Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ

WHAT IS NEW? DOWNLOAD LINKS
தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ்: ஆசிரியர்கள் அதிர்ச்சி.
தனியார் பள்ளிகளுக்கு இணையான அரசு பள்ளிகள்:புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உறுதி.
ஆளுநர் உரையின் சிறப்பு அம்சம்
ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர்வா மாற்றம்
கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்
கலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்.
பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'
பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் தேதி துவங்கியது. பள்ளிக்கல்வித் துறை தற்போது மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.
பள்ளித் திறப்பையொட்டி ஏற்கனவே கழிவறைகளை சுத்தம் - சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டது. தற்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், 'கழிவறைகளை சுகாதாரமாக வைப்பதுடன், பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை மூடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஒருவார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்' என, அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் சுற்றறிக்கையில், 'மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் திட்டமிட வேண்டும். பள்ளிகளில் தினமும் 45 நிமிடங்கள் வாசிப்பை கட்டாயமாக்க வேண்டும். கழிவறைகளை மாணவர்கள் சுகாதாரமாகபயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது.இந்த விஷயங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இவற்றை வலியுறுத்த வேண்டும். இதுபற்றிய விபரத்தை மின்னஞ்சலில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், “பள்ளிகள் அருகே ஆபத்தான நிலையில் கிணறுகள் இருந்தால் அவற்றை ஒருவார காலத்தில் அகற்றி அதுபற்றிய விபரத்தை அறிக்கையாக தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
வேலூரில் ஒரு பள்ளி மூடல் அங்கீகார பிரச்னையால் நடிகர் ரஜினி பள்ளிக்கும் சிக்கல்!
சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 'தி ஆஷ்ரம்' பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால், பள்ளியை அதிகாரிகள் மூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.வேலுாரில், ஆபீசர்ஸ் லேன் பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, 1972ல் தொடங்கப்பட்டது.
இந்த பள்ளிக்கு, ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. பள்ளி உள்ள இடம், வேறு ஒருவருக்கு சொந்தமானது என, பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிய வந்தது.அதனால், நடப்பு கல்வி ஆண்டில், அந்த பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்க கோரி விண்ணப்பம் வந்தபோது, பள்ளியின் இடம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அப்போது தான், அந்த இடம் வாடகை நடைமுறையிலும் இல்லாமல், விதிப்படி, 30 ஆண்டு குத்தகையும் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரிய வந்தது. எனவே, செயின்ட் ஜான்ஸ் பள்ளி அங்கீகாரம், சில தினங்களுக்கு முன் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு, பள்ளி மூடப்பட்டது. பள்ளியின் முக்கிய ஆவணங்களை, அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.அங்கு படித்த, 370 மாணவர்களில், இதுவரை, 270 பேரை அருகில் உள்ள, பெற்றோர் விரும்பும், தனியார் பள்ளிகளில்எந்த கட்டணமும் இன்றி சேர்த்துள்ளனர்.இதை தொடர்ந்து, இதே பிரச்னையில் சிக்கியுள்ள, சென்னை ஆஷ்ரம் பள்ளி குறித்து, அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.நடிகர் ரஜினியின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில், 'தி ஆஷ்ரம்' பள்ளி, சென்னை, கிண்டியில் செயல்பட்டு வருகிறது.இதில் உள்ள, மெட்ரிக் பள்ளிக்கு, நான்கு ஆண்டுகளாக அனுமதியில்லை.பள்ளி உள்ள இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு, பள்ளிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் ஸ்ரீதேவி, 'இந்த ஆண்டு, ஜனவரி, 27ல் நடக்கும் விசாரணையில், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்' என, சம்மன் அனுப்பினார்.இந்த சம்மனை ரத்து செய்ய கோரி, பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், தடையை விலக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், ஆஷ்ரம் பள்ளி சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதால், பள்ளி அங்கீகாரத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு தராவிட்டால், பள்ளியின் மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலுாரில் மூடப்பட்ட செயின்ட் ஜான்ஸ் பள்ளி போன்று, ஆஷ்ரம் பள்ளி இருக்கும் இடமும், வேறு ஒருவருக்கு சொந்தமானது. பள்ளியின் இட உரிமையாளர் வாடகை பாக்கியை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறார் என கல்வித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை
னியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடுமாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு உள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது:
தனியார் பள்ளிகளுக்கு, கல்விகட்டணம் நிர்ணயம் செய்யும் குழு தலைவர் பதவி, ஏப்., 1ம் தேதியில் இருந்து காலியாக உள்ளது. எனவே, குழு தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும். தலைவர் நியமிக்கப்படும் வரை, பழைய கட்டணத்தை வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்காத, பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள், செலவுகள் அனைத்தையும், பெற்றோரிடம் இருந்து வசூலிப்பதால், அவற்றைசுயநிதி பள்ளிகள் என அழைக்காமல், பெற்றோர் சார்பு பள்ளிகள் என, அழைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கையின் போது, விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிட வேண்டுமா: உயர் நீதிமன்றம் உத்தரவு
துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.
Joint Directors of School Education department transfers
Mrs. K.Sasikala JD transfer from SSA to Directorate of Elementary Education
Mr.Selvaraj JD transfer from DEE to TRB
Mr. Varma transfer from TRB to SSA (K.Sasikala Place)
as on 15/06/2016
TNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.
