rp

Blogging Tips 2017

'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா?

'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. தேர்வு அறையில், மாணவர்கள் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களில், எதை அனுமதிக்கலாம்; எதை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம் - Dinamalar

சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.

விரைவில், பிளஸ் 2 பொதுத்தேர்வும், அதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்க உள்ளது. தேர்வுப் பணியை கண்காணிக்க, மாவட்ட வாரியாக, கல்வித் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் கண்காணிப்பாளர் பொறுப்பில், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி,

உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர்களும் M.Phil உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் பெறலாம்! GO.No: 31 - Date: 12.2.2015


இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந் தேதியை (நாளை) தாய்மொழி தினமாக கொண்டாடுங்கள் என்று சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு சுற்றறிக்கையை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சர்வதேச தாய்மொழி தினவிழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடவேண்டும். குறிப்பாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடவேண்டும். சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்ற அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கொண்டாடுங்கள். தாய் மொழி தினம் முழுக்க முழுக்க தாய்மொழியை மேம்படுத்தவும், பாரம்பரிய கலாசாரத்தை வளர்க்கவும் கொண்டாடவேண்டும். அதாவது பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை கொடுத்து அதை தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்தல் நல்லது. அறிவு தொடர்பான போட்டி உள்பட அனைத்துவித போட்டிகளையும் தாய்மொழியில் படித்தவர்களுக்கும், ஆங்கிலவழியில் படித்தவர்களுக்கும் நடத்தவேண்டும். தாய்மொழியில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றை நடத்தி தாய்மொழி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இதை அதிக நாட்கள் தொடர்ந்துசெய்யவேண்டும். தாய்மொழி தவிர மேலும் ஒரு இந்திய மொழியை படிப்பது நல்லது அதை மாணவ-மாணவிகளிடம் ஊக்கப்படுத்துங்கள். அந்நிய மொழி கலக்காமல் தாய்மொழியில் எழுதவும், படிக்கவும் கற்பித்துகொடுங்கள். தாய்மொழியில் பேசி விளையாடுங்கள். தாய்மொழியையும் இந்திய மொழிகளையும் மேம்படுத்துங்கள். மொத்தத்தில் பள்ளிக்கூடங்களில் தாய்மொழித்திருவிழாபோல நடத்தப்படவேண்டும். இதனால் தாய்மொழியில் படிக்காத மாணவர்களும் தாய்மொழியை நன்றாக எழுதத்தெரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு தாய்மொழி விழா நடத்துவதால் மாணவ-மாணவிகளுக்கு பேச்சாற்றல் வளரும். பள்ளிகளில் தாய்மொழிவிழா நடத்துவதை வீடியோ, புகைப்படம் எடுத்து அருகில் உள்ள சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டும். தமிழ்நாட்டைப்பொருத்தவரை தாய்மொழியாம் தமிழில் பள்ளிக்கூடங்களில் நடத்தும் மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நடத்துங்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின்படி தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழியாம் தமிழ்மொழியில் தாய்மொழி தினம் நடத்தப்படுகிறது.

வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந்தேதியை தாய்மொழி தினமாக கொண்டாட உத்தரவு

இந்தியா முழுவதும் பிப்ரவரி 21-ந் தேதியை  தாய்மொழி தினமாக கொண்டாடுங்கள் என்று சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கு சுற்றறிக்கையை மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சர்வதேச தாய்மொழி தினவிழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடவேண்டும். குறிப்பாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடவேண்டும். சி.பி.எஸ்.இ. அனுமதி பெற்ற அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கொண்டாடுங்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -திருவண்ணாமலை மாவட்டசெயற்குழு கூட்ட அழைப்பிதழ்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-கிருஷ்ணகிரி மாவ்ட்டத்தேர்தல்-முடிவுகள் -அறிக்கை-திரு பொன் நாகேஷ்.மாவட்டச்செயலர்


பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு

பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.‘தி கேட்டலிஸ்ட் டிரஸ்டு’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பி இருந்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு


தமிழக முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஜாக்டோ அமைப்பினரை சந்திக்கிறார்

           ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்று செல்வதென முடிவெடுக்கப்பட்டது. மாலை4.30 மணிக்கு சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு ஜாக்டோ உயர்மட்ட தலைவர்கள் தலைமைசெயலகம் சென்று இருந்தனர்.
ஆனால் இதுகுறித்து விரிவாக விவாதிக்க இருப்பதால், முதலமைச்சர் பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியதை உறுதிப்படுத்திக்கொண்டனர்
                  பின்னர் ஏற்கனவே பிப்ரவரி -27-ந்தேதி  கூடுவதாக இருந்த அடுத்த ஜாஒடோ உயர்மட்டக்கூட்டம் பிப்ரவரி 25ம் தேதியே முன்கூட்டி கூட உள்ளது. இருப்பினும் திட்டமிட்டப்படி வருகிற 22 ந்தேதி ஆயத்த விளக்க கூட்டம் மார்ச் 8ந்தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவண் ஜாக்டோ மாநில அமைப்பு...

ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் நேரம் ஒதுக்கீடு-இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறார்

ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்றுகாலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்றுசெல்வதென முடிவெடுக்கப்பட்டது.அதன்படி இன்று மாலை முதலமைச்சர் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது.
முதலமைச்சர் இன்று மாலை 4.30 க்கு சந்திக்க நேரம் ஒதுக்கியதை அடுத்து தற்போது ஜாக்டோ பொறுப்பாளர்கள் தலைமைச்செயலகத்தில் உள்ளனர்

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன. இந்த தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று முதல் www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.

உடல்ரீதியாகத் துன்புறுத்துவது முதல் வகை. இதில், சுவர் அருகே நாற்காலி போல நிற்கவைப்பது, தலையில் புத்தகப் பைகளை சுமக்க வைப்பது, கடும் வெயிலில் நாள் முழுவதும் நிற்கவைப்பது, முட்டிபோட்ட நிலையில் பணிகளை செய்யச் சொல்வது, மேஜையின் மீது ஏறி நிற்கச் சொல்வது, கைகளைத் தூக்கிக் கொண்டு நிற்கச் சொல்வது, வாயில் பென்சிலை வைத்துக் கொண்டு நிற்கச் செய்வது, கால்களுக்கு இடையில் கையை நுழைத்து காதுகளைப் பிடித்துக் கொண்டு நிற்க வைப்பது, மாணவர்களின் கைகளைக் கட்டுவது, உட்கார்ந்து எழுந்திருக்க வைப்பது, பிரம்பால் அடிப்பது, காதுகளைத் திருகுவது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வியியல் துறைகளில் என்சிடிஇ வழிகாட்டுதலை பின்பற்ற யுஜிசி அறிவுறுத்தல்


ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?

ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது. தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம்.

இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு !!!

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

அரசு பணம் கையாடல்: கல்வித்துறை ஊழியர்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!

தேர்வு செலவுகளுக்காக அரசு தேர்வுத்துறை அனுப்பிய பணத்தை கையாடல் செய்ததாக, 5 ஊழியர்களை அரசு தேர்வுத்துறை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு தேர்வுத்துறை சார்பில் ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பப்படும். இந்த பணத்தை செலவழித்து விட்டு கணக்கு காட்டி, மீதிதொகையை அரசு தேர்வுத்துறைக்கு சம்மந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள் ஆண்டு தோறும் சமர்ப்பிக்க வேண்டும்.

2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு!

2016ஆம் ஆண்டிற்குள் மாணவ- மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தொடக்க கல்வி துறையில் பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரிக்க உத்தரவு

தொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரித்து 26.2.14 முதல் மண்டல வாரியாக நடைபெறும்
ஆய்வுக்கூடத்தில் சமர்ப்பிக்க தொ.க.இயக்குனர் உத்திரவு.

25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு !!

நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியில் இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 1500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக

தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு

பல கல்வித்துறை அலுவலகங்களில் நடப்பது என்ன? ஆசிரியருக்கு யார் எதிரி -ஆசிரியர்களின் புலம்பல்

நன்றி-ஜயபிரகாஷ் முகநூல் பக்கத்தில்

https://www.facebook.com/profile.php?id=100006502930093

புதிதாக ஆசிரியர் பணிக்கு சேர அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து appointment வாங்கும் முறை மாறி TET Exam. எழுதி வேலைக்கு வந்தவுடன் முதலில் அதிகாரி, அலுவலர்களுக்கு sweet,kaaram,coffeeல் லஞ்சம் வழங்க தொடங்குகின்றனர், அந்த ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கு பல லட்சங்கள் அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு, தகுதிகாண் பருவம் முடித்து ஆர்டர் போட, PF Loan போட, surrender போட, மேற்படிப்பிற்கு முன் அனுமதி பெற, மேற்படிபிற்க்கு ஊக்க ஊதிய உயர்வு பெற, b.ed. teaching practice க்கு E.L. போட, B.ED incentive போட, மேற்படிப்பு சான்றிதழ் geniueness பெற,விழா முன் பணம் பெற, arrears பெற, Inspectionக்கு வந்தால் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு தக்கவாறு லஞ்சம், passport க்கு NOC பெற, retirement benefit பெற , மற்றும் பல ..........
இது போன்று ஒரு விலைபட்டியல் வைக்கலாமே

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-கிருஷ்ணகிரி மாவட்டக்கூட்டம்-சில நி்ழற்படங்கள்

652 கணினி பயிற்றுநர்கள் 6 வாரங்களில் நியமிக்க உச்ச நீதிமன்றம் ஆணை

CONTEMPT APPEAL NO.3342 OF 2014 - 652 COMPUTER INSTRUCTORS SHOULD BE APPOINTED WITH IN 4 WEEKS REG ORDER CLICK HERE...

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 விடைத்தாளில் ஸ்கெட்ச் பேனாக்களால் அடிக்கோடிடக் கூடாது: கல்வித்துறை உத்தரவு

10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வழங்கப்படும் விடைத்தாள்களில் கலர் ஸ்கெட்ச் பேனாவால் அடிக்கோடிடக் கூடாது என கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுசம்பந்தமாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2தேர்வு காலை 10மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கும் துவங்குகிறது. மாணவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் வரவேண்டும். தேர்வறைக்குள் 20 நிமிடத்துக்கு முன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

தமிழக சட்டப்பேரவை: ஆளுநர் உரையில் கல்வித் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. மேலும், இணையவழி வகுப்புகள் கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்போன்ற புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கல்வித் தரத்திற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது.
* தரமான கல்வி கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த அரசு ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல், இதுவரை 72,597 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
* மடிக்கணினிகள், இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பேருந்து பயணச் சலுகை அட்டைகள், மிதி வண்டிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 2014-2015 ஆம் ஆண்டு வரை மொத்தம் 8,748.89 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு வழங்கியுள்ளது.

பட்ஜெட்டில் வருமான வரி சலுகை-எவ்வளவாக இருக்கும்

12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் கைகோர்ப்பு: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த ஆயத்தம்

கடந்த 2003ல், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட, 32 ஆசிரியர் சங்கத்தினர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளுக்காக, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர்.

ஜாக்டோ கூட்டமைப்பு:

முதற்கட்டமாக, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை, நேற்று முன்தினம் துவக்கினர். இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பாரி கூறியதாவது: பலவகை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், 32 சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஒருங்கிணைந்து, 'ஜாக்டோ கூட்டமைப்பு' துவக்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தில், கடந்த 15ம் தேதி நடந்த கூட்டத்தில், 70 நிர்வாகி கள் பங்கேற்றனர். வரும் 22ம் தேதி, சேலத்தில் போராட்டத்திற்கான ஆயத்த கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டமைப்புக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். அரசு, ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும்; 2004 - 06ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; அனைத்து ஆசிரியர்களுக்கும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட, ஒன்பது

விகிதாச்சாரப்படி இடமாறுதல்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: சோதனை முறையில் மதுரையில் அமல்



தமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்துக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக் குழந்தைகளின் உடல் நலத்தைப் பரிசோதிக்க மாவட்டந்தோறும் ஏற்கெனவே மருத்துவக் குழு செயல்பட்டது. அதில் முழு பயன் கிட்டவில்லை. ஆகவே பள்ளிக் குழந்தைகளின் உடல் நலத்தைப் பேணும் வகையில், மத்திய அரசின் சுகாதாரத் துறையானது, மாநில அரசு உதவியுடன் "ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம்' எனும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த திட்டத்துக்கான வட்டார அளவிலான மருத்துவக் குழுவில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோர் இடம் பெறுவர். குழுவிற்கான மருத்துவர்கள் அரசால் நியமிக்கப்படுவர். செவிலியர், மருந்தாளுநர் ஒப்பந்தப் பணியில் நியமிக்கப்படுவர். பள்ளிகளில் பரிசோதனைக்குப் பிறகு தொடர் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவும் ஏற்படுத்தப்படும். இந்தப் பிரிவில் பொது, குழந்தைகள் நலம், நரம்பியல், காது-மூக்குத் தொண்டை சிகிச்சை, தோல், மனநலம், பல் சிகிச்சை உள்ளிட்ட பல பிரிவின் மருத்துவர்கள் என 15 பேர் கொண்ட குழு செயல்படும். புதிய மருத்துவத் திட்டத்திற்காக மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும் செயல்படும். தமிழகத்தில் 385 வட்டாரங்களுக்கு

இரயிவே-ஆதார் அட்டை இணைப்புடன் ஏப்ரல் 1ம் தேதி முதல் விரல்ரேகை வருகை பதிவு !!

நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை விவரங்களுடன் கூடிய மின்னணு விரல் ரேகை பதிவு முறையை செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே அலுவலகங்களில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடும் முறை அமலில் உள்ளது. அதேநேரத்தில் ரயில்வே பணிமனைகளில், தொழிற்சாலைகளில் வருகைப்பதிவு அட்டை முறை உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் ஜன.26ம் தேதி முதல் ஆதார் அட்டையுடன் இணைந்த விரல் ரேகை மூலம் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

மதிய உணவு வழங்குமுன் ஆசிரியர் சுவைபார்க்கவேண்டும்-


4 வாரக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழு ஊதியம் வழங்குக--பத்திரிக்கை செய்தி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.
திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்) படிப்பில் சேர்ந்தேன். 2009 நவம்பரில் எம்.ஏ.,தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு 2012

பயன்பாட்டில் இல்லாமல் போன கல்வித்துறை இணையதளம்

அரசு பள்ளிகளை மேம்படுத்த, கோவை மாவட்ட கல்வித்துறையால் துவங்கப்பட்ட, பிரத்யேக இணையதளம், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கட்டணம் செலுத்தி, பராமரிக்க தவறியதால், பயன்பாட்டில் இல்லாமல் போனது.

கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் , போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை, மதில் சுவர், குடிநீர், கழிப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட முக்கிய வசதிகள் இல்லாமல் உள்ளன. இப்பள்ளிகளில், வசதிகளை மேம்படுத்த, 2008ம் ஆண்டு, தனியார் பங்களிப்பை பெற, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947 பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து 816 மாணவர்களும் கூடுதலாக தேர்வு எழுதுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது. விடைத்தாள் தைக்கும் பணி மற்றும் வினாத் தாள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகளும் நடந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக கொண்டாட யு.ஜி.சி. அறிவுறுத்தல்

பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பிப்., 21ம் தேதியை, தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும். அன்று பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்த யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து கடிதம்: ஒவ்வொரு ஆண்டும், பிப்., 21ம் தேதியை, சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும் என, யுனஸ்கோ அறிவுறுத்தி உள்ளது.

பிளஸ் 2 தேர்வு: 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை, 10-ஆம் வகுப்புத் தேர்வுக்கு 5,200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. பிளஸ் 2 தேர்வில் 6,256 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் 11,827 பள்ளிகளைச் சேர்ந்த 10,72,691 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வை 16,947 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 33,816 மாணவர்களும் நிகழாண்டு கூடுதலாக எழுதுகின்றனர்.


60,000 மாணவிகள் அதிகம்: நிகழாண்டு பிளஸ் 2 தேர்வை 3,90,753 மாணவர்களும், 4,52,311 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் அதிகமாக உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 5,40,505 மாணவர்களும், 5,32,186 மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். 10-ஆம் வகுப்பில் தனித்தேர்வர்களாக 50,429 பேரும், பிளஸ் 2 தேர்வில் 42,963 பேரும் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வுக்காக 2,377 தேர்வு மையங்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வுக்காக 3,298 தேர்வு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

77 சிறைவாசிகள்: நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 241 சிறைவாசிகள் எழுதுகின்றனர்.

தமிழ் வழியில்... பிளஸ் 2 தேர்வை 5,50,000 பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 7,30,000 பேரும் தமிழ் வழியில் எழுதுகின்றனர்.

கூடுதல் நேரம்: இந்தத் தேர்வுகளில் கற்றலில் குறைபாடுடையவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதும் உதவியாளர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தனி அறைகளை ஒதுக்கீடு செய்வும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களைக் கொண்டுவர ஏற்பாடு: கடந்த ஆண்டைப் போலவே, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, அதே வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.

மதிய உணவைப் பரிமாறும் முன் ஆசிரியர், நிர்வாகி சுவைப்பது கட்டாயம்

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்கு முன்னர் ஓர் ஆசிரியரும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரும் சுவைத்துப் பார்ப்பதை மத்திய அரசுகட்டாயமாக்கியுள்ளது.
அதோடு, மாநில அரசுகளும் மதிய உணவு மாதிரிகளை அவ்வப்போது ஆய்வகங்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு

2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய -4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.

 
 2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவு. 

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை, பிப்.16–இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.இந்த நிலையில், மத்திய அரசு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளின் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.இதையடுத்து இடைநிலை

தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் 'தற்காலிக பணியிடம்' என குறிப்பிடப்பட்டது.
பொதுவாக ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓராண்டில் அவர்களுக்கு 'பணிவரன் முறையும்' அடுத்த இரண்டு ஆண்டுகளில் 'தகுதிகாண் பருவமும்' வழங்கப்படும்.

விஸ்வரூபம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதியப்பிரச்சனை

தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு பள்ளிகளின் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ9,300, தரச்சம்பளம் ரூ.4,200 என்று நிர்ணயம் செய்துள்ளது.இதையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்த தமிழக அரசு 3 நபர் கமிஷன் அமைத்தது.

CCE மதிப்பெண் கணக்கீட்டை எளிதாக்கும் இணையதளம்: பணிச்சுமை குறைவதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சி

 http://way2cce.com/
பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் திறன்களை மதிப்பிட்டு கிரேடு வழங்கும் பணியை எளிதாக்கும் இணையதளம் ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதன்மூலம் பணிச்சுமை குறைவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பள்ளி மாணவர்களை மதிப்பிட சிசிஇ (Comprehensive and Continuous Evaluation) என்ற தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை தமிழக பள்ளிக்கல்வித் துறை 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை இது பின்பற்றப்படுகிறது. இதன்படி, மாணவர்கள் எழுதும் தேர்வுகளுக்கு மட்டுமின்றி, அவர்களது செயல்பாடுகள், விளையாட்டுத் திறன், பேச்சுத் திறன், மற்றவர்களிடம் பழகும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பீட்டு முறை, மாணவர்களை முழுமையாக மதிப்பிட உதவியாக இருக்கிறது. எனினும், ஆசிரியர்களுக்கு பெரும் பணிச்சுமையாக உள்ளது.

குரூப் - 2 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும்:டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

''குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழக சமூக நலத்துறையில் காலியாக உள்ள, குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பதவிக்கான, 117 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., நேற்று தேர்வு நடத்தியது. சென்னை, கோவை மற்றும் மதுரை என, மூன்று நகரங்களில், 15 மையங்களில், 4,009 பேர் தகுதி பெற்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஒன்றரை மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கான எழுத்து தேர்வு சென்னை மதுரை, கோவை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வை 4,009 பேர் எழுதினர். சென்னையில் சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், எருக்கஞ்சேரி ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் 6 மையங்களில் தேர்வு நடந்தது. சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் !

குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
குழந்தைகள் நல திட்ட அதிகாரி

தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நல திட்ட அதிகாரி பணிகள் 117 காலியாக உள்ளன. இந்த பணிகளை நிரப்ப அரசு முடிவு செய்து இதற்கான பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல திட்ட அதிகாரி பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்றது. 4ஆயிரத்து 461 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத பலரது விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 ஆயிரத்து 9 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர்.

