Labels

rp

Blogging Tips 2017

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் 201 பேருக்கு இலவச லேப்டாப்

சென்னை : தமிழை மொழி பாடமாக கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 201 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 2012,2013ம் கல்வி யாண்டில் தமிழை மொழி பாடமாக கொண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தை பெற்ற 50 மாணவ , மாணவிகள் மற் றும் மூன்றாம் இடத்தை பெற்ற 129 மாணவ , மாணவிகளுக்கும்,


12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழை மொழி பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தை பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தை பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற 9 மாணவ , மாணவிகள் என மொத்தம், 201 மாணவ , மாணவிகளை, சென்னை தலைமைச் செயலகம் வரவழைத்து இலவச லேப்டாப்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

அப்போது ஜெயலலிதா பேசுகையில், “உங்கள் சாதனைகளை கண்டு பெற்றோர்கள் பெருமைப்படுவதை போல, தமிழக அரசும், நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறோம். உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 201 மாணவ, மாணவிகளின் மேற்படிப்புகளுக்கான செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் வைகைச்செல்வன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதாவிடம் லேப்டாப் பெற்றுக் கொண்ட மாணவ , மாணவிகள் கூறுகையில், “தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி ஊக்குவித்ததற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்று பரிசளித்து அரசு ஊக்குவிப்பதன் மூலம், மேலும் கல்வியில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

No comments:

Post a comment