rp

Blogging Tips 2017

JACTTO - GEO : தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் 2019 குறித்து ஜாக்டோ ஜியோ செய்தி அறிக்கை!

e - Pay Slip Working Now - Annual Statement For Income tax Purpose

Click Here - To Download Your Annual e-Payslip


பள்ளிகளில் attendence app மூலமாக ஆசிரியர்கள் வருகை பதிவுகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளுதல் மற்றும் attendence appஇல் எவ்வாறு ஆசிரியர்கள் வருகை பதிவுசெய்யும் முறை

Teachers Attendance App Monitoring reg - STEP BY STEP METHOD


CLICK HERE

Teachers Attendance App Monitoring reg - SPD PROCEEDINGS!!








அரசாணை எண்: 19 பள்ளிக்கல்வி நாள்:07.02.19-வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு!

CLICK HERE TO DOWNLOAD

3 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு! - பட்ஜெட்டில் அறிவிப்பு

3 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு! - பட்ஜெட்டில் அறிவிப்பு பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும்பெண் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டைதாக்கல் செய்தார். அதன்படி அவர் சட்டப்பேரவையில்பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அதில், தமிழகத்தில் கடந்த ஆண்டில்பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,000 ஆக குறைந்துள்ளது.எனவே பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அத்திட்டத்திற்கு 48.70கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதன்மூலம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 2019 உரை (full pdf file tamilversion)

click here to download 


தமிழக பட்ஜெட் 2019 - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அம்சங்கள்! தமிழக பட்ஜெட் 2019 - பள்ளிக்கல்வித்துறை முக்கிய அம்சங்கள்!

* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் 75% வருகைப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்கான முதல்வரின் தனிப்பிரிவு பதில்.

ஓய்வூதிய திட்டம்:*பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.*

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது*

*- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்*

✍ *பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும் என, தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.*

💰💰அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனுக்காக 55,399 கோடி ரூபாயும், ஓய்வூதிய பலன்களுக்காக 29,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு*
💰💰பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு*

4.10.2018 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கான பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திரும்பி தர உத்தரவு


இடைநிலை ஆசிரியர் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது சிறப்புப்படி ₹ 2000/- த்தை சேர்க்க முடியாது என்பதற்கான கருவூலக்கடிதம்..


-சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு TRB வெளியீடுTRB - SPECIAL DIRECT RECRUITMENT FOR SHORTFALL (SC & SCA / ST).,BT ASSISTANTS - 2019

CLICK HERE

DSE PROCEEDINGS-புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது வழங்குதல் சார்ந்து ஆணை வெளியிடப்படுகிறது.

'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகள் ஆய்வு

சென்னை: 'ஜாக்டோ - ஜியோ' கோரிக்கைகளில், நிதி பிரச்னை இல்லாத அம்சங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், ஒன்பது நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டம், அரசு மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, ஆசிரியர்கள் பல்வேறு விமர்சனங்களையும், போராட்ட யுக்திகளையும் கையாண்டனர்.வாபஸ்ஆனால், அரசின் பல கட்ட நெருக்கடிகள் மற்றும் எச்சரிக்கைகளால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, கோரிக்கைகளை அரசிடம் தெரிவிக்கும் வகையில், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், இரண்டு நாட்களாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகளில், அரசின் நிதி சுமையை பாதிக்காத, நியாயமான கோரிக்கைகளை ஆய்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுஉள்ளது. அதிகாரிகள்நிதித்துறை, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகள், இந்த ஆய்வை துவக்கி உள்ளனர்.ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் என்ன; அவற்றின் நிலை; எந்த ஆண்டு முதல் இந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன; இவ்வளவு ஆண்டுகளாக கோரிக்கைகள் நீடிக்க காரணம் என்ன என, ஆய்வு செய்யப்படுகிறது. கோரிக்கைகளின் தன்மை மற்றும் அதன் நியாயமான அம்சங்களை, தமிழக அரசுக்கு, ஒவ்வொரு துறையும் பரிந்துரை செய்ய உள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ சத்புட்டே ஆகிய இருவர் 2018–19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிமான வரி கணக்குகளை ஆதார், பான் எண் இணைக்காமல் தாக்கல் செய்யலாம் என டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 139 ஏஏ, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண் என்று அழைக்கப்படுகிற வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது.

 மத்திய அரசு மேல்முறையீடு குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

ஆதார் பற்றிய வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டுதான் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் இது தொடர்பான வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகத்தக்கது என்று சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதை கருத்தில் கொண்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

வேண்டுகோள்.*அன்பான ஆசிரிய போராளிகளே!!*--*செ. முத்துசாமி. Ex.MLC..* *மாநிலத் தலைவர்* *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*