விதிகளை மீறி மாணவர்களுக்கு உடனடி தேர்வு :தன்னாட்சி கல்லூரிகளுக்கு சென்னை பல்கலை கண்டிப்பு


மாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லுாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பல்கலை கட்டுப்பாட்டிற்குள் வரும்.பொதுவானதுஇதில், தன்னாட்சி கல்லுாரிகள், தேர்வுக்குரிய கேள்வித் தாள், பாடத்திட்டங்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும். மற்ற கல்லுாரிகளில், பல்கலை சார்பில் தேர்வு நடத்தப்படும். ஆனால், தேர்வுக்கான பல்கலையின் விதிகள், அனைத்து கல்லுாரிகளுக்கும் பொதுவானது.

15.02.2014அன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் மற்றும் சிறப்புக்கூட்டத்திற்கு இயக்கம் சார்பாக அமைக்கப்பட்ட ப்ளக்ஸ்

2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ?

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு
உண்மை நிலவரம்
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ???

மார்ச் 1ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

தொற்றுநோய் தாக்குதல் எதிரொலி: மாணவர்கள் நலன் காக்க கல்வித்துறை புதிய திட்டம்

தொற்றுநோய் தாக்குதலில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளின் உடல்நலம் காக்க கல்வித்துறை புதிய முயற்சி எடுத்துள்ளது. மின்னஞ்சல் வழியாக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தினமும் தகவல்களைப் பெற்று, சுகாதாரத் துறை மூலம் தேவையான மருத்துவ ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

தேர்வுக்கு ஏற்ற உணவுகள் -டாக்டர்.கு. கணேசன்

பிளஸ்2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி. தேர்வு தருகின்ற மன அழுத்தத்தில் மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆகவே, தேர்வு நேரத்தில், மனஅழுத்தத்தைக்குறைப்பதற்கும், அவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளவேண்டியது முக்கியம்.

மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவி உள்ளனரா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்

ஹோம்வொர்க்கை செக் பண்ணினா பத்தாது... கை கழுவி இருக்காங்களான்னும் இனி ஆசிரியர்கள் பார்க்கணும்!
மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவி உள்ளனரா என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. அதன்படி, மத்திய அரசின் மனிதவளத்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

சர்வதேச ஆசிரியர் விருது: இறுதிச்சுற்றில் இந்தியர்

அகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.  துபாயை சேர்ந்த வர்கி அறக்கட்டளை, அனைவரும் கல்வி கற்கும் உரிமையை பெறுதல், சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல் உள்ளிட்ட கல்வி சார் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மார்ச், 31ல் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி நிறைவடைகிறது.

மாநிலம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில், 60 ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மையங்களுக்கு, அரசுப் பள்ளிகளின் கல்வி மையங்கள் போல், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகளை வெளிப்படையாகவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

குறுவள மைய பயிற்சி - 28.02.2015

அ க இ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 28.02.2015 அன்று பயிற்சிகளின் தாக்கம் என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது

தேர்வை கண்காணிக்க 3 ஆண்டுகளாக ஒரே அதிகாரி:சேலம், நாமக்கலுக்கு நியமிப்பதில் சர்ச்சை

பொதுத் தேர்வை கண்காணிப்பதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு மட்டும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இணை இயக்குனர் பழனிச்சாமியை நியமித்திருப்பது, பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.

அரசு தேர்வுத் துறை, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், பொதுத் தேர்வை கண்காணிப்பதற்காக, மாவட்டம் வாரியாக கல்வித்துறை அதிகாரிகளை நியமித்து, அதற்கான பட்டியலை, தேர்வுத் துறை வெளியிட்டது.

ஏப்.15 முதல் சத்துணவு ஊழியர் ஸ்டிரைக்:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் மற்றும்

மத்திய அரசுக்கு இணையான SSTA சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் நான்கு மாதத்திற்குள் வழங்கிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க  கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் நான்கு
மாதத்திற்குள் வழங்கிட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது.

பரிசு 30 ரூபாய்க்கு தருவதோ காசோலை; பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்,

10 ஆயிரம் அரசு ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற திட்டம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை 4 மாதங்களுக்குள் களைந்து உரிய முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான

web stats

web stats