Labels

rp

Blogging Tips 2017

அரசூழியர்களின் கடித எண்கள் விவரம்..

NHIS - மருத்தவமனைகள் பட்டியல் சேர்த்து/நீக்கி ஆணை வெளியீடு

Seventh pay commission - First salary and arrears will be paid in July...

ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை

மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் 68 தொடக்கப்பள்ளிகள், 24 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்கவும், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தவும் நிர்வாக பணிகளுக்காக மானாமதுரையில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அடங்கிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்

வருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...
இதோ உங்களுக்குத்தான் இந்த 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு.  பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...
1. பொது வருங்கால வைப்பு நிதிஇது ஒரு பெரிய நீண்ட கால வரி சேமிப்பு முதலீடு ஆகும். இந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீதான வட்டி வருமானம் மற்றும் முதிர்வு பெறப்பட்ட தொகை ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு உண்டு.

விரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு...அரசு உத்தரவு ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்பு

ஒரு பள்ளி, ஒரு மாணவன், இரு ஆசிரியர்கள் சேர்க்கைக்கு பெற்றோர்களிடம் கெஞ்சும் அவலம்.

அரசு துவக்கப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்களிடம் கெஞ்சவேண்டிய பரிதாப நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

  கிராமங்களில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் ஒற்றை இல க்க மாணவர்களே உள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில் 81 துவக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 289 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு !

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில், 83 அரசு கல்லுாரிகள் உட்பட, 700க்கு மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகள் 

தினசரி ஆசிரியர் வருகை குறுஞ்செய்தி SMS ஐ மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும்....


மடிக்கணினி வழங்கவேண்டிய மாணவர்கள் எண்ணிக்கையினை துல்லியமாக அளிக்க இயக்குனர் உத்தரவு !

ஓய்வு நாளில் 7 பேர் 'சஸ்பெண்ட்' வணிகவரி ஊழியர்கள் அதிர்ச்சி...!!

பணி ஓய்வு நாளில், ஏழு பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டது, வணிக வரித்துறை ஊழியர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக, வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசின் வேறு எந்த துறையிலும் இல்லாத அளவுக்கு, வணிக வரித்துறையில், 35 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து ஓய்வு பெறும் அலுவலர்களை, பணி ஓய்வு நாளன்று, மண்டல கணக்காயர், தணிக்கை குறிப்பு மற்றும் உள்ளீட்டு தணிக்கை குறிப்பு நிலுவை குறிப்புகளை காரணம் காட்டி, உரிய கால அவகாசம் அளிக்காமல், தற்காலிக பணி நீக்கம் செய்யும் தவறான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருகே முதல் நாளிலேயே பள்ளியை பூட்டி மாணவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளி கொண்டாப்பட்டு சின்ன காங்கேயனூர் கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த கல்வி ஆண்டு முடிவில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, பணி மூப்பு அடிப்படையில் பள்ளியில் அடுத்த இடத்தில் இருந்த உதவி தலைமை ஆசிரியர் ரவி என்பவரை தான் தலைமை ஆசிரியராக நியமித்து இருக்க வேண்டும்.ஆனால், உதவி தலைமை ஆசிரியர் ரவிக்கு அடுத்த இடத்தில் உள்ள ஜெயந்தி

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கிடையாது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி கடந்த மே 31-ம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட இப்பள்ளிகள் கடைபிடிக்கவில்லை. முறையற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாலேயே கும்பகோணம் பள்ளி விபத்தில் இளம் குழந்தைகளை இழந்தோம்.

SCERT - ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் மின் உள்ளடக்க பயிற்சி பணிமனை - இயக்குனர் செயல்முறைகள்

மாணாக்கருக்கு புத்தகம், நோட்டு, சீருடை: நலத்திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

மிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, புத்தகம், நோட்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
  2016 - 17ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை

1st std to 8th std -CCE FIRST TERM WEEKLY SYLLABUS

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.58 - டீசல் ரூ.2.26 விலை உயர்வு

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.58 - டீசல் ரூ.2.26 விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.58 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.26 காசும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.58 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 2.26 காசும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும்  1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியைமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.26-ம் விலை உயர்த்தப்படுள்ளது.

இந்த விலை உயர்வு செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

HSC -MARCH 2016 SCAN COPY Download Retotal/Revaluation Application Format

HSC -MARCH 2016 SCAN COPY

Download Retotal/Revaluation Application Format in
scan.tndge.in

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 3, 4ல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு,
ஜூன் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர்
வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களின்நகல்கேட்டவிண்ணப்பித்தவர்கள், இன்றுகாலை, 10:00 மணி முதல்,scan.tndge.in என்றஇணையதளத்தில், தங்கள்  பதிவெண் மற்றும் பிறந்த  தேதியை பதிவு செய்து,  விடைத்தாள் நகலை பெறலாம்.  விடைத்தாள் நகலை பெற்ற பின், மறுகூட்டல் அல்லது
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட இணையதள
முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து, இரண்டு  நகல்கள் எடுத்து, ஜூன், 3, 4ம் தேதிகளில், மாலை 5:00
மணிக்குள், முதன்மை கல்வி  அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை, முதன்மை கல்வி
அலுவலகத்திலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசாணை 264 ன் படி பள்ளியில் பின்பற்ற வேண்டிய நிகழ்வுகள்-ஓர் சுருக்கம்

மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேசன் செய்ய வேண்டாம்

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்

SSLC Special supplementary exam 2016

தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது.

தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது. இப்பள்ளிகளை மூடக்கோரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அளித்த அவகாசம், நேற்றுடன் முடிந்த நிலையில், இப்பள்ளிகள் மூடப்படுமா அல்லது தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுமா என்பது இன்று தெரியவரும்.

பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஒரு மாத கோடைவிடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, ஏப்., 22முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தொடக்கப் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிந்து, மே, 1 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 'ஜூன், 1ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வி துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.ஆனால், சென்னை உள்ளிட்டதமிழகத்தின் முக்கிய நகரங்களில், கோடை வெப்பம்

தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு பிறகே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க உத்தரவு

பள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 
 இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வரின் நேரத்திற்கு 'காத்திருந்த' கல்வி அதிகாரிகள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.இதையொட்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் உட்பட அரசு நலத்திட்டங்கள் முதல் நாள் காலை 10.00 மணிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டது.நேற்று மாலை அதிகாரிகள்,

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது : பள்ளி கல்வித்துறை உத்தரவு...

ஆசிரியர்கள் செல்போன்பயன்படுத்தக்கூடாது  பள்ளி கல்வித்துறை உத்தரவுகோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

  அதில்,  பள்ளி வளாக தூய்மை, காற்றோட்டத்துடன் சுத்தமான வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட கரும்பலகைகள் தயாராக இருக்கவேண்டும். வகுப்பறை மின் விசிறி, மின்விளக்குகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும். பள்ளி மேற்கூரை தூய்மையாகவும் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டியை, பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். குழாய்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறை பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும். இதற்கான செலவினத்தை

எம்.பில், பிஎச்.டி. படிப்புகள் பயில புதிய வழிமுறைகளை மத்திய மனித வள அமைச்சகம் உருவாக்கி அறிவிப்பு

எம்.பில், பிஎச்.டி. படிப்புகள் பயில புதிய வழிமுறைகளை மத்திய மனித வள அமைச்சகம் உருவாக்கி அறிவிப்பு செய்துள்ளது.இதில் பெண்களுக்கு பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு டாக்டர்கள் ஓய்வு வயது 65 ஆக உயர்வு: இன்று முதல் அமல்

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூர் நகரில் மத்திய அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய பிரதமர்நரேந்திர மோடி, மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்த்தப்படும் என்றார்.

நம் நாட்டைப் பொருத்தவரை, மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில், இரண்டே ஆண்டுகளில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகும்.இதனைக் கருத்தில்கொண்டே, அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்களுக்கு அனைத்து வகையான விலையில்லாப் பொருட்களையும் விநியோகிக்கக்கூடாது

நாளை அனைத்து வகை பள்ளிகளிலும் எந்த விலையில்லாப் பொருட்களும் சம்பந்தப்பட்ட ஆகியோரின் உத்தரவு வரும்வரை மாணவர்களுக்கு வழங்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு மறு உத்தரவு வரும்வரை நாளை மாணவர்களுக்கு அனைத்து வகையான விலையில்லாப்பொருட்களையும் விநியோகிக்கக்கூடாது

31/05/2016 இன்றுடன் 10 ஆண்டு பணிக்காலத்தை முடித்த 01/06/2006 -ல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.01/06/2016 முதல் தேர்வுநிலை பெற விண்ணப்பிக்க வேண்டிய படிவம்

புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர் -மாணவர் அனைவருக்கும்வாழ்த்துக்கள்-

திறந்த நிலை பலகலைக்கழகத்தால் பெறப்பட்ட பட்டங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் ரத்து செய்யப்படவேண்டும்

திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக பெற்ற முதுகலைப்பட்டம் இனி செல்லாது

வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்

வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம் கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறை நாளை (ஜூன் 1–ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-செயற்குழு கூட்ட முடிவுகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் பொறியியல் பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

( ICT) தேசிய விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும், கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (மே 31) அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளியில் நீதி போதனை வகுப்பு நடத்த...உத்தரவு!தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

"பள்ளிகளில், நீதி போதனை வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறைக்கு பின், நாளை மறுதினம் (ஜூன், 1), அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்கான ஆயத்த பணிகள் குறித்து, பள்ளி கல்வித்துறை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதி திராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் எனசென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 24 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் 2016-2017-ம் கல்வியாண்டில் புதிதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு....

