Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
அவசரமும் அச்சமும் வேண்டாம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுக்கலாம்
நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டுமா? - மனிதநேயமற்ற செயல் - VIKATAN
பள்ளிகளில் கழிப்பறை வசதி எப்படி : விரிவான அறிக்கை கேட்கும் ஐகோர்ட்
மற்றவர்கள் கணக்கில் பணம் செலுத்த தடை
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய்நோட்டுக் களை, வங்கியில்கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம்ரூபாய்க்கு மேல்
செலுத்து வோரை, வருமான வரித்துறை கண்காணிக்க உள்ளது. தவறுசெய்திருந்தால், 200 சதவீதம் வரைஅபராதம் விதிக்கப்படும் எனதெரிகிறது.
இதுகுறித்து, வருமான வரித்துறைஅதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப்பணத்தை வெளியில் கொண்டுவரவும், கள்ள நோட்டுகளைஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய்நோட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தியர்களை, நியாயமாகவரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்துவைத்திருப்போருக்கு, இந்ததிட்டத்தை பயன்படுத்தி, அபராதம்விதிக்கப்படும்.
நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம்கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய்மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின்பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே,கணிசமான தொகை பதுக்கிவைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம்ரூபாய்க்கு மேல், பழையநோட்டுகளை கொடுத்து, புதியநோட்டு பெறுவோர்; இரண்டுலட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்குஅதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின்விபரங்களை கேட்டுப்பெற,மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. அவர்களின்விபரங்கள், வருமான வரிக் கணக்குடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். வரிசெலுத்தா மல்போயிருந்தால்,தவறுக்கேற்ப,200 சதவீதம் வரை அபராதம்விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.
அகவிலைப்படி உயர்வு: ஓரிரு நாள்களில் அறிவிப்பு
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான அகவிலைப்படிஉயர்வுஓரிரு நாள்களில்அறிவிக்கப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசுஊழியர்களுக்கு 2 சதவீதம்அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசுஊழியர்களுக்கு 6 சதவீதம் வரைஉயர்வு கொடுக்கப்படும் எனத்தெரிகிறது.
இதற்கான அறிவிப்பு ஓரிருநாள்களில் வெளியாகவுள்ளது. மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழுபரிந்துரைகளைநடைமுறைப்படுத்திய பிறகுஅகவிலைப்படியைகுறைந்த சதவீதஅளவுக்கு அறிவித்தது.தமிழகத்தில்ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள்அமல்படுத்தப்படாத காரணத்தால்அகவிலைப்படி உயர்வு அதிகளவில்அளிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரைஅரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்குகூடுதலாகக் கிடைக்கவாய்ப்பிருக்கிறது.
மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா? பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின்ஆதார் எண்ணை இந்த ஆண்டும்சேகரிப்பதால், மதிப்பெண்பட்டியலில், அந்த எண் இடம்பெறுமாஎன்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.கடந்த ஆண்டு முதல்,பள்ளி மாணவர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இதன்படி, 10ம் வகுப்புமற்றும் பிளஸ் 2 பொது தேர்வுஎழுதும் மாணவர்களின் ஆதார்எண்களை, தேர்வுத்துறைசேகரித்தது. மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும்தனியாக, 14 இலக்க நிரந்தரபதிவெண் வழங்கப்பட்டது. இந்தபதிவெண், கல்லுாரிகளில்மாணவர்கள் சேரும் போதும் பதிவுசெய்யப்பட்டுஉள்ளது. இந்தஆண்டும், பிளஸ் 2 மற்றும், 10ம்வகுப்பு மாணவர்களின் ஆதார்எண்கள் பெறப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களின் ஆதார்எண்களை தேர்வுத்துறைக்குஅனுப்ப, ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது, மதிப்பெண்பட்டியலில், ஆதார் எண்இணைக்கப்படுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும்எதிர்பார்த்துள்ளனர்.
மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின்ஆதார் எண்ணை இந்த ஆண்டும்சேகரிப்பதால், மதிப்பெண்பட்டியலில், அந்த எண் இடம்பெறுமாஎன்ற எதிர்பார்ப்புஎழுந்துள்ளது.கடந்த ஆண்டு முதல்,பள்ளி மாணவர்களின்
ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இதன்படி, 10ம் வகுப்புமற்றும் பிளஸ் 2 பொது தேர்வுஎழுதும் மாணவர்களின் ஆதார்எண்களை, தேர்வுத்துறைசேகரித்தது. மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும்தனியாக, 14 இலக்க நிரந்தரபதிவெண் வழங்கப்பட்டது. இந்தபதிவெண், கல்லுாரிகளில்மாணவர்கள் சேரும் போதும் பதிவுசெய்யப்பட்டுஉள்ளது. இந்தஆண்டும், பிளஸ் 2 மற்றும், 10ம்வகுப்பு மாணவர்களின் ஆதார்எண்கள் பெறப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், பொதுத்தேர்வுஎழுதும் மாணவர்களின் ஆதார்எண்களை தேர்வுத்துறைக்குஅனுப்ப, ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது, மதிப்பெண்பட்டியலில், ஆதார் எண்இணைக்கப்படுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும்எதிர்பார்த்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்டநிலையில், 'வெயிட்டேஜ்' முறையைமாற்ற வேண்டும் என்ற, கோரிக்கைஎழுந்துள்ளது. கடந்த, 2012ல்அறிமுகமான, 'டெட்' தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர்பணிக்கு தகுதி என,அறிவிக்கப்பட்டது.
அதாவது, 'டெட்' தேர்வு மதிப்பெண், 60 சதவீதமாகவும், 10ம் வகுப்பு, பிளஸ்
2, பட்ட படிப்புகளின் மதிப்பெண்கள், 40 சதவீத வெயிட்டேஜ்மதிப்பெண்ணாகவும் மாற்றப்பட்டு, தேர்ச்சி நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, பலஆயிரம் பேர் பணியில்நியமிக்கப்பட்டனர். இதன்பின், 2013ல்நடத்தப்பட்ட இரண்டாவது தேர்வில், இந்த விதியில் மாற்றம் வந்தது.
முன்னேறிய வகுப்பினர் தவிரமற்றவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்ணில், 85 மதிப்பெண்எடுத்தால் போதும் என்றும், இடஒதுக்கீடு விதிப்படி, ஐந்துமதிப்பெண் தளர்வும்அளிக்கப்பட்டது. அதனால், 'டெட்' தேர்வில், அதிக மதிப்பெண்எடுத்தும், இட ஒதுக்கீடு மற்றும்வெயிட்டேஜ் மதிப்பெண்ணால், பலஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மதிப்பெண் தளர்வுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குதொடர்ந்தனர். இந்த மனுவை, இருதினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம்தள்ளுபடி செய்தது. இந்நிலையில், 'மூன்று ஆண்டுகளாகநிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் தகுதிதேர்வு விரைவில் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர்பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின், வெயிட்டேஜ் முறைதொடர்ந்தால், 10 ஆண்டுகளுக்குமுன், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்புமுடித்தோருக்கு வேலை வாய்ப்புசிக்கலாகும். 10 ஆண்டுகளுக்கு முன்படித்தோருக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தாராளமானமதிப்பெண் முறை கிடையாது. தற்போதுள்ளது போல், 'ப்ளூ பிரிண்ட்' முறையோ, புத்தகத்தில் பாடத்தின்பின்பக்க கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என்ற முறையோ கிடையாது. அதனால், 10ம் வகுப்பில், 400 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 1,000 மதிப்பெண்கள் எடுப்பதும்குதிரைக்கொம்பாக இருந்தது.
சமீப காலமாக, பொதுத்தேர்வுகளில்தாராளமாக மதிப்பெண்வழங்கப்படுகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும்போது, 10 ஆண்டுகளுக்கு முன்படித்தோருக்கு மிக குறைந்தமதிப்பெண்ணே கிடைக்கும்என்பதால், அவர்களின் நிலைபரிதாபமாக உள்ளது.
பணிப்பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை !!
மாவட்ட கருவூல அலுவலர் அவர்கள். அனைத்து துறை அலுவலர் கூட்டத்தில்...
1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..
பெற்றுக்கொண்டதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....
இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.
2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,
3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்
4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்
5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்
6) கோவை மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR கோவை மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப் பதிவில் சென்று தேடினால் இருக்காது..
7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.
8) RETIREDMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது,மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்
9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளிSR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்
8) SR SCANE செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...
9)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்.,இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...
10)N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..
