Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 1989 - இடைநிலை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை குறித்து திருத்திய ஊதிய விகிதங்கள் - திருத்திய ஆணை வெளியீடு

அங்கன்வாடி ஊழியர் தேர்வுக்கான தடை நீங்கியது: 3,000 இடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவு

அங்கன்வாடி ஊழியர் பணிக்கான, 17 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. 3,000 இடங்களை, காலியாக வைத்திருக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கம் தரப்பில், தாக்கல் செய்த மனு: எங்கள் சங்க உறுப்பினர்களில்,

அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி

தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்த கல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 5000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மட்டும் சுமார் 30 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் தங்களின் பள்ளிகளின் பெயர் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு கூடுதலாக சில பாடங்களை வைத்து அதை நடத்துகின்றனர

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக 10ம் வகுப்பு பாடங்களை 9ம் வகுப்பிலும், பிளஸ் 2 வகுப்பு பாடங்களை பிளஸ் 1 வகுப்பிலும் முன்கூட்டியே நடத்துகின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்வது எப்படி ?

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். பொதுவாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் முன்னுரிமை நிர்ணயம் செய்ய பணியில் சேர்ந்த தேதி மற்றும் தகுதிகாண்பருவம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்.
ஆனால் சில ஒன்றியங்களில் தேர்வு வாரியம் மூலமாக நியமனம் பெற்றவர்களுக்கு தகுதி காண்பருவம் பற்றி எடுத்து கொள்ளாமல் நியமன தேதியை மட்டும் எடுத்துக்கொண்டு தகுதிகாண்பருவம் முடித்த பதவி உயர்வு ஆசிரியர் களுக்கு முன்னாள் வைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது - இது தவறு.

இந்திய கல்வி நிறுவனங்களில் தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற இயக்குனர் உத்தரவு

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!

நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு வாழவேண்டிய பணி. 
அப்படி நேர நெருக்கடிமிக்க பணிச்சுமை நிறைந்த பதவியில் இருந்தபோதும், இலக்கிய நிகழ்வுகள், சொற் பொழிவுகள், கல்லூரி விழாக் கள், இசை விழாக்கள், வழக்குரைஞர் மன்றக் கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் என பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன். 

652 கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியீடு


தமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரை வேலூர், விழுப்புரம், சேலம்,

கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

மார்ச் 21-வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இக்கால கட்டத்தில் வினாத்தாள் கசிவு பரிமாற்றம், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஏதாவது ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பு விடுகிறது.

தற்போதைய செய்தி-ஜாக்டோ சார்பாக ஏப்ரல்-19 மாவட்டத்தலைநகரில் உண்ணாவிரதம்

ஜாக்டோவில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களின் உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று காலை தொடங்கி நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஜாக்டோ உயர்மட்டக்குழுஉறுப்பினர்களின்  ஆலோசனைக்கு பின்னர் 
1.மீண்டும் மார்ச்-30 அன்று ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை சைதாபேட்டையில் உள்ள மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடததில் நடத்துவது என தீர்மணிக்கப்பட்டது.
2.ஏப்ரல் -19- ஞாயிறு அன்று-15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்  மாவட்டத்தலைநகரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது

FLASH NEWS-ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் சென்னையில் தொடங்கியது

ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.கூட்டத்திற்கு கூட்டுத்தலைமையாக சுழற்சி முறைஅடிப்படையில்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகமும் ,தமிழநாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாள்ர்களும்தலைமையேற்றுள்ளனர்,
கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக தலைவர் திரு.கு.சி மணி அவர்களும் ,தலைமை நிலையசெயலர் திரு.சாந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜாக்டோ இயக்கத்தில் சேர புதியதாக 5 சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன அவற்றை இணைப்பது பற்றி கூட்டத்தில் கலந்து பேசி முடிவாற்ற உள்ளனர்.மேலும் மாவட்டப்பேரணி குறித்த ஆய்வும்,தொடர் நடவடிக்கை குறித்தமுக்கிய முடிவுகள்  விவாதித்து எடுக்க வும் வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன

ஏப்ரல் 23ம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை

ஏப்ரல் 23 முதல்...
ஏப்ரல் 23ம் தேதி முதல், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விட, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொடக்கப் பள்ளிகளில், ஏப்ரல் 15ம் தேதி முதல், வகுப்பறை தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்படும். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வுகள் இருக்கும். தேர்வுக்கு பின், 2 நாட்கள் பள்ளிகள் வைக்கப்பட்டு, ஏப்ரல் 23ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?

மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூறுகின்றனர். பாடதிட்டத்துக்கு வெளியேயும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்

பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல் பாடங்களை துவங்குகிறோம். ஆனால், தனியார் பள்ளிகள், ஜனவரி முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றன. எனவே, இந்த முறை மே முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 1 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை துவங்க திட்டமிட்டு உள்ளோம்.

"பிஎச்.டி. தகுதி தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்'

பிஎச்.டி. தகுதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் கல்வியின் தரம் உயரவும் ஆராய்ச்சிகள் மேம்படவும் வழி வகுக்கும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதோடு, 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிஎச்.டி. முடித்தவர்கள் "நெட்' அல்லது "செட்' தேர்வு தேர்ச்சி பெறுவது கட்டாயமாகியுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் 2009-இன் படி, முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில் நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இத்தேர்வு வினாத்தாளில் சிறுவினா பகுதியில் 'பண்டைய கடல் வாணிபம் குறித்து எழுதுக' என்று 43வது கேள்வி இடம் பெற்றது.

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு

பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழக அரசு முடிவு

அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்குழு

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு

வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை, 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை 30–ந்தேதி திங்கட்கிழமை செயல்படும். 31–ந்தேதி செவ்வாய்க்கிழமை நடப்பு நிதியாண்டிற்கான இறுதி நாள் என்பதால் விடுமுறை எனவும், ஏப்ரல் 1–ந்தேதி அடுத்த நிதியாண்டிற்கான முதல் நாள் என்பதால் கணக்குகளை தொடங்கும் பணிகளை மேற்கொள்வதால் அன்று விடுமுறை எனவும் தகவல் பரவியது.ஏப்ரல் 2–ந்தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி வங்கி விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி விடுமுறை. 4–ந்தேதி வங்கி அரை நாள் மட்டும் செயல்படும்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: 10.72 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம், 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர். பறக்கும் படை: தமிழ் வழியில் படித்த, 7,30,590 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 33,816 பேர் கூடுதலாக, இத்தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 5,200 பேர் கொண்ட, 2,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கட்டுப்பாடுகள் * முகப்பு சீட்டில், உரிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும். * ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை, இருபுறமும் எழுத வேண்டும். * விடைக்கு அருகில், வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும். * வினாத்தாள் வரிசையை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு

பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,'ஈசி'யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, கடினமாகவும் இருந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, கணிதத்தில், 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர். எதிர்பார்ப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று கணிதம் - அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதத்துக்கும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, விலங்கியலுக்கும் தேர்வு நடந்தது. கணித வினாத்தாள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,

'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்'

புதுடில்லி: பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) விலக்கு அளித்திருந்தது. ஆனால், கல்வி கற்பிக்கும்

அரசாணை எண்.62ல் குறிப்பிடப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.81 (பொதுத்துறை)

ஆகஸ்டில் அடுத்த டெட் தேர்வு 10000 ஆயிரம் பேருக்கு ஆசிரியராக வாய்ப்பு

மூன்றாவது ஊக்கத்தொகை -பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

தொடக்க கல்வி துறை -பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்குதல் சார்ந்த அறிவுரைகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் இப்போது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆண்டு விழா கொண்டாட குறைந்த தொகை ஒதுக்கீடு: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேதனை


பள்ளிகளில் சொற்ப தொகையைக் கொண்டு ஆண்டு விழா நடத்தும்படி வழங்கப்பட்ட உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2500, 200-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.3000 வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பயன்படுத்தி மார்ச்க்குள் ஆண்டு விழா நடத்த என எஸ்எஸ்ஏ நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. இந்த உத்தரவால் தருமபுரி மாவட்ட அரசு நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்! ஜூனியர் விகடன் - 22 Mar, 2015 அதிரடி இது ‘ஜாக்டோ’ ஜல்லிக்கட்டு

அதிரடி இது ‘ஜாக்டோ’ ஜல்லிக்கட்டு
அறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் பிரமாண்ட கண்டனப் பேரணி தமிழக அரசை திகைக்க வைத்திருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'ஜாக்டோ’ என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். ஆட்சிக்கு எதிரான முதல் போராட்டத்தை ஜாக்டோ நடத்தி இருக்கிறது.

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த லினட் அமலா சாந்தகுமாரி இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 2007இல் நியமிக்கப்பட்டேன். எம்பில் படித்துள்ளதால் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில்பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற எனக்குத் தகுதி உள்ளது. என்னைவிடத் தகுதி குறைவான பலரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆதார்’ அட்டை இல்லாததற்காக, யாருக்கும் சலுகைகளை மறுக்கக்கூடாது. ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது என்ற எங்களது முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கட்டாயம் அல்ல‘ஆதார்’ அட்டை கட்டாயம் என்று சில அரசுத்துறைகள் அறிவித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு,

டிப்ளமோ, பொறியியல் படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது: யுஜிசி

பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளையோ அல்லது டிப்ளமோ படிப்புகளையோ தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி கவுன்சில் (டி.இ.சி.) யுஜிசி-இன் கீழ் இப்போது இயங்கி வரும் நிலையில், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை யுஜிசி அனுப்பியிருக்கிறது.

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

Dated : 12-03-2015
Member Secretary

மார்ச் 25-ல் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் , 2014-2015-ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை நிதிநிலை அறிக்கை ஆகியவை இந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

அரசு ஆதரவு ஆசிரியர் கூட்டுக்குழு 'ஜாக்கோட்டா' உடைந்தது: அதிகாரிகள் அதிர்ச்சி

ஆசிரியர்களின், 'ஜாக்டோ' அமைப்புக்கு போட்டியாக, அரசுக்கு ஆதரவாக உருவான, 'ஜாக்கோட்டா' அமைப்பில் திடீர் விரிசல் ஏற்பட்டு உள்ளது. 'ஜாக்கோட்டா' அமைப்புக்கு எதிராக, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பின்...:
அரசுப் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 12 ஆண்டுகளுக்குப் பின், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கை குழு உருவாகி உள்ளன. இக்குழு, அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசுக்கு ஆதரவாகவும், 'ஜாக்டோ'வுக்கு எதிராகவும், 'ஜாக்டா' மற்றும் 'ஜாக்கோட்டா' என, இரு அமைப்புகள் புதிதாக உருவாகின. இதனால், ஆசிரியர் சங்கங்களுக்குள் பிளவு ஏற்படும் என, அதிகாரிகள் நினைத்தனர்.

த.அ.உ.ச 2005 - சேலம் விநாயக நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகாரம் பெற்று இருப்பின் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு என மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு என்று அறிவிப்பு

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. மதிப்பீடு செய்வதில்தவறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கியது. தேர்வு ஏப்ரல் 19-ந்தேதி முடிவடைகிறது. மாணவ-மாணவிகளின் நலன் கருதி விடைத்தாளை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்ரல் 12-க்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 66 மையங்களில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலிருந்தும் சி.டி.க்கள் மூலம் மதிப்பெண் விவரங்கள் பெறப்படும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவசாயிக்கு தகவல் அளிக்காத தாசில்தாருக்கு ரூ.8 ஆயிரம் அபராதம்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மேகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு. விவசாயி. இவர் தனது தோட்டத்தின் அருகே உள்ள நிலம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும்படி கொப்பா தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஸ்ரீதர் மூர்த்தியை சந்தித்து மனு கொடுத்தார். கடந்த 2013-ம் ஆண்டு அவர் மனு கொடுத்த போதிலும், இதுவரை அவருக்கு தகவல் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து விவசாயி சந்துரு இதுகுறித்து கர்நாடக தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த அதிகாரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கொடுக்காத தாசில்தார் ஸ்ரீதர் மூர்த்திக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் இன்று அரசுப்பள்ளிகள் தங்களை நிலை நாட்டிக்கொள்ள போராட வேண்டியுள்ளது ஆனால் தனியார் பள்ளிகளின் கவர்ச்சிமிகு விளம்பரங்களை கண்டு கனியாத பெற்றோரே இல்லை எனலாம்...! .

