Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- court case
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- MNISTER ANNOUNCEMENT
- model questionpap 5
- new books 2019 pdf all std term-1
- NEW BOOKS ONLINE
- New Education policy
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- PAY ROLL
- pedagogy
- PENTION
- procedings
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRANSFER-2019
- TRB
- UGC
- university news
- website
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஜெர்மனியில் வாகனங்களை வாங்கி பள்ளி
கழிவறைகளை சுத்தம் செய்யும் திட்டம் 3 மாதத்தில் துவங்கப்படும் எனவும் , காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் நான்கு மாதங்களில் வெளிவந்த உடன் தேர்வானவர் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தார்.

காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் ,டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது -அமைச்சர் செங்கோட்டையன்
காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில்
இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்!: ஜூலை 15 முதல் தொடங்கும்
மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பொது நூலகத்துறை தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் வாகனங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஜெர்மன் நாட்டிலிருந்து 1000 வாகனங்கள் பெறப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி தொடக்க விழா, கனவு ஆசிரியர் விருது, புதுமைப் பள்ளி விருது வழங்கும் விழா, கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா ஆகியவை திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
EMIS Latest News - மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்!
*EMIS UPDATION:*
தற்போது EMIS websiteல் login செய்தால் enrollment abstract filled by schools என அனைத்து வகுப்பில் உள்ள பதிவை கேட்கும் வருகைப்பதிவு பதிவேட்டில் உள்ள பதிவை உள்ளீடு செய்து save செய்யவும்.
1முதல் 12 வகுப்பு வரை கேட்கும் நம்மிடம் இல்லாத வகுப்புகளுக்கு 0 என பதிவு செய்யவும்...

யார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்???
நமது நண்பர்கள் பலர் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.
அவைகள் குறித்து நமது நண்பர் கோவையை சேர்ந்த ஆடிட்டர் திரு.சத்தியப்பிரகாஷ் அவர்களிடம் கேட்கப்பட்டது அவர் தெரிவித்தவை:
மாதச்சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களின் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகள் TAN எண் பெற்றிருப்பவராக (TAN holder) இருந்து அவர் வழியாக ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்திற்கு E-TDS (24-Q) தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரிடம் சம்பளம் பெறும் ஊழியர்களில் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரின் கணக்கிலும் 26as படிவத்தில் onlineல் பதிவாகும். அந்த ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தனிநபர் வருமான வரி தாக்கல் (IT return E-FILING) செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் எவ்வளவு இருந்தாலும் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். தற்போது வருமான வரி வரம்புக்குள் வராதவராக (Nil Tax) இருந்தாலும் ஆண்டு வருமானம் 2.5லட்சத்தை தாண்டினால் கட்டாயம் வருமான வரி தாக்கல் (Nil Tax return E-filing) செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் விவகாரம்: கல்வித் துறை அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு
தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள குறைபாடுகளை திருத்தி வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாகரீதியிலான அதிகாரம் வழங்கி தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த மே மாதம் அரசாணை பிறப்பித்தது.
விதிகளை மீறி: இந்த அரசாணையின்படி அனைத்துப் பள்ளிகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பாடப்பொருள் மேம்பாட்டு மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையான பாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள் மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.
பள்ளிக்கல்வி இயக்குநர்களின் பொறுப்பு மாற்றம் : மாற்றம் என்ன?
**
தமிழக அரசின் புதிய சட்டப்படி,
இயக்குநர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன.மெட்ரிக் பள்ளி இயக்குநர், தனியார் பள்ளி இயக்குநர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குநர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குநரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரும் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குநர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.மெட்ரிக் இயக்குநர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குநர் வசம் மாற்றப்பட்டுள்ளன.
மாற்றம் என்ன?.
தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைபள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குநர் கவனிப்பார்.
10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குநர் கவனிப்பார்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குநர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குநர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார்தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குநரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Subscribe to:
Posts (Atom)