வேண்டுகோள்.
*அன்பான ஆசிரிய போராளிகளே!!*
ஆரம்ப காலம் முதல் நமது அனைத்து சலுகைகளும் போராடிதான் பெற்று வருகிறோம். போராட்டங்களில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி தான் வரும். போராட்டங்களும் போர்களங்களும் என்றும் மாறாது.நாம் இதுநாள் வரை கையில் எடுத்த கோரிக்கைகள் தோல்வி அடைந்தது இல்லை என்பதுதான் வரலாறு.தற்போது நமது கோரிக்கைகள் மிகவும் முக்கியத்துவமும் நியாயமும் மிக்கது.சற்று காலதாமதம் ஏற்படுமே தவிர இக்கோரிக்கைகள் நிச்சயம் வென்றெடுக்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறை சென்று தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் , மற்றும் 17B நடவடிக்கை மூலம் பணியிட மாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள போராளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மீண்டும் பாதிப்பின்றி பணியமர்த்த மாநில ஜாக்டோ ஜியோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித கலக்கமும் வேண்டாம். விரைவில் பாதிப்பின்றி நீங்கள் பணிக்கு திரும்ப மாநில ஜாக்டோ ஜியோ நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மாநில ஜாக்டோ ஜியோ வின் அதிகாரப்பூர்வ தகவலை தவிர வேறு வகையான செய்திகளை பொதுத்தளத்தில் பரப்பி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மேலும் நீதிமன்றம் குறித்து அரசு மற்றும் அலுவலர் குறித்து விமர்சிக்க வேண்டாம். அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஜாக்டோ ஜியோ பேசுவது குறித்து மாற்றியோ, திரித்தோ, அதிகப்படியாகவோ, பொதுத்தளங்களில் பதிவிட வேண்டாம். இவ்வாறு நாம் விமர்சிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையாது. அருள்கூர்ந்து ஆவேசம் கொண்ட விமர்சனங்களை பொதுத்தளங்களில் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.
*செ. முத்துசாமி. Ex.MLC..*
*மாநிலத் தலைவர்*
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*
posted from Bloggeroid

போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராத ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கருவூல முதன்மை செயலாளர் உத்தரவு


ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ஒடுக்க அரசு செலவழித்த தொகை எவ்வளவு?- அதிர்ச்சித் தகவல்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் மதிப்பூதியம், தொகுப்பூதிய முறைகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசுப் பள்ளிகள் இயங்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர் அரசு ஊழியர்கள்.

ஆங்கிலத்திலும் இனி தமிழ்நாடு! தமிழக அரசு ஏற்பாடு

தமிழில் உள்ளதைப் போலவே ஆங்கிலத்திலும் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், ஆங்கிலத்தில், வேறு மாதிரியாக உள்ளன. அவற்றை தமிழில் உள்ளதைப் போலவே மாற்ற வேண்டும் என தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

நடவடிக்கையை திரும்ப பெறுங்க! : 'ஜாக்டோ - ஜியோ' வேண்டுகோள்

: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணாவை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தும் மனு கொடுத்துள்ளனர்.
மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது
:முதல்வரின் வேண்டுகேளை ஏற்றும் எதிர் காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையிலும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.பின் பணிக்கு சென்ற போது அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்
.பணிக்கு சென்ற ஆசிரியர்களை வேறு பள்ளியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர மறுக்கும் நிலை உள்ளது.
தற்காலிக பணி நீக்கம் ஒழுங்கு நடவடிக்கை எனக்கூறி பணி வழங்க மறுக்கும் நிலை உள்ளது.
 இதை உடனடியாக கைவிட வேண்டும். மாறுதல் பணியிட உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும்.வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
 அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கு உள்ள உறவினை சுமூகமாக்கி பணித்திறன் மேம்பட உதவ வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை செயலர் அறையிலேயே மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களையும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சந்தித்த நிகழ்வு கோரிக்கைகளை கனிவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று சாதகமான பதில் தருவதாக உறுதி

பிப்.8-இல் குடற்புழு நீக்க தினம்: தமிழகத்தில் 2.26 கோடி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு

மாநிலம் முழுவதிலும் சுமார் 2.26 கோடி குழந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.8) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  அன்றைய தினத்தில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால், இம்முறை பிப்ரவரி 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.

JACTTO-GEO members submitted memorandum to State Govt.

5, 8ம் வகுப்புக்கான, 'ஆல் பாஸ்' திட்டம் நிபுணர் கருத்தை கேட்க அரசு முடிவு

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான, 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்ற, பொது கல்வி வாரியத்தை கூட்டி, தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது.'மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரை, இலவச கல்வி வழங்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இந்த சட்டத்தை பின்பற்றி, அனைத்து மாநிலங்களிலும், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும், 'பாஸ்' செய்யப்பட்டனர்.இந்த, 'ஆல் பாஸ்' முறையால், ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு வரும் பல மாணவர்கள், அவரவர் மாநில மொழி அல்லது தாய்மொழியில் கூட, எழுதப் படிக்க தெரியாமல் திணறுகின்றனர். இது குறித்து, மத்திய அரசு தரப்பில் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வின் முடிவில், எட்டாம் வகுப்பு வரையிலான, ஆல் பாஸ் திட்டத்தை நிறுத்த பரிந்துரை செய்யப்பட்டது. இது குறித்து, மத்திய அரசின் சார்பில், சட்ட திருத்த மசோதா உருவாக்கி, ஜனவரி, 2ல், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, சட்ட திருத்தத்துக்கான மத்திய அரசின் அரசாணை, கடந்த வாரம் வெளியானது. அதில், தேர்வே நடத்தாமல், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களை, அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற வைக்கக்கூடாது.

ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை..

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுடனான சந்திப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது செ.முத்துசாமி, மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அன்புத் தோழமைகளுக்கு இனிய வணக்கம்.

நமது ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார்
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் மதிப்புமிகு சரவணா
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு பிரதீப் யாதவ் மற்றும்

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன்*

ஆகியோரை சந்தித்து ஜாக்டோ ஜியோ போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதை ஏற்றுக் கொண்ட *கல்வி அமைச்சர் கனிவுடன் பரிசீலித்து அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளார்*

மேலும் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கூடிய விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.

தகவல்
*செ.முத்துசாமி, Ex. M.L.C,*
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

posted from Bloggeroid

EMIS இல் Strike Details பதிவு செய்ய உத்தரவு*



2019 INCOME TAX EXCEL FILE (WITHOUT MACRO)

CLICK HERE TO DOWN LOAD

web stats

web stats