Labels

rp

Blogging Tips 2017

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை  மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 12 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவியர்களுகக்கென 12 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிபு, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் இத்துறை விடுதிகளில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்:

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரின் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும், இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பபந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளியிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்னையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை31ம் தேதிக்குள் விண்ணப்பம் பெறப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் தொலைபேசி எண் 044-25241002ஐ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment