Labels

rp

Blogging Tips 2017

12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புத் தேர்வில் சாதனைப்படைக்க அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர்

வருகிற மார்ச் மாதம் 12 மற்றும் 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவ -மாணவியர் தங்களை தயார்படுத்தி
வருகின்றனர். இதற்காக, கடந்த 10 நாட்களாக சிறப்பு கவனம் செலுத்தி வரும் மாணவர்கள், வருகிற பொதுத் தேர்வில் சாதனை படைப்போம் என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் அரசு பள்ளி மாணவிகள், தனியார் பள்ளிக்கு நிகராக, தாங்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைப்போம் என உறுதி கூறுகின்றனர். தங்களது வெற்றியை அறிந்தபின்னர் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மாணவிகள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a comment