50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலை.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிளஸ் 1 சேர்க்கைக்கு... அரசு பள்ளியில் நுழைவு தேர்வு! அறிவியல் பாடத்தில் சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு
சமூக அங்கீகாரம், நிலையான வேலைவாய்ப்பு: சட்டப்படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள்
அரசுப் பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வெளியேற்றக் கூடாது: தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது: பள்ளிகளுக்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்!
அண்ணா பல்கலை தர பட்டியல் வெளியீடு பி. எஸ். ஆர். இன்ஜி., கல்லூரிக்கு 5ம் இடம்.
கல்வித் துறையில் 50 சதவீதம் அதிகாரிகள் பணியிடம் காலி.
உயர்நிலை ஆசிரியர் பணிக்கு இனி 4 ஆண்டுகள் படித்தால் போதும்
தமிழகத்தில் குறைந்த வருவாய் பிரிவில் இருந்து வரக்கூடிய கிராமப்புற இளம்பெண்கள், இளைஞர்களின் கனவு ஆசிரியர் பணியில் சேர்வதே. அரசு ஊதியம், மரியாதையான வேலை என்பதால் இதை பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், ஆசிரியர் பணியில் சேர வேண்டுமென்றால்
முதலாவது இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும். பின்பு உயர்நிலை ஆசிரியராகப் பணிபுரிய பட்டப்படிப்பு முடித்து, அடுத்து பிஎட் முடிக்க வேண்டும். அதற்குள் வயது முடிந்துவிடும்.
இப்போது பிளஸ்-2 படித்த மாணவ - மாணவியர் நேரடியாக பிஎட் படிப்பை இனி நான்கு ஆண்டுகளுக்குள் முடித்துவிட முடியும். பிளஸ்-2 முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து, அடுத்து மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்து, அடுத்து பி.எட் படிப்பை முடித்த பின்னர்தான் உயர்நிலை ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியும். ஒட்டு மொத்தமாக இதற்கு ஏழு ஆண்டுகள் ஆகும்.
அதுவரை வேலைக்குச் செல்லாமல் பொருளாதார ரீதியாக தங்களை காத்துக்கொள்வதும் சிரமம் என்பதால் பலரும் இந்தக் கல்வியைத் தொடர முடியாத சூழல் உள்ளது. இப்போது இந்த நீண்டகாலப் படிப்பை முதல்வர் ஜெயலிலதா 4 வருடங்களாக மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
எப்படி பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து 5 வருடப் படிப்பை படிக்கிறார்களோ… அதாவது 3 வருட பட்டப்படிப்பையும், 3 வருட பி.எல் படிப்பையும் சேர்த்து 6 வருடங்களாக படிக்காமல் ஒன்றிணைந்த படிப்பாக 5 வருட பி.எல் படிப்பு படிக்கிறார்களோ… அதுபோல தான் பட்டப்படிப்பையும், பிஎட் படிப்பையும் ஒன்றிணைந்த படிப்பாக 4 வருட பிஎட் படிப்பை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்தப் படிப்புக்குப்பின் அந்த தகுதிக்குரிய சம்பளத்தில் ஆசிரியர் வேலையில் சேரலாம். இந்த படிப்பை தமிழகத்தில் கொண்டு வர 17 பிஎட், கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அந்த 17 கல்லூரிகள் எவை என்பது அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். உயர்கல்வி ஆசிரியர் பணிக்கான கல்வியில் தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த மாற்றம் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
ஆசிரியைக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் 13 பேர் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் படிக்கவில்லை என்றும் அவர்களது காலில் பள்ளி ஆசிரியையான வைஜெயந்திமாலா, கடந்த 9ம் தேதி கற்பூரத்தால் சூடுவைத்தார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆசிரியையால் சூடு வைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பெருத்த அதிர்வலைகள் ஏற்பட்டது. இதைக்கண்ட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, ஆசிரியை வைஜெயந்திமாலா சஸ்பெண்ட் ஆகி கைது செய்யப்பட்டார். மேலும், அப்பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரும் சஸ்பெண்ட் ஆனார். தற்போது ஆசிரியை வைஜெயந்திமாலா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில், நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ரோஸ்லின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை ஏற்க இயலாது எனக்கூறி தள்ளுபடி செய்தார்.
TANGEDCO HALL TICKET RELEASE (DATE OF EXAM : 19.06.2016)
பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்
சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் எப்போது?
மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்.
தமிழகத்தில்,கல்வியியல் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை!
ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை; மத்திய அரசு.
இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.
தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.
பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை
அரசு ஊழியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016)க்கான அரசாணை வெளியீடு.
click here to download the go
- அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் 10/09/2016 உடன் முடிவடைந்தது,
- இனி புதிய காப்பீடு திட்டம் 01.07.2016 முதல் நான்காண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். அரசாணை வெளியீடு ...!
- 4 ஆண்டுகளுக்கான செலவுத்தொகை 4 லட்சமாகவே தொடரும்
- கேன்சர்,கல்லீரல் மாற்று அறுவை போன்ற முக்கிய நோய்களுக்கு தற்போதுள்ள 4 லட்சத்திற்கு பதில் 7 .5 லட்சம் வரை வரம்பு உயர்வு
- தற்போதுள்ள மருத்துவமனைகள் திட்டத்தில்தொடரும்
- மேலும் புதிய மருத்துவமனைகள் சேர்க்கப்படும்
- 10/06/2016 முதல்01/07/2016 வரையிலான காலத்திற்க்ண்டான செலவுத்தொகை திரும்பப்பெறலாம்