கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தேர்வுப் பணிகள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, இ - மெயிலில் தகவல் அனுப்பப்படுகிறது. அந்த மெயில் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால், தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக, குறிப்பிட்ட சில விவரங்களை விரைந்து சேகரித்து அனுப்புவதில், தாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., சிம் கார்டு வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இந்த சிம்கார்டைப் பொருத்தியுள்ளவர்கள், தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்ள, கட்டணம் ஏதும் கிடையாது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வித்துறை கேட்கும் தகவல்களை விரைந்து அனுப்ப வசதியாக, பத்து பள்ளிகளுக்கு ஒரு தலைமையாசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.