
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
அரசு விளம்பரங்களில் ஆளுநர், முதல்வர், அமைச்சர் படங்களை பயன்படுத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்
முதல்வர் படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த ஆண்டு மே மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ANNAMALAI UNIVERSITY & UNIVERSITY OF MADRAS UG/PG EXAMINATION RESULTS DECEMBER 2015 PUBLISHED
FLASH NEWS
ANNAMALAI UNIVERSITY
DIRECTORATE OF DISTANCE EDUCATION (DDE) DECEMBER 2015
UG/PG EXAMINATIONS RESULTS PUBLISHED
UNIVERSITY OF MADRAS
DISTANCE EDUCATION
IDE- UG/PG EXAMINATION RESULTS DECEMBER 2015 PUBLISHED
உறுதிமொழி படிவம்; ஆசிரியர்கள் திணறல்
மாணவர் வாயிலாக அளிக்கப்பட்ட ஓட்டளிப்பு உறுதிமொழி படிவத்தை, பெற்றோர் பலர், கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்; வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது என்ற பெற்றோரின் கேள்வியால், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கோடு, தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதற்கென, பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிபிஎப், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைப்பு
மத்திய அரசு பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பொது சேமநல நிதி (பிபிஎப்), கிஸான் விகாஸ் பத்திரம் மற்றும் தபால் துறை சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
பிபிஎப் திட்டத்துக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 8.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைகள் விற்க தடை.
விக்ஸ் ஆக்ஷன் 500 வகை மாத்திரை உட்பட சுமார் 300 வகைமருந்துகளின், உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ளது. காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் விக்ஸ் ஆக்ஷன் 500 மாத்திரைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதையடுத்து, அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு: மறுகூட்டலுக்கு மார்ச் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும், மறு மதிப்பீட்டுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மே 2015 தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற கடந்த பிப்ரவரி 16 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் கடந்த 12ம் தேதி முதல்
12-ம் வகுப்பு கணிதத்தேர்வு பிரச்சினைக்கு நிபுணர் குழு தீர்வு காணும்: சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவிப்பு
12-ம் வகுப்பு கணிதத்தேர்வு கடினமாக இருந்ததற்கு நிபுணர் குழு தீர்வு காணும் என்று சி.பி.எஸ்.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு கடந்த 14-ந்தேதி நடந்தது. அந்த தேர்வில் மிகக்கடினமாக கேள்விகள் கேட்கப்பட்டுஇருந்தன. இதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் பல கேள்விகளுக்கு விடைகளை எழுதாமல் கண்ணீர் வடித்தனர்.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை-மத்திய அரசு முடிவு
வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்து விசாரணைநடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில்இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். கடந்த 15-ந்தேதி கணக்கு தேர்வு நடந்தது.இந்த வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.இதில்
பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை: பள்ளிக் கல்வித் துறை மறுப்பு
பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லையென பள்ளிக் கல்வித்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், கடந்த 14-ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வு நடைபெற்றது. மேலும், அந்தப் பாடங்களுக்கான வினாத்தாள்கள் உரிய வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து காவல் துறை
பள்ளிக்கல்வித்துறை-இணைச்செயலர்கள் விவரம்
S.NO DESIGNATION JOINT DIRECTORS PHONE NUMBER
1 JOINT DIRECTOR (HS) எம்.பழனிச்சாமி கைபேசி: 044-28280186,
2 JOINT DIRECTOR (PERSONAL) ஏ.கருப்பசாமி கைபேசி: 044-28276340,
3 JOINT DIRECTOR (RMSA) வை.குமார் 9443933373
4 JOINT DIRECTOR (SECONDARY) பூ.ஆ.நரேஷ் கைபேசி:9443933373
044-28273591,
5 JOINT DIRECTOR (MATRIC) கே.ஸ்ரீதேவி கைபேசி: 044-28270169,
6 JOINT DIRECTOR (PUBLIC LIB) ... 044-28550983
7 JOINT DIRECTOR (VOCATIONAL) முனைவர் இரா.பாஸ்கர சேதுபதி
044-28279201,
8 JOINT DIRECTOR (NSS) பி.பொன்னையா 044-28202340
9 JOINT DIRECTOR (SSA) கே.சசிகலா கைபேசி: 044-28253684,
10 JOINT DIRECTOR (SSA) சி.உஷாராணி கைபேசி:9443490552 044-28311716,
11 JOINT DIRECTOR (SSA) எஸ்.நாகராஜ முருகன் கைபேசி: 044-28261242,
12 JOINT DIRECTOR (NON FORMAL) எஸ்.சுகன்யா கைபேசி: 044-28277039
13 JOINT DIRECTOR (EXAM-HS) எஸ்.உமா கைபேசி: 044-28264513,
14 JOINT DIRECTOR (JDP-EXAM) செ.அமுதவல்லி 044-28276672,
15 JOINT DIRECTOR (TRB) ... 044-28272455,
16 JOINT DIRECTOR (SCERT) ஜா.சுதர்சன் கைபேசி: 044-28211392,
17 JOINT DIRECTOR (SCERT-ADMIN) பெ.குப்புசாமி கைபேசி: 044-28211393,
18 JOINT DIRECTOR (SCERT-SCHEME) ஆர்.இராமானுஜம் கைபேசி: 044-28211391,
19 JOINT DIRECTOR (SCERT) வை.பாலமுருகன் 044-28211391,
20 JOINT DIRECTOR (ELE-ADM) என்.லதா கைபேசி:9444213546 044-28216638,
21 JOINT DIRECTOR (ELE-AIDED SCHOOLS) சி.செல்வராஜ்
கைபேசி: 044-28202414,
22 JOINT DIRECTOR (TRB) எஸ்.சேதுராம வர்மா கைபேசி:9894944409
044-28272455,
23 JOINT DIRECTOR (KALLER) செல்வகுமார்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூ. 7 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60 ஆக அதிகரிக்கும்.