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளிப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அவைநன்கு மூடப்பட்டு இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

அரசு பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது.

2016-2017ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை கள ஆய்வுக்கு வரும் அலுவலர் நிரப்பும் படிவம்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ‘ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும்’ நாளை முதல் அமலுக்கு வருகிறது

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.
முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் குடும்ப அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு

மேற்கு வங்கத்தில் இரண்டாது முறையாக முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.
மொத்தமுள்ள 294 இடங்களில் 211 ஐ கைப்பற்றியது. பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இந்நிலையில், நேற்று 2வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். அமைச்சரவையில்

Guidance and Counselling

S.NOCOURSEDETAILSLAST DATELINK
1B.ETNEA 2016 |ANNA UNIVERSITY B.E ADMISSION                                      31.05.2016CLICK
2MBBSஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்06.06.2016CLICK
3D.T.EDஇடைநிலை ஆசிரியர் பயிற்சி10.06.2016CLICK
5AGRICOIMBATORE AGRI UNIVERSITY ADMISSION 201611.06.2016CLICK
5B.V.Scதமிழ்நாடு கால்நடை மருத்துவ சேர்க்கை 201610.06.2016CLICK
4B.EANNAMALAI UNIVERSITY B.E ADMISSION 201610.06.2016CLICK
5AGRIANNAMALAI UNIVERSITY AGRI ADMISSION 201610.06.2016CLICK
6B.F.ScANNAMALAI UNIVERSITY B.F.Sc ADMISSION 201610.06.2016CLICK
75 YEARANNAMALAI UNIVERSITY Five year Integrated Programmes 201610.06.2016CLICK
8JIPMERஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி08.06.2016CLICK
9B.Eபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்10.06.2016CLICK
10LAWLAW ADMISSION 2016-201706.06.2016CLICK
11TANCETTANCET 2016 | டான்செட் தேர்வில் பங்கேற்க விருப்பமா...21.05.2016CLI

பேஸ்புக், டுவிட்டர், லெக்கிங்ஸ்'சுக்கு தடை - தனியார் பள்ளியின் அதிரடி நிபந்தனைகள்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில்தான் மாணவர்களை சேர்க்கவும், படிக்க வைக்கவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால், அப்பள்ளிகள், பலவிதமான கெடுபிடிகள் விதிக்கின்றன. 
          இந்த வரிசையில், சென்னை குரோம்பேட்டையிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்று, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பல நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன் விவரம்:

உள்ளாட்சி தேர்தல் பணி வருகிற 30 ந்தேதி முதல் துவங்க உள்ளது

சேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டணம் உயரும்

அடுத்த மாதம் முதல், சேவை வரி விகிதம் உயர்த்தப்படுவதால், ஓட்டல், பார்களுக்கு செல்வோர், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் என, பல தரப்பினரும், கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2015ல், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சேவை வரியை, 12.36 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். அது, கடந்த ஆண்டு ஜூன், 1 முதல் அமலுக்கு வந்தது. அதன்பின், நவம்பர், 1 முதல், 'துாய்மை பாரதம்' திட்டத்துக்காக, 0.5 சதவீதம் கூடுதலாக சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 'கிரிஷி கல்யாண்' எனப்படும், வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடுவதற்காக, சேவை வரி, மேலும், 0.5 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜூன், 1 முதல் சேவை வரி விகிதம் மீண்டும் உயர்கிறது. அது இனி, 15 சதவீதமாக இருக்கும். சேவை வரி உயர்வதால், கோடிக்கணக்கான மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இனி கூடுதல் கட்டணத்தை செலவிட வேண்டும். அதேபோல, குளிர்சாதன வசதி உடைய உணவகங்களில் சாப்பிடுவோரும், 'பார்'களுக்கு செல்வோரும் கூடுதலாக செலவிட வேண்டும். மேலும், ஓட்டல்களில் தங்கும் கட்டணம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கும் போது பத்திரப்பதிவு கட்டணம், விமான கட்டணம், கிரெடிட் கார்டு சேவை கட்டணம் உள்ளிட்டவையும் அதிகரிக்கின்றன.

4-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி இருக்க வேண்டும் - நிபுணர் குழு பரிந்துரை

பள்ளிக்கல்வி - மாணவர்களுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 2016-2017 - பெற்று வழங்குதல் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - பாதுகாப்பு நடவடிக்கைகள் - மாணவர்கள் இருசக்கர வாகனகள் , கைபேசி பயன்படுத்த கூடாது - மீறினால் ஆசிரியர்கள் அதனை கைப்பற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - ஜூன் 1 அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோடை கால வெப்பம், இன்னும், மூன்று நாட்களுக்கு இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 'அரசு பள்ளிகள், திட்டமிட்டபடி ஜூன், 1ம் தேதி திறக்கப்படும்' என, தமிழக பள்ளி கல்வி இயக்ககம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' என, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.தமிழகத்தில்,

web stats

web stats