஆகியவற்றின் மாநில பங்குத்தொகை  மாநில அமைப்பிற்கு உடன் செலுத்த கோரப்படுகிறது,
2. மாவட்டத்தணிக்கை முடித்து செயற்குழுவில் மாவட்டத்தேர்தல் வாக்காளர் பட்டியல் கொண்டுவந்து  பொதுச்செயலரால் ஒப்புதல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது
3. தற்போது உள்ள ஆசிரியர் பிரச்சினை சார்ந்து மாவட்ட அமைப்பால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உடன் அனுப்பிவக்க கோரப்படுகிறது.
4. செயற்குழுவிற்கு வரும்போது  வட்டாரக்கிளையின் தேர்தல் முடித்து,மாவட்ட தலைவர் ,செயலர்,பொருளர் ஆகியோரின் கலர் புகைப்படமும், முகவரிப்பட்டியலும், வட்டார செயலர்களின் புகைப்படம் மற்றும் முகவரிப்பட்டியலும், டைரிக்காக உடன் அனுப்பக்கோரப்படுகிறது

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்:



இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்

தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
             சந்தீப் சக்சேனா தற்போது தமிழ்நாடு அரசின் வேளாண்துறை செயலாளராக உள்ளார்

ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைகால தடை. மதுரை கிளை உத்தரவு.

அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.அதில் கூறி இருப்பதாவது:–அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர்,

ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழக்கு : பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகினார்

சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால், சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம்.அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான்.அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.www.puradsifm.com‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்தஅடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது.முதலுதவிக்கு வந்தவர்கள்குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor)என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும்போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா!” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்குகொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!”கேட்டீர்களா... விபரீதத்தை?அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.அதில் கூறி இருப்பதாவது:–அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர்,

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்!

வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம்.அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான்.அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.www.puradsifm.com‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்தஅடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.

அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.

பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29 -ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையால் தரம் உயரும் 50 உயர்நிலைப்பள்ளிகளில் பட்டியலைவெளியிட

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 29.10.2014 INSTEAD OF 28.10.2014 AT CHENNAI REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

DEE - DEE CALLED DETAILS REG STUDENTS SUICIDE REG PROC CLICK HERE...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம்-16.11.2014 அன்று பெருந்துறை நகரில் நடைபெறும்

தமிழ்நடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுகூட்டம் வரும் நவம்பர் மாதம் 16ந்தேதி(16.11.2014) ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரில் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் திரு செ.முத்துசாமி Ex.MLC,அவர்கள் அறிவிப்பு. முறையான  அழைப்புஅனைவருக்கும் அனுப்பிவைக்கப்படும், செயற்குழுவிற்கான தீர்மானங்களை மாவட்ட கூட்டங்கள் கூட்டி அனுப்ப மாவட்ட செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்-அனைத்து மாநில அரசுகளுக்கும்-உள்துறை அமைச்சகம் கடிதம்


இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை, கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.ஆதார் எண் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,

வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட அறிவுறுத்தல்

சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான, அக்., 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட வேண்டும் என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி., ) அறிவுறுத்தி உள்ளது

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக(AEEO) உயர்வு

அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது. காலியாக உள்ள, 67 இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என, இயக்குனர் தெரிவித்தார்.

அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட் உத்தரவு

'குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மங்களாபுரம் சுப்பையா, 78, தாக்கல் செய்த மனு: பழநி அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில், 1955ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்தேன். குடும்ப சூழ்நிலையால், 1972ல் ராஜினாமா செய்தேன். அப்போது, ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அமலில் இல்லை. ஓய்வூதியத் திட்டம் அமலானது,

மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு


மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு...
மழை காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, அனைத்து அரசு, ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அந்தந்த பகுதி உதவி தொடக்க கல்வி அதிகாரி மற்றும்

பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல் தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பிற்பகல் 2 மணி முதல் அவர்கள் தேர்வு எழுதிய, தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வு: அக். 29- முதல் விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தணிக்கை செய்தல் -இயக்குனர் செயல்முறைகள்

CLICK HERE

பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு, தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

GO.66858 / CMPC / 2013-2, DATED.22.08.2014 - REVISED SELECTION / SPECIAL GRADE SCALE OF PAY TO THE CATEGORY OF VOCATIONAL TEACHERS IN GOVT HR SEC SCHOOLS REG ORDER CLICK HERE...

பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

DSE - DSE CALLED DETAILS REG PG ASSTs THOSE WHO R QUALIFIED IN M.PHIL / PHD / PGDTE REG PROC CLICK HERE...

நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்

 25-10-2014 அன்று நடைபெற்ற உ.தொ.க.அ. பணிமாற்ற கலந்தாய்வில் 64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உ.தொ.க.அலுவலர்களாக பணி மாற்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது
மேல்நிலைக் கல்வித்தகுதிக்கு இணையாக diploma in teacher education படித்தவர்களுக்கும் உ.தொ.க.அலுவலர் பணிமாற்ற ஆணை வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் தொடக்கக் கல்வி இயக்குநர்

web stats

web stats