டீசல் விலை லிட்டருக்கு 1ரூ. 90 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49.50 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மாதத்துக்கு இருமுறை இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூ. 7 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60 ஆக அதிகரிக்கும்.
டீசல் விலை லிட்டருக்கு 1ரூ. 90 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49.50 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மாதத்துக்கு இருமுறை இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
மாணவர் எண்ணிக்கையில் மத்திய அரசு கிடுக்கிபிடி!
பள்ளித்தொகுப்பு தகவல்களையும் , மாணவர் , ஆசிரியர் தகவல்களையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், மாநில கல்வித்துறையினர் கிலியில் ஆழ்ந்துள்ளனர்.
மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை மட்டுமே தெரியவரும் என்பதால் , இனி வரும் ஆண்டுகளில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக குறையும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையில், அனைவருக்கும் கல்வி திட்டம் ,அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ,
பாதுகாப்பு பணியில் விதிமீறல் : பொதுத் தேர்வு வினாத்தாள் 'அவுட்' ஆக வாய்ப்பு-தினமலர் செய்தி
பொதுத் தேர்வில் வினாத்தாள் அனுப் பும் முறையில், பல தில்லுமுல்லுகள் நடப்பதால், வினாத்தாள்கள், 'அவுட்' ஆகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வுக்கு, வினாத்தாளை எப்படி பாதுகாப்பாக கொண்டு செல்வது என, வழிமுறைகள் உள்ளன.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ., மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி களான டி.இ.ஓ.,க் களால், பல இடங்களில் தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தேர்வுத்துறை அதிர்ச்சி; வேதியியல் தேர்வில் வினாத்தாள் லீக்?
பிளஸ் 2 வேதியியல் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள், லீக் ஆகியுள்ளது.
இதனால், வேதியியலுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று கணித, அறிவியல் பிரிவுக்கு வேதியியல் பாட தேர்வும்; பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, கணிதப் பதிவியல் தேர்வும் நடந்தது. இதில், வேதியியல் பாட தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில், வினாத்தாள், &'லீக்&' ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
மருத்துவ கல்வி; தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த திட்டம்
புதுடில்லி: மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், மருத்துவ, சீட்டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதை தடுக்கவும், நாடு முழுவதுக்கும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தவும்; மருத்துவ பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தவும்மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவக் கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவும், பல்வேறு தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நன்கொடை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வாங்குவதை தடுக்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும் ஆலோசனைகளை வழங்க, பார்லிமென்ட் குழு ஆய்வு செய்தது.இந்த குழுவினர், தமிழகத்தின் ஊட்டி, கோயம்புத்துார் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவ பல்கலைகளில் ஆய்வு செய்தனர்.
பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது ஏப்ரல் 20–ந் தேதிக்குள் முடிக்க திட்டம்
பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. ஏப்ரல் 20–ந்தேதிக்குள் திருத்தி முடிக்க அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணிதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், வேதியியல் ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன.
குழந்தைகளை தத்து எடுக்க புதிய விதிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்திய குழந்தைகளை நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும் தத்து எடுப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலை யில், இந்த சட்டத்தின் கீழ் விதி முறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அறிவியல் ஆய்வகம் இல்லாத பள்ளி; கணக்கெடுக்க உத்தரவு
அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் இல்லா பள்ளிகள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே, அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பின், 10ம் வகுப்பிலும், அறிவியல் செய்முறைகள் அமல்படுத்தப்பட்டதால், உயர்நிலை பள்ளிகளுக்கும் அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டியது அவசியமானது.
அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் ஆண்டவர் அறிவிப்பு
அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இன்றைக்கும் திகழ்ந்து வருபவர், அன்னை தெரேசா. ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதியவர். அன்னை தெரேசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார்.
பள்ளிக்கூடங்களில் துப்புரவாளர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்புவது குறித்த அரசாணைகள் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் துப்புரவாளர், பெருக்குபவர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்பவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைகளை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தனியார் முகமைதமிழக பள்ளி கல்வித்துறை கடந்த 2007–ம் ஆண்டு ஒரு அரசாணை பிறப்பித்தது. அதில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து இளநிலை
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு
சென்னை: தமிழகத்தில், இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிளஸ் 2 தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்து, சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்விலும், தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில்,
வங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: ஏடி.எம் சேவை முடங்கும் அபாயம்
வரும் மார்ச் 24 ஆம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால், பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இம்மாத சம்பளப் பட்டியல் எழுதும் போது கவனிக்க வேண்டியது........
