rp

Blogging Tips 2017

CEO transfered list.

KANCHEEPURAM SSA CEO Seethalakshmi to CEO tiruvellore
, R.Boopathy TRB DD to CEO vellore,
 Anitha CEO Chennai ADDL charge Trb DD,
 Kasthuri Bai SSA CEO Vellore to CEO Nagapattinam,
 Arul mozhi devi SSA CEO Cuddalore to DD DPI

மாநில திட்ட இயக்ககம் மற்றும் மாவட்டங்களில் பணிபுரியும் ஆலசகர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் தொகுப்பூதியத்தை 1.04.2015 முதல் உயர்த்துதல்.,. Incharge BRT S AND BRT travelling allowance raised....

Instructions as received to all blocks to ensure 100%attendence for ALM CRC & SABL Special CRC 25.07.2015


மாணவர்களுக்கு பதில் பெற்றோர் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி

: 'மருத்துவ படிப்புக்கான, தேசிய மறு நுழைவுத்தேர்வு இன்று நடப்ப தால், மாநில கலந்தாய்வில், மாணவர்களுக்கு பதில், பெற்றோர் பங்கேற்கலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.மத்திய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடந்தது. இதில், அரியானா உட்பட, சில மாநிலங்களில், சில மாணவர்கள் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை ரகசியமாக பயன்படுத்தி, விடைகளை வெளியே இருந்து பெற்று, தேர்வு எழுதியதாக குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி

மதுரை: "இந்தாண்டு பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது" என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு குறித்தும், இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை குறித்தும் வேலூர், கடலூர், திருச்சி, மதுரை மண்டலங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடந்தன. இதன்பின் நெல்லை, கோவை, காஞ்சிபுரத்தில் நடக்கிறது.மாநிலத்தில் அரசு பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேல் கழிப்பறை வசதி உள்ளது. இதுதவிர எஸ்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் என்.எல்.சி., சார்பில் 1500 கழிப்பறைகள் வசதி செய்யப்பட்டு நூறு சதவீத வசதியை எட்டியுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும்.
இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏராளமான மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (INSPIRE AWARD) - 2015/2016 ஆம் ஆண்டிற்கான விண்ணபங்களை "ONLINE " இல் அனைத்து பள்ளிகளும் பதிவு செய்யலாம் - பதிவிடும் முறை குறித்து "தமிழ்நாடு அறிவியல் மையம்" இயக்குனரின் செயல்முறைகள்

CLICK HERE- 2015/2016 "ONLINE INSPIRE REGISTRATION" REG PROC

பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

  • CLICK HERE-G.O.No. 270 Dt : July 10, 2012- SURPLUS TRS DEPLOYMENT- G.O REG

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

வருமான சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட், 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த உதவித்தொகையை, மத்திய அரசு உதவியுடன், தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக, விண்ணப்பிக்கும் மாணவர், தன் குடும்ப வருமான சான்றிதழை, கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால், இந்தச் சான்றிதழ் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.அனைத்து சான்றிதழ்களும், தாசில்தார் அலுவலகம் மற்றும் பொது இ - சேவை மையங்களில், 'ஆன் - லைனில்' வழங்கப்படுவதால், தினமும் குறைந்த அளவு மாணவர்களுக்கே கிடைக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் CPS தொகையை செலுத்தாத தமிழக அரசு: தகவல் உரிமை சட்டத்தில் அம்பலம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயை தமிழகஅரசு மத்திய அரசிடம் செலுத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
1.1.2004 முதல் மத்திய அரசு வேலையில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கட்டாயமானது. கடந்த 1.4.2003 க்கு பிறகு முதல் மாநிலமாக தமிழக அரசும் அறிமுகப்படுத்தியது. 2006 ஜூன் 1 முதல் அரசு ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டது.இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும்,ரூ.33 ஆயிரத்து 121 கோடி மாநில அரசு ஊழியர்களுக்கான நிதியாக ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மற்ற மாநிலங்களில் ஓய்வூதிய நிதி மற்றும் பணபலனும் கொடுத்துள்ளனர்.

தினமும் காலை, மாலை மற்றும் சனிக்கிழமை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த சி.இ.ஒ. அறிவுரை

கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சி.இ.ஒ., திடீர் ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று காலை சென்ற மாவட்ட சி.இ.ஒ., தமிழரசன், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவிகளுக்கான சிறப்பு வகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் காலியாக உள்ளன.
அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான 125 பணியிடங்களில் 65-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக

CRC க்கு ஈடுசெய்விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது! எனவே CRC அன்று CL தற்செயல் விடுப்பு எடுக்க கூடாது ! எடுத்தால் Absent என புதிய உத்தரவு!


ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீண்டும் திருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவரது விடைத்தாளை மீண்டும் திருத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த டி.வெள்ளிசுப்பையன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், முதுகலை வரலாறு பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2013 இல் எழுதினேன். விடைத்தாளில் (ஓஎம்ஆர் சீட்) வினாக்களின் வரிசை எண்ணைக் குறிப்பிட மறந்து விட்டேன். இந்நிலையில், அந்த தேர்வில் எனக்கு பூஜ்யம் மதிப்பெண் அளிக்கப்பட்டு இருந்தது. இதை சரி செய்து விடைத்தாளை திருத்துமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையை அணுகினேன். அவர்கள் மறுத்துவிட்டனர்.எனவே எனது விடைதாளை திருத்தி பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவுக்கு ஆசிரிரியர் தேர்வு வாரியம் சார்பில் அளித்த பதில் மனுவில், மனுதாரர் வினாக்களின் வரிசை எண்ணை ஓஎம்ஆர் படிவத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம். ஏனென்றால் கணினி மூலம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.அதில் வினா வரிசை எண் இருந்தால் தான் கணினி அதை மதிப்பீடு செய்யும். எனவே மனுதாரரின்

மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!

சென்னை: 31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சியை அளிக்கிறது "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனம். இதன்மூலம் இனி அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளைப் போல தங்களது குழந்தைகளும் இனி ஆங்கிலத்தில் பேசும் என்ற நம்பிக்கை ஏழை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள்.

'பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு வரை செயல்வழி கல்விமுறை செயல்படுத்தப்பட்டது.
இதில், அட்டைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

விநாயக மிஷன் பல்கலைக்கழக் படிப்புகள் அனுமதி- முன்னுக்கு பின் முரணான தகவல்கள் ஒரேதுறையில் பல்வேறு சமயங்களில் அளிக்கப்பட்ட மாறுபட்ட பதில்கள்

Controversy RTI Letters About Vinayaga Mission Studies


  1. Yes (11.3.2014) | Vinayaga Mission University Studies Department Permission - RTI Letter
  2. Yes (16.6.2015) | Vinayaga Mission University Studies Eligible to Promotion Court Judgement Copy
  3. Yes (25.3.2015) | Vinayaga Mission University MPhil Eligible to Incentive - RTI Letter
  4. Yes (18.1.2012) | Vinayaga Mission UGC Approved copy & DSE Auditor PDF Download Letter - RTI Letter Download
  5. No (10.7.2015) | Vinayga Mission Studies Not eligible to Promotion & Incentive - RTI Letter
  6. No (30.1.2015) | Vinayaga Mission M.Phil Not eligible to get incentive (Elementry Education)  - RTI Letter
இவ்வாறு முன்னுக்கு பின் முரனாக அளிக்கப்பட்டாலும் கடைசியாக 10.07.2015 அன்று அளிக்கப்பட்டதே நடைமுறையில் உள்ளதாக கருதலாம்?

    பள்ளிக்கல்வி - பள்ளிகளில் மராமத்து பணிகளை தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தவும், எக்காரணத்தை கொண்டும் மாணவர்களை பயன்படுத்த கூடாதென பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

    DSE - SCHOOL MAINTENANCE REG INSTRUCTIONS CLICK HERE..

    25/07/2015 "UPPER PRIMARY CRC MODULES"

    • CLICK HERE - TAMIL ALM MODULE

    • CLICK HERE - ENGLISH ALM MODULE

    • CLICK HERE - MATHS ALM MODULE

    • CLICK HERE - SCIENCE ALM MODULE

    • CLICK HERE - SOCIAL SCIENC

    பள்ளி பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை

    பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
           இது தொடர்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது.

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்கள் காலி: வேலை இல்லாததால் ஆர்வம் குறைந்தது.

     பிளஸ்–2 தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில்சேர வேண்டும்' என்ற ஆர்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் என்ஜினீயர் பட்டம் பெறுகிறார்கள்.

