Labels

rp

Blogging Tips 2017

பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி

இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.
பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது. இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும்.

*ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா? தமிழக ஓட்டுக்கள் எவ்வளவு?*

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இதில் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுக்கு வாக்குரிமை இல்லை. (உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர், ரேகா, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள், மேலும், உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் எம்.எல்.சி.க்கள் (சட்டப்பேரவை மேலவை) இருப்பார்கள் அவர்களால் வாக்களிக்க முடியாது!)
நாடு முழுவதும் 4 ஆயிரத்து 114 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 776 எம்.பி-க்கள் உள்ளனர்.

*முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

*மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்

PRAYER SCHEDULE AS PER G.O 335

முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் அரசாணை


INSPIRE AWARD 2017-2018-LAST DATE JUNE 30

தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் 06.06.2017க்குள் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவு

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணம் உயர்வு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு 2017-18ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

 அதன்படி, விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.755லிருந்து ரூ.900ஆகவும், கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.875 லிருந்து ரூ.1000 ஆகவும்  உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு
11.பள்ளி விவரப் பதிவேடு (school profile

பள்ளிக் கல்வித் துறையில் 40க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வரும் 15-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது அறிவிக்கப்படும்

பள்ளிக் கல்வித் துறையில் 40க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வரும் 15-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட இருப்பதாகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் சேர்க்கப்படவேண்டும் என்ற உத்தரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திருச்சி மாநாடு- மத்திய ,மாநில அமைச்சர்கள் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது*அணி திரள்வீர்

05/06/2017 திங்கள்  காலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுசெயலர் திரு க.செல்வராஜு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு கே.பி.ரக்‌ஷித் ஆகிய இருவரும் தலைமைச்செயலக ம் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ .செங்கோட்டையன், தமிழக மின் துறை அமைச்சர் மாண்புமிகு பா.தங்கமணி,சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு என்.வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி ஆகியோர்களை சந்தித்து நேரில் மாநாடு அழைப்பிதழ் அளித்து மாநாட்டிற்கு அழைத்தோம். அவர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தி உள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்                        
✅மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன்ராதாக்கிருஷ்ணன் அவர்கள் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது        

புதிய கல்வியாண்டில் நுழையும்மாணவர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

ஜூன் 7 புதன்கிழமை 2017-18 கல்வியாண்டு துவங்குகிறது..இவ்வாண்டு பல புதிய மாற்றங்களை கல்வித்துறை செய்துள்ளது..அதற்கேற்ப நாமும் மாறி ,பள்ளிப்பணிகளில் சிறிதும் குறைவின்றி,புத்துணர்வுடன் புறப்படுவோம்..மாற்றத்தை விதைப்போம்..நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்..கற்பித்தல் பணியை கண்ணென போற்றுவோம்..ஆசிரியர்கள் அனைவருக்கும் இக்கல்வியாண்டில்  சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகள்..'TET' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம் - ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது.
இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது.

TEACHER'S DIARY - FORMAT..

G.O.335, date 2.6.2017-அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை இறைவணக்க கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு..

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் -தொடர்பாக!!


*தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது.

*2018-ம் ஆண்டிற்கான  பொது தேர்வு தேதிகள்  அறிவிப்பு*

*2018ம் ஆண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறும் தேதிகளை தமிழக அரசு அறிவித்தது.*

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் ௦7.06.2017 திறப்பு ....மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு.


web stats

web stats