குடும்ப நலநிதி உயர்த்திய அரசணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016
எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90
மட்டும் மார்ச் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்
ஏப்ரல் மாதம் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.
இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும் உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பொருந்தும்......
இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும் உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் பொருந்தும்.
7th Pay commission latest news.
1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749
மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 13-ந்தேதி
முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 72
ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
மருத்துவ நுழைவு தேர்வில் ' 0' தமிழக கல்வி துறையின் அவலம்
நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், 9:00க்கு தேர்வறைக்குள் இருக்கணும். மாணவர்களுக்கான அறிவுரை
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், காலை, 9:00 மணிக்கு, தேர்வறையில் இருக்கும் வகையில், முன்னதாக, மையத்துக்கு வர வேண்டும் என,அறிவுறுத்தப்பட்டது. தேர்வு நேரத்தை, மாணவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். காலை, 9:00 மணிக்கு, முதல் மணி அடிக்கும் போது தேர்வறைக்குள் இருக்குமாறு, மையத்துக்கு வர வேண்டும். 9:10க்கு, இரண்டாவது மணி அடிக்கும்போது, மாணவர் முன்னிலையில்,
பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடம் குறித்த அரசாணை: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப் பரப்பளவு குறித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுத்து 2004-ஆம் ஆண்டு ஜூலை 21-இல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இதில், மாநகராட்சி, மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி, கிராமம் என 5 வகைகளாகப் பிரித்து, அதற்கு உள்பட்ட இடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட பரப்பளவு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 23 உள்ளூர் விடுமுறை..
நெல்லை மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாற்றாக ஏப்ரல் 9 வேலை நாள்.
அங்கீகாரம் இல்லா கல்வி நிலையங்களுக்கு நோட்டீஸ்
ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு இடங்களில், உரிய அங்கீகாரமின்றி நடத்தப்பட்டு வந்த 279 கல்வி நிலையங்கள் கண்டறியப்பட்டு ஏ.ஐ.சி.டி.இ.,லிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2014-15) அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த 121 கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
35 அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் `கட்’ ஆதார் எண் தராததால் நடவடிக்கை
வேலூர் தாலுகா அலு வ ல கத் தில் பணி பு ரி யும் 35 அரசு ஊழி யர் க ளுக்கு பிப் ர வரி மாத சம் ப ளம் ‘கட்’ செய் யப் பட் டுள் ளது.
வேலூர் தாலுகா அலு வ ல கத் தில் கிராம நிர் வாக அலு வ லர் கள், வரு வாய் ஆய் வா ளர் போன் ற வர் க ளின் பரிந் து ரை க ளின் பேரில் சாதிச் சான் றி தழ், வரு வாய்ச் சான் றி தழ், இருப் பி டச் சான் றி தழ் மற் றும் வாரி சுச் சான் றி தழ், நில உட மைச் சான் றி தழ், பட்டா மாற் றம், புதிய பட்டா வழங் கு தல் போன்று பல சான் றி தழ் கள் வழங் கப் ப டு கின் றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி
பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் மற்றும் முதல் மொழி பாட தேர்வில், இரண்டு தாள்களுக்கும், ஆங்கில பாடத்தில் இரண்டு தாள்களுக்கும் தேர்வு முடிந்துள்ளது. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 14ல் தேர்வு துவங்க உள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல்
திண்டுக்கல்;பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் மதுபானங்கள் குறித்த வினா இடம் பெற்றதால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.
பிளஸ்2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதில் கேட்கப்பட்டு இருந்த ஒருவினாதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பகுதி 'ஏ' ல் பிரிவு 'பி'ல் 5வது வினா, “முதியவர் பெஹ்ரமான், இலையை வரைந்து முடிக்கும் வரை எவ்வகை மதுவை அதிகம் குடித்தார்? என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு விடைகளாக 'ஒயின், வோட்கா, பீர், ஜின்' என மதுவகைகள் இடம்பெற்று இருந்தன.
அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்
அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை!
தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
வட மாநிலத்தில், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி, ஓட்டுச்சாவடி இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிய சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணியில் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தியது தெரிய வந்தால், அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு
உள்ளது.
Tamilnadu Teacher Education University shifted to new premises
Tamilnadu Teacher Education University shifted to new premises at Gangaiamman Koil Street,Karapakkam, Chennai - 600 097, chennai-97.


அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை; ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை
சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குட்டிக்கதை
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில், வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசியதாவது:-
10 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த குட்டிக்கதை ஒன்று சில தினங்களுக்கு முன்பு ஞாபகத்துக்கு வந்தது. அதை உங்களுக்கு கூறி, கேள்வி ஒன்றை கேட்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் பதிலளிக்கவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)