*11)எதிர்காலத்தில் MANUEL SR MAINTENANCE இருக்காது்*
*12) DSR ல் NEXT INCREMENT ,
.HRA SLAp அனைத்தும் இருக்கும்
*12)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,அதன்பின் நாம் ஏதேனும் பிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்...
விரைவில் கணினி ஆசிரியர் நியமனம்...
முதல்வர் ஒப்புதலுக்குப் பிறகே ஆசிரியர் தேர்வு தேதிகள் வெளியாகும்: மா.ஃபா. பாண்டியராஜன்
புதிய 2000 ரூபாயை பற்றி பொதுமக்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய 14 தகவல்கள் கீழே..
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விவசாய
சங்கங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்வு எப்போது ?"
அறிவிக்க விரைவில் வாய்ப்பு அதிகம் உள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது
அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நிதித் துறை வட்டாரதகவல்.
மத்திய அரசு 7 வது ஊதியக் குழுவின் புதிய ஊதிய விகிதத்தினை கணக்கில் கொண்டு 2% அகவிலைப்படி உயர்வினை 01.07.2016 முதல் வழங்க அறிவித்துள்ளது. தமிழக அரசு ஏன் இன்னும் அகவிலைப்படி உயர்வினை அறிவிக்கவில்லை என அனைத்து தரப்பினரும் மனக்குமுறலுடன் கேட்டு வருவதை உணரமுடிகிறது.
உண்மைத் தன்மையை அறிய நிதித் துறை வட்டாரங்களில் தொடர்பு கொண்டு கேட்டபோது "மத்திய அரசு புதிய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Revised scale) பெறுபவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது.ஆனால் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் (Pre revised scale) பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப் படவில்லை. விலைவாசி புள்ளி விவர உயர்வுப்படி கணக்கிட்டு மத்திய அரசில் பழைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆணை வெளிவந்தவுடன் தமிழக அரசும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான ஆணை வெளியிடும்." என்று நிதித் துறை வட்டாரத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றது என்பதை உங்களுக்கு தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறோம்
உங்கள் கையில் இருக்கும் பணம் செல்லும்: ரிசர்வ் வங்கி சொல்லும் 25 விஷயங்கள்
நீங்கள் கையில் வைத்திருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை அல்ல, அவை அதன் முழு மதிப்போடு திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில்,
1. கள்ளநோட்டு மற்றும் கருப்புப் பணத்தை புழக்கத்தில் இருந்து நீக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கள்ள நோட்டுகளை இந்தியாவில் பயங்கரவாதம் வேரூன்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவே 500 மற்றும் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ம் தேதியோடு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தைக் கொண்டு இனி எந்த பரிவர்த்தனையும் நடைபெறாது. ஆனால், அதனை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து முழு மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. பழைய நோட்டுக்களின் மதிப்பு என்ன?
பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து அதன் முழு மதிப்பிலான புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
4. அனைத்து ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக் கொள்ள முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில் தனி ஒரு நபர் ரூ.4,000ஐ மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். மீதத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
5. முழுத் தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாதா?
தற்போதைய திட்டப்படி, முழு தொகையையும் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள முடியாது. மத்திய அரசு அதனை அனுமதிக்கவில்லை.
6. 4 ஆயிரம் ரூபாய் எனக்குப் போதாது என்றால் நான் என்ன செய்வது?
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்து, அதனை காசோலை, டிடி, நெட் பேங்கில் டிரான்சாக்ஷன்களின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
7. வங்கிக் கணக்கு இல்லை என்றால்?
வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. வங்கியில் கணக்குத் தொடங்கிய பிறகே பணத்தை மாற்ற முடியும்.
8. ஜன்-தன் யோஜனா கணக்கு மட்டும் வைத்திருப்போர், வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
9. பணத்தை மாற்றிக் கொள்ள எங்கே செல்ல வேண்டும்?
ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் வங்கிக் கிளைகள், கூட்டுறவு வங்கிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
10. என்னுடைய வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக்குத்தான் செல்ல வேண்டுமா?
ரூ.4 ஆயிரம் வரை பணத்தை மாற்றிக் கொள்ள எந்த வங்கிக் கிளைக்கும், அடையாள அட்டையுடன் சென்று மாற்றிக் கொள்ளலாம்.
ரூ.4 ஆயிரத்துக்கும் மேலான தொகையை மாற்றிக் கொள்ள, வங்கிக் கணக்கில் வரவு வைக்க நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலோ அல்லது வங்கியின் பிற கிளைக்கோ தான் செல்ல வேண்டும்.
11. கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்தக் கிளைக்கும் செல்லலாமா?
ஆமாம், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்த கிளைக்கும் செல்லலாம்.
12. வேறு வங்கியின் கிளைகளுக்குச் செல்லலாமா?
ஆமாம், எந்த வங்கியின் கிளைகளுக்கும் சென்று ரூ.4000 ஆயிரத்துக்கு புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். ஒரு வேளை உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்றால், பழைய ரூபாய் நோட்டுக்களுடன், அடையாள அட்டை மற்றும் உங்கள் வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.
13. மற்றவர்களது விருப்பத்தின் பேரில், அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கலாம். அப்போது உங்கள் அடையாள அட்டையை வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கி வாடிக்கையாளரின் ஒப்புதல் சான்றும் அவசியம்.
14. வங்கிக்கு செல்ல முடியாத நிலையில்?
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு செல்ல முடியாத நிலையில், அவரது அனுமதிக் கடிதத்துடன், அவரது பிரநிதிநிதி ஒருவர் வங்கிக்குச் செல்லலாம். வங்கிக்குச் செல்பவரின் அடையாள அட்டையும் அவசியம்.
15. ஏடிஎம்மில் இருந்து நவம்பர் 18ம் தேதி வரை ஒரு நாளுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும். அதன்பிறகு இந்த வரம்பு ரூ.4,000 ஆக உயர்த்தப்படும்.
16. காசோலையை மாற்றி பணம் எடுக்க முடியுமா?
முடியும். காசோலையை வங்கியில் செலுத்தி ஒரு நாளில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரமும், ஒரு வாரத்தில் அதிகபட்சம் ரூ.20 ஆயிரமும் எடுக்கலாம். இது நவம்பர் 24ம் தேதி வரை பொருந்தும்.
17. நெட்பேங்கிங்கில் பணபரிமாற்றம் செய்யலாமா?
என்இஎப்டி / ஆர்டிஜிஎஸ் / ஐஎம்பிஎஸ் / இன்டர்நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம். எந்த தடையும் இல்லை.
18. பழைய நோட்டுக்களை மாற்ற எவ்வளவு கால அவகாசம் உள்ளது?
பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பணத்தை மாற்றிக் கொள்ள முடியாதவர்களுக்கு உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி மேலும் கால அவகாசத்தை நீட்டிக்கும்.
19. நான் இந்தியாவிலேயே இல்லை. என் பணத்தை என்ன செய்வது?
உங்கள் பிரதிநிதியிடம், உங்களின் கையெழுத்திட்ட ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்து, வங்கிக்கு அனுப்பி, அவரது அடையாள அட்டையுடன் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
20. என்ஆர்ஐ மக்கள் என்ஆர்ஓ வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்க முடியுமா?
ஆம், ஓஎச்டி வங்கிநோட்டுகள் உங்கள் என்ஆர்ஓ வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும்.
21. சுற்றுலாப் பயணிகள் வைத்திருக்கும் நோட்டுக்களை என்ன செய்வது?
விமான நிலையங்களில் இருக்கும் பணப் பரிவர்த்தனை மையங்களில் 72 மணி நேரத்துக்குள் கொடுத்து ரூ.5000 வரை மாற்றிக் கொள்ளலாம். ஓஎச்டி நோட்டுக்களைப் பெற்றதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும்.
22. ஏதேனும் அவசரத் தேவைக்கு என்ன செய்வது?
ஓஎச்டி நோட்டுக்களை வாங்கி, அவற்றை மருத்துவமனை, பேருந்து டிக்கெட்டுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
23. அடையாள அட்டை என்பது என்ன?
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்ட், அரசுத் துறையால் வழங்கப்படும் ஏதேனும் அடையாள அட்டை, பொதுப் பணித் துறை ஊழியராக இருப்பின் ஊழியர் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.
24. மேலும் தகவல்களை எங்கு பெறலாம்?
www.rbi.org.in என்ற ஆர்பிஐ இணையதளத்தில் மேலும் தகவல்களைப் பெறலாம்.
25. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உதவிக்கு ஆர்பிஐ தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 022-22602201 / 022 - 22602944.
Flash news:TNTET தீர்ப்பு -ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: உச்சநீதிமன்றம்
தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.
இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.