           இதனால், சமீப காலமாக என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. வேலை கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவு சம்பளம் இல்லை. அதிக செலவு செய்து என்ஜினீயர் ஆனவர்கள் ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் என்ஜினீயரிங் படிப்பு மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்தது. எனவே, கலை– அறிவியல் கல்லூரிகளில் படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில்

    நூலகங்களுக்கு நூல்களை தேர்வு செய்ய புதிய குழு: பள்ளிக் கல்வித்துறை செயலர்உத்தரவு

    தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுக்கான நூல்கள் விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.தமிழகத்தில் 32 மாவட்ட நூல கங்கள் உட்பட 4,024 நூலகங்கள் உள்ளன.
    இவற்றுக்கு மாவட்ட நூலக ஆணைக்குழு நிதி மற்றும் ராஜா ராம்மோகன் ராய் நூலகஅறக் கட்டளை நிதியின்கீழ் நூல்கள் வாங்கப்படுகின்றன. நூலகங்க ளுக்கு வாங்குவதற்கான நூல் களை தேர்வு செய்ய பொது நூலகத் துறை இயக்குநரை தலைவராகக் கொண்டு 16 பேர் அடங்கிய குழு

    ஜாதி, வருமானச் சான்றிதழ் கல்வி அலுவலரே வாங்கித் தர பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

    மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள் மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்கப்படுகின்றன.

    இலவச கல்வி ஒதுக்கீடு சேர்க்கையில் போலி சான்று: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

    தமிழகப்பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் உள்ளதா என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்ய உள்ளது.
    இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பள்ளிகளில் நலிவுற்ற மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில் டில்லியில் பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் போலி வருமான சான்று, இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு கோடி கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனை நடந்திருப்பது டில்லி போலீசாரால் கண்டு பிடிக்கப் பட்டது.
    இது போன்ற முறைகேடுகள் நாடுமுழுதும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 2013--14, 2014--15, 2015--16 நடந்த பள்ளி சேர்க்கை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதற்கான ஆவணங்களை தமிழகத்தில் இருந்து ஜூலை 31க்குள் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    ஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்

    ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
    கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சியளித்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

    மாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடு : கற்பிக்கும் முறையே காரணம் - காந்திகிராம பல்கலை ஆய்வு

    ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது. மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையை கடைபிடிக்கின்றனர்.

    மழலை பள்ளி குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் புதிய விதிமுறை அரசு இணையதளத்தில் வெளியிடு

    `மழலை வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. `தமிழ்நாட்டில் பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆகிய வகுப்புகள் படிக்கக்கூடிய குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் என்றும் அவர்கள் இருக்கும் வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை புதிய விதிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
    * பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் பெட்ரோல் பங்குகளில் இருந்து 300 அடி தள்ளி அமைத்தல்.

    ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள மூன்றாண்டு விதிமுறையால் 20ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத பரிதாபம்...!!! விதிமுறையை தளர்த்த கோரிக்கை

    -தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!(தமிழகத்தின் ஊரூம் அங்கு கிடைக்கும்பொருளும்-ஊரும் பேரும்)

    திருநெல்வேலி - அல்வா

    ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

    கோவில்பட்டி - கடலைமிட்டாய்

    பண்ருட்டி - பலாப்பழம்

    மார்த்தாண்டம் - தேன்

    பவானி - ஜமுக்காளம்

    உசிலம்பட்டி - ரொட்டி

    நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்

    பள்ளிக்குள் தகராறு செய்தஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

    திருப்பூர்:முன்விரோதத்தால், பள்ளிக்குள் தகராறு செய்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருப்பூர் ஆண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் சகாயராணியும், பட்டதாரி ஆசிரியர் முதலியப்பனும், கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.

    25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

       25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்து சரி  பார்க்க

    இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 2-வது கட்ட கலந்தாய்வு ஆக.7-ம் தேதி: ஜூலை 23 முதல் விண்ணப்பிக்கலாம்

    பிளஸ் டூ சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜூலை 23 (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.


    இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஜூலை 24ல் ஐந்து மாவட்டகல்வி அதிகாரிகள் கூட்டம்

    மதுரை:மதுரையில் பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து ஐந்து மாவட்ட கல்விஅதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் ஜூலை 24ல் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தை இயக்குனர்கள் கண்ணப்பன், அறிவொளி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) நடத்துகின்றனர்.

    ஜாதி, மத மோதல்களை தவிர்க்க மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

    மாணவர்கள் மத்தியில், ஜாதி, மத மோதல்களைத் தவிர்க்கும் வகையில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்த, அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அனைத்து மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், மத நல்லிணக்க கட்டுரைப் போட்டி நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற பெயரில், கட்டுரைப் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

    சென்னை:'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 23 இடங்களில் இரண்டாண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்களுக்கு மேல் உள்ளன. இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்ப வினியோகம், இன்று
    துவங்குகிறது. 'அரசு மருத்துவக் கல்லுாரிகள் உட்பட, 27 இடங்களில், ஆக., 1ம் தேதி வரை கிடைக்கும். ஆக., 4ம் தேதிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர்

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி.ஏ. நரேஷ், பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநராக (இடைநிலைக் கல்வி) மாற்றப்பட்டுள்ளார்.
    வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த குமார், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
    நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.

    தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015

    எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது: பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா

    தமிழகத்தில், 1,200 தொடக்கப் பள்ளிகள் மூடப்படவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா இதனை தெரிவித்தார்

    ஆசிரியர் கலந்தாய்வு குறித்து "WhatsApp" வந்த செய்தி தவறானதா???? - பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

    சேலம் விநாயகா மிஷன் பல்கலையில் படிக்கும் பட்டங்கள் தொடக்கக்கல்வித்துறையில் பதவி உயர்வுக்கோ,ஊக்கஊதியஉயர்வுக்கோ செல்லாது -தகவல் அறியும் சட்டம் மூலம் தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு


    அரசு இணையதளத்தில் வேலை


    அரசு நடத்தும் வேலைவாய்ப்பகங்களில் பெரியளவில் மாற்றம் ஏற்படுத்தும், தேசிய தொழில் சேவை திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 'தேசிய தொழில் சேவை இணையதளம்' மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தால், 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை தேடுவோருக்கும், வேலை

    'ப்ளே ஸ்கூல்' திருத்திய விதிமுறைகள் வெளியீடு


    ப்ளே ஸ்கூல்' நடத்துவதற்கான, திருத்திய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது.தமிழகத்தில், ப்ளே ஸ்கூல் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழக அரசு புதிய

    பி.எப்., அலுவலகத்தில் அதிகரிக்கும் காலியிடங்கள்

    மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாகவுள்ளன. 'செட்டில்மென்ட்' மனுக்கள் மீதான நடவடிக்கை 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.இம்மண்டல

    அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு


    காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விதேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பி.ஏ., ஆங்கிலம், பொது நிர்வாகம், பி.லிட்., தமிழ், பி.எஸ்சி., கணிதம் ஆகியவற்றிற் கும், எம்.பி.ஏ-யில் பேங்கிங் அன்ட் பைனான்ஸ், சிஸ்டம் மேனேஜ்மென்ட், பைனான் ஷியல்

    AEEO ASSOCIATION NEWS

    உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை
    இனிய AEEO  நண்பர்களே
    வணக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலர் சென்னையில் AEEOகாலிப்பணியிடங்களின் விவரம் கேட்கின்றனர்
    அ).சென்னை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் விவரம்
    திருவல்லிக்கேணி சரகம் ( திரு .இரத்தின ராமலைங்கம் ஓய்வு காலிப்பணியிடம் 30.06.2015 முதல்)
    ஆ) சென்னையில் மூன்றாண்டு முடித்த காலிப்பணியிடம்

    அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவித்தது.
     இதுகுறித்து மன்றத்தின் பொதுச் செயலாளர் சிவராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
     அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
     அதாவது, கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஓய்வு பெறுவது, புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட

    கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

    ஐந்தரை ஆண்டு கால கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 20) வெளியிடப்பட உள்ளது.
     சென்னை, வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார்.

    பி.ஆர்க்.: 1,726 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

    பி.ஆர்க். கட்டடவியல் பொறியியல் படிப்பில் மொத்தம் 1,726 பேர் சேர்க்கைக் கடிதம் பெற்றுள்ளனர்.
     பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.
     இதற்கிடையே மொத்தம் 2,042 இடங்களைக் கொண்ட பி.ஆர்க். படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகம் நடத்தியது.

    ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: விரைவில் தேதி அறிவிப்பு

    ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
     ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. அதில், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

    எஸ்.ஐ தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

    காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் 1,078 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விண்ணப்பித்த அனைவரும் எழுத்து தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் 23, 24-ம் தேதிகளில் இதற்கான எழுத்து தேர்வு நடந்தது

    PFRDA - பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் 25% தொகையை திரும்ப பெற்று கொள்ள வகைசெய்யும் ஆணை (REFER ENGLISH VERSION PAGE NO.19-23 & 30-38)

    PFRDA - Contribution Pensions Scheme will enable Employees to get back 25% of the amount of the order (REFER ENGLISH VERSION PAGE NO.19-23 & 30-38) Click Here..

    அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கு கலந்தாய்வு: ஜூலை 29 முதல் ஆக.18 வரை நடத்த கல்வித்துறை ஏற்பாடு

    அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்டது.


    இந்த நிலையில், ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

    சென்னையில் 1.70 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லை சிறப்பு முகாம்கள் நடத்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

    நாடு முழுவதும் அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
    இதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களிடம் எத்தனை பேருக்கு ஆதார் அடையாள அட்டை எண் உள்ளது? எத்தனை பேருக்கு இல்லை? என்ற விவரங்களை உடனடியாக சேகரித்து அனுப்பும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி

    web stats

    web stats