Labels

rp

Blogging Tips 2017

கலந்தாய்வு இன்றி இடமாற்றம்? கல்லூரி பேராசிரியர்கள் அதிர்ச்சி

நெல்லை : கலந்தாய்வு அறிவிப்பு வரும் முன்னரே இடமாறுதல் செய்யப்படும் நடவடிக்கைக்கையை கைவிட வலியுறுத்தி, அரசு கல்லூரிகள் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 62 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும் 7 கல்வியியல் அரசுக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆண்டு தோறும் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

ஒரே இடத்துக்கு 2 அல்லது கூடுதல் ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தால், அவர்களில் யார் அதிக நாள் ஒரே கல்லூரியில் பணியாற்றியுள்ளாரோ அவருக்கு முன்னுரிமை என்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்படும். இடமாறுதல் கலந்தாய்வு நடத்த குறைந்தது 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு, விருப்பம் உள்ள பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் மனுக்கள், அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மூலம் கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.


கடந்த ஆண்டு முன்கூட்டியே கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டு இடமாறுதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த கல்லூரி விரிவுரையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கலந்தாய்வுக்கு முன்னதாகவே சில கல்லூரிகளில் இடமாறுதல் நடைபெற தொடங்கி விட்டதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, அரசு கல்லூரி ஆசிரியர்கள் கழக மாநில இணைச் செயலாளர் சுரேஷ் கூறியதாவது: இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு முன்னதாகவே இடமாறுதல் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இது, தமிழகம் முழுவதும் இடமாறுதலுக்காக காத்திருக்கும் 500க்கும் மேற்பட்ட கல்லூரி விரிவுரையாளர்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலைக் கண்டித்து இன்று (25ம் தேதி) தமிழகத்தில் உள்ள 69 அரசு கல்லூரிகள் முன் வாயிற்கூட்டம் மற்றும் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Transferred without counseling? College professors shock

No comments:

Post a comment