Labels

rp

Blogging Tips 2017

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர 10–ந்தேதி முதல் விண்ணப்பம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு:


எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 10–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை வழங்கப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

விண்ணப்பம் எப்போது?

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் 2013–2014–ம் கல்வி ஆண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 10–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை குறிப்பிட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும். கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்திலும், மாநில கல்லூரியிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

அடுத்த மாதம் கவுன்சிலிங்

விண்ணப்ப கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.150 மட்டும். குறிப்பிட்ட விண்ணப்ப கட்டணத்தை ‘‘செயலாளர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. அட்மிஷன்ஸ் 2013, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை 641 013’’ என்ற பெயரில் 9–ந் தேதிக்கு பிறகு எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டாக கல்லூரி விற்பனை மையங்களில் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் அட்டஸ்டேஷன் பெறப்பட்ட சாதி சான்றிதழ் நகலையும் டி.டி.யுடன் இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 29–ந்தேதி ஆகும். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை மாதம் 2–வது வாரத்தில் கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும். கவுன்சிலிங்கிற்கான அழைப்புக்கடிதம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு குமார் ஜெயந்த் கூறி உள்ளார்.

No comments:

Post a comment