மாநிலத்தில் முதலிடம் ...!! கணினி.... யோகா.... நாட்டியம்..... கராத்தே.....என்று தங்களால் இயலாதவற்றை தம் பிள்ளைகள் மூலம் சாதிக்க வேண்டும் என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு ஆபத்தாண்டவனாய் கண் முன்னே தெரிபவை பிரமாண்ட கட்டிடங்களும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறையும் அட்மிஷன் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் கொட்டைக்கூல் காபியும் தான்....

போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு

ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

5 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் வெளியிட்டது.ஆனால் இந்த பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் எங்கும் கிடைப்பதில்லை என்று சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு எழுத உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இந்த போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16) தொடங்கப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள்களை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருத்துகின்றனர்.
அதன்பிறகு, ஆசிரியர்கள் புதன்கிழமை முதல் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம், ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மாநிலம் முழுவதும் கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு,8-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்றது. இதில் மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளை அறியும் திறன்கள் சோதிக்கப்பட்டன.
அந்தத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மாவட்டங்கள் பெற்ற தேர்ச்சி சதம் விவரம் வருமாறு:

ஜாக்டோ -அடுத்த்கூட்டம் வரும் 21.03.2015 அன்று சென்னையில் கூடுகிறது


2010-11இல் நியமனம் பெற்ற தமிழாசிரியர்களுக்கு பணிவரன்முறை தேவையில்லை: பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-2011 ஆம் ஆண்டில் பணி நியமனம்செய்யப்பட்ட தமிழாசிரியர்களுக்கு பணிவரன்முறை தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' பயிற்சி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்க, ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.
ஆங்கில மோகத்தின் காரணத்தால், பெரும்பாலான பெற்றோர் ஆங்கில வழிக் கல்வி தரும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து

பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி

இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. விடைத்தாள் களை, 'சேஸ்' செய்வதைத் தடுக்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, நாளை துவங்குகிறது.
முதற்கட்டமாக தமிழ், ஆங்கில மொழிப்பாடங்கள்; வரும், 21ம் தேதி முதல், முக்கியப் பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பல புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், எந்த மாவட்ட விடைத்தாள்கள் எந்த மாவட்டத்துக்கு செல்கிறது என்பதை, ஆசிரியர்களே அறிய முடியும். இது, முறைகேடுகளுக்கு வழி வகுத்தது. மேலும், மாவட்ட தலைநகரில்,

பள்ளிக் குழந்தைகளின் உயிரைப் பற்றி கவலைப்படாத அதிகாரிகள்?

பள்ளியில் மேற்கூரைப் பூச்சு உதிர்ந்த இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், இதெல்லாம் சாதாரணம்! என தெரிவித்து, விஷயம் பத்திரிக்கைகளுக்கு சென்றதற்காக, ஆசிரியர்களை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, பெருங்குடி அரசு துவக்க பள்ளியில், மேற்கூரை பூச்சு உதிர்ந்த கட்டடத்தில், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை, பெற்றோர் முற்றுகையிட்டனர்.

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: பாடங்கள் நடத்துவதில் சிக்கல்.

தொடர்ந்து நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் கல்வி கற்பிப்பது, புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, மொழிப் பாடங்களை கையாள்வது உட்பட பல்வேறு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு பயிற்சிகள்அளிக்கப்படுகின்றன.

பரிசு 30 ரூபாய்க்கு தருவதோ காசோலை; பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'முழு சுகாதார தமிழகம்' என்ற தலைப்பில், போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் அளவில்,

ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

ஒரே நேரத் தில் இரு படிப்பு படித்ததாக கூறி ஆசிரியர் பணிமறுக்கப்பட்டவரின் மனுவை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, விளாங்குடியை சேர்ந்த எஸ்.தேன்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்செய்த மனு:
நான், பிஏ (ஆங்கிலம்), எம்ஏ (ஆங்கிலம்) மற்றும் பிஎட் முடித்துள்ளேன். கடந்த ஜன. 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை டிஆர்பிநடத்தியது. இதில் நான் கலந்து கொண்டேன்.

web stats

web stats